Friday, March 02, 2012

மொறை பெண்ணும் பெரிய வீடும்... (தங்கமணி ரங்கமணி சீரிஸ்...:))

"என்னங்க"

"சொல்லு தங்கம்" என்றார் ரங்கமணி சோகமாய்

"என்னத்துக்கு இப்ப தேவதாஸ் லுக் குடுக்கறீங்க? நான் எங்கயும் போகலியே"

"ஹ்ம்ம்... போயிட்டாலும்" என ரங்கமணி பெருமூச்சு விட

"என்னது?" தங்கமணி முறைக்க

"நானே சோகத்துல இருக்கேன்... நீ வேற?" என்றார் பாவமாய்

"நான் புதுசா ரெசிபி எதுவும் ட்ரை பண்ண கூட இல்லையே" என தங்கமணி யோசிக்க

"பிரிட்டனி ஸ்பியர்ஸ்க்கு கல்யாணம் ஆக போகுதாம்" என்றார் ரங்கமணி இல்லாத தாடியை நீவியபடி

"அதுக்கேன் என்னமோ உங்க மொறபொண்ணுக்கு பக்கத்து ஊர்க்காரன் பரிசம் போட்ட மாதிரி பீல் பண்றீங்க?"

"என் பீலிங் உனக்கு கிண்டலா இருக்கா?"

"நியாயத்துக்கு நீங்க பேசற பேச்சுக்கு நான் தான் பீல் பண்ணனும். போனா போகட்டும்னு சும்மா இருக்கேன்" என முறைத்தார்

"ஹ்ம்ம்... என்னத்த பீல் பண்ணி என்னத்த..." என என்னத்த கண்ணையா ரேஞ்சுக்கு போய்ட்டார் ரங்கமணி

"சரி விடுங்க... மொத கல்யாணம் 55 மணி நேரம் கூட தாங்கல... அடுத்ததும் ரெண்டு புள்ளைகளோட முடிஞ்சுது. இதாச்சும் நெலச்சு நிக்கணும்னு நெனப்போம்"

"எங்கிருந்தாலும் வாழ்க... வாழ்க... வாழ்க" என ரங்கமணி வாழ்வே மாயம் கமலஹாசன் ரேஞ்சுக்கு பீலிங் சீன் போட ஆரம்பிக்க, தங்கமணியின் சொர்ணாக்கா லுக்கில் கொஞ்சம் அடக்கி வாசித்தார்

***********************************

"தங்கம், இங்க பாரேன். ஜஸ்ட் 22 வயசு பொண்ணு 88 மில்லியன் டாலருக்கு வீடு வாங்கி இருக்காம். நீ 22 வயசுல 88 பைசா கூட பாத்திருக்க மாட்டே" என ரங்கமணி இது தன் சான்ஸ் என பல்ப் கொடுக்க முயல

"நீங்க 22 வயசுல நாலு அரியர் வெச்சுட்டு.... " என தங்கமணி ஆரம்பிக்க, இதற்கு மேல் பேசவிட்டால் வம்பாகிவிடுமென

"சரி சரி விடு. இந்த வீட்டு போட்டோவை பாரேன்" என பேச்சை மாற்றினார்

"6744 சதுர அடி வீடா... " என ஆர்வமாய் பார்த்தாள் தங்கமணி

"அவங்கப்பன் ரஷ்யாவுல பெரிய கோடீஸ்வரனாம். அமெரிக்காவுல படிக்க போன இந்த பொண்ணு அங்க தங்கறதுக்கு இந்த வீட்டை வாங்கி இருக்காம்"

"இம்புட்டு பெரிய வீட்டை வெச்சுகிட்டு இந்த பொண்ணு படிக்குமா இல்ல கூட்டி பெருக்குமா?"

"உன் புத்தி கூட்டி பெருக்கரதுலையே தான் இருக்கு" என சிரித்தார் ரங்கமணி

"ஹும்க்கும்... எதுக்கோ வாக்கபட்டா என்னமோ செஞ்சுதான் ஆகணும்னு சும்மாவா சொன்னாங்க" என தங்கமணி கணவரின் ஸ்டாக்கில் மேலும் ஒரு பல்பை சேர்க்க

"88 மில்லியன் டாலர் குடுத்து வீடு வாங்கறவங்க அதை கூட்டி பெருக்க நம்ம ஊர் முனியம்மா மாதிரி அங்க ஒரு மேரியம்மாவ வேலைக்கு வெச்சுக்கு மாட்டாங்களா என்ன?" தங்கமணி சொன்னதை காதில் வாங்காதவர் போல் தொடர்ந்தார் ரங்கமணி

"ஆனா எனக்கென்னமோ இந்த வீடு புடிக்கலைங்க"

"இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா தங்கம். என்னமோ இந்த வீட்டை உன் பேரு எழுதி வெச்சே தீருவேன்னு அந்த ரஷ்யா ராஜகுமாரி (Ekaterina Rybolovleva) அடம் புடிச்ச மாதிரியும் நீ வேண்டாம் வேண்டாம்னு சொல்ற மாதிரியும் பில்ட் அப் குடுக்குறியே" என ரங்க்ஸ் கேலி செய்ய

"குடுத்தாலும் வேண்டாம்" என்றாள் தங்கமணி

"அது ஏன்னு கொஞ்சம் விம் பார் போட்டு விளக்க முடியுமா தங்கமணி?"

"பின்ன என்னங்க? இந்த 1000 சதுர அடி வீட்லயே சில நேரம் 'எங்க இருக்கீங்க'னு நானும், 'எங்க போய் தொலஞ்ச'னு நீங்களும் மாத்தி மாத்தி அன்பா (!!!) விசாரிச்சுக்கறோம். இந்த அழகுல அத்தன பெரிய வீட்ல இருந்தா ஒருத்தர ஒருத்தர் தேடி புடிக்கவே நாலு நாள் ஆய்டாது. அதான் எனக்கு புடிக்கல" (சீ சீ இந்த பழம் புளிக்கும்...:))

"தேடி புடிக்க நாலு நாளா... ஹ்ம்ம்... எனக்கு இப்பதான் அந்த வீட்டு மேல ஆச ஜாஸ்தி ஆகி இருக்கு" என ரங்கமணி கூற

"ஹும்க்கும்...ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு மாடு மேய்க்கனு ஏதோ பழமொழி தான் ஞாபகம் வருது" என தங்கமணி கவுன்ட்டர் கொடுத்தாள்

"ச்சே... எதை சொன்னாலும் ஒரு பழமொழியை சொல்லி ஆப் பண்ணிடறாளே" என வேறு வழியின்றி தானும் ஆப் ஆனார் ரங்கமணி

(முற்றும்)


சோக குறிப்பு:-

முன்னாடியெல்லாம் ஒரு மேட்டர் வெச்சுட்டு நாலு போஸ்ட் போடுவேன்... யாரு கண்ணுபட்டதோ (!), ரெண்டு மேட்டர் வெச்சும் ஒரு போஸ்ட் அதுவும் சின்ன போஸ்ட் தான் தேத்த முடிஞ்சுது... ஒரு நல்ல ஜோசியர பாத்து ப்ளாக் வாஸ்து எதுனா மாத்தணுமானு கேக்கணும்... ஒகே ஹாப்பி வீக் எண்டு... பை பை எல்லாருக்கும்...;)

30 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

//ஒரு நல்ல ஜோசியர பாத்து ப்ளாக் வாஸ்து எதுனா மாத்தணுமானு கேக்கணும்...///ஒன்னியுமே சொல்றதுக்கில்லை.

சோசியர் கிட்ட தங்கமணி மேல்மாடி காலியாகிருச்சு.அதுக்கு என்ன பரிகாரமுன்னு கேளம்முணி! :)

ம்ம்..சரி,ரெங்கமணிய அப்படியே நியூயார்க் பக்கம் அனுப்பிரவேண்டியதுதான? ;)

vgr said...

hehe..unga soga kuripu sooper

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"பின்ன என்னங்க? இந்த 1000 சதுர அடி வீட்லயே சில நேரம் 'எங்க இருக்கீங்க'னு நானும், 'எங்க போய் தொலஞ்ச'னு நீங்களும் மாத்தி மாத்தி அன்பா (!!!) விசாரிச்சுக்கறோம். இந்த அழகுல அத்தன பெரிய வீட்ல இருந்தா ஒருத்தர ஒருத்தர் தேடி புடிக்கவே நாலு நாள் ஆய்டாது. அதான் எனக்கு புடிக்கல" //

சூப்பர் வரிகள். உண்மையும் அதுவே தான்.

மோ.சி. பாலன் said...

தேடிப் பிடிப்பது மட்டுமல்ல ஓடிப் பிடிப்பதும் சிரமம்தான் !

Esther sabi said...

தங்கமணி நிஜமாவே தேவதாசோ........

கூகிள்சிறி .கொம் said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

வெங்கட் நாகராஜ் said...

அச்சச்சோ கண் பட்டுடுச்சோ..... :(

வாஸ்து ஆளைப் பாருங்க.... அதையும் ஒரு போஸ்டா, சுவையா பகிர உங்களால முடியும் அ.த....

வாழ்த்துகள்... :))

Vasudevan Tirumurti said...

பெரிய வீடுன்னா சின்ன பதிவா போடணுமா என்ன? ஹும்... டாம் அன்ட் ஜெர்ரி சீரியல் மாதிரி ஆயிடுத்து!

arul said...

sirippai adakka mudiyavillai arumayana pathivu

kg gouthaman said...

:-)))))

Asiya Omar said...

வழக்கம் போல் தங்கமணி ரங்கமணி கலாய்ப்பு ஜம்முன்னு தான் இருக்கு.

கோவை2தில்லி said...

தங்கமணி ரங்கமணி சீரிஸ் கலக்கலா இருந்தது....

RAMVI said...

////இந்த 1000 சதுர அடி வீட்லயே சில நேரம் 'எங்க இருக்கீங்க'னு நானும், 'எங்க போய் தொலஞ்ச'னு நீங்களும் மாத்தி மாத்தி அன்பா (!!!) விசாரிச்சுக்கறோம். இந்த அழகுல அத்தன பெரிய வீட்ல இருந்தா ஒருத்தர ஒருத்தர் தேடி புடிக்கவே நாலு நாள் ஆய்டாது. அதான் எனக்கு புடிக்கல" (சீ சீ இந்த பழம் புளிக்கும்.////

ஹா.ஹா.. கல்க்கல்.

அப்பாதுரை said...

very funny

Anuradha Kalyanaraman said...

"இம்புட்டு பெரிய வீட்டை வெச்சுகிட்டு இந்த பொண்ணு படிக்குமா இல்ல கூட்டி பெருக்குமா?"

"உன் புத்தி கூட்டி பெருக்கரதுலையே தான் இருக்கு" என சிரித்தார் ரங்கமணி

Good one. Veetu velaikku aal vechikkadhavanga ellam padara mukiyamana kavalai.

En Samaiyal said...

//நான் புதுசா ரெசிபி எதுவும் ட்ரை பண்ண கூட இல்லையே" என தங்கமணி யோசிக்க //


இருந்தாலும் நீங்க அநியாயத்துக்கு நியாயமா இருக்கீங்க : )) ஒரு நாலு நாள் எங்கேயாச்சும் ரங்கமணிய ஹொலிடே கூட்டிகிட்டு போய் இந்த ஊரு சாப்பாட மட்டும் சாப்பிட வெய்யுங்க அப்புறம் பாருங்க உங்க சமையல் ல ரெங்கமணி க்கு சொர்க்கமே தெரியும் :))

En Samaiyal said...

//சோசியர் கிட்ட தங்கமணி மேல்மாடி காலியாகிருச்சு.அதுக்கு என்ன பரிகாரமுன்னு கேளம்முணி! :)//
:)) :))

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

vinu said...

எழுந்துட்டேன் த்தோ வர்றேன்!

கூகிள்சிறி .கொம் said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

எல் கே said...

வழக்கமான உன் பஞ்ச் மிஸ்ஸிங் :(

priya.r said...

முன்னாடியெல்லாம் ஒரு மேட்டர் வெச்சுட்டு நாலு போஸ்ட் போடுவேன்... யாரு கண்ணுபட்டதோ (!), ரெண்டு மேட்டர் வெச்சும் ஒரு போஸ்ட் அதுவும் சின்ன போஸ்ட் தான் தேத்த முடிஞ்சுது... ஒரு நல்ல ஜோசியர பாத்து ப்ளாக் வாஸ்து எதுனா மாத்தணுமானு கேக்கணும்//

கண்ணு பட்டதோ ,கல்லு பட்டதோ :))

priya.r said...

அப்பாவி ஒரு பரிகாரம் சொல்லவா !
ஆளுக்கு ஒரு பட்டு சாரி எடுத்து கொடுக்கறீங்களா !
மை பாவோரைட் பிரவுன் :)

priya.r said...

அச்சோ! வேணாம் அப்பாவி !

கிடா வெட்ரதேல்லாம் ஓல்ட் பேஷன் :)

priya.r said...

பிடிவாதம் பிடிக்காதே அப்பாவி ...

நாங்க வந்துட்டு போற செலவு மத்த செலவு எல்லாம் கணக்கு போட்டு பாரு!

சாரி ப்ரெசென்ட் தான் சீப் அண்ட் பெஸ்ட் :)

கீதா மாமிக்கு காஞ்சி பட்டு கிரீன் கலர் போதுமாம் :)

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - மேல் மாடியா? அது நம்ம எல்லாருக்கும் காலினு தான் ஊருக்கே தெரியுமே மகி...;) நானா அனுப்ப மாட்டேங்கறேன்... :))

@ vgr - சோக குறிப்பா... ???? அவ்வ்வ்வ்....;)

@ வை.கோபாலகிருஷ்ணன் - ஹா ஹா... நன்றி சார்..:)

@ மோ.சி. பாலன் - அது சரி...:)

@ Esther sabi - தங்கமணி எப்படிங்க தேவதாஸ் ஆக முடியும்...;)

@ கூகிள்சிறி .கொம் - நன்றிங்க..

@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா...நல்ல ஐடியா குடுத்து இருக்கீங்க அண்ணே... அதையும் செஞ்சுடுவோம்...நன்றிங்க...:)

@ Vasudevan Tirumurti - டாம் அண்ட் ஜெர்ரி'க்கு இந்த மேட்டர் தெரிஞ்சா டாக்டர் மேல கேஸ் போட போறாங்க பாருங்க...:)

@ arul - நன்றிங்க...:)

@ kg gouthaman - :)))

அப்பாவி தங்கமணி said...

@ Asiya Omar - நன்றிங்க ஆஸியா...:)

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி...:)

@ RAMVI - தேங்க்ஸ்ங்க...:)

@ அப்பாதுரை - நன்றிங்க சார்...;)

@ Anuradha Kalyanaraman - நல்லா சொன்னீங்க...:)

@ En Samaiyal - நல்ல ஐடியா'வா இருக்கே...ட்ரை பண்ணிடுவோம்...:) என்னா ஒரு வில்லத்தனம்...:)

@ ஸாதிகா - ரெம்ப நன்றிங்க ஸாதிகா...:)

@ vinu - வாங்க புது மாப்பிள்ளை... :)

@ கூகிள்சிறி .கொம் - நன்றிங்க

@ எல் கே - பஞ்ச் ஆர்டர் பண்ணி இருக்கேன் கார்த்தி.... வந்ததும் add பண்ணிடுவோம்..:) ஜஸ்ட் கிட்டிங், நோ வயலன்ஸ் ஒகே...:)

@ priya.r - இது வரைக்கும் கல்லு படலைனாலும் இப்ப நீங்க ஐடியா குடுதுட்டீங்கள்ல...:) பட்டு சாரியா ப்ரியாக்கா? இருங்க பட்டு'கிட்ட கேட்டு சொல்றேன், அவ குடுத்தா கண்டிப்பா உங்களுக்கு தரேன்...:) கிடா வெட்ட போறதில்ல,அதுக்கு பதிலா... சரி வேண்டாம் விடுங்க...;) கீதா மாமிக்கு காஞ்சி பட்டா? காஞ்சில பட்டு'னு ஒருத்தி இருக்காளான்னு விசாரிக்கறேன்...:)

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

அப்பாவி தங்கமணி said...

@ கீதமஞ்சரி - Many thanks Geethamanjari... very well written...:)

Post a Comment