Monday, February 06, 2012

இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)))


அப்பாவி : இல்ல தெரியாமதான் கேக்கறேன்...

மைண்ட்வாய்ஸ் : அதெப்படி தெரியாம கேப்ப?
 
 அப்பாவி : சரி தெரிஞ்சே கேக்கறேன்
 
மைண்ட்வாய்ஸ் : தெரிஞ்சுட்டே ஏன் கேக்கற?
 
அப்பாவி : நீ என்ன பார்த்திபன் சாருக்கு சொந்தமா?
 
மைண்ட்வாய்ஸ் : ஆமா, நானும் அவரும் துபாய்ல விவேகனந்தர் தெருல...
 
அப்பாவி : மைண்ட்வாய்ஸ், திஸ் இஸ் தி லிமிட் (என கர்ஜிக்க)
 
மைண்ட்வாய்ஸ் : ம்... கோபம் வருதா? கோபம் வருதா? வேணும் வேணும் நல்லா வேணும்... ஹா ஹா ஹா... ஒரு நாள் மொக்க போட்டதுக்கே உனக்கு இத்தன கோபம் வருதே... எங்களுக்கு எத்தன கோ....ஊ... ஊ...ஓ... எ... ஏ... ஆ.........

(சைலண்டா வாயில் பிளாஸ்டர் ஒட்டி மைண்ட்வாய்ஸை கடத்துகிறார்கள் அப்பாவியின் ஆதரவாளர்கள். அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி அந்த தகவல் தலையை சுற்றி வீசப்படுகிறது... :)

அப்பாவி : ஹி ஹி... அது மைண்ட்வாய்ஸ்க்கு தொண்டைல கிச் கிச்... அது விக்ஸ் மாத்திர சாப்பிட போயிருக்கு...வர்ற வரைக்கும் நாம நிம்மதியா பேசுவோம்...

மொதலே சொல்லிடறேன், "உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ற பச்ச துரோகி, Yellow எட்டப்பி, கருப்பு கோட்சே"னெல்லாம் யாரும் கொந்தளிச்சு ஒடம்ப கெடுத்துக்க வேண்டாம். சும்மா மனசுலபட்டதை என்னோட பாணில சொல்லி இருக்கேன்... அம்புட்டு தானுங்கோ...
 
எனவே, உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))

இந்த ஊருக்கு வந்த புதுசுல நெறைய விஷயங்கள் ரெம்ப புதுசா இருந்தது. எங்க பிரெண்ட் ஒருத்தங்க சொன்னாங்க "எல்லாமே ஆப்போசிட் அப்படிங்கறத மட்டும் மனசுல வெச்சுக்க சீக்கரம் பழகிடலாம்"னு

டிரைவிங்ல சைடு மாறுறதத்தான் அப்படி சொல்றாங்க போலனு நானும் வெள்ளந்தியா மண்டைய மண்டைய ஆட்டினேன். வந்து பதினஞ்சு நாள் ஒரு பிரெண்ட் வீட்டுல தங்கினோம்... அப்புறம் தான் எங்களுக்கு அபார்ட்மென்ட் கெடச்சது 
 
கைல சாவிய குடுத்ததும் என்னமோ வெள்ளை மாளிகையே என்ர பேருக்கு கிரையம்(பட்டா) பண்ணி வெச்ச ரேஞ்சுக்கு பீலாகி நான் தான் வீட்டை திறப்பேன் நான் தான் வீட்டை திறப்பேன்னு பீலா விட்டுட்டு இருந்தேன்

"சரிம்மா உன் இஷ்டம்"னு ரங்கமணி ஆதரவா பேசும் போதே யோசிச்சுருக்கணும், ம்... சூது வாது தெரியாம வளந்துட்டேன், என்ன செய்ய?

ஆர்வமா போய் கதவ தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன்...... ஆமாங்க திறந்துட்டே இருக்கேன்... ஒண்ணும் முடியல

ஒருவேள "அண்டாக்கா ரசம் டப்பக்கா சாம்பார் டிபன்கா இட்லி.... திறந்திடு பிசாசே"னு எதுனா சொல்லணுமோனு சந்தேகம் வந்துடுச்சு

"நீயெல்லாம் எப்படித்தான் குடித்தனம் செஞ்சு குப்ப கொட்ட போறியோ"னு எங்க அம்மா பொலம்பினது வேற கண்ணு முன்னாடி வந்தது...அப்பவெல்லாம் எங்கம்மாட்ட நக்கலா "ம்... குப்பதொட்டில கொட்டுவேன்"னு சொல்லுவேன்... அந்த லொள்ளுக்கெல்லாம் தான் இப்ப ஆப்புனு ஒரே பீலிங்காகி போச்சு

இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி அந்த Immigration Agency கடன்காரன், டோபல் (TOEFL) கீபல்னு என்ன என்னமோ கோர்ஸ் எல்லாம் சொன்னான், இத பத்தி ஒண்ணும் சொல்லலியே... வீட்டு கதவ திறக்க "திறந்திடு சீசே - Release 1.1"னு ஏதோ கோர்ஸ் இருக்கு போலிருக்கே, நாம படிக்காம வந்துட்டோம் போல இருக்குனு மனசே விட்டு போச்சு
  
அப்படினா இனிமே, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு தானா, ஐயோ மைனஸ்ல குளிருமேனு, நான் வேற லக்கேஜ் கூடி போச்சுன்னு எங்க பாட்டி குடுத்த குரும்ப கம்பிளிய அங்கேயே வெச்சுட்டு வந்துட்டனேனு யோசிச்சுட்டு இருக்கைல, ஆபத்பாந்தவியா எங்க பிரெண்ட் வந்தாங்க. விவரம் சொன்னதும் "திருப்பு திருப்பு"னாங்க
 
"அது மைக்கேல் மதன காமராஜன்ல ஊர்வசி கேரக்டர் ஆச்சே"னு மனசுல தோணினதை சொன்னா அவங்க என்ன நெனச்சுப்பாங்களோனு அமைதியா "புரியலைங்க"னேன்... அவங்க ஒரு மாதிரியா பாத்தாங்க
 
 (சமீபத்துல அதே பிரெண்ட் கிட்ட மலரும் நினைவுகள் பேசிட்டு இருந்தப்ப "நான் முதல் முதலாக முழித்த போது என்ன நினைத்தாய்"னு கேட்டதுக்கு, "கதவ கூட கழட்ட தெரியாம இதெல்லாம் கனடாவுல என்னத்த கழட்ட போகுதோனு நெனச்சேன்"னு பல்பு குடுத்தாங்க. தேவையா எனக்கு? கேட்டு வாங்கிட்டேன்... ஹ்ம்ம்...இப்ப க்ளோஸ் பிரெண்ட் ஆயாச்சு, ஒண்ணும் சொல்றதுகில்லனு விட்டுட்டேன்)
 
சரி பழைய மேட்டர்க்கு போவோம்... வீட்டை திறக்க முடியாம நான் விழிக்க, அந்த பிரெண்ட் சொன்னது... "நான் தான் வந்த அன்னைக்கே சொன்னனே... இந்த ஊர்ல எல்லாம் தலைகீழ்னு... சாவியை திருப்பி போடு... திறக்கும்"னாங்க

அவங்க சொன்ன மாதிரி சாவியை அப்படியே 180 degrees திருப்பி போட்டு திருப்பினதும்...ச்சே... திருகினதும், ஒரு வழியா சொர்க்கவாசல் திறந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபா.... எனக்கு அப்படியே சுவத்துல மண்ட மண்டையா அடிச்சுக்கணும் போல இருந்தது...
 
ஆனா மண்டைல இருக்கற கொஞ்ச நஞ்ச சரக்கும் டேமேஜ் ஆகி போய்ட்டா அப்புறம் ரங்க்ஸ்'ஐ கண் கலங்காம வெச்சு காப்பாத்த முடியாம போயிடுமோனு என்னை கட்டுப்படுத்திகிட்டேன்
 
அதோட முடிஞ்சதா, உள்ள போய் லைட் போட போறேன், ஏற்கனவே போட்டு இருந்தது, ஆனா போடல... உங்களுக்கு புரியல இல்லையா? எனக்கும் புரியல. அதாவது லைட் சுவிட்ச் ONல இருந்தது ஆனா லைட் எரியல
 
எரியும்ம்ம்ம்ம்.... ஆனா எரியாது................... போல இருக்குனு நெனச்சுட்டு ஒரு நிமிஷம் முழிச்சேன்... அப்ப தான் பல்பு எரிஞ்சது. அந்த பல்பு இல்லிங்க... என் மண்டைல பல்பு... அதாவது "இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்" அப்படிங்கற தாரக மந்திரம் ஒலிச்சது
 
சுவிட்சை ஆப் பண்ணினேன் லைட் ஆன் ஆய்டுச்சு. அப்ப தான் புரிஞ்சது... நம்ம ஊரு ஆன் இங்க ஆப்... ஆண் இல்லிங்க... I mean "ON"

(மைண்ட்வாய்ஸ்(மனசுக்குள்) : நம்ம ஊரு ஆணும் இங்க வந்தா ஆப் தான் ஆகணும்.... அது வேணா கரெக்ட்...ஹ்ம்ம்)

அன்னைக்கி என்னோட மனசுங்கற டைரில Notes of the day தலைப்பின் கீழ் "Each and every action should be opposite in Canada to expect a correct reaction" னு எழுதி வெச்சுகிட்டேன். ஒரு வழியா இந்த சூட்சமத்த வெச்சு குப்ப கொட்ட ஆரம்பிச்சேன்... ச்சே... காலத்த ஓட்ட ஆரம்பிச்சேன்

அப்புறம் வேலை தேட தொடங்கினேன்.. ஆரம்ப அனுபவத்தின் பாதிப்புல "Interviewல பதில் கூட தலைகீழா தான் சொல்லணுமோ"னு ரங்க்ஸ்கிட்ட சந்தேகம் கேக்க, அவர் "நீ இப்படியே இருந்தேனா தலைகீழா நின்னா கூட வேலை கிடைக்காது"னு பல்பு எண்ணிக்கைல இன்னொன்னு சேந்தது

"எத்தனையோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டமா"னு நானும் ஒரு வழியா தட்டு தடுமாறி வேலை புடிச்சேன். ஏதோ புள்ள புடிக்கற மாதிரியே சொல்றியே அப்பாவினு பீல் பண்ணாதீங்க. என் கஷ்டம் எனக்கில்ல தெரியும்... ஹ்ம்ம்

இங்க வர்றதுக்கு முன்னாடி "நானெல்லாம் இங்கிலீஷ்ல 120 அவுட் ஆப் 100 யு நோ"னு பந்தா விட்டுட்டு வந்துட்டு, இவனுக பேசுற தத்தக்கா புத்தக்கா இங்கிலிஷை புரிஞ்சுக்கரதுக்குள்ள, "இதுக்கு நம்மூர்ல 420 கேஸ்ல உள்ள போய் நிம்மதியா உக்காந்திருக்கலாம்"னு தோண ஆரம்பிச்சது
 
ஹ்ம்ம்... அப்புறம் என்ன?.... "ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ்" கதை ஆகி போச்சு நம்ம பொழப்பு
 
ஆனா பாருங்க, நான் கூட ஆரம்பத்துல நமக்கு தான் இங்கிலீஷ் வரலைனு தப்பா புரிஞ்சுட்டேன்... அப்புறம் கொஞ்சம் விவரம் புரிஞ்சப்புறம்... அதெப்ப புரிஞ்சதுனு கேட்டா, நேரம் காலம் இடம் எல்லாம் சொல்றதுக்கு நான் என்ன போதிமரத்துக்கு கீழ உக்காந்து ஞானமா வாங்கினேன்... ஏதோ போற போக்குல புரிஞ்சது தான்
 
இந்த ஊர்லையே இருந்துட்டு இவங்களையே திட்றையானு நீங்க என்னை திட்டறதுக்கு முன்னாடி, என் பக்க வாதத்தையும்...

மைண்ட்வாய்ஸ் : ஐயையோ பக்க வாதமா?

அப்பாவி : ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா...

மைண்ட்வாய்ஸ் : சரி சரி... மறுபடி கடத்திடாதே... மீ சைலண்ட்... (என தனக்கு தானே பிளாஸ்டர் போட்டு கொள்கிறது)
 
அப்பாவி : ம்...அந்த பயம் இருக்கட்டும்

அதாவது, என் தரப்பு நியாத்தையும் கேளுங்கள்னு சொல்ல வந்தேன்

நீங்களே சொல்லுங்க, இவங்க grammer எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு accent'ங்கற பேர்ல இங்கிலிஷை கொல பண்ணிக்கிட்டு, "you got an accent"னு நம்மள சொன்னா "வொய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டா"னு சொல்ல தோணுமா இல்லையா?

அதையும் மீறி என்னை மாதிரி புத்திசாலிதனமா (ஹி ஹி) ஒரு பொண்ணு கொஞ்சம் விளக்கமா கேட்டா "You know what? Ours is American english... yours is British I guess"னு என்னமோ "அல்ஜீப்ரா சொல்லி தந்த அன்னைக்கி நான் ஏப்சன்ட்"னு சொல்ற மாதிரி சொல்லி நம்ம வாய அடைச்சுடறாங்க

சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்னு "அமெரிக்கன் பாதி பிரிட்டிஷ் பாதி கலந்து செய்த கொலை நான்"னு இப்ப என்ர இங்கிலிஷும் பாவம் டைபாய்ட் வந்த டைகர் மாதிரி ஆகி போச்சு

சரி இங்கிலிஷை விட்டு தொலைங்க... இந்த ஊர்ல வந்து திக்கு திசை தெரியாம நான் பட்ட பாடு இருக்கே... என் வீட்டு சோகமா உங்க வீட்டு சோகமா... அதை வெச்சு நாலு மெகா சீரியலே எடுக்கலாம் (நடு குறிப்பு : மெகா சீரியல் எடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி அப்பாவி@அப்பாவிதங்கமணி.காம்)

எனக்கு நம்மூர்லையே கெழக்க மேக்க தெரியாது... எங்க வீட்டுக்கு முன்னாடி நின்னு பாத்தா சூரிய உதயம் தெரியும்... சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் இல்லயா? So, அது கிழக்கு, அதே நீங்க புதுசா யாராச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் திசை கேட்டா, சூரியன் தெரிஞ்சா சொல்லுவேன் இல்லாட்டி அயம் சாரி யுவர் ஹானர் தான், அவ்ளோ தான் என்னோட ஜாக்ரபி ஜிலேபி எல்லாம்... (By the way, இது சூர்யா ஜோதிகா sunrise இல்லிங்க, சூரிய பகவான் sunrise...:)

நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க)

இந்த அழகுல இங்க வந்த புதுசுல யாராச்சும்கிட்ட வழி கேட்டா "Drive 2km west then take south and drive 6km and...." இப்படி சொல்லிட்டே போவாங்க... அப்படியே போனா நேரா நயாகரா பால்ஸ் போய் குதிக்கலாம்னு எனக்கு தோணும்

பின்ன என்னங்க, இதே நம்மூரா இருந்தா "அப்டீக்கா நேரா போய் அப்புறம் லெப்ட் எடுத்து அப்பாலிக்கா ஒரு யு டர்ன் எடுத்து ரைட்ல ஓடிச்சினா அங்க ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அதே சந்துல கொஞ்ச தூரம் போனா செவப்பு கலர் கேட் போட்ட மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச வீடு" அப்படின்னு எவ்ளோ அழகா சொல்லுவாங்க

இப்படி ரங்க்ஸ்கிட்ட பொலம்பினதுக்கு "இங்க பாரு... இங்கெல்லாம் ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் தான்... லெப்ட் ரைட் இல்ல... ஒழுங்கா பழகிக்கோ"னாரு... இதுக்கு நான் நயாகரா பால்ஸ்கிட்ட பொலம்பி இருந்தா அதே எனக்காக கண்ணீர் விட்டுருக்கும்
 
ஒரு நாள் இங்க ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தப்ப, நான் பாட்டுல வழக்கம் போல ஷோ பண்ணிட்டு இருந்தத பாத்து பொறாமை பட்டு என்னோட இமேஜை டேமேஜ் பண்ணனும்னே ரங்க்ஸ் "புவனாவை யோசிக்காம  உடனே East எதுனு சொல்ல சொல்லுங்க பாப்போம்"னு மாட்டி விட்டுட்டாரு

பொறுத்தது போதும் பொங்கி எழு புவனானு நானும் "எங்க அம்மா சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் தான் சொல்லி குடுத்தாங்க... இந்த ஊர்ல சன் ரைஸ் இன் சவுத் ஈஸ்ட்... சோ தப்பு என் மேல இல்ல இந்த ஊர் மேல தான்... சரியான கோண ஊரு... சன்னை மொதல்ல ஈஸ்ட்ல உதிக்க சொல்லுங்க, அப்புறம் நான் ஈஸ்ட் வெஸ்ட் சொல்றேன்"னு பொங்கிட்டேன்
 
அங்க இருந்த லேடிஸ் எல்லாரும் என் பக்கம் சேந்துட்டு "ரெம்ப கரெக்ட் புவனா... எனக்கும் ஈஸ்ட் வெஸ்ட் கன்பியூசன் இருக்கு... நீங்க சொன்னப்புறம் தான் தப்பு என் மேல இல்லைன்னு புரியுது... என்னங்க, இப்பவாவாச்சும் புரிஞ்சுக்கோங்க?"னு அவங்க அவங்க ரங்க்ஸ்'ஐ பாத்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சாங்க
 
உங்கள்ல சிலருக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்... ஏதோ என்னால ஆன ஒரு சின்ன சமூக சேவை... இதுக்காக எனக்கு நீங்க CN டவர் பக்கத்துலயோ இல்ல வைட் ஹவுஸ் வாசலையோ சிலை எல்லாம் வெக்க கூடாது சொல்லிட்டேன்... ஏன்னா, எனக்கு விளமபரம் புடிக்காது யு சி...:))

அப்புறம் இன்னொரு மேட்டர், இப்ப உங்ககிட்ட யாராச்சும் வந்து, உங்க வீடு எங்க இருக்குனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க "இப்படி இப்படி ஊர்ல இந்த இந்த தெருவுல அப்படி அப்படி நம்பர்ல இருக்கு"னு சொல்லுவீங்க...கரெக்டா?

அதே இந்த ஊர்ல கேட்டா "வாஷிங்டன் ஸ்ட்ரீட் அண்ட் வெல்லிங்டன் சர்கிள் இண்டர்செக்சன்"னு சொல்லுவாங்க... போன புதுசுல "அம்மாடியோ... எவ்ளோளோளோளோளோ பெரிய அட்ரெஸ்"னு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன்

பின்ன என்னங்க, கோயம்புத்தூர்ல 'ஸ்ரீதேவி சில்க்ஸ்' எங்க இருக்குனு கேட்டா "கிராஸ் கட் ரோடு அண்ட் டாக்டர் நஞ்சப்பா ரோடு இண்டர்செக்சன்"னு சொன்னா எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது எனக்கும்

அப்புறம் போக போக பழகி போச்சு. அப்புறம் கூகிள் மேப்ஸ் பத்தி தெரிஞ்சுது, மக்கள்கிட்ட போஸ்டல் கோட் மட்டும் வாங்கி கூகிள் இருக்க பயமேன்னு காலம் போச்சு கொஞ்ச நாள். இப்ப ஜி.பி.எஸ் வந்தப்புறம் "நின்னையே கதியென்று..."னு ஆகி போச்சு நிலைமை (ஜி.பி.எஸ் ரகளை எல்லாம் இன்னொரு போஸ்ட்ல சொல்றேன்... நோ பீலிங்க்ஸ் ஒகே) 

மத்ததெல்லாம் கூட பரவால்லைங்க... லாஜிக் லாஜிக்னு ஒண்ணு இருக்கே... இங்க மக்கள் அது கிலோ என்ன விலை கேப்பாங்க சில சமயம்...

வந்த புதுசுல Soccer Game Soccer Gameனு ஒரு கூட்டமே பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தத பாத்து, ஏதோ பெரிய விளையாட்டு போல இருக்குனு விசாரிச்சா...

"In general play, the goalkeepers are the only players allowed to touch the ball with their hands or arms, while the field players typically use their feet to kick the ball into position, occasionally using their torso or head to intercept a ball in midair. The team that scores the most goals by the end of the match wins"னு ஒரு விளக்கம் சொன்னாங்க

"எங்கயோ கேட்ட குரல்" மாதிரி இருக்கேனு கொஞ்சம் உக்காந்து இல்லாத கிட்னிய சட்னியாக்கி யோசிச்சு பாத்தா... அட Footballனு என் மண்டைல பல்பு எரிஞ்சது

அப்புறம் ஏன் இவங்க இதை Soccerனு சொல்றாங்க... நம்மூர்ல சாக்கு போட்டி மாதிரி கடைசீல எதுனா வெப்பாங்களோனு என் சிற்றறிவு சிச்சுவேசன்'தனமா யோசிச்சது...அப்படியானு அவங்கள கேட்டதுக்கு, அதுக்கும் ஒரு விளக்கம் சொன்னாங்க...
 
ஒரு விஷயம் சொல்லியே ஆகணுங்க, இந்த ஊர்ல விளக்கம் சொல்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்ல... நான் நீ'னு போட்டி போட்டுட்டு விளக்கம் சொல்லுவாங்க...

ஆனா ஒண்ணு, எப்படி சொன்னா கேக்கறவனுக்கு கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி ஒரு விளக்கம் சொல்லுவாங்க. என்னோட ஆத்துக்காரருக்கு இந்த ஊர் ஒத்து போறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நான் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச உண்மை, இனம் இனத்தோட சேரும் யு சி...:)

ம்...சரி Soccerனு ஏன் பேரு வந்ததுனு கேட்டதுக்கு இந்த ஊர் அக்காச்சி சொன்ன விளக்கம் இதோ...

"Soccer was originally called 'association football' (the name soccer is derived from the word assoc, from the word association)"

இது விளக்கமா வில்லங்கமானு நீங்களே சொல்லுங்க. என்ன கொடும சார் இது? அப்ப அதை assoc னு வெச்சுருக்க வேண்டியது தானே, ஏன் அதை தலைகீழ நிக்க வெச்சு ஒரு தொப்பிய மாட்டி உலக நாயகன் தசாவதாரம் கெட் அப் போடற ரேஞ்சுக்கு கொழப்பனுங்கறேன்
 
நொந்து போய், எங்க ஊர்ல இது புட்பால்னு சொன்னதுக்கு, "yeah, I know football, that is different"னு சொன்னாங்க

அப்படி என்ன சாமி வித்தியாசம்... நான் வலது காலுல ஒதைக்கரத நீ இடது காலுல ஒதைப்பியோனு கடுப்போட கேட்டா...

"No no...American football is a sport played between two teams of eleven with the objective of scoring points by advancing the ball into the opposing team's end zone. The ball can be advanced by running with it or throwing it to a teammate. Points can be scored by carrying the ball over the opponent's goal line, catching a pass thrown over that goal line, kicking the ball through the opponent's goal posts or tackling an opposing ball carrier in his own end zone" னு விளக்கம்

அதாவது கைல வெச்சு விளையாடினா புட்பால், காலில தட்டி விளையாடினா சாக்கர்... புரிஞ்சு போச்சு... பேக் டு ஸ்கொயர் ஒன்...அதாங்க, இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்... கைனா கால், கால்னா கை....அவ்வவ்வவ்வவ்வவ்....

ஏங்க... நான் தெரியாமத்தான் கேக்கறேன்... கால்பந்தாட்டம்னு ஏன் பேரு வந்ததுனு நம்மூர்ல கேட்டா "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சொல்ற சின்ன கொழந்த கூட"....கால்ல ஒதைச்சு ஆடுற ஆட்டம், எனவே அது கால்பந்தாட்டம்னு சொல்லிடும் இல்லையா? இந்த லாஜிக்கை அடிச்சுக்க முடியுமா என்ன?
 
ஏன் இந்த ஊர்ல மட்டும் எல்லாம் தலைகீழா இருக்கு... இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)
:))

49 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

super bowl special pola.. :P

எல் கே said...

அங்கயும் அமெரிக்காவிலும் புட்பால் & சாக்கர் மாறும். இதை நீ தெரிஞ்சுக்கணும். அவங்கள குத்தம் சொல்லக் கூடாது

எல் கே said...

ஆடத் தெரியாதவ தெருக் கோணல்னு சொன்னாளாம் . அப்படி இருக்கு உன் கதை...

கோவிந்த் மாம்ஸ் நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு. அங்க கூட்டிகிட்டு போய் எப்படி சமாளிச்சாரோ தெரியலையே.. இதுக்கே அவருக்கு சிலை வைக்கணும்... ஞாபகம் வெச்சிக்கோ

Porkodi (பொற்கொடி) said...

ஆனா இவ்ளோ ஃபீல் பண்ணுற அப்பாவிக்கு ஏன் இந்த நாட்டுலயும் வவ்வால் தலைகீழா தான் தொங்குதுங்கற மாபெரும் உண்மை கண்ல‌ படலை? :P

//அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது.//

அதான் எங்க எல்லாருக்கும் தெரியுமே இருந்தா தானே சொல்றதுக்கு..

எல் கே said...

//ஏன் இந்த நாட்டுலயும் வவ்வால் தலைகீழா தான் தொங்குதுங்கற //

ஹஹஹா

முகில் said...

// கதவ கூட கழட்ட தெரியாம இதெல்லாம் கனடாவுல என்னத்த கழட்ட போகுதோனு //

கககபோ..... என்னா ரைமிங்க எழுதறீங்க......

// (ஜி.பி.எஸ் ரகளை எல்லாம் இன்னொரு போஸ்ட்ல சொல்றேன்...//
// காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் //

இந்த இரண்டு பதிவையும் மறக்காம போட்டுங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்தில் நகைச்சுவை தவழ்ந்தோடுகிறது ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

RAMVI said...

ஹா..ஹா..

//உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))//


கொஞ்ச நாளா இந்த புவனாவ காணுமேன்னு நினைச்சேன்.திரும்பி வந்தாச்சு.

பரவாயில்லை கனடாவில் தட்டு தடுமாறி நன்னாவே குப்பை கொட்ட ஆரம்பிச்சுடீங்க போல இருக்கே?

அமைதிச்சாரல் said...

//இதுக்காக எனக்கு நீங்க CN டவர் பக்கத்துலயோ இல்ல வைட் ஹவுஸ் வாசலையோ சிலை எல்லாம் வெக்க கூடாது சொல்லிட்டேன்..//

சேச்சே.. ஈஃபில் டவர் உச்சியில வேண்ணா வைக்கிறோம்.

உங்களுக்கில்லை, எங்களின் உடன் பிறவா உடன்பிறப்புக்குத்தான். பின்னே, உங்களை வெச்சுச் சமாளிக்கிறதுன்னா சும்மாவா :-))))

இதே கலகலப்பு உங்க வாழ்க்கையிலும் தொடரட்டும் அப்பாவி.

Porkodi (பொற்கொடி) said...

//சேச்சே.. ஈஃபில் டவர் உச்சியில வேண்ணா வைக்கிறோம்//

hihihihi!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான்/////

நாங்கள்லாம் காந்திபுரத்துல இறாங்கி கோயமுத்தூர காணோம்னு தேடுனவிங்க......

ராமலக்ஷ்மி said...

/கைல வெச்சு விளையாடினா புட்பால், காலில தட்டி விளையாடினா சாக்கர்... /

:)! உதைச்சு விளையாடியிருக்கிறீங்க. பதிவு அருமை.

Shanker Bharadwaj said...

"தசாவதாரம் கெட் அப் போடற ரேஞ்சுக்கு கொழப்பனுங்கறேன்" - அட்டகாசம்; எவரை விட்டாலும், கமலஹாசனை நாம் என்னிக்கும் விடுவதில்லை..பாவங்க அவர்! :)

ஸ்ரவாணி said...

அசந்துட்டேன் போங்க.
எப்படிங்க இவ்வளவு அழகா
அனுபவத்த நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க ?
உங்களால மட்டும் தான் முடியும்னு நினைக்கிறேன்.
சுபெர்ப் ! சிரிச்சி , சிரிச்சி ...... இன்னும் முடிக்கல ..
நீங்கள் வாழ்க வளமுடன் ! .

கோவை2தில்லி said...

//நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க)//

ஆஹா! நானும் உங்க கட்சி தான்.கோவையிலேயே 20 வருடங்கள் இருந்தும் ஓப்பணக்கார வீதி பஸ் ஸ்டாப் எனக்கு இன்னும் தெரியாது....
அவரிடம் கேட்டால் தில்லி வந்த புதிதில் நடந்த கதைகளை அள்ளி விடுவார்....ஆனா வம்ப ஏன் விலைக்கு வாங்க வேண்டும். ...

கீதா சாம்பசிவம் said...

இந்தக் கிழக்கு, மேற்குனு எல்லாம் சொல்றீங்களே? அப்படின்னா என்னங்க அப்ப்ப்பபாவி???

இப்படிக்கு,

ரொம்பவே அப்பாவி

கீதா சாம்பசிவம் said...

எங்க அம்மா சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் தான் சொல்லி குடுத்தாங்க... இந்த ஊர்ல சன் ரைஸ் இன் சவுத் ஈஸ்ட்... சோ தப்பு என் மேல இல்ல இந்த ஊர் மேல தான்... சரியான கோண ஊரு... சன்னை மொதல்ல ஈஸ்ட்ல உதிக்க சொல்லுங்க, அப்புறம் நான் ஈஸ்ட் வெஸ்ட் சொல்றேன்"னு பொங்கிட்டேன்//

அதானே, சன் ஈஸ்டிலே வரும். இங்கே என்னமோ மாத்தி வந்தா நாமா பருப்பு?? சீச்சீ, பொறுப்பு?

vanathy said...

இப்ப எல்லாமே பழகியிருக்குமே!!!! கார்த்தி பெரியப்பா என்னமோ சொல்றாரே???

வெங்கட் நாகராஜ் said...

:))) நல்ல பகிர்வு அ.த....

கோயம்புத்தூர்-காரங்க இப்படி ரெண்டு பேர் இருந்தா போதும்! :)))))

அதான் இருக்கீங்களே... இரண்டு பேர்....

schmetterlingwords said...

Hi appavi, naan romba naala ungal blog-oda silent reader dhan. Ungaloda pala padhivugalai padithu rasithu sirithirukkiren. Indha post a paarthadhum comment pannanum nu thonuchu... so, writing my first comment here...

Naan Germany le irukkiren... English pesara Canada le poyi neenga indha paadu patta indha oorule vandhu naan evlo pattiruppen nu dhan solla thonudhu... Ellaame thala keele dhan... Avlo yen... Numbers le namma oorule 1000 ku aprom comma (,) poduvom. Decimal ku pulli (.) vaipom. Illaya? Indha oorule apdiye thala keele!! 11,245.34 nu namma oorule eludharadha 11.245,34 nu eludhanum. Kodumai!! Aana ennamo Football ku Fussball dhan solraanga. (Fuss=Foot). Adhu varai sandhosham.

Nalla comedyaana post!! Vaazhthukkal!! :)

sriram said...

நல்ல பதிவு நன்றி புவனா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

போன கமெண்ட் டச் விட்டுப் போகாம இருக்க :)))

ரொம்ப நாள் கழிச்சு வர்றேன் புவனா, எப்படி இருக்கீங்க, ஸ்ரீஹிதா பிறந்தப்புறம் ப்ளாக்கில் அதிக நேரம் செலவ்ழிப்பதில்லை.

நல்லா எழுதியிருக்கீங்க, ஸ்பூன் ஃபோர்க்ல சாப்பிட வேண்டியிருப்பதையும் டச் பண்ணியிருக்கலாம், ஒரு வேளை அதை தனி பதிவா போட எண்ணியிருக்கீங்களோ?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Srividhyamohan said...

Naanum indha country ku vandha pudhusil eththanaiyo bulb vaangi irukkenga..... Innum kooda vaangindethaan irukken. Enna seiyya? Ippo ellaam pazhagi pochu?

kg gouthaman said...

கனடா பற்றிய கல கல பதிவு. மிகவும் ரசித்துப் படித்தேன்; மனம் விட்டுச் சிரித்தேன்.

கீதமஞ்சரி said...

இங்க ஆஸ்திரேலியாவிலயும் ஃபுட்பால், சாக்கர் இரண்டையும் குழப்பி என் பையன்கிட்ட அடிக்கடி பல்பு வாங்கறேன். சாவியும் உங்க கதைதான். திருப்பிப் போட்டாதான் கதவு திறக்குது. நான் ஒவ்வொரு தடவையும் மறந்துபோய் சாவியை நேரா நுழைக்க முயற்சி பண்ணி சரிவராம தலைகீழாத் திருப்பி... நாலு வருஷமாச்சி, இன்னும் பிடிபடல. இவ்வளவு நாளா எங்க வீட்டு லாக்கைதான் தப்பா தலைகீழாப் பொருத்திட்டாங்கபோலன்னு நினைச்சிட்டிருக்கேன். இப்பதான் விஷயமே புரியுது.

உங்க அனுபவம் அத்தனையும் வெகு சுவாரசியம். பல இடங்களில் வாய்விட்டு சிரிக்கவைப்பது உங்கள் பதிவுகளின் சிறப்பு. இதுவும் அப்படியே.

தக்குடு said...

ஹா ஹா ஹா! என்ன தான் நாம வளைச்சு வளைச்சு 'முகம் புதைத்தாள்' 'முத்தம் வைத்தான்'னு 'பீலிங்க்ஸ் ஆஃப் கனடா'வா எழுதினாலும் உங்களுக்குள்ள இருக்கும் காமெடி முகம் வெளில வராம போகுமா!! க க கபோ இட்லி மாமி! :))

குறிப்பு - 'பாஸ்டன் பட்டுகுட்டியாலதான்(ஸ்ரீஹிதா) ப்ளாக் பக்கம் வரர்து இல்லை'னு நம்ப பாஸ்டன் நாட்டாமை அள்ளிவிட்டுண்டு இருக்கர்தையும் பாத்துண்டுதான் இருக்கோம்.

என்றும் வம்புடன்,
தக்குடு

ஹுஸைனம்மா said...

தங்கமணி, என் செல்லமணி, இந்தப் பதிவைப் படிச்சுட்டு, ரெண்டு நாளா நினைச்சு நினைச்சுப் பாத்து (காதல்ல விழுந்தவ மாதிரி) தனியாச் சிரிச்சுட்டிருக்கேன்... பல்பு வாங்கிறதுல என்னையும் மிஞ்சிட்டாளே ஒருத்தின்னு அவ்ளோ சந்தோஷமாருக்கு.

நீங்க கனடா வந்து எத்தினி வருஷமாச்சு? நான் அபுதாபி வந்து 15 வருஷமாச்சு, ஆனாலும், இன்னும் தனியா எங்காணும் போணும்னா பப்பரப்பேன்னுதான் முழிப்பேன், .... அதுக்காகவே பெர்மணண்டா ஒரு டிரைவர் வச்சுருக்கேன்!! :-(((((((

//grammer எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு accent'ங்கற பேர்ல இங்கிலிஷை கொல பண்ணிக்கிட்டு//
அதச் சொல்லுங்க, ”இன்னா நைனா”ன்னு மெட்ராஸ் பாஷை மாதிரி ஒரு இங்லீஷைப் பேசிட்டு, நம்மளை மேலயும் கீழயும் பாப்பாய்ங்க!!

ரொம்ப நல்லா ரசிச்சு, அனுபவிச்சு, வாசிச்சுச் சிரிச்சேன். தாங்க்ஸ்!!

ஹுஸைனம்மா said...

//கீதமஞ்சரி said...
.... இவ்வளவு நாளா எங்க வீட்டு லாக்கைதான் தப்பா தலைகீழாப் பொருத்திட்டாங்கபோலன்னு நினைச்சிட்டிருக்கேன். இப்பதான் விஷயமே புரியுது. //

கீத்தா!! அப்பாவிய மிஞ்சின அப்பாவி நீங்க!!

Mahi said...

இந்த தலைகீழ் மேட்டர்லாம் நான் இம்பூஊஊட்டு கவனிச்சதில்லையம்முணி!"லாக்கை இப்புடி திருகினா திறக்கலையா,அப்புடித் திருகு" ஸ்விட்ச்சை இப்படிப் போட்டா எரியலையா,அப்புடிப் போடுன்னு போட்டுட்டுப் போயிட்டே இருந்துட்டனே அப்பாவீ!! ;))))))

BTW,இந்த வாட்டி ஊருக்குப் போயிட்டு வந்தப்ப எங்கூட்டு ரங்கமணியும் வீட்டைத் திறக்கைல இதுபத்திச் சொல்லிட்டேதான் திறந்தாரு! அப்பவும் எனக்கு பல்பூ எரியாமப் போச்சு,இல்லைன்னா உன்னைய முந்திகிட்டு நான் மொக்கைபோட்டுருப்பேன்...ச்சே..சே..ஒரு போஸ்ட் மிஸ் ஆகிப்போச்சுது எனக்கு! :)))))

தக்குடு said...

@ மஹி - //சே..ஒரு போஸ்ட் மிஸ் ஆகிப்போச்சு// வடை போச்சே!!! ஸ்டைல்ல வாசிச்சேன் .

ஒன்னும் கவலைபடாதீங்கோ! இந்த மொக்கை மிஸ் ஆனா என்ன இதை விட மரணமொக்கையா ஒரு போஸ்டை சீக்கரம் தேத்தி 21ஆம் நம்பர் பஸ் போகர இடத்துக்கும் திங்கள் கிழமை சந்தை நடக்கர இடத்துக்கும் நடுல இருக்கும் கொங்கு நாட்டு அம்மணி!னு ப்ரூஃப் பண்ண பாருங்கோ! :))

Mahi said...

/21ஆம் நம்பர் பஸ் போகர இடத்துக்கும் திங்கள் கிழமை சந்தை நடக்கர இடத்துக்கும் நடுல இருக்கும் கொங்கு நாட்டு அம்மணி!/ வாஆஆஆஆஆவ்! ஜூப்பர் ஐடியா தக்குடு! தேங்க்ஸ்,தேங்க்ஸ்,தேங்க்ஸ்!! [இத நம்ம ஜூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல வாசிக்கோணும்,சரியா?? :)))))))]

தங்கமணி வந்தப்புறம் தக்குடு வாழ்க்கையில மிகப்பெரிய மாத்தம் தெரியறதே..உருப்படியான(!) ஐடியால்லாம் குடுக்கறியே,வெறி குட்! ;))))))

அந்த S21 பஸ் புவனேசுங்க;) ஊர்ல இருந்து சிங்காநல்லூரு வரைக்கும் போகும். திங்கக்கிழம சந்த நடக்கற எங்கூரு ரெண்டு இடத்துக்கும் இடையிலதான் இருக்குது.சிங்கநல்லூர்ல இருந்து சந்தை வரைக்கும் நான் மொக்கை போடறேன், மீதிய நம்ம அப்பாவி தொடருவாங்க,டீல் ஓக்கே? ;))))))

vinu said...

ஆப்டர் எ loooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooong
அவர் அப்பாவி கலக்கல் கம்பேக்கு...................

ஆங் மறக்காம நம்ம வூட்டு விசேசத்துக்கு வந்துடுங்க..... வர்ட்டா....

priya.r said...

(சைலண்டா வாயில் பிளாஸ்டர் ஒட்டி மைண்ட்வாய்ஸை கடத்துகிறார்கள் அப்பாவியின் ஆதரவாளர்கள். அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி அந்த தகவல் தலையை சுற்றி வீசப்படுகிறது... :)//இதை தெரிந்து கொண்ட ஐவர் அணி அப்பாவியின் ஆதரவாளர்களை வழி மறித்து ,அப்பாவி உங்களுக்கு இட்லி கொடுக்க சொன்னா என்றவுடன் அவர்கள் பயந்து, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட

மைவா(மைன்ட் வாய்ஸ் ) வின் வாயில் ஒட்டிய பிளாஸ்டரை பிரித்தவரை பார்த்து

அனா .,எங்கே போய் இருந்தே இத்தனை நாளா என்று மைவா வின் கண்களில் ஆனந்த கண்ணீர்!!

அதுவா அப்பாவியின் தொடர்கதையை படித்து லூசாகி ,மெண்டலாகி , பின் தெளிந்து மேல்படிப்பை தொடர்ந்து கொண்டு இருக்கா என்று LK

விளக்கம் அளிக்க ,அனா முறைக்க, அப்பாவியோட மீரா தான் லூசு நா இல்லே என்று பதில் கொடுக்க

சங்கர் சாரும் தக்குடுவும் சபாஸ் மின்னல் என்று புகழாரம் சூட்ட

இந்த அப்பாவி செய்யும் அளப்பரையை LK தவிர யாரும் தட்டி கேட்பாரே இல்லையா என்று மை வா குரல் எழுப்ப

நாங்க இருக்கோம் என்று லட்சகணக்கான குரல்களில் நானும் கலந்து கொண்டேன் அப்பாவி :))

priya.r said...

அப்பாவி : ஹி ஹி... அது மைண்ட்வாய்ஸ்க்கு தொண்டைல கிச் கிச்... அது விக்ஸ் மாத்திர சாப்பிட போயிருக்கு...வர்ற வரைக்கும் நாம நிம்மதியா பேசுவோம்...//

பச்ச பொய்ய்யீ :) இதை நாங்க நம்புனுமாக்கும் :))

மொதலே சொல்லிடறேன், "உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ற பச்ச துரோகி, Yellow எட்டப்பி, கருப்பு கோட்சே"னெல்லாம் யாரும் கொந்தளிச்சு ஒடம்ப கெடுத்துக்க வேண்டாம். சும்மா மனசுலபட்டதை என்னோட பாணில சொல்லி இருக்கேன்... அம்புட்டு தானுங்கோ...//
சேச்சே !நீ எப்புட்டு நல்லவே.,:))எல்லோ எட்டப்பி ஹ ஹா :)


எனவே, உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))//
தண்டனை ஆரம்பமாகி விட்டது என்று மை வா முணுமுணுக்கிறது :))

priya.r said...

"சரிம்மா உன் இஷ்டம்"னு ரங்கமணி ஆதரவா பேசும் போதே யோசிச்சுருக்கணும், ம்... சூது வாது தெரியாம வளந்துட்டேன், என்ன செய்ய?//


ஆரு... நீயி ...வெள்ளந்தியா சூது வாது தெரியாம வளந்துட்டே யாக்கும் ...இதே நாங்க நம்புனுமாக்கும் ..... காமெடி பண்ணாதே அப்பாவி :)))

En Samaiyal said...

உங்க பதிவ விட கமெண்ட் எல்லாம் தூள் பறக்குது அப்பாவி. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. இந்த இங்கிலிபீச வெச்சு இங்கேயும் கொலை பண்ணிட்டு நம்மள ஒரு தினுசா லுக்கு வேற விடுவாங்க பாருங்க. கடுப்பா இருக்கும்ம்.

என்னைய மாதிரி உங்கள மாதிரி அப்புராணி:) எல்லாம் வேலையில யாராச்சும் இன்ன இன்ன வேலை முடிச்சிட்டியா அப்புடின்னு கேட்டா என்ன சொல்லுவோம் . ஒண்ணு ஆமா ன்னு சொல்லுவோம் இல்லே இல்லேன்னு வெள்ளேந்தியா சொல்லுவோம்.

ஆனா இந்த வெள்ளைகாரங்க இருக்காங்களே இதே கேள்விக்கு " I haven't had a chance to look at it " இல்லேன்னா " I haven't got around to it " அப்புடின்னு இல்லே அப்படிங்கறத பூசி மொழுகி சொல்லுவாங்க!

En Samaiyal said...

//மரணமொக்கையா ஒரு போஸ்டை சீக்கரம் தேத்தி 21ஆம் நம்பர் பஸ் போகர இடத்துக்கும் திங்கள் கிழமை சந்தை நடக்கர இடத்துக்கும் நடுல இருக்கும் கொங்கு நாட்டு அம்மணி!னு ப்ரூஃப் பண்ண பாருங்கோ! :))//

தக்குடு ஒய் திஸ் கொலை வெறி??


//[இத நம்ம ஜூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல வாசிக்கோணும்,சரியா?? :)))))))]// க்கும் இது வேறயா :))


//சிங்கநல்லூர்ல இருந்து சந்தை வரைக்கும் நான் மொக்கை போடறேன், மீதிய நம்ம அப்பாவி தொடருவாங்க,டீல் ஓக்கே? ;))))))//

நாங்கெல்லாம் ஓகே இல்லேன்னு சொன்னாலும் விடவா போறீங்க? எவ்வளவோ பார்த்திட்டோம் இத பார்க்க மாட்டமா ( இத விஜய் ஸ்டைல் ல படிங்கோ பார்க்கலாம் ஆஅவ்வ்வ்வ் :))

Asiya Omar said...

//நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின பிரகஸ்பதி நான், அதை பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க)//
நம்ம கதை தான் போல.

கீதமஞ்சரி said...

ஹுஸைனம்மா said...
//கீதமஞ்சரி said...
.... இவ்வளவு நாளா எங்க வீட்டு லாக்கைதான் தப்பா தலைகீழாப் பொருத்திட்டாங்கபோலன்னு நினைச்சிட்டிருக்கேன். இப்பதான் விஷயமே புரியுது. //

கீத்தா!! அப்பாவிய மிஞ்சின அப்பாவி நீங்க!!

உண்மைதாம்ப்பா... நாம என்ன பக்கத்துவீட்டு லாக்கையெல்லாம் செக் பண்ணியா பார்க்கமுடியும்? அதனால்தான் அப்படி நினைச்சு ஒவ்வொரு தடவை கதவைத் திறக்கும்போதும் கார்பெண்ட்டரை மனசுக்குள்ள திட்டிகிட்டே இருந்தேன்.

ராஜி said...

உங்க எழுத்துக்கு ஒரு சின்ன அங்கீகரம் என் வலைப்பூவில்.., னேஎர்மகிடைக்கும்போது வருகை தரவும் சகோ
http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_13.html

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - அப்படியும் வெச்சுக்கலாம்..:) எச்சூஸ்மீ, actually வவ்வால் இங்க தலைகீழா தொங்கரதுல எனக்கு ஆச்சிர்யம் இல்ல, ஏன்னா இங்க எல்லாமும் தலைகீழ் தானே, நம்ம ஊர்ல தான் தப்பா தொங்குதுனு தோணுது, இதை பத்தி நீ ஏன் ஒரு PHD பண்ண கூடாது கொடி... ப்ளீஸ் தின்க் இட் ஓவர்...:))

@ எல் கே - போன ஜென்மத்துல எதாச்சும் டிவி ஷோவுக்கு ஜட்ஜா இருந்துருப்பியோ....அவ்வ்வ்வவ்...:))

@ முகில் - நன்றிங்க, கண்டிப்பா ரெண்டு பதிவையும் அதோட எக்கசக்கமா டிராப்ட்ல இருக்கற பதிவுகளையும் சீக்கரம் போட்டுடறேன்...:)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க...:)

@ RAMVI - ஹி ஹி... ஏதோ கொட்டிட்டு இருக்கேங்க...;)

@ அமைதிச்சாரல் - ஈபில் டவர் ஏற்கனவே தொங்கிட்டு இருக்கு, இவரை அங்க வெச்சீங்கன்னா ஐயோ பாவமில்லயா அந்த டவர்...:) நன்றிங்க அக்கோய்...:)

@ Porkodi (பொற்கொடி) - உங்க அவருக்கு சியாட்டில் டவர்ல ஏற்கனவே புக் ஆய்டுச்சாம் கொடி...:)

@ பன்னிக்குட்டி ராம்சாமி - ஆஹா.. என்னை விட பெரிய ஆளுங்க எல்லாம் உண்டு போல இருக்கே...:)

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க அக்கா...:)

@ Shanker Bharadwaj - உலக நாயகனை எப்படிங்க விட முடியும்... நன்றிங்க..:)

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரவாணி - ரெம்ப நன்றிங்க ஸ்ரவாணி...:) அழகான பெயர் உங்களுக்கு...:)

@ கோவை2தில்லி - ஒப்பணகார வீதி எப்பவும் கொழப்பம் தான் ஆதி... இங்க தெரியற அளவுக்கு கூட அங்க தெரியாது எனக்கு... எங்க போனாலும் அப்பா கூடவே போயி வந்து பழகிட்டேன்...:) நன்றிங்க...

@ கீதா சாம்பசிவம் - அதானுங்க மாமி எனக்கும் புரியல...:) அதானே, உங்களுடன் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றியோ நன்றிங்கோ...:))

@ vanathy - இப்ப பழகி போச்சுங்க, கார்த்தி பெரியப்பா நான் சொல்றதை ஒத்துகிட்டா தானுங்க அதிசியம்...மீ எஸ்கேப்...;)

@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... அதானே நாங்க ரெண்டு பேர் இருக்கோமே, எங்க ரெண்டு பேரு பேரும் கூட ஒண்ணு தானுங்களே...என்ன ஒரு ஒற்றுமை பாருங்க...:)

@ schmetterlingwords - முதல் கமெண்ட்க்கு நன்றிங்க. அடடா உங்க பாடு இன்னும் பெரிய பாடா இருக்கும் போலியே...:) நம்பர்ஸ் கூட இப்படியா? கஷ்டம் தான், இங்க Quebecனு ஒரு ப்ராவின்ஸ் இருக்கு, அங்க அப்படி தான் எழுதுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன், வெரி confusing தான் போங்க...:) நன்றிங்க...:)

@ பாஸ்டன் sriram - வருக வருக, தங்கள் வரவு நல்வரவாகுக...:) ஹா ஹா டெம்ப்ளேட் கமெண்ட் ப்ராக்டிஸ் பண்ணிக்கரீங்களா சூப்பர்...:) நல்லா இருக்கேங்க, நீங்க எப்படி இருக்கீங்க? ஸ்ரீஹிதா குட்டி எப்படி இருக்காங்க? ஸ்பூன் ஃபோர்க் மேட்டர் கூட யோசிச்சேன், பதிவு இப்பவே சிகாகோ பக்கம் வந்துருச்சு விட்டா சின்சினாட்டி போய்டும்னு தான் நிறுத்திட்டேன்...:) நன்றிங்க

@ Srividhyamohan - ஹா ஹா... பல்ப் மேல பல்ப் வந்து என்னை சேர, அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்னு பாடற மாதிரி ஆகி போச்சுங்க நம்ம நிலைமை... :) நன்றி

@ kg gouthaman - நன்றிங்க சார்

@ கீதமஞ்சரி - அங்கயும் அப்படி தானா? சூப்பர்...:) ஆனா உங்க லாக் தான் தப்புன்னு சொல்லி இந்த வருடத்தின் அப்பாவி விருதை தட்டிட்டு போயிட்டீங்களே... சூப்பர்...;) நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - நன்றிங்கோ தக்குடுவாள்...:)

@ ஹுஸைனம்மா - அதானே பாத்தேன் உங்கள விட அதிகமா பல்ப் வாங்கினதுல ஒரு சந்தோசமா? அவ்வ்வ்வ்... இருங்க சான்ஸ் கிடைக்கும் அதை உங்களுக்கே திருப்பி தரேன்...:) கனடா வந்து எட்டு வருஷம் முடிஞ்சுது, நீங்க 15 ஆ, அப்ப இன்னும் நெறைய பல்ப் ஸ்டாக்ல இருக்கணுமே...:) //பெர்மனென்ட் டிரைவர்// ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... நானும் இதை அடிக்கடி சொல்றதுண்டு, ஆனா இப்பவெல்லாம் எங்க டிரைவர் சில சமயம் strike எல்லாம் பண்றாங்க யு சி... அங்கயும் உண்டா?...:) தேங்க்ஸ் அக்கா...:) பாருங்களே என்னை மிஞ்சின அப்பாவி கூட இருக்காங்க...:)

@ Mahi - அடடா வடை போச்சே... இட்ஸ் ஒகே மகி, நீ வேணா இதோட தொடர் பதிவா உன்னோட அனுபவத்த போடேன்... எனக்கும் கலாய்க்க ரெண்டு மேட்டர் தேறும்...;)

@ தக்குடு - ஹா ஹா ஹா ஹா... செம செம செம...;)

@ Mahi - என்னமோ ராஜாக்கள் டெரிட்டரி பிரிக்கற மாதிரி பேசுறியே அம்மணி... சூப்பர்... "எங்க ஏரியா இல்ல வராதே" போர்டு எல்லாம் வெப்பியோ...:)

@ vinu - நன்றிங்க வினு, வாழ்த்துக்கள் உங்களுக்கு...;)

@ priya.r - ஐவர் அணியா? அது தான் ஒருவர் அணியா மாறி ரெம்ப நாளாச்சே ப்ரியாக்கா, ஆனாலும் ஒன் வுமன் ஆர்மியான உங்கள பாராட்டாம இருக்க முடியல...;) பின்ன, நான் வெள்ளந்தி இல்லியா? என்னக்கா இப்படி சொல்லி போட்டீங்க...உன்ர தங்கச்சி இல்லியா நானு....;)))

@ En Samaiyal - ஹா ஹா, சூப்பர்'ஆ சொன்னீங்க... பூசி மொழுகரதுல இவங்கள மிஞ்ச ஆளில்ல யு நோ...:)

@ Asiya Omar - ஹி ஹி... நெறைய பேர் இருக்கீங்க போல இருக்கே நம்ம சங்கத்துல...;)

@ கீதமஞ்சரி - அதானே, உங்கள நான் தப்பே சொல்ல மாட்டேன், இதுக்கெல்லாம் செக் பண்ணிட்டா இருக்க முடியும்.. என்னோட முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு... அதே மாதிரி என்னையும் நீங்க ஆதரிக்கனும் என கேட்டு கொள்(ல்)கிறேன்...:)))

@ ராஜி - ரெம்ப நன்றிங்க...:)

Jagannathan said...

Nice, you are back in full bloom! Though your posts are lengthy, you maintain your good sense of humour till the end. And, what more - you have a loyal and devoted friend circle and readers! Keep posting, - R. J.

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - Many thanks sir...;)

viswam said...

ஆஹா. அருமையான நகைச்சுவை. மனதே மிகவும் லேசாகிவிட்டது. நன்றி.

அப்பாவி தங்கமணி said...

@ viswam - ரெம்ப நன்றிங்க...:)

மோ.சி. பாலன் said...

electric plug point எல்லாம் தரையை ஒட்டியா வெப்பாங்க பாவிங்க? அதுக்கெல்லாம் மூடி போட்டு குழந்தைகளை காப்பாத்தி கரை ஏத்துறது எவ்வளவு சிரமம்?
அப்புறம் இன்னொன்று. நம்ம ஊருல வாசல்ல கோணிப்பை போட்டுவைப்போம் காலத் தொடச்சிட்டு வாரதுக்கு. அட இங்க என்னங்க தரை முழுக்க கோணிப்பையி? வெளக்கி வாற முடியுமா .. கழுவித் தள்ளத்தான் முடியுமா..?

டமாசா எழுதி இருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்..தாயி.. அசலூருல பாத்து கவனமா பொழச்சிக்க தாயி.

அப்பாவி தங்கமணி said...

@ மோ.சி. பாலன் - ha ha ha... super point your honour...;) ரெம்ப நன்றிங்க..:)

Post a Comment