Monday, February 13, 2012

ஒரு சொல்லாவது சொல் கண்ணே... (காதலர் தின சிறப்பு சிறுகதை)"என்னங்க, இன்னைக்கி ஆபீஸ்ல என்ன நியூஸ்?"

"ஆபீஸ்ல என்ன... எப்பவும் போல தான், ஒண்ணுமில்ல'ம்மா"

"என்னைக்கு சொல்லி இருக்கீங்க இன்னிக்கி சொல்றதுக்கு... ஹ்ம்ம்..." என அவள் பெருமூச்சு விட

"அது..."

"சரி விடுங்க... எங்க ஆபீஸ்ல இன்னைக்கி புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணி இருக்கு. இப்ப தான் காலேஜ் முடிச்சுருக்கும் போல, செம ஸ்மார்ட்"

"அப்படியா?"

"ஆமா... பாக்கறதுக்கு அசப்புல எங்க அத்த பொண்ணு ரஞ்சனி மாதிரியே இருக்கு"

"அவ்ளோ கொடுமயாவா?" என அவன் சிரிக்க

"என்ன கிண்டலா? ரஞ்சனியும் நானும் சின்னதுலே இருந்தே எவ்ளோ க்ளோஸ் தெரியுமா? லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனா விடிய விடிய அரட்டை தான், வாயே மூட மாட்டோம்"

"இப்ப மட்டும் என்ன?" என மனதிற்குள் நினைத்து கொண்டான்

"ரஞ்சனியோட தம்பி ரமேஷ் இருக்கானே, அவன் செம வாலு சின்னதுல, ஒரு தடவ நானும் ரஞ்சனியும் மருதாணி அரைச்சு வெச்சுருந்தோம், இவன் எங்களுக்கு தெரியாம அதுல மொளகா பொடிய போட்டுட்டான் கொரங்கு. அது தெரியாம நாங்க ஆசை ஆசையா கைல காலுல எல்லாம் மருதாணி வெச்சோம். வெச்சு கொஞ்ச நேரத்துல எல்லாம் ஒரே எரிச்சல். அன்னைக்கி அத்தைகிட்ட செம அடி வாங்கினான் அவன்" என சொல்லி சிரித்தாள்

"ம்"

"நீங்க இப்படி எல்லாம் ஒண்ணும் ரகளை பண்ணினதில்லையா சின்னதுல?"

"பெருசா ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல"

"ம்... இன்னொருவாட்டி இப்படிதான் எங்க பேமிலி எல்லாம் சேந்து பழனிக்கு ட்ரிப் போய் இருந்தோம். அங்க மலை ஏறும் போது ஒரு செம காமடி" என தன் காமடியை நினைத்து தானே சிரித்து கொண்டாள் மாளவிகா

"ம்"

"எவ்ளோ இண்டரெஸ்ட்டா சொல்லிட்டு இருக்கேன், நீங்க சுவாரஷ்யமே இல்லாம ம் கொட்டறீங்க" என அவள் முறைக்க

"சொல்லு சொல்லு ரெம்ப ஆர்வமாத்தான் கேட்டுட்டு இருக்கேன்" என்றான் வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன்

உற்சாகமாகி "என் ரெண்டாவது அத்தையோட பொண்ணு ராதாவுக்கு கொரங்குன்னா ரெம்ப பயம்..."

"உன்னை பாத்த பின்னாடியுமா?" என மனதிற்குள் நினைத்து கொண்டான், சத்தமாய் சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள விரும்பவில்லை

"என்ன மாயமோ தெரில, அங்க இருந்த கொரங்கு எல்லாமும் அவளையே வெரட்டுச்சு, இனம் இனத்தோட சேரும்னு சொல்லி அவளை செம ஓட்டு ஓட்டினோம். என் பக்கம் ஒண்ணு கூட வர்ல தெரியுமா?" என்றாள் பெருமையாய்

"அப்படியா? அது கூட உன்னை பாத்து பயந்திருக்கு பாரேன்" என அவன் உள் அர்த்தத்துடன் கூற

அவள் அதை புரிந்து கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றாள் மகிழ்வாய், ஏதோ ஜனாதிபதி விருது வாங்கியது போல்

"போன மாசம் ரமேஷ் கல்யாணத்துல பாத்தப்ப கூட இதை சொல்லி ராதாவை ஓட்டினோம், ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் ராதாவோட அண்ணா ரவி இருக்கானே, எனக்கும் அவனுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்போம்" என்றாள் சிரிப்புடன்

"நீ யார் கூட தான் சண்டை போடாம இருந்தே" என மனதிற்குள் நினைத்து கொண்டான்

"ஐயையோ...மறந்தே போய்ட்டேங்க..." எனவும்

"என்ன? உன் மாமா பொண்ணு மஞ்சு கூட மெட்ராஸ் பீச்ல மணல் வீடு கட்டினது தானே...அதை நீ ஏற்கனவே மூணு வாட்டி சொல்லிட்டியே மாலு" என்றான் பாவமாய் முகத்தை வைத்தபடி

"ஐயோ அதில்லைங்க... எங்க சித்தி பொண்ணு சுதாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்காம். சித்தி இன்னிக்கி போன் பண்ணி இருந்தாங்க, மாப்ளகிட்டயும் சொல்லிடுனு சொன்னாங்க"

"மாப்ளைக்கே இனி தான் சொல்லணுமா? அப்புறம் எப்படி கல்யாணம்?" என பிரதாப் புரியாமல் விழிக்க

"ஐயோ... அவங்க மாப்ளனு சொன்னது உங்கள"

"ச்சே ச்சே... நீ இருக்கும் போது நான் எப்படி இன்னொரு கல்யாணம்...அதெல்லாம் தப்பு மாலு..."

"ஓஹோ...அப்படி வேற ஒரு நெனப்பு இருக்கா..." என அவள் முறைக்க

"ஐயோ... நீ தான சொன்ன"

"சொல்றத ஒழுங்கா காதுல வாங்கினா தானே, அந்த லாப்டாப்பை மொதல்ல தூக்கி வீசணும். எங்க சித்திக்கு நீங்களும் மாப்ள முறை தானே, அந்த அர்த்ததுல சொன்னாங்க. போதுமா?"

"ஹ்ம்ம், நான் கூட ஒரு நிமிஷம் என்ன என்னமோ..." என பெருமூச்சு விட

"நெனப்பீங்க நெனப்பீங்க... அப்புறம் என் பிரெண்ட் கீதா இருக்காளே...ப்ச்... நான் சொல்றத கவனிக்காம எப்ப பாரு இந்த லாப்டாப் ஒண்ணு" என முறைக்கிறாள்

"இல்லம்மா... கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லு... உன் பிரெண்ட் கீதாவுக்கு என்ன?" என்றான் பிரதாப் பொறுமையை இழுத்து பிடித்து

"கீதாவோட ஹஸ்பன்ட்'க்கு அவங்க கம்பெனில இருந்து சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வர்றதுக்கு டிக்கெட் தந்து இருக்காங்களாம்"

"ஓ... நல்ல விஷயம்"

"அப்புறம்..." என அவள் ஆரம்பிக்க

"மாலு, நான் ஒண்ணு கேப்பேன், நீ தப்பா நெனச்சுக்க மாட்டியே" என்றான் தயக்கமாய்

"என்ன?"

"இல்ல, நீ சொல்றதுக்கு 'ம்' போட்ட எனக்கே வாய் வலிக்குது, உனக்கு வாயே வலிக்காதா?" என்றான் பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்

ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தவள், "என்ன பண்றது, எங்க வீட்ல என்னை சூது வாது தெரியாம வளத்துட்டாங்க மனசுல எதையும் வெச்சுக்க தெரியாம பேசிடறேன். உங்க குடும்பம் மாதிரி, மனசுக்குள்ள ஆயிரம் வெச்சுக்கிட்டு பேசறதுக்கே காசு கேக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, அளவா பேசறவங்க எல்லாம் அறிவாளியும் இல்ல, வாய் மூடாம பேசறவங்க எல்லாம் வெட்டி ஆபிசர்களும் இல்ல" என்றபடி எழுந்து உள்ளே சென்றாள்

"என்ன சொன்னாலும் ஒரு பதில ரெடியா வெச்சுருக்காளே, ச்சே..." என தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான் பிரதாப்

*******************

"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்றாள் மாளவிகா அதிர்ச்சியின் உச்சத்தில்

"கொஞ்சம் அளவா பேசுன்னா கேட்டாதானே, சொன்னா அதுக்கும் சேத்து எனக்கு பல்ப் தரமட்டும் தெரியும், இப்ப எங்க வந்து முடிஞ்சுருக்கு பாரு" என்றான் பிரதாப் கோபமாய்

"நான் என்ன..." என மாளவிகா குரலை உயர்த்த

"ஷ்... மிசஸ் மாளவிகா, ஜஸ்ட் காம் டௌன். இப்ப ஒண்ணும் ஆய்டல. உங்க வோகல் கார்ட்ல (Vocal Cord) ஏதோ இன்பெக்சன் காரணமா ஒரு சின்ன கிரேக்(crack) மாதிரி இருக்கு. பயப்பட ஒண்ணுமில்ல, ஒரு மாசம் நான் குடுக்கற மெடிசன்ஸ் எடுத்து நான் சொல்ற அட்வைஸ் பாலோ பண்ணினா கிரேக் சரி ஆய்டும்..."

"மண்டைல தான் கிராக்னு நெனச்சேன், தொண்டைலயுமா?" என பிரதாப் முணுமுணுக்க, மாளவிகா முறைத்தாள்

டாக்டர் தொடர்ந்தார் "ஒரு மாசத்துக்கு நீங்க முடிஞ்ச வரை லிக்விட் டயட் இல்லைனா நல்லா குழைவா செஞ்ச சாதம் தான் சாப்பிடணும், இந்த நிமிசத்துல இருந்து ஒரு மாசத்துக்கு நீங்க பேசவே கூடாது"

"ஐயோ..." என மாளவிகா அலற

"ப்ச்... இப்ப தானே சொன்னேன் பேசாதீங்கன்னு" என டாக்டர் கண்டிப்புடன் கூற, வாய் மீது கை வைத்து சரி என்பது போல் தலை அசைத்தாள் மாளவிகா. அதை நம்ப இயலாமல் பார்த்தான் பிரதாப்

"ஆஹா... இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலையே" என மனதிற்குள் சந்தோசமாய் சிரித்து கொண்டான்

*******************

அதன் பின் வந்த ஒரு ஒரு நாளும் ஒரு சவாலாகவே அமைந்தது. முதல் இரண்டு நாட்கள் தான் பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதி காண்பித்தாள் மாளவிகா

பின் அது சலித்து போக, அடுத்த இரண்டு நாட்கள் சைன் லேங்க்வேஜ் (கை அசைவால்) மூலம் சொல்ல முயன்றாள்

பின் அதுவும் வெறுத்து போக, அமைதியாய் எதுவும் செய்யாமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்

அன்று வேலன்டைன்ஸ் டே(Valentines Day). காலையில் கண் விழித்தவள் படுக்கையின் அருகில் இருந்த மேஜையில் ஒரு வாழ்த்து அட்டையை பார்த்ததும் ஆர்வமாய் பிரித்தாள்

அதில் பிரதாப் எழுதி இருந்தது....

"டியர் மாலு,
 மொதல்ல உண்மைய சொல்லிடறேன், நீ ஒரு மாசம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொன்னப்ப நான் கொஞ்சம் சந்தோசப்பட்டேன். இதை படிக்கறப்ப உனக்கு கோபம் வரும், இந்த கிரீடிங் கார்டை கிழிச்சு வீசலாம்னு நெனப்ப, என்னை கன்னா பின்னானு திட்டனும்னு கூட உனக்கு தோணும். அப்படி திட்டனாலும் பரவால்ல, உன் குரல் கேட்க மாட்டோமானு இருக்கு இப்போ எனக்கு

சிலருக்கு சினிமா பிடிக்கும், சிலருக்கு ஊர் சுத்த பிடிக்கும், சிலருக்கு படிக்க புடிக்கும், ஆனா உனக்கு பேச பிடிக்கும், இப்ப.... எனக்கு கேட்க பிடிக்கும்னு புரியுது, அதுக்கு காரணமும் நீ தான்...:)

மத்தவங்க சாதாரணமா சொல்ற ஒரு விசயத்த கூட நீ சொல்லி கேட்கும் போது அதுக்கு தனி அழகு வந்துடுதோனு தோணுது. சாக்லேட்டை பத்தி பேசினாலும் சாக்ரடீஸை பத்தி பேசினாலும் ஒரே மாதிரி அனுபவிச்சு ரசனயோட நீ பேசற அந்த அழகை நான் வேற யார்கிட்டயும் பாத்ததில்ல

மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்

Yes, I confess now, I miss listening to your stories, I miss our sweet nothings my love. So, whether it is your childhood stories or complaints or just non-stop nonsense, I don't care, I just want to hear you. Get well soon and bring back the joy in my life. Happy Valentines Day

I love you...

Yours,
Pratap"


படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள், அறையின் வாயிலில் பிரதாப் நிற்பதை பார்த்ததும், விசும்பலுடன் ஓடி சென்று கட்டி கொண்டாள்

"ஐ லவ் யு மாலு" என நெகிழ்வுடன் அவளை அணைத்து கொண்டான் பிரதாப்
 
(முற்றும்)    
 
:)))
 
 

47 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

ஹ்ம்ம்...உண்மை அப்பாவி! நாம வாய் ஓயாமப் பேசும்போது இவிங்களுக்கெல்லாம் புரியவேஏஏஏஏஏ புரியாது! ;))))))

ஹேப்பி வாலன்டைன்ஸ் டே!

Mahi said...

அந்த "மாப்ளை" காமெடி ஜூப்பர்! :D

துளசி கோபால் said...

வீட்டுவீட்டுக்கு இப்படித்தான் வாசப்படிகளா:-))))))))))))

Porkodi (பொற்கொடி) said...

shabba. over senti udambuku agadhudiyov! :P

bandhu said...

pretty good!

எல் கே said...

சொந்தக் கதையை இங்க போட்டுட்டான்களோ ??

ஸ்ரீராம். said...

அருமை.

geethasmbsvm6 said...

haahaahaa Pavam Govindu! :P:P:P

geethasmbsvm6 said...

to continue

Lakshmi said...

கதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

முகில் said...

//என்ன பண்றது, எங்க வீட்ல என்னை சூது வாது தெரியாம வளத்துட்டாங்க மனசுல எதையும் வெச்சுக்க தெரியாம பேசிடறேன். உங்க குடும்பம் மாதிரி, மனசுக்குள்ள ஆயிரம் வெச்சுக்கிட்டு பேசறதுக்கே காசு கேக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, அளவா பேசறவங்க எல்லாம் அறிவாளியும் இல்ல, வாய் மூடாம பேசறவங்க எல்லாம் வெட்டி ஆபிசர்களும் இல்ல//

என்னத்தை சொல்ல... ரொம்பவும் நல்லா எழுதியிருக்கீங்க...

//மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்//

வாஸ்தவம்தாங்க. எதுவுமே இருக்கும்போது அதோட அருமை தெரியறது இல்ல.

ஹுஸைனம்மா said...

//படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள்//

எனக்கும் இதைப் படிச்சுட்டு கண்ணில் நீர் வழிஞ்சுதுங்க... ம்ஹும், நம்ம (நீங்க&நான்) நிலைமைய நினைச்சு இல்லை....

இவ்வளவு சீக்கிரமா முற்றும் போட்டுட்டீங்களேன்னுதான்....!! எவ்ளோ சின்னக் கதை!! ;-)))))))))))

எனிவே, நானும் வாரத்துல ஒருநாள் மௌன விரதம் இருந்து நம்ம மகிமையை உணர்த்தலாம்னு நினைக்கிறேன்; நீங்க என்ன நினைக்கிறீங்க??
(மௌன விரதம் இருந்தா பேச முடியாதேனு கவலை இல்லை; ஏன்னா, ப்ளாக்ல எழுதித் “தீத்துடலாம்”!! :-))))))))))))

Asiya Omar said...

கதையில் பிரதாப் மைண்ட் வாய்ஸ் செமை.இறுதியில் கடிதமும் செமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செம கதை.. ரொம்ப இன்ரஸ்டிங் கேரக்டர்ஸ். ரொம்ப நல்லாருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க.

RAMVI said...

பிரதாப் எழுதிய கடிதம் என்னை நெகிழச்செய்துவிட்டது.
அழகான கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மத்தவங்க சாதாரணமா சொல்ற ஒரு விசயத்த கூட நீ சொல்லி கேட்கும் போது அதுக்கு தனி அழகு வந்துடுதோனு தோணுது. சாக்லேட்டை பத்தி பேசினாலும் சாக்ரடீஸை பத்தி பேசினாலும் ஒரே மாதிரி அனுபவிச்சு ரசனயோட நீ பேசற அந்த அழகை நான் வேற யார்கிட்டயும் பாத்ததில்ல

மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்//

அருமை, வெகு அருமையான வரிகள்.

பிரதீபா said...

என்னம்மோ போங்க.. பேசித் தள்ளுற தங்கமணிகள் எல்லாம் கொஞ்ச நேரம் சந்தோஷமா ஆயிட்டீங்களா? ஓக்கே ;) பீ கேர்புல் (நான் என்னச் சொன்னேன்) அப்பாவியக்கா, இப்ப எனக்கொரு டவுட்டு; நாமெல்லாம் நிறைய பேசலாமா கூடாதா?

siva sankar said...

:)NICE...

கோவை2தில்லி said...

அழகான கதை.... பிரதாப்பின் வரிகள் அருமையா இருந்தது.....

சுசி said...

சிரிப்போட அருமையா எழுதி இருக்கீங்க :)

vinu said...

காதல் அழச்செய்யும்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை அ.த....

முதலில் நகைச்சுவையாகத் தெரிந்தாலும், பின்னால் சோகம் தாக்கியது....

மாதேவி said...

:)) நன்றாக இருக்கிறது.

S.Menaga said...

அழகான கதை அப்பாவி,இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

கீதமஞ்சரி said...

எதையுமே இழந்தபின்னால்தான் அதன் அருமையே தெரியுது. இங்கேயும் அப்படித்தான். காதலர் தினத்துக்கு அருமையான காதல் கதை. பாராட்டுகள் புவனா.

Priyaram said...

To Love is Nothing

To be Loved is Someing...

To love and to be Loved is Everything....

super lines....

Priyaram said...

காதலர் தின நல்வாழ்த்துக்கள் புவனா. கதை aarambaththil sirippaaga irundhaalum... mudivil அழ vaiththu vitteergal.... arumaiyaana kadhal கதை...

அமைதிச்சாரல் said...

ஸ்ஸப்பா.. நிழலின் அருமை வெய்யிலில்தான் இந்த ரங்குகளுக்குத் தெரியுது.
:-))

schmetterlingwords said...

Idha padichittu enakkum kannule thanni vandhuduchunga... Indha kadhaya en husband-kum kaatanum... Arumayaana kaadhal kadhai.. :)

En blog-ku ungal varugaikum comment-kum nanri :)

priya.r said...

உன்ற சொந்த கதை இல்லைன்னு நம்பறேன் அப்பாவி :))
ஆமா அது என்ன மகிக்கும் கொடிக்கும் மட்டும் வடை கிடைச்சு கிட்டே இருக்கும் மர்மம் என்ன ?!

priya.r said...

//geethasmbsvm6 said...

haahaahaa Pavam Govindu! :P:P:P


சேசே ! நம்ம அப்பாவி கிடைக்கஅவர் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் கீதாமா :))//

priya.r said...

ஹுஸைனம்மா said...

//படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள்//

எனக்கும் இதைப் படிச்சுட்டு கண்ணில் நீர் வழிஞ்சுதுங்க... ம்ஹும், நம்ம (நீங்க&நான்) நிலைமைய நினைச்சு இல்லை....

இவ்வளவு சீக்கிரமா முற்றும் போட்டுட்டீங்களேன்னுதான்....!! எவ்ளோ சின்னக் கதை!! ;-)))))))))//

படிச்சுட்டு செமையா சிரிச்சேன் ஹுஸைனம்மா; அதுவும் நம்ம நிலைமையை நினைச்சு இல்லை; எவ்வளோ சின்ன பதிவுன்னு சொன்னீங்க பாருங்க! உங்க கவனிப்பு அருமை !!

priya.r said...

//பிரதீபா said...

என்னம்மோ போங்க.. பேசித் தள்ளுற தங்கமணிகள் எல்லாம் கொஞ்ச நேரம் சந்தோஷமா ஆயிட்டீங்களா? ஓக்கே ;) பீ கேர்புல் (நான் என்னச் சொன்னேன்) அப்பாவியக்கா, இப்ப எனக்கொரு டவுட்டு; நாமெல்லாம் நிறைய பேசலாமா கூடாதா? /


ஆஹா! தீபா கலக்கறீங்க :) பீ கேர்புல் (நான் என்னச் சொன்னேன்) சொல்லிய விதம் சிரிக்க வைத்தது :))


பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்கன்னு அப்பாவி வந்து சொன்னா பதிலுக்கு நீங்க என்ன சொல்லுவீங்க :))

அப்பாதுரை said...

humorம் sentimentம் அளவோடு கலந்து கொடுத்திருக்கிறீர்கள்.

Avargal Unmaigal said...

மனதில் அழுத்தம் போல இருக்கும் போது உங்கள் தளம் வந்து கதைகளை வாசித்து செல்வேன். கதையை படித்த பின் மன இறுக்கம் குறைந்தது போல ஒரு உணர்வு எப்போதும் வருகிறது. நகைச்சுவையாக மிக நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு...வாழ்த்துக்கள்

Sreeja said...

எங்க வீட்டு கதை ....
நன்றாக இருக்கிறது.

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

எப்பொழுதும் போல கதையா உண்மையா என்றேக் கண்டுபிடிக்க முடியாதபடி எழுதுகிறீர்கள்.
நன்றாக உள்ளது.

உங்களுக்கு விருது காத்திருக்கிறது. தயவு செய்து இங்கு வந்து http://kaialavuman.blogspot.in/2012/02/normal-0-false-false-false-en-us-x-none.html ஏற்றுக்கொள்ளவும்.

divyadharsan said...

wow wow wow....wat a post appavi!!! really superb.
I can definetly say..am defntly like maalavika:))

Wonderful post dear akka.Love the romance part as usual.super super super.

Thanx for the beautiful post:)

@venkata srinivasan - avanga storynu than solvanga..udaney neenga nambidrathaa??

appavi storya nambalam but not appavi.
sontha anubavamathan erukum.mostly:)))
aana teriyatha maariyey namalum maintain pananum..

correct thaana appavi.hehe.take care.tata.

தக்குடு said...

அஹஹம்! கதை ரொம்பவே நல்லா இருந்தது. அப்புறம் அந்த க்ராக் எல்லாம் இப்ப தேவலையா உங்களுக்கு? :PP

வல்லிசிம்ஹன் said...

கேக்கவே நல்லா இருக்கு. அழுத்தமான இயற்கையான கதை. வாழ்த்துகளும் பாராட்டுகளும் புவன்.

Rajan said...

கதை ஆனாலும் கிட்ட தட்ட என் வீடு கதையும் இது தான்

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - சரியா சொன்ன மகி... தேங்க்ஸ்...;)

@ துளசி கோபால் - அப்படித்தான் போல இருக்குங்க துளசிம்மா...;))))))

@ Porkodi (பொற்கொடி) - என்னோட அடுத்த கதை ஹீரோயன்'க்கு உன் பேரு வெச்சு பழி வாங்கறேன் வெயிட்...;))

@ bandhu - தேங்க்ஸ்...:)

@ எல் கே - இல்லீங்ணா...;))

@ ஸ்ரீராம். - நன்றிங்க...;)

@ geethasmbsvm6 - வொய் கோவிந்து பாவம் மாமி...;))

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா...:)

@ முகில் - நன்றிங்க... முதல் வருகைக்கும் நன்றி...;)

@ ஹுஸைனம்மா - எக்கோய்... உள்குத்தா வெக்கறீங்க... இருங்க பேசிக்கறேன்... அடுத்த கதைல வில்லி ரோல் உங்களுக்கு தான்...;) மத்தபடி நீங்க மௌன விரதம் இருக்கறேன்னு சொன்னதுல எனக்கு சந்தோஷம் தான்... அதை வெள்ளிகிழமை இருந்தீங்கன்னா அண்ணனுக்கு நான் செஞ்ச பெரும் உத்வியா இருக்கும்...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Asiya Omar - நன்றிங்க ஆஸியா...:)

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - நன்றிங்க...;)

@ RAMVI - நன்றிங்க ராம்வி...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ பிரதீபா - அடாடாட.... என்னா ஒரு நடிப்பு... நடிப்பு திலகியே அடுத்த ஆஸ்கர் உனக்கு தானுங்க அம்மணி... அடுத்த கதைல வில்லி நம்பர் டூ நீ தான்...:)

@ siva sankar - தேங்க்ஸ்...;)

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)

@ சுசி - தேங்க்ஸ் சுசி...:)

@ vinu - சிரிக்கவும் செய்யும் இல்லயா வினு...:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க...;)

அப்பாவி தங்கமணி said...

@ மாதேவி - நன்றிங்க...:)

@ S.Menaga - உங்களுக்கும் வாழ்த்துக்கள்...நன்றிங்க

@ கீதமஞ்சரி - ரெம்ப நன்றிங்க கீதா...:)

@ Priyaram - தேங்க்ஸ் ப்ரியா...;)

@ அமைதிச்சாரல் - ரெம்ப சரி அக்கா...:)

@ schmetterlingwords - ஆஹா...நன்றிங்க...;)

@ priya.r - நம்பறீங்களா? அப்ப சரி...;) மகி வடை பாத்தரத்து பக்கத்துலையே இருக்காக, அதான் அவிகளுக்கு வடை கிடைக்குதோ...:) புண்ணியமா? என்ன ஆப்பு வருதோ தெரிலையே?..:) எக்கோவ், கதைய படிக்க சொன்னா கமெண்ட் படிச்சு கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்களா... இருங்க அனுப்பறேன் பார்சல்...:)

@ அப்பாதுரை - நன்றிங்க சார்...:)

@ Avargal Unmaigal - இது தான் எனக்கு கிடைத்த கிரேட் காம்ப்ளிமென்ட்னு நினைக்கிறேன்... நன்றிங்க...;)

@ Sreeja - எல்லா வீட்டு கதையும் இதான் போல... நன்றிங்க...;)

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - ரெம்ப நன்றிங்க விருதுக்கும் பாராட்டுக்கும்...:)

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - Ahaa, glad you all liked it...;) I guess we all have little of Malavika in us...;) adapaavi, story'nu sonnaa nambanum, illainaa adutha story'la unakku weight'aana role pottuduven...;) ha ha...take care.. tata..:)

@ தக்குடு - எந்த கிரேக்? நேக்கு ஒண்ணும் புரியல கேட்டியா?...:)))

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ் வல்லிம்மா...:)

@ Rajan - ஆஹா... எல்லார் வீட்டிலுமா...சூப்பர்...நன்றிங்க..:)

En Samaiyal said...

திருமணமான எல்லாஆஆஅ மனைவிகள் சார்பாகவும் உங்களுக்கு ஒரு ஓ போடுறேன் :)

அருமையான கதை எல்லார் வீட்டுலயும் நடக்கறத அழகா எழுதி இருக்கீங்க. கிராக் ஜோக் சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

@ En Samaiyal - Thanks thanks and thanks...:)

Post a Comment