Tuesday, February 21, 2012

சின்ன தாயவள்...(சிறுகதை)
வல்லமை இதழில் இந்த கதை பிரசுரிக்கப்பட்டது, வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு எனது நன்றிகள். அதன் சுட்டி இங்கே


"ப்ரியா செல்லம், எந்திரிம்மா. டைமாச்சு" என்ற அவள் அம்மா கவிதாவின் கொஞ்சல் குரலில்

"ஹும்ஹும்..." என மழலையில் சிணுங்கினாள் ப்ரியா

"ப்ரியா..." என அதட்டலாய் உலுக்கி எழுப்பி, பிள்ளையின் கை கால் உதறலை பொருட்படுத்தாது தூக்கி சென்று குளிக்க செய்து மீண்டும் அறைக்குள் தூக்கி வந்தாள் அவள் அம்மா

"எனக்கு இந்த டிரஸ் வேணா" என ப்ரியா அவள் அம்மாவின் கையில் இருந்த உடையை தட்டி விட

அதே நேரம் "கவிதா... மணி ஆறே முக்காலாச்சு... ஏழரைக்கு கெளம்பினா தான் ப்ரியாவ டேகேர்ல விட்டுட்டு போக கரெக்டா இருக்கும்... Hurry up" என கீழறையில் இருந்து குரல் வர

"அங்க நின்னுட்டு கத்தற நேரம் இங்க வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல... உக்காந்துட்டே அதிகாரம் பண்ணுங்க" என்றாள் எரிச்சலாய்

"நான் உக்காந்துட்டு அதிகாரம் பண்றேன்... நீ நின்னுட்டு பணிவா பேசறியோ?" என கேலியாய் கேட்டபடி பிரவீன் படி ஏறி வர

"பிங்க் ட்ரெஸ்... பிங்க் டிரஸ்... பிங்க் டிரஸ்..." என ப்ரியா கத்தியபடி குதிக்க

"ரெண்டு வயசுக்கு இவ்ளோ பிடிவாதம் ஆகாதுடீ... அப்படியே அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு" என முணுமுணுத்தாள்

"திட்டரதுன்னா நேரா திட்டு... ஏண்டி என் செல்லத்த சாக்கா வெச்சுட்டு திட்ற" என்றபடி அறைக்குள் நுழைந்தவன் பொய் கோபத்துடன் மனைவியை முறைத்துவிட்டு "நீ வாடி செல்லம்.. உனக்கு எந்த டிரஸ் வேணுமோ சொல்லு, டாடி போட்டு விடறேன்" என மகளை தூக்கி கொண்டான்

"ஐ லவ் யு டாடி" என மகள் அன்பாய் தந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்க

மனம் நெகிழ "ஐ லவ் யு டூ ஸ்வீட்ஹார்ட்" என பிள்ளையை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் பிரவீன்

"கொஞ்சினது போதும்... சீக்கரம் டிரஸ் பண்ணி கூட்டிட்டு வாங்க..." என கவிதா கூற

"உன் மம்மிக்கு பொறாம, உன்னை மட்டும் கொஞ்சறேன்னு" என பிரவீன் கூற, வெளிய செல்ல திரும்பிய கவிதா திரும்பி அவனை முறைத்தாள், பிரவீன் மனைவியின் கோபத்தை ரசித்தபடி கண் சிமிட்டி முறுவலித்தான்

"மம்மிக்கு பொறாம" என தந்தை கூறியதையே ப்ரியாவும் மழலையில் கூற, கவிதா சிரித்துவிட்டாள்

சிறிது நேரத்தில் பிரவீன் மகளுடன் தயாராய் வர, "பிரவீன், ப்ரியாவ ஹை-ஷேர்ல உக்கார வெச்சுட்டு அவ ஷூ சாக்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து வெயுங்க சீக்கரம்" என பரபரப்புடன் கையில் உணவு கிண்ணத்துடன் வந்தாள் கவிதா. சொன்னபடி மகளை அமர செய்து விட்டு முன்னறைக்கு சென்றான் பிரவீன்

"ம்... இந்தா..." என ஸ்பூனை அருகே கொண்டு செல்ல, தலையை இடமும் வலமும் அசைத்தபடி "ஐ வான்ட் நூடுல்ஸ்" என்றது குழந்தை

"ப்ரியா... ஒழுங்கா வாய தெற" என அதட்டியபடி வாயில் திணித்தாள் கவிதா. அடுத்த நொடி ப்ரியா முகம் சுளித்து துப்ப, தன்னை மீறிய கோபத்தில் பிள்ளையின் முதுகில் ஓங்கி அடித்தாள் கவிதா

ப்ரியா பெருங்குரலெடுத்து அழ தொடங்க, சத்தம் கேட்டு உள்ளே வந்த பிரவீன் "என்னடா கண்ணா? ஏன் அழற?" என மகளை அணைக்க

"ம...மம்மி... பீட் மீ..." என தேம்பலுடன் கூறினாள்

"அத மட்டும் சொல்லு... ஏன் அடிச்சேன்னு சொல்லிடாத?" என்றாள் கவிதா கோபமாய்

"என்ன கவிதா இது? எத்தன வாட்டி சொல்றது உனக்கு, காலைல நேரத்துல அவள அழ வெக்காதனு" என்றான் சற்றே கோபமாய்

"எனக்கு அவள அழ வெக்கணும்னு ரெம்ப ஆசை பாருங்க" என்றாள் எரிச்சலாய்

"இப்ப என்ன பிரச்சன?" என்றான்

"நூடுல்ஸ் தான் வேணுமாம். இது சாப்பிட மாட்டாளாம்"

"அவளுக்கு பிடிச்சத குடுக்க வேண்டியது தான"

"அவ சொல்றபடியெல்லாம் ஆடிட்டே இருந்தா இன்னும் அதிகமா சொன்ன பேச்சு கேக்காம தான் அடம் பிடிப்பா"

"உன் புத்தி கொஞ்சமாச்சும் நம்ம பொண்ணுக்கும் இருக்குமல்ல" என கேலியாய் கூற

கவிதா இருந்த மனநிலையில் அவன் கேலி கோபத்தை தூண்ட "ஆமா... எல்லா தப்பும் என்னோடது தான்" என கோபமாய் கூறியவள் அவனை தவிர்த்து உள்ளே சென்றாள்

ப்ரியாவை சமாதானம் செய்ய அவள் கேட்டபடி ஒரு குக்கியை(பிஸ்கட்) அவள் கையில் கொடுத்துவிட்டு மனைவியை நோக்கி சென்றான் பிரவீன்

நூடுல்ஸ் செய்து கொண்டிருந்தவள் அவன் உள்ளே வந்ததை உணர்ந்தும் கண்டும் காணாதது போல் மௌனமாய் இருந்தாள்

"ஏய்... கோவமா?" என அவளை அணைத்தபடி கேட்க, அவள் பதில் சொல்லாமல் அவன் கையை தட்டி விட்டாள்

"என்ன கவி இது? இதுக்கு போய் டென்சன் ஆகற. ப்ரியா அழறத பாத்தா மூட் அவுட் ஆய்டுதுடா. அதான் அவ கேக்கறதையே குடுக்கலாமேனு சொன்னேன். இன்னும் கோபம்னா சாரி" என்றான்

"கோபமெல்லாம் இல்ல... நீங்க ரெம்ப செல்லம் குடுத்து அவள கெடுக்கறீங்க, அதான் பயமா இருக்கு" என்றாள் சமாதானமான குரலில்

"இன்னும் சின்ன கொழந்த தானே கவி. கொஞ்சம் பெருசான சரியாயிடும்" என்றான்

"முப்பது வயசாகியும் எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் சரியான மாதிரி தெரில" என்றாள் கேலியாய் அவனை பார்த்தபடி

"கொழுப்புடி உனக்கு" என்றவன் வலிக்காமல் அவள் கன்னத்தில் அடிக்க

"சரி சரி... நம்ம சண்டைய அப்புறம் வெச்சுக்கலாம். உங்க பொண்ணு இந்த நூடுல்ஸ் ஆச்சும் சாப்பிடராளானு பாப்போம்" என்றபடி நகர்ந்தாள்

அடுத்த பத்து நிமிடத்தில் மூவரும் காரில் ஏறி இருக்க, கார் டே-கேர் நடத்தும் பெண்மணியின் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது

"மம்மி" என ப்ரியா அழைக்க

"என்ன குட்டிமா?"

"டம்மி ஹர்ட்டிங்" என வயிற்றை பிடித்தபடி உதட்டை பிதுக்கி கொண்டே கூற

"உங்க பொண்ணுக்கு தினமும் இந்த நேரத்துக்கு வயிறு வலிக்கும் கண்ணு வலிக்கும் காலு வலிக்கும்...ஒண்ணு பாக்கியில்ல" என முன் சீட்டில் இருந்த கணவனிடம் முணுமுணுத்தவள்

மகளிடம் திரும்பி "டம்மி வலிக்குதா? அச்சச்சோ... ப்ரியா குட்டிக்கு இன்னிக்கி சாயங்காலம் பிரெஞ்சு பிரைஸ் வாங்கிட்டு வரலாம்னு நெனச்சனே... டம்மி ஹர்ட்டிங்னா அப்ப வேண்டாம்" என வேண்டுமென்றே பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கூற

"நோ மம்மி... டம்மி நோ ஹர்ட்டிங்... லிட்டில் ஒன்லி. பிரெஞ்சு ப்ரைஸ் வேணும்" என்றது குழந்தை

அதை கேட்டதும் பிரவீன் சத்தமாய் சிரிக்க "என்ன சிரிப்பு... எல்லாம் உங்க புத்தி தான் அப்படியே வாய்ச்சிருக்கு" என கணவனை பொய்யாய் முறைத்தவள், மகளிடம் திரும்பி "இப்ப வலிக்கலையா டம்மி" என கேட்டபடி வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட

"டிக்லிங்... நோ மம்மி... மம்மி நோ" என பெற்றவளின் கையை பற்றி தடுத்தபடி சிரிப்பில் நெளிந்தாள் ப்ரியா

மகளின் மழலை சிரிப்பில் மயங்கி அவளை கவிதா முத்தமிடவும் கார் டே-கேர் முன் நிற்கவும் சரியாய் இருந்தது

"ஒகே கொஞ்சல்ஸ் எல்லாம் இனி சாயங்காலம் வெச்சுக்கலாம்... டே கேர் வந்தாச்சு ப்ரியா குட்டி.. டாடிக்கு ஒரு ஹை-பை குடு" என பிரவீன் முன் சீட்டில் அமர்ந்தபடியே கை நீட்ட, ப்ரியா தந்தையின் கையை தட்டி சிரித்தாள்

கார் சத்தம் கேட்டு கதவை திறந்த பெண்மணியை பார்த்து "ஹாய் மார்கரெட்" என சிநேகமாய் சிரித்த கவிதா, ப்ரியாவை கீழே இறக்கி விட்டு "பை ஸ்வீட்டி" என மகளுக்கு முத்தமிட்டாள்

அதற்குள் "ப்ரியா" என உள்ளிருந்து ஒரு சிறு பிள்ளையின் குரல் கேட்க, ப்ரியா உள்ளே ஓடினாள்

*******************************************
மாலை ஆறு மணிக்கு டே கேர் வாசலில் தன் பெற்றோரின் காரை கண்டதும், ப்ரியா ஓடி வந்து தன் அம்மாவின் காலை கட்டி கொண்டாள். வீடு வந்து சேரும் வரை வாய் ஓயாமல் அன்று ஆடிய விளையாட்டுகள், போட்ட சண்டைகள், புகார்கள் என எல்லாமும் கூறி கொண்டே வந்தாள் ப்ரியா

"ரெண்டு வயசுக்கு பேச்சு கொஞ்சம் ஓவராதான் இருக்கு" என கவிதா சிரிப்புடன் கூற

"நீ ஒரு வயசுலேயே ஊரை வித்துருவேனு உங்கம்மா அன்னைக்கி சொல்லல" என பிரவீன் சமயம் பார்த்து கேலி செய்ய

"ஆமா என் செல்லம் என்னை மாதிரி தான் போங்க" என பெருமிதமாய் பிள்ளையை அணைத்து கொண்டாள்

வீட்டுக்கு வந்ததும் நேரம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது. உணவு முடித்து ப்ரியாவை குளிப்பாட்டி மற்ற வேலைகளை முடித்து ஆயாசமாய் உணர்ந்தாள் கவிதா

பிரவீன் ஹால் சோபாவில் அமர்ந்தபடி டிவியில் நியூஸ் பார்த்து கொண்டிருக்க, ப்ரியா தரை கார்பெட்டில் அமர்ந்து பொம்மைகளை கவிழ்த்து போட்டு விளையாடி கொண்டிருந்தாள்

கவிதா சோபாவில் அருகில் வந்த அமர, "வேற எதாச்சும் பாக்கறயா?" என டிவி ரிமோட்டை அவளிடம் நீட்டினான்

"இல்ல இதே இருக்கட்டும்" என்றாள்

"டாடி, எனக்கு பேபி எலிபென்ட் வாங்கி தர்றியா?" என்ற மகள் காலை கட்டி கொண்டு கேட்க, டிவியில் இருந்து கவனத்தை பிரித்து ப்ரியாவை தூக்கி மடியில் இருத்தி முத்தமிட்டவன் "அதென்ன பேபி எலிபென்ட். என் செல்லத்துக்கு பெரிய எலிபன்ட்டே வாங்கி தரேன் குட்டிமா" என்றான்

"நோ டாடி... பேபி தான் வேணும்" என்றாள் விடாமல்

"ஏண்டா?" என கவிதா புரியாமல் கேட்க

"மம்மி எலிபன்ட் டாடி எலிபன்ட் எல்லாம் ஆபீஸ் போய்ட்டா பாவம் பேபி எலிபன்ட் டே-கேர் போகனுமில்ல... அதை நாம வாங்கினா நான் வீட்ல இருந்து மம்மு குடுத்து ஜோ ஜோ பாடி அதை தூங்கு வெச்சு பாத்துப்பேன்ல மம்மி" என கை, கால், கண்கள் என மொத்தமும் பேச ப்ரியா அபிநயத்துடன் கூற, கவிதாவின் கண்ணில் சட்டென நீர் நிறைந்தது

"ஏய்...." என ஆதரவாய் மனைவியின் தோள் தொட்டான் பிரவீன். அதற்குள் டிவியில் ஏதோ கார்ட்டூன் வர ப்ரியாவின் கவனம் திரும்பியது

"தன்னை அந்த பேபி எலிபன்ட் நிலைல வெச்சு பாக்கராளோனு தோணுது பிரவீன், அவ மனசுல எவ்ளோ ஏக்கம் இருந்தா அந்த வார்த்தை வரும். ஆறு மாச கொழந்தையா இருந்தே டே-கேர் போறா பழகிட்டானு நாம நினைக்கிறோம். ஆனா அவ பேபி எலிபன்ட் பத்தி சொன்னத கேட்டப்ப கஷ்டமா இருக்கு பிரவீன்" என விசும்பியவளை தோளில் சாய்த்து கொண்டவன்

"கவி ப்ளீஸ், என்ன இது? வீட்ல ஒருத்தர் மட்டும் வேலைக்கு போறது ப்ராக்டிகலா நடக்குமா நீயே சொல்லு. எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல ஸ்கூல் போய்டுவா... அது வரைக்கும் தான. அழாத ப்ளீஸ்"

"உங்களுக்கு கஷ்டமா இல்லையா?" என தலையை உயர்த்தி கேட்ட மனைவியை அன்பாய் அணைத்தவன்

"கஷ்டமாதான் இருக்கும்மா" என்றான் வருத்தமாய்

"யோசிச்சு பாருங்க பிரவீன். நமக்கெல்லாம் மூணு வயசு வரைக்கும் தரைல விடாம அம்மாவோ பாட்டியோ பாத்துகிட்டதும், ஸ்கூல் போனப்புறம் கூட லஞ்ச் கொண்டு வந்ததும் அதெல்லாம் நம்ம பொண்ணுக்கு நாம குடுக்க முடியலையேனு கில்டியா இருக்கு பிரவீன்" என்றவளை

"கவி, ஐ.டி பீல்ட்ல நாம விலகினா அந்த இடத்தை பிடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க.. அது மட்டுமில்ல, பிரேக் எடுத்தா நீ இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு உருவாக்கின கரியர் போய்டும். லெட்ஸ் பி பிரக்டிகல் கண்ணம்மா, டோண்ட் கெட் எமோசனல்" என சமாதானம் செய்தான்

கவிதா மௌனமாய் தரையில் இருந்த மகளை தூக்கி எதிலிருந்தோ காப்பது போல் இறுக அணைத்து கொண்டாள்

"மம்மி மம்மி...டைனோசர் டைனோசர்..." என ஆர்வமாய் டிவி திரையை சுட்டிக்காட்டி ப்ரியா கூற

"குட்டி டைனோசர் வேணும்னு கேக்க போறா பாரு இப்போ" என பிரவீன் பேச்சை மாற்றும் பொருட்டு கேலியாய் கூற, அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கவிதா சிரித்தாள்

அதை பார்த்து ப்ரியாவும் கை கொட்டி சிரித்தாள்

(முற்றும்)

34 பேரு சொல்லி இருக்காக:

Sri Seethalakshmi said...

hey hey நான் தான் first :)

பதிவுலகில் பாபு said...

Romba arumaiyana theme.. career-a ninaichu niraya pear valikaiya tholaichudarom..

Lakshmi said...

கதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

Anonymous said...

Good one! I'm one of those who raised 2 kids. It was hard at that time but I'm actually happy now that I did not give up my career. I'm proud to say that my kids are very independent when compared to kids with stay at home mothers. Today my kids support me fully along with my husband.
I would like all the working mothers to watch this video to get motivated, http://www.youtube.com/watch?v=18uDutylDa4
Thanks > Nanditha

எல் கே said...

கதை சரியா முடியலையோனு சின்ன எண்ணம்.

Mathi said...

Good one.. i am really upset ..

middleclassmadhavi said...

I felt the same too as a working mother. But my sons understand now, in their teen age.
Practical story!

siva sankar said...

நிஜம் கலந்த உண்மை
இங்கே கதையாய்.
கண்முன்னே விரியும் காட்சிகள்
வரி வரியாய்
உங்கள் முகவரியை
எங்கோ அழைத்து செல்கிறது
வாழ்க வளமுடன்

BalajiVenkat said...

As u said we enjoyed a lot being part of thathaa n paatti ... And someone took care of us when we where at that age and now due to economic hold we are making ourselves compromised that they will understand at later point of time that we did it for their welfare... But upto me kaal vayaru kanji kuduchaalum parava illa v take care of them how we where taken care of at that age... It's the mentality which may provoke them to send us to an old age home... Due to their career... Which is what actually happening now... As LK said that u wud have gone little more... But I feel that it's proper that u gave the decision to the readers... Great job... I envy u that I couldn't able to narrate in such a way...

BalajiVenkat said...

Eventhough both my parents also where working, they took full care of mine and didn't left me anywhere...

அமைதிச்சாரல் said...

இவ்வளவு திறமையை ஏன் அடிக்கடி தூக்க மாத்திர கொடுத்து தூங்க வைக்கிறீங்க??.. இத மாதிரி நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன். எழுதி வல்லமை பக்கம் தள்ளுங்க.. கேட்டீங்களா :-)))

வல்லிசிம்ஹன் said...

கவிதா கையில இன்னோரு பாப்பா வந்தால் சரியாகிடும். தாத்தா பாட்டி வருவாங்க. ஒருவருஷம் பெரிசைப் பாத்துக்க ஆளு வந்துடுவாங்க. அப்புறம்
சரியாகிடும். ஆனா ரெண்டாவது பாப்பா டேகேர் போகணும்:)

ஹுஸைனம்மா said...

//ஐ.டி பீல்ட்ல நாம விலகினா அந்த இடத்தை பிடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க//

:-))))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

Sreeja Anand said...

புவனா,
கதை அல்ல எங்கள் வாழ்வின் நிஜம்.

RAMVI said...

இந்த காலத்துக் குழந்தைகளை நினைவு படுத்தும் கதை.இதற்கு முடிவு??

மதுமதி said...

நல்லதொரு கதை வாசித்தேன்.இது வல்லமையில் வராமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம்..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

RVS said...

வல்லமை எடிட்டர் கேக்கறதை செஞ்சுடுங்க.. ப்ளீஸ்... நாங்களும் இதுபோல நிறைய கதை படிக்கலாம். :-)

கீதமஞ்சரி said...

இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் உதவிக்கு ஆளில்லாமல் தவிப்பதும், நாம் வாழ்ந்த, வளர்ந்த முறையோடு ஒப்பிட்டுக் குற்றவுணர்வுடன் குழந்தைகளை வளர்ப்பதும், வெளிநாட்டில் வாழும் நம்மவர்களுக்கே உள்ள பிரச்சனை. அதை அழகானக் கதையாக்கிட்டீங்க. மனம் தொட்ட கதை புவனா.

vinu said...

sweet....

கோவை2தில்லி said...

கதை நல்லா இருக்குங்க....இன்றைய வாழ்கையின் நிதர்சனம்...

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - நன்றிங்க சீதா...;)

@ பதிவுலகில் பாபு - நன்றிங்க பாபு...

@ Lakshmi -தேங்க்ஸ் லக்ஷ்மி'ம்மா

@ Anonymous - Many thanks Nanditha for sharing that video. It is real inspiring and I was searching for more for her speeches. Thanks again for stopping by my blog

@ எல் கே - Thanks for your feedback Karthi...I left it like that for readers judjement, some left unsaid for better...;)

@ Mathi - Thanks Mathi, why upset though?

@ middleclassmadhavi - Thanks Madhavi

@ siva sankar - Many thanks Siva

@ BalajiVenkat - Thanks Balaji, I left it like that for readers judgement. Sometimes, it will spoil the feel by saying too much... thanks for your compliment...:)

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கா, இது போல் நிறைய எழுத முயற்சிக்கிறேன்...;)

அப்பாவி தங்கமணி said...

@ வல்லிசிம்ஹன் - இப்படி ஒரு வழி இருக்கா வல்லிம்மா... ஹா ஹா... :)))

@ ஹுஸைனம்மா - :))))

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ Sreeja Anand - தேங்க்ஸ் ஸ்ரீஜா, உங்க கமெண்ட் பாத்ததும் எனக்கு அதான் தோணுச்சு... How is Sreenand?

@ RAMVI - முடிவு அவரவர் கையில் அவரவர் நிலையை பொறுத்து இருக்குனு நினைக்கறேங்க, அதான் முடிவை அழுத்தமில்லாம சொன்னேன்...நன்றி...;)

@ மதுமதி - ரெம்ப நன்றிங்க

@ RVS - நன்றிங்க RVS ...;)

@ கீதமஞ்சரி - ரெம்ப நன்றிங்க கீதா...

@ vinu - தேங்க்ஸ்...:)

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி...:)

Kriishvp said...

//"மம்மி எலிபன்ட் டாடி எலிபன்ட் எல்லாம் ஆபீஸ் போய்ட்டா பாவம் பேபி எலிபன்ட் டே-கேர் போகனுமில்ல... அதை நாம வாங்கினா நான் வீட்ல இருந்து மம்மு குடுத்து ஜோ ஜோ பாடி அதை தூங்கு வெச்சு பாத்துப்பேன்ல மம்மி" என கை, கால், கண்கள் என மொத்தமும் பேச ப்ரியா அபிநயத்துடன் கூற, கவிதாவின் கண்ணில் சட்டென நீர் நிறைந்தது //

Now a Days lot of kids are in the same position as Priya in this story, what to do as you have mentioned in the story few lines below

//"கவி, ஐ.டி பீல்ட்ல நாம விலகினா அந்த இடத்தை பிடிக்க ஆயிரம் பேர் இருக்காங்க.. அது மட்டுமில்ல, பிரேக் எடுத்தா நீ இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு உருவாக்கின கரியர் போய்டும். லெட்ஸ் பி பிரக்டிகல் கண்ணம்மா, டோண்ட் கெட் எமோசனல்" என சமாதானம் செய்தான் //

It depends on Individuals

but today the Kids miss the Childhood experience we had that is true.

Nice Story Sister :)

Sri Seethalakshmi said...

கதை மிக அருமை... நெஞ்சத்து உணர்வுகளை மிக அழகாய் எழுதி இருகிறீர்கள்...

ஒரு சின்ன வேதனை...

எல்லாரும் career நு எல்லாரும் எதை நினைகிறங்கனு எனக்கு தெரியல. ஒரு சரியான சந்ததிய வழிகாட்டி / நெறிமுறை படித்தி வளர்ப்பதும் நம்முடைய கடமை. ஆனா எல்லாரும் அத மறந்துடங்க, அதனாலதான் மாணவன் ஆசிரியை கொலபனுரங்க, etc,.

அதுக்காக நான் லேடீஸ் வேளைக்கு போறது தப்புன்னு சொல்லல. கொஞ்சகாலம் (2 +, 3 +, ) வரைக்கும் கொழந்தைகளோட அடிப்படை வளர்சில அக்கறை காட்டனும். அதுல அவங்க வீட்டு ரங்கமணிகளும் கொஞ்சம் உதவனும்.

First எத்தன ரங்கமணிங்க paternity லீவ் எடுக்குறாங்க? (if available), அப்போ கூட எதாவது conf கால் இருந்த ஜம்பம சொல்லுகுவங்க, actually I'm on leave, but then I'll attend the call, no issue நு.

எங்க colleague (GEN ) ஒரு US சிடிசன், அவரோட wife கு 2nd baby டெலிவரி ஆகும்போது கூட அவரு 30 days loss of pay ல இருந்தாரு, இதுல என்ன ஆச்சரியம்ன, அவரு company யோட போட்ட deal லே "work from home option ". அதுலயே மனுஷன் லீவ் போட்டு இருகாரு.

வெஸ்டன் ஸ்டைல் ல பாத்து எதை எதையோ கத்துகறோம், கொஞ்சம் இதையும் கத்துக்கணும்னு நான் நினைக்கிறன்.

கொஞ்சம் personal life கும் நேரம் ஒதுக்கணும். கொழந்தைங்களோட செலவு பண்றத நேரத்த பணம் வச்சு ஈடு செய்ய கூடாது.

En Samaiyal said...

அருமையான கதை புவனா. இப்போ வெளி நாட்டில் மட்டும் இல்லே ஊருலயும் இந்த கதை ரொம்ப பொருந்தும்.


பணம் பணம் ன்னு தேடி ஓடிட்டு குழந்தைகள் எதிர்பார்க்கும் அரவணைப்பு கொடுக்க தவறுவதால்தான் அவங்களும் பெரியவங்க ஆனதுக்கு அப்புறம் பெத்தவங்கள ஓல்ட் ஏஜ் ஹோம் இல் யோசிக்காம சேர்த்து விட்டுறாங்க.

அப்பாவி தங்கமணி said...

@ Kriishvp - ரெம்ப நன்றிங்க... எனக்கும் அதான் தோணுச்சு


@ Sri Seethalakshmi - ரெம்ப அழகா சொன்னீங்க... தேங்க்ஸ்'ங்க சீதா...


@ En Samaiyal - நன்றிங்க... நெறைய பேரோட கருத்தும் இதான்னு நினைக்கிறேன்...

schmetterlingwords said...

Romba azhagaana kadhai... I agree with Sri Seethalakshmi's comments... Nowadays, people from the west are learning 'the culture of a family' from the east. But, we are learning the culture of day care from the west. Sad situation...

In my opinion, balancing the career and family alike is the main challenge faced by the women of today. The one who handles this challenge gracefully is actually 'the pudhumai pen' Bharathi dreamed of... Don't you agree Appaavi?? :)

அப்பாவி தங்கமணி said...

@ schmetterlingwords - Very well said. I agree with you. Thank you...:)

priya.r said...

"ரெண்டு வயசுக்கு பேச்சு கொஞ்சம் ஓவராதான் இருக்கு" என ப்ரியா சிரிப்புடன் கூற //

ஹய்யோ ஆண்டி ! இது எங்க மம்மி சொன்ன டயலாக் :))

இப்படிக்கு
ப்ரியா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - சென்னை காத்து திருப்பூர் பக்கமும் வீசுது போல இருக்கு... படிக்கற flowல யாரும் கண்டுபுடிக்கலையா இல்ல யாருமே படிக்கலையா என்பது தான் இப்ப என்னோட கவலை... ஹா ஹா... தேங்க்ஸ் ப்ரியாக்கா... கரெக்ட் பண்ணிடறேன்...:)

priya.r said...

சென்னை சூறாவளி
திருப்பூர் தென்றல்
ஆனால் டொராண்டோ வோ இரண்டும் கலந்த கலவை :))))
but
உன்னோட நேர்மை நேக்கு பிடிச்சுருக்கு புவனி :)))))))

priya.r said...

Sri Seethalakshmi said...
hey hey நான் தான் first :)//
வடை சீதாவின் கைக்கு கிடைத்த "மகி" மை (ரகசியம்)என்னவோ :))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ha ha .... thanks priya'kka...:) secret secret'aathaan irukkanum u c...;)))

Post a Comment