Monday, March 26, 2012

'ஸ்வீட் எடு கொண்டாடு' நேரமிது...:)


'ஸ்வீட் எடு கொண்டாடு' சொல்லும் நேரமிதுனு நினைக்கிறேன். எதுக்குனு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்

வழக்கம் போல கொஞ்சம் மொக்கை போட்டு, கொஞ்சம் சஸ்பென்ஸ் வெச்சு அப்புறம் சொல்லலாம்னு உள்மனசு சொன்னாலும், சரி வேண்டாம் நீங்க பாவம்னு தோணுது. அதனால இப்பவே சொல்லிடறேன்

நேசம் + உடான்ஸ் அமைப்பினர் இணைந்து நடத்தின 'கேன்சர் விழிப்புணர்வு' சிறுகதை போட்டில கலந்துகிட்டு, "ஆசீர்வாதம்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை என் ப்ளாக்ல எழுதினேன். அதை நீங்க படிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன்

அந்த கதைக்கு 'முதல் பரிசு' கிடைச்சுருக்கு. வாய்ப்பளித்த நேசம் அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள். மற்ற பரிசு பெற்ற எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்

பரிசு பற்றிய அறிவுப்புக்கான லிங்க் இதோ - கதை போட்டி முடிவுகள்

கதைக்கான லிங்க் இதோ - ஆசீர்வாதம்... (சிறுகதை)

நேசம் அமைப்பினரின் பணிகள் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

டியர் ப்ளாக் உலக சகோஸ், உங்க எல்லாரோட சப்போர்ட் தான் எனக்கு எழுதறதுக்கான டானிக்னு சும்மா பார்மாலிட்டிக்கு சொல்லலை, உண்மை அது தான்

நான் போடற போஸ்ட்க்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லைனா எழுதற இண்டரெஸ்ட் கம்மி ஆய்டும், I guess thats how any blogger would feel

இன்னும் தெளிவா சொல்லணும்னா (கொழப்பனும்னா) "There is a direct relationship between..." சரி சரி, வேண்டாம் விடுங்க. இன்னைக்கி ஒரு நாள் நீங்களும் ஹாப்பியா இருக்கணும்னு நினைக்கறதால இதோட நிறுத்திக்கறேன்...;) 
 
Jokes apart, special thanks to all of you... 

'என்னமோ, ஆஸ்கர் மேடைல பேசற மாதிரி ஒரு பில்ட்-அப் காட்றியே அப்பாவி'னு நீங்க சொல்றது எனக்கு புரியுது...:)

இருந்தாலும், 'முதல் நட்பு', 'முதல் வீடு', 'முதல் வேலை' இந்த மாதிரி 'முதல்'கள் எப்பவும் நினைவில் நிற்கும். இந்த வரிசையில், ப்ளாக் எழுத வந்தப்புறம் முதன் முறையாய் கிடைத்த இந்த பரிசு கொஞ்சம் ஸ்பெஷல் தானே

கல்லூரி நாட்களுக்கு பின் போட்டி / பரிசு அதெல்லாம் மறந்தே போச்சுனு தான் சொல்லணும். ரெம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்ச இந்த பரிசு, ரெம்ப சந்தோசத்தை தந்திருக்கு

Happiness doubled when shared இல்லையா? So, உங்ககிட்ட ஷேர் பண்ணிகிட்டதுல இந்த மகிழ்ச்சி ரெட்டிப்பு ஆய்டுச்சு

Lately, எழுதறதுல இருந்த சுணக்கம் இனி கொஞ்சம் சரியாகும்னு தோணுது. நன்றி எல்லாருக்கும்

(மைண்ட்வாய்ஸ் : சுணக்கம் சரியாகும்னா, அப்ப இனி நெறைய போஸ்ட் வருமோ... ஹ்ம்ம், நம்ம கவலை நமக்கு. இருந்தாலும், ரெம்ப சந்தோஷம் அப்பாவி. உன் ஸ்டைல்'லையே சொல்லணும்னா, ஜோக்ஸ் அபார்ட் & ஹார்ட்டி கங்க்ராட்ஸ்...:)

என்றும் அன்புடன்,
புவனா (எ) அப்பாவி...:)

60 பேரு சொல்லி இருக்காக:

kg gouthaman said...

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.. ரொம்ப சந்தோசமா இருக்கு புவனா மேடம்.. சிறந்த கதை. உங்க கதை ரொம்ப நல்லாருந்தது.. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.. மேலும் தொடரட்டும் இந்த வெற்றி..

வெங்கட் நாகராஜ் said...

முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் அ.த.

பரிசு பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...

அன்னு said...

//கல்லூரி நாட்களுக்கு பின் போட்டி / பரிசு அதெல்லாம் மறந்தே போச்சுனு தான் சொல்லணும். ரெம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்ச இந்த பரிசு, ரெம்ப சந்தோசத்தை தந்திருக்கு//

itha paarraa... ennamo appa mattum international level-la parisugal vaangittiruntha maathiriyum ippo busy aagitta maathiriyum ennaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa builduppu....

antha mind-voice ai konjam intro seythu vainga... rombavae ubayogamaana friendnnu thounuthu :)

Congrats once again and keep it up... athukkunnu athae pola aluvaachi kathaiyaa mattum eluthaatheenga pl :))

sriram said...

சூப்பர் புவனா, வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பத்மா said...

congrats bhuvana

எல் கே said...

வாழ்த்துகள்!

Lakshmi said...

முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said...

முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!

மிக்க மகிழ்ச்சி

பிரதீபா said...

ஊக்கம், சப்போர்ட், டானிக்ன்னு என்ன வேணும்னாலும் எங்க எல்லார பத்தியும் மைக் புடிங்க.. ஆனா,பரிசுக் காச மட்டும் எங்களுக்கும் தர மறந்துடாதீங்க அக்கோய்.. :)

சுரேகா said...

வாழ்த்துக்கள்....! முதல் பரிசுக்கும்.. அற்புதமான கதைக்கும்..!!

நீங்க திறமைசாலி என்பதை மீண்டும் நிரூபிச்சிருக்கீங்க!!

RVS said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

விஜி said...

வாழ்த்துகள் :))

தெய்வசுகந்தி said...

வாழ்த்துகள் புவனா!!

காற்றில் எந்தன் கீதம் said...

வாழ்த்துகள்அப்பாவி...இன்னும் நிறைய பரிசுகள் கிடைக்க வாழ்த்துகள்.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பாவி.வெற்றி முரசு முழங்கட்டும்.கொண்டாட்டங்கள் தொடரட்டும்.

raji said...

வாழ்த்துக்கள் புவன்ஸ் ! :)

(மைண்ட் வாய்ஸ் : ஏதோ ஷேர் பண்ணிக்கறேன்னாளே
இந்த அப்பாவி.பரிசைத்தான சொன்னா??!! :) )

அப்பாதுரை said...

well deserved. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

ஆமா.. எடு, கொண்டாடுன்றீங்களே.. ஸ்வீட்டும் நாங்களே எடுத்துட்டு வரணுமா?

ஹேமா said...

ரொம்ப இனிக்குது செய்தி.வாழ்த்துகள் தங்கமணி !

கீதமஞ்சரி said...

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கிய கதைகளின் வரிசையில் முதலிடம் பெற்றதற்குப் பாராட்டுகள் புவனா. இனி என்ன? உற்சாகத்துடன் எழுதிக் குவியுங்கள்.

cheena (சீனா) said...

வெற்றி பெற்றமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Geetha Sambasivam said...

ஏடிஎம், ராஜிக்கும், அப்பாதுரைக்கும் தோணின அதே சந்தேகம் எனக்கும். பரிசைப் பகிர்ந்துப்பீங்க தானே? :))))) அது சரி, ஸ்வீட்டை நாங்களே எடுத்துட்டு வரணுமா என்ன?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஸ்ரீராம். said...

சந்தோஷமான வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

இராஜராஜேஸ்வரி said...

Lately, எழுதறதுல இருந்த சுணக்கம் இனி கொஞ்சம் சரியாகும்னு தோணுது.

மகிழ்ச்சியான செய்தி..

இராஜராஜேஸ்வரி said...

முதல் பரிசு பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

ரேவா said...

வெற்றியை தொட்டதற்க்கு வாழ்த்துக்கள் சகோ :)

ஸாதிகா said...

ரொம்ப மகிழ்ச்சி.வாழ்த்துகக்ள்.இது போல் இன்னும் பற்பல பரிசுகள் கிடைக்க வாழ்த்துக்கள்!

தக்குடு said...

ரொம்ப ரொம்ப சந்தோஷம் இட்லி மாமி! இதே மாதிரி மேல மேல முன்னேறி 'சாகித்ய அகாதமி' வரைக்கும் போயிடனும்னு உம்மாச்சியை வேண்டிக்கறேன்.

குறிப்பு - விழா திருப்பூர்ல தான் நடக்குது, அதனால ஐவர் பேரவையோட போர்வாள்(ல்),திருப்பூர் சூறாவலி(ளி) ப்ரியா அக்காவை உங்க சார்பா வாங்க சொல்லி நாங்க சரிசமமா பிரிச்சுக்கறோம் ஓக்கேவா? :)))

arul said...

nice to hear this good work

Jagannathan said...

A deserving recognition! Hearty congrats to you! Udanz has judged the competition very fairly. To be honest, I have not read other stories in the competition, yet I feel that your way of story telling has won it. - R. Jagannathan

ANaND said...

முதல் பரிசுக்கு வாழ்துகள் அக்கா ....

டியர் ப்ளாக் உலக சகோஸ், உங்க எல்லாரோட சப்போர்ட் தான் எனக்கு எழுதறதுக்கான டானிக்னு சும்மா பார்மாலிட்டிக்கு சொல்லலை, உண்மை அது தான்////

அப்படினா 5000 ல நம்ம பங்கு எவ்ளோ வரும் .. ஏலே சின்ராசு எட்றா அந்த காள்குலட்டர்ர

Anuradha Kalyanaraman said...

Congragulations Bhuvana.

DREAMER said...

வணக்கம்,
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... கதையை படித்துவிட்டு கமெண்டுகிறேன்...

-
DREAMER

அஸ்மா said...

ரொம்ப சந்தோஷம், வாழ்த்துக்கள் புவனா!

கோவை2தில்லி said...

மனமார்ந்த வாழ்த்துகள் புவனா. உங்களுக்கு மேன் மேலும் பல விருதுகள் தேடி வரட்டும்.

priya.r said...

ரெம்ப சந்தோஷம், வாழ்த்துக்கள் புவனா!


எப்போ ட்ரிட் ?!

priya.r said...

குறிப்பு - விழா திருப்பூர்ல தான் நடக்குது, அதனால ஐவர் பேரவையோட போர்வாள்(ல்),திருப்பூர் சூறாவலி(ளி) ப்ரியா அக்காவை உங்க சார்பா வாங்க சொல்லி நாங்க சரிசமமா பிரிச்சுக்கறோம் ஓக்கேவா? :)))

அப்பாவியை பத்தி நல்லா தெரிஞ்சி இருந்தும் இப்படி கேட்கறீங்களே :))
அப்பாவி மறந்து போய் அப்படி நினைச்சி இருந்தா கூட இங்கே மழை கொட்டோ கொட்டுன்னு இல்லே கொட்டி கிட்டு இருக்கும் !!

ஒரு வேளை அப்பாவி பரிசு கிடைக்கலைன்னா தேர்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் இட்லி பார்சல் வரும்ன்னு மிரட்டி பரிசு வாங்கி இருப்பாளோ அப்படின்னு பேரவையில் பேசி சிரித்தது எல்லாம் ரகசியமாகவே இருக்கட்டும் :))
ஐவர் பேரவையோட போர்வாள்(ல்),திருப்பூர் சூறாவலி(ளி) ப்ரியா அக்காவை //

அப்பாவி ! தக்குடுவாள் (ல்) அவர்களின் தமிழ் புலமையை பாராட்டி இப்பவே இட்லி பார்சல் அனுப்பவும் :))

விச்சு said...

வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு....வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

Priyaram said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் புவனா...

பத்மநாபன் said...

முதல் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள் தங்கைமணி....

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் புவனா:)!

vgr said...

congratulations !!!!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

முகில் said...

வாழ்த்துக்கள்.

EniyavaiKooral said...

நான் கொஞ்சம் லேட்டா வந்திருக்கேன். வாழ்த்துகள் மேன்மேலும் சிறக்க.

En Samaiyal said...

Well deserved Bhuvana. Congratulations. I remember it was a very touching story

அப்பாவி தங்கமணி said...

@ kg gouthaman - ரெம்ப நன்றிங்க கௌதமன் சார்

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - ரெம்ப நன்றிங்க... உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சார்

@ வெங்கட் நாகராஜ் - மிக்க நன்றிங்க...:)

@ அன்னு - பப்ளிக் பப்ளிக்....;)))) தேங்க்ஸ் அன்னு...:)

@ பாஸ்டன் sriram - ரெம்ப நன்றிங்க ஸ்ரீராம்

@ பத்மா - தேங்க்ஸ் பத்மா'க்கா

@ எல் கே - தேங்க்ஸ் கார்த்தி

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மி'ம்மா

@ Madhavan Srinivasagopalan - ரெம்ப நன்றிங்க

@ பிரதீபா - ஹா ஹா... உனக்கு இல்லாமையா தீபா...:) ஆனா நீ எனக்கு ஒரு ட்ரீட் இன்னும் பாக்கி இருக்கு அது மொதல்ல குடுக்கணும்...டீல்?...:)

அப்பாவி தங்கமணி said...

@ சுரேகா - ரெம்ப நன்றிங்க சார்

@ RVS - தேங்க்ஸ்'ங்க RVS

@ விஜி - தேங்க்ஸ் விஜி'க்கா...:)

@ தெய்வசுகந்தி - மெனி தேங்க்ஸ் சுகந்தி

@ காற்றில் எந்தன் கீதம் - ரெம்ப நன்றிங்க... நிச்சியம் முயற்சி செய்யறேன்...

@ வை.கோபாலகிருஷ்ணன் - மனமார்ந்த நன்றிகள் சார்

@ Asiya Omar - ரெம்ப நன்றிங்க ஆஸியா.. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை

@ raji - தேங்க்ஸ் ராஜி'க்கா... very few people call me 'Bhuvans', feels good to hear it after a while...:) Prize தானே... கண்டிப்பா...:)

@ அப்பாதுரை - Many thanks Sir...:) ஸ்வீட் தானே சார்... செஞ்சே அனுப்பிடறேன்...:)

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ கீதமஞ்சரி - ரெம்ப நன்றிங்க கீதமஞ்சரி...:)

@ cheena (சீனா) - ரெம்ப நன்றிங்க சார்...

@ Geetha Sambasivam - ஹா ஹா... அதுக்கென்ன அனுப்பிட்டா போகுது.... ஸ்வீட்'ட்டும் சேத்து தான் சொன்னேன் மாமி...:)

@ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ ரேவா - ரெம்ப நன்றிங்க சகோ...:)

@ ஸாதிகா - ரெம்ப நன்றிங்க ஸாதிகா

@ தக்குடு - ஆஹா...இதுக்கு நீ என்னை நேராவே திட்டி இருக்கலாம்...;) ஹா ஹா ஹா...பிரிச்சுக்கோங்க...:)

@ arul - நன்றிங்க அருள்

@ Jagannathan - Many thanks Jagannathan sir. I feel honoured. Thanks again

அப்பாவி தங்கமணி said...

@ ANaND - ரெம்ப நன்றிங்க ஆனந்த்... அது சரி, calculator என்ன சொல்லுச்சு... ஜெசி ஜெசி சொல்லுச்சா...;)

@ Anuradha Kalyanaraman - ரெம்ப நன்றிங்க அனுராதா...:)

@ DREAMER - ரெம்ப நன்றிங்க டைரக்டர் சார்...:)

@ அஸ்மா - ரெம்ப நன்றிங்க அஸ்மா...

@ கோவை2தில்லி - ரெம்ப தேங்க்ஸ் ஆதி... மேட் மை டே...:)

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியாக்கா... ட்ரீட் தானே... இதோ ரெடி பண்றேன்...;) ஹா ஹா ஹா... திருப்பூர்னா இப்பவெல்லாம் "கொடி காத்த குமரனுக்கு" பின்ன ப்ரியா அக்கா பேரு கண்டிப்பா ஞாபகம் வருதுங்கோ...:) இட்லி பார்சல் மிரட்டல் நல்ல ஐடியா'வா இருக்கே, இனிமே ட்ரை பண்றேன்...:)

@ விச்சு - நன்றிங்க

@ Avargal Unmaigal - ரெம்ப நன்றிங்க

@ Priyaram - ரெம்ப நன்றிங்க ப்ரியா

@ பத்மநாபன் - தேங்க்ஸ்'ங்க அண்ணா...;)

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க...:)

@ vgr - Many thanks VGR..:)

@ Rathnavel Natarajan - நன்றிங்க

@ முகில் - ரெம்ப நன்றிங்க

@ EniyavaiKooral - மிக்க நன்றி

@ En Samaiyal - Many many thanks...:)

க.பாலாசி said...

நான் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டேன். தங்கள் சார்பில் அப்பா வந்திருந்து பரிசுபெற்றார். பெற்றவர்களுக்கு இதைவிட பெரிய பெருமையை தரமுடியாது என்றே நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டும்...

அப்பாவி தங்கமணி said...

@ க.பாலாசி - ரெம்ப நன்றிங்க...கேக்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு, அப்பாகிட்ட நேத்து பேசினப்ப நிகழ்ச்சி பத்தி நெறைய சொல்லிட்டு இருந்தாரு

ராஜி said...

பரிசு பெற்றாமைக்கு வாழ்த்துக்கள். ஒழுங்கா எங்களுக்கெல்லாம் பங்கு பிரிச்சு குடுத்துடுங்க

அப்பாவி தங்கமணி said...

@ ராஜி - ரெம்ப நன்றிங்க

Thanai thalaivi said...

வாழ்த்துக்கள் தங்கமணி ! கதையை படித்த போதே நினைத்தேன் உங்களுக்கு பரிசு கிடைக்கும் என்று. கதை மிகவும் நன்றாக பொசிடிவாக இருந்தது. பொருளாதார நிலையில் கீழே இருப்பவர்கள் கோணத்தில் இருந்து கதையை அமைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

அப்பாவி தங்கமணி said...

@ Thanai thalaivi - Thanks akka, thats one of the best compliments I received. You got a valid point as well, will try to improvise in future

Post a Comment