Friday, February 24, 2012

சுயம்... (சிறுகதை)


வீட்டுக்குள் நுழையும் போதே அங்கிருந்த அதீத அமைதி வாசுவுக்கு ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தியது

தங்கள் அறையில் புத்தக குவியல்களின் மத்தியில் சரிந்து அப்படியே தூங்கி இருந்த மனைவியை பார்த்தவனுக்கு மெல்லிய புன்னகை அரும்பியது

அம்மாவிடம் கோபித்து கொண்டு சுருண்டு படுத்திருக்கும் பிள்ளை போன்ற அவளின் தோற்றம் அப்படியே அள்ளி கொள்ள சொல்லியது. ஆனால் தூங்குபவளை எழுப்ப மனமின்றி மௌனமாய் வெளியேறினான்

சிறிது நேரத்திற்கு பின், "தூங்கினா எழுப்ப மாட்டீங்களா? தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்துப்பீங்க இல்ல" என்ற அவளின் குற்றம் சாட்டும் குரல் கேட்டு கணினியில் இருந்து பார்வையை திருப்பியவன், அருகில் வா என செய்கை செய்தான்

"ஏன்? அத வாய தெறந்து சொன்னா முத்து உதுந்துடுமா?" என்றாள் எரிச்சலுடன்

"என்ன? இன்னிக்கி சண்டை போடற மூட்ல இருக்கியா?" என வாசு சிரித்து கொண்டே கேட்க

"ஆமா, என்னை பாத்தா எல்லாருக்கும் இளக்காரம் தான்" எனும் முன் கண்ணில் நீர் துளிர்க்க, ராதிகா மீண்டும் அறைக்குள் திரும்பி சென்றாள்

அதற்கு மேல் அமர்ந்திருக்க மனமின்றி எழுந்து உள்ளே சென்றவன், முழந்தாலிட்டு அமர்ந்து அதில் முகத்தை புதைத்து இருந்தவளை ஆதரவாய் அணைத்தபடி அருகில் அமர்ந்தான். அவன் ஸ்பரிசம்பட்டதும் கோபம் அதிகமாக அவனை விலக்கினாள்

"என்ன ராதிம்மா? என்ன கோபம் இப்போ?"

"...."

"ராதி... இங்க பாரு.. எதுவானாலும் மனசுவிட்டு சொல்லு, இப்படி நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் பண்ணினா என்ன பண்றது?" என்றான் தன்னை வருத்தி கொள்கிறாளே என்ற கோபத்துடன்

"ஆமா, என்னால யாருக்கும் நிம்மதி இல்ல, பிரச்சன தான்" என விசும்பலுடன் கூற

"ஏய்... யாரு அப்படி சொன்னது. அதெல்லாம் இல்லடா. அவுட் வித் இட், என்னனு சொல்லு ராதிம்மா"

"நான் சொன்னா நீங்க கிண்டல் தான் பண்ணுவீங்க. லீவ் மீ அலோன்"

"என்னடா இது, நீ இப்படி டென்சனா இருக்கும் போது கிண்டல் பண்ணுவேனா, சொல்லு" மெல்ல அவள் கையை எடுத்து தன் கைக்குள் புதைத்தவாறே கேட்டான்

அந்த செய்கை அவளை நெகிழ செய்ய, மெல்ல அவன் தோளில் சாய்ந்தவள் "எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கல. யாரையும் நம்ப முடியல. எல்லாரும் வேஷம் போடறாங்களோனு தோணுது. ஏம்ப்பா இப்படி?"

"யாரை பத்தி பேசறேன்னு புரிஞ்சாதானே என்னோட ஒபினியன் சொல்ல முடியும் ராதி"

"எல்லாருமே... என் கூட பேசற பழகற எல்லாருமே. தேவைனா பேசறாங்க, தேவை தீந்தா யாரோ மாதிரி நடந்துக்கறாங்க. இப்பகூட அப்படிதான். என் கூட வேலை செய்யற அனிதா உங்களுக்கு தெரியும் தானே. ஆரம்பத்துல நான் எல்லார்கிட்ட மாதிரி தான் அவகிட்டயும் இருந்தேன். அவளே வந்து இழுத்து வெச்சு பேசினா, ரெம்ப க்ளோசா பழகினா. சரின்னு நானும் அதே போல பழக ஆரம்பிச்சேன். இப்ப திடீர்னு அவ எனக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லாத மாதிரி நடந்துக்கறா. ஏன் இப்படி?"

"இதுக்கு ஏன் நீ டென்சன் ஆகற? அவளுக்கு நீ தேவை இல்லைனா உனக்கும் அவ தேவை இல்லைனு போக வேண்டியது தானே"

"அதெப்படிங்க அப்படி சட்டு சட்டுன்னு மனச மாத்திக்க முடியும்"

"பின்ன, நீ என் பிரெண்டா தான் இருக்கணும்னு போராட்டம் நடத்த போறியா...லூசு..." என சிரித்து கொண்டே செல்லமாய் அவள் தலையில் கொட்ட

"இதான்... இதான் சொன்னேன், கிண்டல் பண்ணுவீங்கனு.. ச்சே... விடுங்க" என ராதிகா விலக

"ஏய்... இதான் நீ என்னை புரிஞ்சுக்கற லட்சணமா? நான் என்ன சொல்ல வரேன்னா, உன்னை வேண்டாம்னு ஒருத்தங்க விலக்கினா அது அவங்களுக்கு தான் லாஸ்னு அவங்களுக்கு புரியலைன்னு அர்த்தம்"

"இவ மட்டும் இல்ல, நெறைய பேர் இப்படி தான். நல்லா பேசினா உடனே நம்மள சீப்பா பாக்கறாங்க. நல்லா பேசி பழகரதுல என்னங்க தப்பு. அப்ப பந்தாவா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தா ரெம்ப புத்திசாலினு அர்த்தமா? நானும் அப்ப எல்லாரோடவும் அளவா வெச்சுக்கணுமா?"

"அப்படி இல்லடா, சிலரோட மென்டாலிட்டி அப்படி. மத்தவங்களுக்காக உன்னோட நேச்சரை நீ ஏன் மாத்திக்கணும்னு நினைக்கற?"

"வேற என்னங்க செய்யறது. சும்மா இருந்தாலும் இழுத்து வெச்சு பேசிட்டு அதுக்கு நான் சொல்ற பதிலை மத்தவங்ககிட்ட போய் விமர்சனம் பண்றாங்க. எரிச்சலா இருக்கு"

"ஜஸ்ட் இக்னோர் தம்"

"அப்படி இருக்க முடியலங்க. அவங்க சுயநலத்துக்காக என்னை கேலி பொருள் ஆக்கறாங்கனு தோணுது. ஒருவேள என்கிட்ட தான் ஏதோ தப்போனு தோணுதுப்பா" என்றாள் பாவமாய்

"என்ன ராதி நீ, எவ்ளோ கான்பிடென்டா இருப்பே, இப்ப இப்படி பேசறியே. உன்னோட திறமை / கெபாசிட்டி என்னனு உனக்கு தெரியாதா? ஆபீஸ்ல பெஸ்ட்னு பேர் வாங்கி இருக்க, அழகா பேசற, ரசனையா சமைக்கற, சமயத்துல டைம் மேனேஜ் பண்றதை நான் உன்ன பாத்து தான் கத்துக்கறேன். யாருக்கு என்ன பிரச்சனைனாலும் முதல் ஆளா போய் ஆறுதல் சொல்ற, எந்த விஷயம்னாலும் மணிக்கணக்குல விவாதிக்க தெரியும் உனக்கு. எல்லாத்துக்கும் மேல அட்டகாசமா வரையற. பெரிய ஆர்டிஸ்ட் ஆகணும்னு லட்சியம் எல்லாம் வெச்சிருக்க. இப்படி பேசினா எப்படி?" என்றான் கோபமாய், தன்னை தானே தாழ்த்தி கொள்கிறாளே என்ற வருத்தத்தில்

"ஆமா, Jack of all master of none" என்றாள் சலிப்பாய்

"அப்படி இல்ல ராதி, சில சமயத்துல எனக்கே உன்னை பாத்தா பொறாமையா இருக்கும்"

"சும்மா சமாதானம் பண்ணனும்னு சொல்றீங்க" என்றாள் நம்பாத குரலில்

"அப்ப என் மேல நம்பிக்கை இல்லையா?"

"அதில்லைங்க...."

"நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திகிட்டே இருந்தா உன்னோட சுயம் காணாம போய்டும் ராதி. ஒரு அளவுக்கு தான் ஊரோட ஒத்து வாழ முடியும். அதுவும் இப்படி பச்சோந்திதனமா இருக்கரவங்களுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டிய அவசியமே இல்ல. இவங்கள பத்தி யோசிச்சு டென்சன் ஆகி நேரத்தை வீணடிக்கரத விட, அந்த நேரத்துல உனக்கு பிடிச்ச ஆர்ட்  வேலையை செய். 10000 hours of practice makes a geniusனு ஒரு saying இருக்கு தெரியுமா. அதாவது, நாம எதுல பெஸ்ட்னு நமக்கு நம்பிக்கை இருக்கோ, அதுல பத்தாயிரம் மணி நேரம் முழுசா செலவழிச்சா நிச்சியம் அதுக்குள்ள சாதிச்சு இருப்போம்னு அர்த்தம். இப்படி productive thinking இருக்கறவன் சாதிக்கறான், அதே மத்தவங்க விமர்சனங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறவன் முன்னேறாமையே போயிடறான். இதான் வித்தியாசம். புரியுதா?" என சிறு பிள்ளைக்கு சொல்வது போல் பொறுமையாய் கூறினான் வாசு

"...." அவள் ஒன்றும் பேசாமல் மௌனமாய் யோசனையில் மூழ்கினாள். யோசிக்கட்டும் என நினைத்தவன் போல் அவ்விடத்தை விட்டு அகன்றான்

சிறிது நேரத்தில் அவனருகே வந்து அமர்ந்து சலுகையாய் தோளில் சாய்ந்து கொள்ள, அவனும் மௌனமாய் அணைத்து கொண்டான்

"நீங்க சொன்னது ரெம்ப கரெக்ட்" என்றவளின் குரலில் டிவியில் இருந்து பார்வையை விலக்கியவன்

"ஆஹா... இன்னைக்கி மழை வரும், அதிசயமா நான் சொன்னது கரெக்ட்னு சொல்லிட்ட" என அவன் கேலியாய் கூற

"ப்ச்..." என பொய்யாய் சலித்தவள் "இனிமே தேவை இல்லாம டென்ஷன் ஆகறத விட்டுட்டு productiveஆ யோசிக்க போறேன்னு சொல்ல வந்தேன்" என்றாள் தன்னம்பிக்கையுடன்

"தட்ஸ் குட்... ஐ நோ யு ஆர் ஸ்மார்ட்" என பெருமையுடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்

"தேங்க்ஸ்" என சிரித்தாள்

"அப்புறம் ராதி, நான் இன்னொன்னு கூட சொன்னனே... அதுவும் கரெக்ட் தானே?" என அவன் கேட்க

"என்ன?" என்றாள் புரியாமல்

"உனக்கென்ன செலக்டிவ் அம்னீசியாவா? அதாம்மா, நீ லூசுனு சொன்னனே, அதுவும் கரெக்ட் தானே?" என குறும்பாய் சிரித்தபடி அவன் கேட்க

"உங்கள..." என பொய் கோபத்துடன் டிவி ரிமோட்டை அவனிடமிருந்து பறித்து வலிக்காமல் அடித்தாள்

"ஏய் ஏய்... கவுன்சலிங் பண்ணினதுக்கு இதான் பீஸா...ரெம்ப அநியாயம்"

"ஆஹா, இவர் பெரிய டாக்டர், கவுன்சலிங்காம்... நெனப்பு தான்" பெருமிதமான பார்வையை அவன் மீது செலுத்தியபடியே பழித்தாள்

அதை ரசித்தவன் "என்னமோப்பா, பெரிய ஆளானப்புறம் இதையெல்லாம் மறக்காம இருந்தா சரி தான்" என அவன் பாவமாய் கூற

எதையும் மறக்க மாட்டேன் என செய்கையால் கூறுவது போல் ஒன்றும் பேசாமல் அவன் அணைப்பில் தன்னை இணைத்து கொண்டாள் ராதிகா

வார்த்தைகளின் அவசியமற்ற அந்த புரிதலில் காதலுடன் அவளை அணைத்து கொண்டான் வாசு

(முற்றும்)

45 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

நல்ல கதை புவனா! :)

schmetterlingwords said...

Arumaiyaana kutti kadhai... Nammil pala per 'Suyam' enbadharku avvalavu mukkiyathuvam kudupadhu illai... Thalaikanam illaadha thannambikkaiyai valarkum Suyam ellorukkum avasiyame... Idhai azhagaana muraiyil ungal kadhaiyil solli irukireergal... vaazhthukkal :)

அப்பாதுரை said...

புது பரிமாணம். நல்லா இருக்குங்க.

கீதா சாம்பசிவம் said...

என்னோட இருந்துட்டு எழுதினாப்போல் இருக்கே! இம்மாதிரி அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கு; ஏற்படுகிறது; ஏற்படலாம். முதல்லே கஷ்டமாத் தான் இருந்தது. அப்புறமா அவங்களுக்கு என்ன பிரச்னையோனு நினைக்கத் தொடங்கிட்டேன். அதுக்கப்புறமா அவங்களாவே வந்து சகஜமாப் பேசினா நாமளும் சகஜமாவே பழகணும். அவங்க பிரச்னையைச் சொல்ல வேண்டாம்னு ஒதுங்கி இருந்திருக்கலாம் இல்லையா?

எல்லா நேரமும், எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்காதே! நமக்கே ஒருநாள் நல்லா ஆனந்தமாத் தெரியும்; ஒரு நாள் டல்லடிக்கும், அவங்களுக்கு அப்படி டல்லடிக்கிற நாளா இருந்திருக்கும்.

டேக் இட் ஈஸி! :))))))))

பி.கு. கதையில் ராதிகாவுக்குச் சொன்னேனாக்கும். :))))))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

பல விஷயங்களிலும் உங்க கருத்துக்கள் என்னோட ஒத்துப் போனாலும், இந்த இட்லி மட்டும் எப்பூடிஈஈஈஈஈஈஈஈஈஈஈ? :P:P:P

ஸ்ரீராம். said...

இது போல அனுபவங்கள் நிறைய பேருக்கு ஏற்படும் என்று நினைக்கிறேன். ஆனால் இது மாதிரி ஆதர்சத் தம்பதிகள் உங்கள் கதையில் மட்டும்தான் சத்தியம்! :))

கீதா சாம்பசிவம் said...

@Sriram, சத்தியம் அல்லது சாத்தியம்??? :))))

ஆனால் ஒண்ணு இதே போல் நிறையத் தரம் என் கணவரிடமிருந்து எனக்கு அட்வைஸ் கிடைச்சிருக்கு. நானும் இப்படித்தான் குழம்புவேன். அவர் தான் சொல்லுவார்; அவங்க அவங்களுக்குச் சொந்தப் பிரச்னைகள் ஆயிரம் இருக்கும்; பகிர்ந்துக்க முடியாமல் இருக்கலாம். ஒரு ரெண்டு நாள் விட்டுப் பிடி; தானே வந்து பேசுவாங்கனு சொல்லுவார். அப்படித் தான் நடக்கும்.

எல் கே said...

என்ன புவனி கதை நெறைய ஸ்டாக் இருக்கும் போல... நல்ல கதை..,.

ஸ்ரீராம்

நிஜத்திலும் இருக்காங்க

@கீதா

இந்த மாதிரி நானும் பீல் பண்ணி இருக்கேன். ஆனால் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஒரு ரெண்டு நாள் சரி ஆகிடும்

கீதா சாம்பசிவம் said...

இந்த மாதிரி நானும் பீல் பண்ணி இருக்கேன். ஆனால் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஒரு ரெண்டு நாள் சரி ஆகிடும்//

நம்ம மறுபாதி கிட்டேச் சொல்லலைனா எப்படி?? எனக்குத் தலையே வெடிச்சுடும். :))))))))

ஸ்ரீராம். said...

கீதா மாமி....சாத்தியம் என்பதே சரி....! :)))

எல் கே... நான் சொல்ல வந்தது தோளில் முகம் புதைப்பது, உள்ளங்கையில் முகம் ஏந்துவது, இப்படி ரமணீய சந்த்ரகாசத்துடனே இருக்கும் பாவங்களைச் சொன்னேன்! :))))) மற்றபடி அப்பாவியின் கதைகள் என்னையும் பரவசப் படுத்துபவையே....!

மற்றபடி இந்தப் பகிர்தல்கள் கட்டாயம் எல்லா இடத்திலும் இருக்கும், இருக்கணும்...!

கீதா சாம்பசிவம் said...

தோளில் முகம் புதைப்பது, உள்ளங்கையில் முகம் ஏந்துவது, இப்படி ரமணீய சந்த்ரகாசத்துடனே இருக்கும் பாவங்களைச் //

சரிதான், கதாசிரியரின் உரிமையிலே கையை வைக்கறீங்களே! :))))))))

(இதெல்லாம் மட்டும் ஏடிஎம்மின் சொந்த அனுபவங்கள் என்பதை யாரிடமும் சொல்ல மாட்டோம்.)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை அ.த....

இராஜராஜேஸ்வரி said...

10000 hours of practice makes a jeniusனு ஒரு saying இருக்கு தெரியுமா.

அருமையான பகிர்தலும் புரிதலும்.. நிறைவான சிறுகதைக்குப் பாராட்டுக்கள்..

middleclassmadhavi said...

Etho rombath therinja character mathiri irukku!!

Vasudevan Tirumurti said...

Urban Dictionary: jenius
www.urbandictionary.com/define.php?term=jenius
A deliberate misspelling of genius, used ironically to describe someone or something moronic.

viswam said...

"நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திகிட்டே இருந்தா உன்னோட சுயம் காணாம போய்டும் ராதி. ஒரு அளவுக்கு தான் ஊரோட ஒத்து வாழ முடியும். அதுவும் இப்படி பச்சோந்திதனமா இருக்கரவங்களுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டிய அவசியமே இல்ல. இவங்கள பத்தி யோசிச்சு டென்சன் ஆகி நேரத்தை வீணடிக்கரத விட, அந்த நேரத்துல உனக்கு பிடிச்ச ஆர்ட் வேலையை செய். 10000 hours of practice makes a geniusனு ஒரு saying இருக்கு தெரியுமா. அதாவது, நாம எதுல பெஸ்ட்னு நமக்கு நம்பிக்கை இருக்கோ, அதுல பத்தாயிரம் மணி நேரம் முழுசா செலவழிச்சா நிச்சியம் அதுக்குள்ள சாதிச்சு இருப்போம்னு அர்த்தம். இப்படி productive thinking இருக்கறவன் சாதிக்கறான், அதே மத்தவங்க விமர்சனங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறவன் முன்னேறாமையே போயிடறான். இதான் வித்தியாசம். புரியுதா?" என சிறு பிள்ளைக்கு சொல்வது போல் பொறுமையாய் கூறினான் வாசு "

அருமையான தன்னம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகள். தினமும் ஒரு முறை படித்து நாளை தொடங்கினாலே சாதிக்கலாம். நன்றி. வாழ்த்துக்கள்.

arul said...

nice story with a moral

முகில் said...

ராதிகா ஆரம்பத்தில பேசறது ரொம்பவுமே மனசை தொட்டிடுச்சு. அவங்க உள்ளே இருக்கிற கோபத்தை கணவனிடம் வெளிப்படுத்திற விதத்தை அப்படியே எழுதியிருக்கீங்க. அதே போல வாசு பொறுமையாக சொன்னதைக் கேட்டு மனம் தேறி திரும்ப வந்து ராதிகா பேசுவதும் ரொம்ப தத்ரூபமா இருக்கு. நன்றி.

RAMVI said...

//"நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திகிட்டே இருந்தா உன்னோட சுயம் காணாம போய்டும் ராதி. ஒரு அளவுக்கு தான் ஊரோட ஒத்து வாழ முடியும். அதுவும் இப்படி பச்சோந்திதனமா இருக்கரவங்களுக்காக நீ உன்னை வருத்திக்க வேண்டிய அவசியமே இல்ல. //

மிகச் சிறப்பான கருத்து புவனா.
கதை அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

ஒவ்வொரு தடவை வந்தாலும் கமெண்ட் போட முடியல..ஏதாவது சூனியம் செஞ்சி வச்சிருக்கீங்களா..?? என்னைய உள்ளே விடவே மாட்டேங்குதே அவ்வ்வ்வ்வ் :-)))

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் !

ஜெய்லானி said...

ஆஹா...அசத்தலான கதையா இருக்கே :-)) அப்பாவி கிட்டே இதுமாதிரி கதையெல்லாம் இருக்கே கிரேட் :-)))

Kriishvp said...

//10000 hours of practice makes a geniusனு ஒரு saying இருக்கு தெரியுமா. அதாவது, நாம எதுல பெஸ்ட்னு நமக்கு நம்பிக்கை இருக்கோ, அதுல பத்தாயிரம் மணி நேரம் முழுசா செலவழிச்சா நிச்சியம் அதுக்குள்ள சாதிச்சு இருப்போம்னு அர்த்தம்//

Very Much Motivating Lines, Nice Story Keep It Up :)

கோவை2தில்லி said...

கதை ரொம்ப நல்லா வந்திருக்குங்க...பாராட்டுகள்.

மதுமதி said...

சிறுகதை இன்னும் வாசிக்கவில்லை..வாசித்து விடுகிறேன்..தங்களுக்கு விருது ஒன்று காத்திருக்கிறது.தளத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தங்களை அன்போடு அழைக்கிறேன்.

manazeer masoon said...

10000 hours of practice makes a jeniusனு ஒரு saying இருக்கு தெரியுமா.

nice

அன்னு said...

enakkennamo intha maathiri kathaigal eluthi antha link-aiyum unga rangs, athaavathu mr.appavvikku anuppi, intha maathiri ellaam ennai nadaththanumnu neenga solra maathiri thonuthu..... yaaraavathu kettu sollungappa.... paavam appuraaniyaa irukkaar.... ;)

வெட்டிப்பையன்...! said...

//..ஒரு ஒருத்தருக்காகவும் நீ உன்னை மாத்திகிட்டே இருந்தா உன்னோட சுயம் காணாம போய்டும்...//
நூத்துலஒரு வார்த்த நச்சுனு சொன்னீங்க ...! சுயம் இருகிறதுனால தான் நான் வெட்டிப்பையன், நீங்க அப்பாவி தங்கமணி , அப்புறம் மத்தவங்களும். இல்லன எல்லோரும் ஒரே மாதிரி இருப்பாங்களே ...!

Esther sabi said...

அசத்திட்டீங்க போங்க ....
ராதிகா வாசு ஒத்துமையா போய்ட்டாங்களே அவ்வளவுமே காணும்............

priya.r said...

ஒரு வேளை இப்படி இருக்குமோ !

அப்பாவியிடம் கற்று கொண்ட இட்லி ரெசிப் ஐ முதல்முதலாக

செய்து பார்த்த ராதிகா தனது தோழியான அனிதாவிடம் சாப்பிட கொடுக்க

அதை சாப்பிட்ட பின்னர் அனிதாவுக்கு ஏற்பட்ட மயக்கம் தான் மாற்றத்திற்கு காரணமோ ன்னு

தான் எழுத நினைத்தேன் அப்பாவி !

இருந்தாலும் ராதிகா கதாபாத்திரமும் அவள் தெரிவித்த கருத்துக்களும் நானும் ராதிகா போன்றவள் தானோ

என்று என்ன வைக்கிறதே !

அதுவும் உரையாடல் வாயிலாக நிகழ்வுகளை சொல்ல வைக்கும் இந்த டெக்னிக் நன்றாக இருக்கிறது புவனி !

குணசேகரன்... said...

யதார்த்தமான கதை. இதுதான் நிஜம்

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி...:)

@ schmetterlingwords - //"தலைகனமில்லாத தன்னம்பிக்கையை வளர்க்கும் சுயம்"// வாவ், அட்டகாசமா சொன்னீங்க. எனக்கு தோணாம போச்சே, தோணி இருந்தா கதைல incorporate பண்ணி இருப்பேன்..:) நன்றிங்க

@ அப்பாதுரை - நன்றிங்க சார்...

@ கீதா சாம்பசிவம் - ஹா ஹா... உங்களோட இருந்து எழுதினாப்ல இருக்கா... கிரேட் வுமன் தின்க் அலைக்னு சொல்லிக்கலாம் மாமி...;) அடவம்பே இதையும் சொந்த கதைன்னு சொல்றீங்களா? அவ்வ்வ்வவ்... ஒருத்தி இங்க மாஞ்சு மாஞ்சு கற்பனை பண்ணி கதை எழுதினா எனக்கு அந்த கிரெடிட் கிடைக்கறதே இல்ல... அநியாயம் இது...:) தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை "இட்லி", அதனால தான் நமக்கு அதுல மட்டும் ஒத்து போகலைனு நினைக்கிறேன் மாமி...:) அங்கிள் சொன்ன அட்வைஸ் கூட சூப்பர்...:)

@ ஸ்ரீராம். - நீங்களாச்சும் கதைனு ஒத்துகிட்டீங்களே... நன்றிங்க...:) ஆனால் நிஜத்திலும் உண்டுங்க..:)

@ எல் கே - அப்ப அப்போ கதை ஓவர் ஸ்டாக் ஆகும்... சில சமயம் ஒண்ணும் இருக்காது கார்த்தி..;) நீயுமா? அது சரி...;)

@ கீதா சாம்பசிவம் - //நம்ம மறுபாதி கிட்டேச் சொல்லலைனா எப்படி?? எனக்குத் தலையே வெடிச்சுடும்// - ரெம்ப சரி, இதுல நான் உங்க கட்சி தான் மாமி...வீட்டுக்குள்ள நாலஞ்சு அஞ்சு நிமிசத்துக்குள்ள எல்லாமும் ஒப்பிக்கலைனா மண்டை வெடிச்சுடும்...:)

@ ஸ்ரீராம். - ஆஹா. இதெல்லாம் அநியாயம், ரமணிச்சந்திரன் ரசிகைகள் நெறைய இருக்கோம் இங்க, கேஸ் போட்டுடுவோம் சார்...;)

@ கீதா சாம்பசிவம் - அதானே, ஏதோ அதை வெச்சு தான் நம்ம பொழப்பே ஓடுது...:) //இதெல்லாம் மட்டும் ஏடிஎம்மின் சொந்த அனுபவங்கள் என்பதை யாரிடமும் சொல்ல மாட்டோம்// ஏன் சொல்ல மாட்டீங்கன்னா அது சொந்த அனுபவம் இல்லை, கரெக்ட் தானே மாமி...:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க..:)

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ middleclassmadhavi - யாருங்க அது? உங்க சொந்தமா?...:) நன்றிங்க

@ Vasudevan Tirumurti - நக்கீரர் என்ற பட்டம் மிஸ்டர் எல்.கே'விடமிருந்து திரு. திவாண்ணா அவர்களுக்கு 50% transfer செய்யப்படுகிறது...:) ஜஸ்ட் கிட்டிங் திவாண்ணா... ரெம்ப தேங்க்ஸ்... it is not deliberate misspelling - typo error... எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரில... இதுக்கும் பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு வாட்டி படிச்சேன்...:) ஐயோ பாவம்னு நீங்க சொல்றது கேக்குது...;)

@ viswam - ரெம்ப நன்றிங்க சார்..:)

@ arul - நன்றிங்க அருள்

@ முகில் - ரெம்ப நன்றிங்க முகில் விரிவான விமர்சனத்துக்கு...:)

@ RAMVI - மிக்க நன்றிங்க ராம்வி...:)

@ ஜெய்லானி - என் ப்ளாக் பக்கம் வராம போனதுக்கு இப்படி ஒரு சாக்கா? அநியாயம் ஐ சே...:) ஏதோ அப்ப அப்ப இப்படி உருப்படியா எழுதறது தாங்க.. இதுல இருந்தே தெரிஞ்சு போச்சு நீங்க அதிகம் இந்த பக்கம் வர்ரதில்லன்னு... ஹா ஹா ஹா... எப்பூடி?...:) துப்பறியும் சிங்கம் அப்பாவி வாழ்கனு நீங்க கோஷம் எல்லாம் போட வேண்டாம், இட்ஸ் ஒகே...;)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க ..:)

@ Kriishvp - ரெம்ப நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி...:)

@ மதுமதி - விருதுக்கு ரெம்ப நன்றிங்க...:)

@ manazeer masoon - நன்றிங்க

@ அன்னு - வொய் திஸ் கொலைவெறி அம்மணி... எனக்கு ஒரியாகார அண்ணனை நெனச்சா தான் பாவமா இருக்கு... எப்படி தான் சமாளிக்கறாரோ...:) அப்படியே நான் அனுப்பி அவர் படிச்சு சொன்ன பேச்சை கேட்டுட்டாலும்....ம்கும்...கிர்ர்ரர்ர்ர்....:)

@ வெட்டிப்பையன்...! - ஹா ஹா... இப்படி ஒரு கோணம் இருக்கா? நன்றிங்க...;)

@ Esther sabi - ரெம்ப நன்றிங்க எஸ்தர்...:)

@ priya.r - ரெம்ப நன்றி அக்கா..:) அப்ப உங்களுக்குள்ளேயும் ஒரு ராதிகா இருக்காங்களா...சூப்பர்...:)

@ குணசேகரன்... - நன்றிங்க..:)

தக்குடு said...

வாசுவோட மன நிலை தான் சரி. அதீதமா நட்பு பாராட்ரவாகிட்ட கொஞ்சம் கவனமாவே இருக்கனும் ஏன்னா அதே அளவு விலகியும்போக வாய்ப்புகள் அதிகம். 'நம்பகிட்ட வந்தா சந்தோஷம்! வரலைன்னா ரொம்ப சந்தோஷம்!' அதுதான் நம்ப பாலிசி! :)

Vasudevan Tirumurti said...

புவனி, இங்கே ஒரு நக்கீரி இருக்காங்க. போனாப்போறதுன்னு விட்டுட்டாங்க போல இருக்கு!

Vasudevan Tirumurti said...

50% தானா? அநியாயமா இல்லே? அவர்தான் வலையுலக சன்னியாசம் வாங்கிட்டாரே!

கீதா சாம்பசிவம் said...

கீறிடுவோம், கீறி!

வா.தி.????? யாராக்கும் அது???

priya.r said...

தோ பாருங்க திவா சார் !

எங்க தலைவியை விமர்சிப்பது இது முதல் தடவை என்பதால் பொறுத்து கொள்கிறோம்

இன்னும் 9999 தடவை தான் பொறுத்து கொள்வோம் என்பதை சங்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் !

இப்படிக்கு

புவனி ,அனாமிகா ,LK , தக்குடு சங்கர் ,பெயர் சொல்ல விரும்பாத ப்ரியா :))

மற்றும் எழுத சொல்லி கொடுத்த கீதா மாமி ..

என்ன மாமி ! நீங்க சொல்ர மாதிரி சரியா எழுதிட்டேனா :))

vinu said...

kalakkal sister

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஆஹா... நல்லா இருக்கே இந்த பாலிசி... எனக்கும் இது கைவந்தா நல்லா இருக்கும்னு தோணுது...:)

@ Vasudevan Tirumurti - நக்கீரி...ஹா ஹா ஹா ஐ லைக் இட் திவாண்ணா...:) சந்நியாசமா? அப்படியா? நோட்டிஸ் ஒண்ணும் வரலியேங்க...:)

@ கீதா சாம்பசிவம் - கீறியா? அப்ப பாம்பு யாரு மாமி? :))

@ priya.r - நான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன் மாமி உங்ககிட்ட, உங்க கொ.ப.செ'வை நம்பாதீங்கனு... இப்ப என்ன சொல்றீங்க?...:) ப்ரியாக்கா, ஐவர் அணி ஒருவர் அணியா மாறினப்புறமும் உங்க ஸ்டைலும் பந்தாவும் கொறயவே இல்ல போங்க...:) #நீலாம்பரி வசனம் ரீமேக்...:)

@ vinu - தேங்க்ஸ் வினு...:)

Thanai thalaivi said...

ஏம்ப்பா நிஜம்மா சொல்லுங்க இந்த ராதிகா கேரக்டர் நீங்க தானே ? ஹி..ஹி..நானும் இப்படித்தான் ஆனால் எங்க தலைவர் ஆறுதல் எல்லாம் சொல்லமாட்டார், நாமளே நம்மள தேத்திக்கிட்டு அடுத்த ஆள் கிட்ட ஏமாற தயாராக வேண்டியது தான். :))))

அப்பாவி தங்கமணி said...

@ Thanai thalaivi - அட ராமா... அதெல்லாம் இல்லீங்'க்கா நம்புங்க நீங்களாச்சும்...:))

Jagannathan said...

கொஞ்ஜம் லேட். இருந்தால் என்ன, என் பின்னூட்டம் இங்கே! கதையோ, கற்பனையோ, அனுபவமோ எதுவானாலும் நீங்கள் எழுதிய கேரக்டர் உள்ளவர்கள் இருப்பது 100 சதவீத உண்மை. நான் Maleகளிலும் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்து நீங்கள் எழுதியிருப்பதுபோலவே ஃபீல் செய்து இருக்கிறேன். தக்குடு எழுதிய பாலிசிதான் கரெக்ட், ஆனால் நீங்கள் பதிலளித்ததுபோல், அது எல்லோருக்கும் சாத்தியமா என்பது சந்தேகம் தான். நான் புழுங்கியிருக்கிறேன் இந்தமாதிரி மனிதர்களைப் பார்த்து. கதை நடையும், காதல் தம்பதிகளின் அன்னியோன்னியமும் ப்ரமாதம். அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள். - ஜெகன்னாதன்.

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - ரெம்ப சரியா சொன்னீங்க சார்... எல்லாருக்கும் சாத்தியம் இல்லை அந்த பாலிசி...:) ரெம்ப நன்றிங்க...

Post a Comment