Thursday, December 22, 2011

மருதாணி நினைவுகள்... (கவிதை)அம்மாகை சிகப்புபார்த்து
அதுபோல் எனக்கும்வேணுமென
அடம்பிடித்து அழிச்சாட்டியம்செய்த
அழகியபசுமை நினைவுகள்!!!


வாய்லவெச்சுப்ப வேண்டாம்னு
வாகாய்அம்மா எடுத்துசொல்ல
வேணும்னா வேணும்னு
விடாமல்அழுத நினைவுகள்!!!


இலையை பறிப்பதில்தொடங்கி
இன்னும் பாக்கும்கூடசேர்த்து
அரைத்து எடுக்கும்வரை
அம்மாகாலை சுற்றியநினைவுகள்!!!


விரல்நுனியில் தொப்பிவைத்து
வட்டத்தை உள்ளங்கையில்இட்டு
அசைக்காம நில்லேண்டினு
அம்மாஅதட்டிய நினைவுகள்!!!


ஒருகைக்கு போதும்டி
ஒழுங்கா கேளுனுசொல்ல
புரண்டு கைகால்உதைத்து
பொய்க்கண்ணீர் உகுத்தநினைவுகள்!!!


படுத்தால் கலைந்திடும்னு
பல்லைகடித்து தூக்கம்விரட்ட
பின்னிரவில் அம்மாஸ்பரிசத்தில்
படுக்கையில் சுருண்டநினைவுகள்!!!


எனக்குத்தான் நல்லாசிவந்ததென
எந்தங்கையை சினுங்கச்செய்து
பாட்டியிடம் கொட்டுவாங்கி
அழுதுமுகமும் சிவந்தநினைவுகள்!!!


பெரியவளாய் ஆனநாளில்
பெருமிதமாய் கண்ணேறுகழித்து
சொந்தங்கள் மருதாணியிட்ட
சொர்க்கமான நினைவுகள்!!!


சிவக்குமளவு ஆசையாம்என
சிநேகதிகள் கேலிசெய்ய
சும்மாஎன தெரிந்தாலும்
சிவக்கனுமென செய்தமுயற்சிகள்
இந்தநொடி நினைத்தாலும்
இனிமையான நினைவுகளே!!!


கைத்தலம் பற்றியநாளில்
கள்ளபார்வையில் ரசித்துவிட்டு
பின்கிடைத்த தருணத்தில்
பாராட்டிய ரகசியங்கள்
சற்றேஇன்று நினைத்தாலும்
சிவக்கவைக்கும் நினைவுகள்தாம்!!!

!!!

50 பேரு சொல்லி இருக்காக:

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை புவனா:)!

இராஜராஜேஸ்வரி said...

சொந்தங்கள் மருதாணியிட்ட
சொர்க்கமான நினைவுகள்!!!

அழகு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பதிவுலகில் பாபு said...

Romba Nallarukku kavithi..

Ramani said...

என்றுநினைத்தாலும் சிவக்கவைக்கும் நினைவுகளை
அருமையான படைப்பாக்கித் தந்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி த.ம 3

தி. ரா. ச.(T.R.C.) said...

anpil vantha azakana kavithai

ஸ்ரவாணி said...

ரசனையான அழகு மிக்க கவிதை ..

பத்மநாபன் said...

காலத்தோடு காலமாய் அழியாமல் வந்தது மருதாணி நினைவுகள் ... வாழ்த்துக்கள் தங்கை மணி ...

Rishvan said...

ந்ல்ல கவிதை..... படித்து வாய் சிவந்து விட்டது...நன்றி பகிர்விற்கு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நன்கு சிவந்த மருதாணிக்கரங்களால் அனுபவித்து எழுதப்பட்ட கவிதையில் நல்ல அழகுணர்வு வெளிப்படுகிறது.

//சொந்தங்கள் மருதாணியிட்ட
சொர்க்கமான நினைவுகள்!!! //

//கைத்தலம் பற்றியநாளில்
கள்ளபார்வையில் ரசித்துவிட்டு
பின்கிடைத்த தருணத்தில்
பாராட்டிய ரகசியங்கள் //

படிக்கும் எங்களையே சிலிரிக்க வைக்கும் வரிகள்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

சிநேகிதி said...

மருதாணியின் நினைவுகள் அருமை...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அழகு கவிதை. ரொம்ப நல்லாருக்கு புவனா மேடம்.

கீதா said...

அந்த மருதாணி நாட்களை நினைத்து எனக்கும் ஏக்கமுண்டாக்கிய கவிதை புவனா. இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு அந்த அனுபவம் கிடைப்பதுமில்லை, மருதாணி என்ற பெயரும் தெரிவதில்லை. மெஹந்தி என்றால்தான் புரிகிறது, அதுவும் ரெடிமேட் பேஸ்ட்டாக.

மனம் சிவக்கச் செய்த நினைவுகள் யாவும் அழகு.

ஸ்ரீராம். said...

அருமையான நினைவுகளை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்.

மகேந்திரன் said...

மருதாணிக் கனவுகள்
மனதை நெருடிப் போகிறது சகோதரி.

Lakshmi said...

முன்னேல்லாம் யாரு வீட்டுக்கொல்லைப்புறம் மருதாணி மரம் இருக்குன்னு தேடித் தெடிப்போயி இலை பறிச்சு வீட்டு ஆட்டுரலில் ஆட்டும்போது நாந்தான் தள்ளுவேன்னு அடம் பிடித்து வலதுகை சிவக்க சிவக்க மருதாணி அரைத்த நினைவுகள் எல்லாம் திரும்ப நினைக்க வைத்த கவிதை. இப்ப என்னதான் கோன் மருதாணி சவுரியங்கள் வந்தாலும் அந்தக்கால இலை பறிச்சு மருதாணி இட்டுக்கொண்டது பசுமையான நினைவுகள் தான்.

Vasudevan Tirumurti said...

கவுஜ கவுஜ.... நல்ல உணர்வுகள்!

அமைதிச்சாரல் said...

மருதாணி நினைவுகள் மணக்குது.. அரைச்சு வெச்ச இலையாட்டம் :-)

sasikala said...

கைத்தலம் பற்றியநாளில்
கள்ளபார்வையில் ரசித்துவிட்டு
பின்கிடைத்த தருணத்தில்
பாராட்டிய ரகசியங்கள்
சற்றேஇன்று நினைத்தாலும்
சிவக்கவைக்கும் நினைவுகள்தாம்!!!
யதார்த்தம் அருமை .

Sri Seethalakshmi said...

கவிதை அருமை...

போனவாரம் சென்னைக்கு போய் அம்மா கையால் மருதாணி இட்ட சிவப்பு இன்னும் போகவில்லை... அதற்குள் அம்மாவின் நினைவு எனக்கு.

அதை இன்னும் ஆழமாய் நினைக்க வைக்கிறது கவிதை...

நன்றிகள்... பாராட்டுக்கள்...

Priyaram said...

உங்களோட கவிதை பழைய நினைவுகளை கொண்டு வந்துடுச்சு....

Priyaram said...

nice kavidhai....

RAMVI said...

கல்லூரரில் அரைக்கும் போது கை சிவந்துவிடும் என்பதால்,கையால் தள்ளிவிட்டு அரைக்காமல் கரண்டியை வைத்து தள்ளி அட்டகாசம் செய்தது, அம்மாவே அரைத்து கையில் அழகாக வைத்து விடுவது,இட்டுக்கொண்ட பின் அடிக்கடி கொஞ்சம் தள்ளி சிவந்து விட்டதா என்று பார்ப்பது..இப்படி நிறைய சின்ன வயது நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க ,புவனா.அருமையாக இருக்கு.நன்றி.

Thanai thalaivi said...

ஒரு மெஹந்தி கோன் வாங்கி வைத்து மாதங்கள் பல ஆகியும் வைத்துகொள்ள தான் நேரம் கூடிவரவில்லை..ம்...ம்...ம் என் மனதின் ஏக்கத்தை பிரதிபலித்த கவிதை. வாழ்த்துக்கள்.

geethasmbsvm6 said...

அம்மாவோடு மருதாணியும் போச்சு; இப்போல்லாம் ஒத்துக்கறதில்லைனு வச்சுக்கவே முடியலை; மருதாணி அரைச்சு இட்டுக்கறதிலே, அதிலும் இட்டுக்கொண்ட மறுநாள் கைகளிலே மருதாணி வாசம் இருக்கையிலே ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லுனு ப்ழைய சாதம் அந்தக் கையால் சாப்பிட்டால்! ஆஹா! சொர்க்கமோ சொர்க்கம்! தொட்டுக்க வத்தக்குழம்பு. கைகளிலே உருட்டிப் போட்டுக் கட்டைவிரலால் குழி பண்ணிக் கொண்டதும் குழம்பை அதிலே ஊத்துவாங்க; அப்படியே சாப்பிட்டால்!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:(((

geethasmbsvm6 said...

தொடர

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை! த.ம. 5
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

தமிழ் உதயம் said...

அழகான கவிதை மருதாணி போல்...

divyadharsan said...

அருமை அப்பாவி மற்றுமொரு அழகான பதிவு..

ஒரே விஷயம் எனக்கு பாட்டிதான் வெச்சிவிடுவாங்க..அம்மாக்கும் எனக்கும்!!பாட்டி வீட்ல பெரிய மருதாணி மரம் இருந்துச்சு.அதுகூடவே பூந்தோட்டமும்!! அத சுத்தி சளைக்காம விளையாடினது எல்லாம் நியாபகம் வருது..

அழகான வரிகள் ஒவ்வொன்றிலும் நம் அனைவரின் சிறுவயது நினைவுகள் அப்பட்டமாய்..

சூப்பர் & நன்றி அப்பாவி. டாட்டா

கோவை2தில்லி said...

அழகான கவிதை. என்ன தான் டிசைன் போட்டாலும் அந்த தொப்பி வைத்து உள்ளங்கை வட்டம் வைப்பதே மிகவும் அழகு தான். தூங்கும் போது அம்மா வைத்து விடுவார். காலையில் பார்க்கும் போது அவ்வளவு ஆனந்தம். கூடுதலாய் சிவப்பதற்கு கையில் கழுவும் முன் யூகலிப்டஸ் எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவோம்...

Jagannathan said...

ம்ம்ம்.. நன்றாகத்தான் இருக்கு! ஆனாலும் என்ன, இது கவிதை தானா அல்லது இரண்டு, மூன்று வார்த்தைகளை ஸ்பேஸ் விடாமல் சேர்த்து எழுதிய, தொடர்ந்து எழுதாமல் வரிகளை மடக்கி மடக்கி எழுதப்பட்ட உரைநடையா என்பது என் சந்தேகம்! (தப்பாக நினைக்காதீர்கள், இப்போதெல்லாம் இதைத்தான் கவிதை என்கிறார்கள் - எத்தனை பேர் கரெக்டாக ‘கவிதை’ நன்று என்று எழுதியிருக்கிறார்கள்!) - ஜெ.

Anonymous said...

ஐ நாங்கூட ட்ரைப்பன்னேன், செவந்து கருத்துப்போச்சி. பித்தம் ஜாஸ்தினு அம்மா சொன்னா.

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

Jagannathan said...

Happy New Year to you and your family! I am sure you will bring more smile to our faces this year! - R. Jagannathan

Kriishvp said...

Hi Sister,
Wishing you a Very Happy and Prosperous New Year 2012 :)

ஓசூர் ராஜன் said...

மருதாணி கவிதை மலரும் நினைவுகளை தருதே! மயங்க வைக்கிறதே!!

தக்குடு said...

எங்காத்துல எங்க அண்ணனுக்கு மருதானி பிடிக்காது, அதனால எனக்கு மருதானின்னா ரொம்ப பிடிக்கும். தெரு முழுசும் எந்த மாமியாத்துல அறைச்சாலும் ஒரு உருண்டை எனக்கு தந்துடுவா. ஹும்ம்ம்ம்ம்... அது ஒரு காலம்.... இந்தவாட்டி என்னோட மாமியார் இட்டு விட்டா! :) கடைசி ரெண்டு பாரா டாப்புடக்கர்! :)

Sowmya said...

nice one.

priya.r said...

நல்ல பதிவு

இனிமையான நினைவுகளை நினைவுட்டியதர்க்கு நன்றி

ஆமாம் அந்த ஒரு கை உன்னுடையது தானே !

எங்கே இருக்கிறாய் புவனி ?

We missed you ...........

ராஜி said...

மருதாணி இட்ட விரல்கள் சில நாட்கள் மட்டுமே சிவந்திருக்கும். ஆனால், அதன் நினைவுகள் காலம் முழுக்க முகம் சிவக்க வைக்கும் நாணத்தால்.

Thanai thalaivi said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். :))))

எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்? பண்டிகைகள் வந்து விட்டால் நீங்க வேற ஆப்செட் (இது எழுத்து பிழை அல்ல!) ஆகிடுவீங்களே ன்னு நினைச்சு வருத்தமா இருக்கு! :(((

Thanai thalaivi said...

@ பிரியா : பிரியா பாருங்க நீங்க ரொம்ப கலாய்ச்சதால தங்கமணி காணாம போய்ட்டாங்க, அப்புறம் என்னமாதிரி இருக்கிற அவங்களோட தீவிர விசிறிகள் எல்லாம் என்ன ஆகிறது !? எனக்கு தெரியாது நீங்க என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ தங்கமணியை கண்டு பிடிச்சு கொடுக்கணும், சொல்லிட்டேன் ஆமா ! :)))))))

priya.r said...

இந்தாங்க ..தங்கமணியை உங்க கிட்டே தாரேன் .,இல்லையில்லை எங்க கண்ணையே உங்க கிட்டே தர்றோம் .....
அதில் எப்போதும் இனி ஆனந்த கண்ணீரை மட்டும் தான் நாங்க பார்க்கோணும் ஓகே வா :)

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி...;)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா...;)

@ பதிவுலகில் பாபு - நன்றிங்க பாபு...

@ Ramani - நன்றிங்க சார்

@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்...:)

@ ஸ்ரவாணி - நன்றிங்க ஸ்ரவாணி... முதல் வருகைக்கும் நன்றி

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)

@ Rishvan - நன்றிங்க...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்...:)

@ சிநேகிதி - நன்றிங்க சிநேகிதி

அப்பாவி தங்கமணி said...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - நன்றிங்க சார்

@ கீதா - ரெம்ப சரியா சொன்னீங்க கீதா... அந்த சுகம் வேற தான்.. நன்றி

@ ஸ்ரீராம். - நன்றிங்க ஸ்ரீராம்

@ மகேந்திரன் - நன்றிங்க மகேந்திரன்

@ Lakshmi - கண்டிப்பா பசுமை நினைவுகள் தான் லக்ஷ்மிம்மா...;)

@ Vasudevan Tirumurti - தேங்க்ஸ் திவாண்ணா...;)

@ அமைதிச்சாரல் - ஆஹா... கமெண்ட்லையே கவித கவித...:))

@ sasikala - நன்றிங்க சசிகலா

@ Sri Seethalakshmi - அம்மா கையால் மருதாணியா? வாவ்.. எனக்கு எப்ப கிடைக்குமோ ஹ்ம்ம்... நன்றிங்க

@ Priyaram - நன்றிங்க ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ RAMVI - ஆஹா.. அழகான நினைவுகள்... நன்றிங்க ராம்வி

@ Thanai thalaivi - நன்றிங்க தலைவி அக்கா

@ geethasmbsvm6 - ஆஹா... நீங்க சொன்னதை கேக்கவே ஆசையா இருக்கே... ரசனையா சொல்லி இருக்கீங்க மாமி....:)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ தமிழ் உதயம் - ரெம்ப நன்றிங்க சார்

@ divyadharsan - தேங்க்ஸ் திவ்யா... எல்லாரோட பாட்டி வீட்டிலும் மருதாணி மரம் இருந்துருக்கு பாருங்களேன். இந்த தலைமுறை மிஸ் பண்ணும் விசயங்களில் இதுவும் ஒன்றுனு நினைக்கிறேன்

@ கோவை2தில்லி - ஆமாம் ஆதி, என்ன என்னமோ செஞ்சு சிவக்க வெச்ச நினைவுகள் தான்... நன்றி

@ Jagannathan - ஹா ஹா... தப்பா எல்லாம் நினைக்கலைங்க. நீங்க சொல்றது தான். மரபு கவிதைனா அதுக்கான இலக்கணத்தோட மாத்திரை அளவுகள் கூட மாறமா இருக்கும். இந்த புது கவிதை காலத்தில் கொஞ்சம் அழுத்தி சொன்னாலும் கவிதையாகித்தான் விடுகிறது. சுருக்கமான உரைநடைனு வேணா சொல்லலாமோ... நன்றிங்க...;)

@ Anonymous - அப்படியும் ஆகரதுண்டு....:))

@ அப்பாதுரை - நன்றிங்க... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - நன்றிங்க... நிச்சயம் முயல்கிறேன்... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ Kriishvp - நன்றிங்க... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

@ ஓசூர் ராஜன் - நன்றிங்க

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு... மாமியார் வீட்டு மருதாணியா? நடத்து நடத்து...;))

@ Sowmya - நன்றிங்க சௌமியா...;)

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியக்கா... இல்ல அக்கா, அந்த போட்டோ கூகிள் உபயம்... தேங்க்ஸ் அ லாட்...missed யு டூ...:)

@ ராஜி - ரெம்ப சரி... நன்றிங்க

@ Thanai thalaivi - நன்றிங்க தலைவி அக்கா... காணோம்னு தேடினதுக்கும் வாழ்த்துக்கும்...;)

@ priya.r - ஒகே ஒகே...டீல்... ;))

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ விச்சு - ரெம்ப நன்றிங்க...:)

Mathi said...

மருதாணி நினைவுகள் ..
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

@ Mathi - ரெம்ப நன்றிங்க...:)

Post a Comment