Monday, January 16, 2012

இழப்பு... :(
"மனுஷன் பொறக்கறப்பவே அவன் சாகற தேதிய ஆண்டவன் தீர்மானிச்சுடுவான். அது தெரியாம இருக்கற வரைக்கும் தான் நிம்மதி, தெரிஞ்சுட்டா ஓவொரு நாளும் நரகம் தான்"னு எங்க பாட்டி சொல்லுவாங்க

அது நிஜம் தான் என்றாலும் கூட சில சமயம் அதை தெரிந்து கொண்டால் நிம்மதியோ என தோன்றுகிறது

என் வாழ்வில் அப்படி ஒரு தருணமிது. என் நாத்தனாரின் கணவர் இத்தனை இளம் வயதில் காலமாவார் என நங்கள் யாரும் எதிர்பார்கவில்லை. முப்பத்தி ஓம்பது வயது சாகும் வயதா?

பெரிதாய் உடல் உபாதைகளும் இல்லை. லோ பிரசர் கொஞ்சம் பார்டர் லைனில் இருந்தது அதுக்கு மருந்து எல்லாம் சரியா எடுத்துட்டு தான் இருந்தார், ஒரு வாரம் முன்னாடி கூட செக் அப் போனப்ப எல்லாம் ஒகேனு தான் ரிப்போர்ட் வந்தது

டிசம்பர் 26ம் தேதி இரவு வழக்கம் போல தூங்கினவர் காலையில் கண் விழிக்கவில்லை. தூக்கத்திலேயே மாரடைப்பில் உயிர் பிரிந்து விட்டது. லோ பிரசர்னால வலியை உணராம இருந்துருப்பார்னு டாக்டர்'ஸ் சொல்றாங்க

விஷயம் கேட்டதுமே கிளம்பினோம் ஆனாலும் அங்க போய் சேரும் போது ரெண்டு நாள் ஆய்டுச்சு. கடைசியா முகம் பார்க்க கூட குடுத்து வைக்கவில்லை. நமக்காக எல்லாரும் காத்து கிடைக்கணும், அதோட பார்க்க பார்க்க துக்கமும் கூடும்னு எதையும் லேட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டோம்

ஆனாலும் அங்க போனதும் நடு வீட்டில் ஏற்றி வைத்திருந்த தீபத்தை பார்த்ததும், வெளிநாட்டு வாழ்வின் மிச்சம் இதான்னு நிதர்சனம் முகத்தில் அறைந்தது. என் நாத்தனாரின் முகத்தை பார்க்கும் தைரியம் கூட இருக்கவில்லை

எந்த வலியும் உணராம நிம்மதியா போயிட்டாருனு எல்லாரும் சமாதானம் சொன்னாலும் கூட, உடல் நிலை சரியில்லாம இருந்து போய் இருந்தா கூட எல்லாரோட மனசும் கொஞ்சம் தயாராகி இருக்குமோனு சுயநலமா தோணுச்சு

தூங்குன மனுஷன் இனி விழிக்க மாட்டோம்னு நினைச்சுருப்பாரா? இவ்ளோ தான் மனுசனோட வாழ்க்கை, இதுக்கு இடைல எத்தனை சண்டைகள் சச்சரவுகள் ஆசைகள் அங்கலாய்ப்புகள், எல்லாமும் ஒரே நொடியில் முடிஞ்சு போச்சே

ஏற்கனவோ நொந்து போய் இருக்கற பொண்ணோட மனசை தேவையில்லாத எந்த சம்பிரதாயங்களும் செஞ்சு கஷ்டப்படுத்தக்கூடாதுனு நாங்க மொதலே சொல்லிட்டோம். சில பெரியவர்கள் முகம் சுளித்தாலும் பின் ஒப்பு கொண்டனர்

ஆனாலும் ஆன்ம சாந்திக்கு அவசியம் என இலை மறை காய் மறையாய் செய்யப்பட்ட சில சடங்குகளை பாத்தப்ப, நம்மூர்ல வயசான பாட்டிகள் கூட ஏன் சுமங்கலியா போய்டணும்னு சொல்றாங்கன்னு புரிஞ்சது

மனிதனால் உருவாக்கப்பட்டவை தானே சம்பிரதாயங்கள், அது மனிதனின் மனதை வருத்தும்படி ஏன் வடிவமைத்தார்கள்? ரெம்ப பேசவும் முடியல, ஊமையா வேடிக்கை தான் பாத்தேன்

நம்ம சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாமும் ஏதோ சரியான காரணத்துக்காக உருவாக்கபட்டவை தான்னு சொல்லி வளர்க்கபட்டவள் தான் நான் என்றபோதும், ஏனோ பார்க்க கஷ்டமா இருந்தது

என் நாத்தனார் என்னை விட மூத்தவள் என்றாலும் முதலில் இருந்தே தோழிகள் போல் வா போ என்று பேசி தான் வழக்கம், எப்போதும் போல் இயல்பாய் இரு நாங்கள் இருக்கிறோம் என எனக்கு தெரிந்த வரை சமாதானம் செய்தேன்

கடைசியில் அவர் முகம் பார்க்காததாலோ என்னமோ, இன்னமும் என்னால் அவர் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்கயோ போய் இருக்கார் வந்துடுவார்னு தான் தோணிகிட்டு இருக்கு

ஒரு ஒரு முறை இந்தியா போகும் போதும் அவர் கண்டிப்பா ஏர்போர்ட்க்கு வருவார், இந்த முறை போய் இறங்கினதுமே அந்த ஞாபகம் கண்ணில் நீர் வர செய்தது

ஆனால் காலமும் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை, வாழ்க்கை அது பாட்டில் ஓடிகிட்டே தான் இருக்கு. நாமும் அதோட ஓடிகிட்டே தான் இருக்கணும். எதுவும் நிக்க போறதில்ல, நமக்கு பின்ன எத்தனை பேர் நம் இழப்பை உணருறாங்க என்பது தான் நாம் வாழும் வாழ்வின் அர்த்தமோனு தோணுது

இந்த இருபது நாளா என்னை காணோம்னு கேட்டு நீங்க நெறைய பேர் ஈமெயில், facebook மெசேஜ், போன் மெசேஜ் எல்லாமும் அனுப்பி இருந்தீங்க. உங்க நினைவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி. திடீர்னு இந்தியா கிளம்பினதால யாருக்கும் தகவல் சொல்ல முடியல, மன்னிக்கவும்

உங்க யாரோட போன் நம்பரும் எடுத்துக்க நேரம் இருக்கல. அங்க போய் ஈமெயில் செக் பண்ணவும் நேரம் இருக்கல. நேத்து கனடா வந்தப்புறம் தான் எல்லா மெசேஜ்'ம் பாத்தேன். மெனி தேங்க்ஸ் டு யு ஆல். பொறுமையா இனி ரிப்ளை பண்றேன்

எல்லாருக்கும் ஹாப்பி நியூ இயர் விஷஸ். பொதுவா வருஷ பிறப்பின் போது "இந்த வருஷம் உங்கள் கனவுகள் எல்லாமும் நிறைவேற வாழ்த்துக்கள்"னு வாழ்த்துவோம்

ஆனா இப்ப மனுசுல தோன்றது, "இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருசமா, நோய் நொடியற்ற இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்"

நன்றி

வருஷத்தின் முதல் பதிவே துக்க பதிவா போனதுல எனக்கும் வருத்தம் தான். உங்கள்ல சிலர் எனக்கு அனுப்பி இருந்த புது வருஷ வாழ்த்து செய்தில "இந்த வருஷம் எங்களை உங்க பதிவுகள் மூலமா சிரிக்க வெப்பீங்கனு எதிர்ப்பாக்கறோம்"னு எழுதி இருந்தீங்க, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி மீண்டும்

அன்புடன்,
புவனா (எ) அப்பாவி தங்கமணி

59 பேரு சொல்லி இருக்காக:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேட்கவே மிகவும் சங்கடமாகத்தான் உள்ளது.;((

இராஜராஜேஸ்வரி said...

"இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருசமா, நோய் நொடியற்ற இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்"

நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் காலமும் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை, வாழ்க்கை அது பாட்டில் ஓடிகிட்டே தான் இருக்கு. நாமும் அதோட ஓடிகிட்டே தான் இருக்கணும். எதுவும் நிக்க போறதில்ல, நமக்கு பின்ன எத்தனை பேர் நம் இழப்பை உணருறாங்க என்பது தான் நாம் வாழும் வாழ்வின் அர்த்தமோனு தோணுது

அர்த்தமுள்ள பகிர்வு..

காற்றில் எந்தன் கீதம் said...

உங்கள் நாத்தனாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அப்பாவி அக்கா..
முதல் முறை உங்கள் பதிவுக்கு வந்து புன்னகை தொலைத்து போகிறேன்... :(
"இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருசமா, நோய் நொடியற்ற இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்" //
நானும் அப்படியே வேண்டிகிறேன் ...

பிரதீபா said...

Deepest Condolences Akka.. Yes, as you said, even though we are cursed with some near-one's sudden demisal, God should give us sometime for preparing for the worst. My paatti passed away during my last visit to oor. But atleast I was with her through the entire happening.

Mahi said...

:( :(
அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

BalajiVenkat said...

My Deepest condolences... even my sisters son inlaw passed away on jan 1st in egypt due to sudden attack... he is around 40 years..

angelin said...

மிகவும் வருத்தமா இருக்கு ,


// இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்"//

இதே தான் எனது வேண்டுதலும் புவனா.

தி. ரா. ச.(T.R.C.) said...

My deepest codolances to your sister in laws family. punarabhi jananam punarahi maranam jatare sayaanam. Time alone can heal this.

athira said...

ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை, படித்ததும் மனமும் இதயமும் என்னவோபோலாகி விட்டது..

நாமெல்லாம் என்ன இருக்கவா போகிறோம், இன்று அவர், நாளை நாங்க என அவவுக்கு ஆறுதல் சொல்லுங்க...

“இதுவும் கடந்து போகும்” என மனதளவில் நினைத்தாலும், எம் மனமும் இதயமும் ஏற்றுக்கொள்ளாது என்பது உண்மைதான்..

Thanai thalaivi said...

pls convey my condolances to your SIL. I really feel sorry.

Asiya Omar said...

//ஆனா இப்ப மனுசுல தோன்றது, "இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருசமா, நோய் நொடியற்ற இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்" //

என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.தாங்க முடியாத இழப்பை தாங்கும் மனப்பக்குவத்தை அந்த இறைவன் தான் உங்க
நாத்தனாருக்கு தரணும்னு வேண்டிக்கறேன்.

Madhavan Srinivasagopalan said...

oh! sad..

May the soul rested in peace.

//மனிதனால் உருவாக்கப்பட்டவை தானே சம்பிரதாயங்கள், அது மனிதனின் மனதை வருத்தும்படி ஏன் வடிவமைத்தார்கள்?//

சடங்குகளும் சம்பிரதாயங்களும் காலத்துக்கேற்ற வகையில் மாற்ற வேண்டும்... மனிதனை மனிதன் ஆதரித்தும்.. ஊக்கப் படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ம்ம்ம்..

divyadharsan said...

May his soul rest in peace.My condolences to your sister -in -law & family. Things like this always scared me to the core and surely know am not even ready for these things cant even imagine in my life..
But as you said its always unexpected..dnt know wat to say..tightens my heart:( remembered you have mentioned him in one of the posts regarding hotel cheating. Whatever life is full of unexpected shock surprises!!

Take care Appavi.Love u.

vanathy said...

May his soul rest in peace. Very sad to read this.

அமைதிச்சாரல் said...

அடப்பாவமே.. நீங்க காணாம போனதுக்கு பின்னாடி இப்படியொரு சோகமிருக்கா?.. வழக்கம் போல ஆணிகள் இருக்கும்ன்னு இல்லே நினைச்சுட்டிருந்தோம்.

கடவுள்தான் ஆன்ம பலத்தைக் கொடுக்கணும், உங்க நாத்தனாருக்கு. பக்க பலமா நீங்களும் இருந்து மீட்டுக் கொண்டு வந்துருவீங்கனு தெரியும்தான். ஆழ்ந்த அனுதாபங்கள் புவனா.

சுசி said...

ஆழ்ந்த அனுதாபங்கள் புவனா.

அவரோட ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கறேன்.

வெளிநாட்டு வாழ்வு முதல் சம்பிரதாயம் வரை.. நீங்க சொல்லி இருக்கிற அத்தனையும் நிஜம்.

ஹேமா said...

சங்கடமான விஷயமாய் இருந்தாலும் இதுதான் வாழ்க்கைன்னு மனசைப் பக்குவப் படுத்திக்கொள்வோம் தோழி.ஆறுதலடையுங்கள் !

அப்பாதுரை said...

வருத்தமாக இருக்கிறது.

A and A said...

My thoughts and prayers are with you and your family, especially your sil!

Vasudevan Tirumurti said...

:-(

Rathnavel said...

ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினர் மறக்க முடியாத துயரத்திலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறோம். ஆண்டவன் நல்ல மன வலிமை தர வேண்டுகிறோம்.
நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

எங்கப்பாவும் இதே போல் ஹார்ட் அட்டாக்கில் தான் இறந்தார்.. உங்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவன்...யார் என்ன சொன்னாலும் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடுபடுகிறதோ.
தூக்கத்தில் போவது எவ்வளவு கொடுமை என்று எனக்கும் தெரியும்.
ஒரு வலி வந்திருக்காதோ.ஒரு முனகல் இருந்திருக்காதோ என்றேல்லாம் இன்னும் புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
பிரார்த்தியுங்கள்மா. இறைவலிமை கூடட்டும். உங்கள் உதவிக்கரம் அந்தப் பெண்ணுக்கு
எப்பொழுதும் நீண்டிருக்கும் என்று தெரிகிறது.

Lakshmi said...

சங்கடமான விஷயமாய் இருந்தாலும் இதுதான் வாழ்க்கைன்னு மனசைப் பக்குவப் படுத்திக்கொள்வோம் தோழி.ஆறுதலடையுங்கள் !

கோவை2தில்லி said...

ஆழ்ந்த அனுதாபங்கள் புவனா. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...

அன்றாடம் கடவுளிடம் வேண்டுவதே எல்லோருக்கும் நோய் நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வை கொடு என்பது தான். அதைத் தவிர வேறென்ன வேண்டும்.....

kg gouthaman said...

அதிர்ச்சியூட்டும், துக்ககரமான நிகழ்வு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//ஆனால் காலமும் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை, வாழ்க்கை அது பாட்டில் ஓடிகிட்டே தான் இருக்கு. நாமும் அதோட ஓடிகிட்டே தான் இருக்கணும். எதுவும் நிக்க போறதில்ல, நமக்கு பின்ன எத்தனை பேர் நம் இழப்பை உணருறாங்க என்பது தான் நாம் வாழும் வாழ்வின் அர்த்தமோனு தோணுது//

அருமையான வரிகள்.

அதிலும் இருக்கப்போகிற கொஞ்ச காலத்தில் நல்ல காரியங்கள் செய்து நம்மை பிறர் நினைவு கூறும்படி வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும், இழப்பால் வாழும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொறுமையும், சகிப்புத்தஹ்மையும் தர வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

LK said...

take care

ஹுஸைனம்மா said...

என்ன சொல்ல... உங்களைப் போலவே திகைத்துதான் போயிருக்கிறேன். இதன் பின்னிருக்கும் நமக்கான செய்தியும் பயமூட்டுகிறது. நாத்தனாருக்கும், குழந்தைகளுக்கும் என் பிரார்த்தனைகள்.

arul said...

nothing comes tomy mind as i had faced this same situation a month before

RAMVI said...

மிகவும் வருத்தமான விஷயம் புவனா,தங்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

எப்பொழுதும் நகைசுவையாக எழுதும் தங்களிடமிருந்து இப்படி ஒரு சோகமான பதிவு எழுத நேர்ந்தமைக்கு வருத்தங்கள். தங்களுக்கும் தங்கள் கணவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

தக்குடு said...

கேக்கர்துக்கே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா! வயசுல சின்னவா சீக்கரம் போகர்து கஷ்டமான விஷயமும் கூட. அவருடைய ஆத்மசாந்திக்கு எங்களின் பிரார்த்தனைகள் (கண்ணீருடன்)...............

புதுகைத் தென்றல் said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் கொடுக்கட்டும்.
ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

S.Menaga said...

படிக்கும்போதே கஷ்டமா இருக்கு..அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள்!!

ஸ்ரீராம். said...

மிகவும் வருத்தமான விஷயம். உங்கள் நாத்தனாருக்கு இந்தச் சோகத்தைத் தாங்கும் சக்தியை ஆண்டவன் வழங்கட்டும். எங்கள் அனுதாபங்கள்.

kriisvp said...

My deep condolences Bhuvana Sister, Let his soul rest in Peace.(I lost my cousin sister at the age of 30, i know the pain)

கீதா said...

சம்பிரதாயங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மை. வாழ வேண்டிய வயதில் கணவரைப் பறிகொடுத்து நிற்பதிலும் கொடுமை இது போன்ற சம்பிரதாயங்களில் அவரை ஈடுபடுத்தி இன்னும் மனம் நோகச் செய்வது. இழப்பின் வலியைத் தாங்க அவர் மனம் உறுதியாகட்டும். அதற்கு உறவும் நட்பும் உதவட்டும்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. எந்நாளும் நலமே விளைக.

RVS said...

அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள். :-(

shunmuga said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ! ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் !

மாதேவி said...

வருந்துகின்றேன்.

ஆண்டவன் குடும்பத்தினருக்கு மனஅமைதியைத் தரட்டும்.

viswam said...

ஆடி அடங்கும் வாழ்க்கை. பிறப்பும் இறப்பும் இறைவனே அறிவார். மனதை தேற்றிக் கொள்ளுங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இந்திரா said...

ஈடு செய்ய முடியா இழப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன..

Jagannathan said...

/I am sure you will bring more smile to our faces this year! / உங்கள் முந்தைய பதிவான கவிதைக்கு என் பின்னூட்டத்தில் நான் எதிர்பார்த்ததுதான் மேற்கண்ட வரி. நீங்களும், உங்கள் கணவரும், நாத்தனார் மற்றும் குடும்பத்தார் அனைவரும் இந்த துக்கத்திலிருந்து மீண்டு, வாழ்க்கையின் நிலையாமையையும், இறைவன் தனக்குப் பிரியமானவர்களை சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என்று சொல்லப் படுவதையும் நினைத்து, நார்மல் நிலைக்கு வரும் தெம்பையும், மனதிடத்தையும் அந்த இறைவனே அளிக்கப் பிரார்த்திக்கிறேன்.
-ஜெகன்னாதன்

En Samaiyal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

priya.r said...

முதல் தடவையாக உனது பதிவை படித்தவுடன் அழுகை வந்தது.......... .,
எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்
உனது நாத்தனாருக்கு எனது அனுதாபங்கள் புவனி
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உனது நாத்தனாருடன் பேசி அவருக்கு ஆறுதல் சொல்லு புவனி .............

Sri Seethalakshmi said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

காலமும், மறதியும் ஒரு நல்ல மருந்து...
உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய,ஆரோக்யமான புத்தாண்டு நல்வாழ்துக்கள்...

வெட்டிப்பையன்...! said...

அவர் நினைவுகளை நம்முடன் விட்டுவிட்டு சென்று உள்ளார். அந்த நினைவுகளை நாம் உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் நம் கடமை . அதன் மூலம் அவர் நம்முடையே வாழ்ந்து கொண்டு இருப்பார் . இருப்பினும் தங்களுடைய இழப்பிற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

Madhuram said...

Sorry Appavi. Naanum inga vandhu paathukitte iruppen, edhavadhu update irukanutu. Ennada romba naala oru postaiyum kaaname nu ninaichukitte irundhen.

அப்பாவி தங்கமணி said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றி சார்

@ இராஜராஜேஸ்வரி- நன்றி'ம்மா

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க

@ பிரதீபா - Well said Deepa, nothing can be stopped, atleast we need the courage to face the facts... sad to hear about your grandma but glad you were there... I was praying the same... thanks

@ Mahi - தேங்க்ஸ் மகி

@ BalajiVenkat - Sorry to hear that Balaji... these days age is not a factor to death... health is wealth is what we all need to think of and concentrate. Thanks

@ angelin - நன்றிங்க ஏஞ்சலின்

@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்

@ athira - நன்றிங்க அதிரா

@ Thanai thalaivi -தேங்க்ஸ் அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ Asiya Omar - நன்றிங்க ஆஸியா

@ Madhavan Srinivasagopalan - நன்றிங்க சார்

@ divyadharsan - Thanks Dhivya. Very true, life is full of unexpected surprises, as long as it is good we'll enjoy, when it turns out to be otherwise it is so sad

@ vanathy - Thanks Vanathy

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா

@ சுசி - நன்றிங்க சுசி

@ ஹேமா - தேங்க்ஸ்'ங்க ஹேமா

@ A and A - மெனி தேங்க்ஸ்

@ Vasudevan Tirumurti - :(

@ Rathnavel - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப நன்றிங்க வல்லிம்மா. கொடுமை தான், அதுவும் இத்தனை இளம் வயது இன்னும் கொடுமை. எல்லோரின் பிரார்த்தனைகளும் அவளுக்கு பலம் தருமென நம்புகிறேன்... நன்றிங்க

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி...சரியா சொன்னீங்க health is wealth

@ kg gouthaman - நன்றிங்க சார்

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ரெம்ப நன்றிங்க

@ LK - தேங்க்ஸ் பிரதர்

@ ஹுஸைனம்மா - நன்றிங்க அக்கா... பயமாத்தான் இருக்கு :(

@ arul - Very sorry to hear that Mr. Arul, take care. Thanks

@ RAMVI - நன்றிங்க ராம்வி

அப்பாவி தங்கமணி said...

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - ரெம்ப நன்றிங்க சார்

@ தக்குடு - ரெம்ப தேங்க்ஸ் தக்குடு

@ புதுகைத் தென்றல் - நன்றிங்க அக்கா

@ S.Menaga - நன்றிங்க மேனகா

@ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க

@ kriisvp - sorry to hear about your cousin.. Thanks for your thoughtful message

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா

@ RVS - நன்றிங்க சார்

@ shunmuga - நன்றிங்க

@ மாதேவி - நன்றிங்க மாதேவி

அப்பாவி தங்கமணி said...

@ viswam - ரெம்ப நன்றிங்க

@ இந்திரா - ரெம்ப சரி... நன்றிங்க

@ Jagannathan - ரெம்ப நன்றிங்க சார்

@ En Samaiyal - மெனி தேங்க்ஸ்

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியாக்கா

@ Sri Seethalakshmi - நன்றிங்க சீதா

@ வெட்டிப்பையன்...! - ரெம்ப நன்றிங்க

@ Madhuram - Thanks Madhuram. Will call you in the weekend

Sreeja said...

Deepest condolence.May his soul rest in peace.God give strength to you all to overcome this difficult situation.Sincere prayers

அப்பாவி தங்கமணி said...

@ Sreeja - Thanks Sreeja

Anonymous said...

Dear Thangamani,

I came across your blog 2 days ago and am so happy to read your posts.
This is very sad to read. Man proposes and God disposes. We lost several friends and family in similar situations. Whether young or old death is so final. And as you have said, we fight and argue to win small points- all really pointless in the final analysis.
My prayers to you and your family to handle this and come out of it with grace. May Sri Bhagavan always be with you.
Mona

அப்பாவி தங்கமணி said...

@ Mona - Many thanks for your kind and thoughtful words Mona. Blogging helped as a definite distraction to come out of it. Thanks for all your support in time of need

Post a Comment