Friday, March 16, 2012

ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி (பார்ட்-2 )....;)))))))))
க.மு Vs க.பி போட்டு ரெம்ப நாளாச்சுங்... அதான் போடலாம்னுங்...;)

மைண்ட்வாய்ஸ் - அதென்ன புது பிராண்ட் காப்பிதூளா? யாரு பிராண்ட் அம்பாசிடர்? சூர்யா ஜோதிகாவா?

அப்பாவி - அம்பாசிடரும் இல்ல பென்ஸும் இல்ல... என்ன நீ, க.மு Vs க.பி மறந்துட்டியா... இங்க போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா... இல்லேனா நாலு இட்லி கெட்டி சட்னி சாப்பிடணும்...

மைண்ட்வாய்ஸ் - ஐயோ வேண்டாம் வேண்டாம்... நீ குடுத்த அதிர்ச்சில எனக்கு ஞாபகம் வந்துடுச்சு

அப்பாவி - அதிர்ச்சில ஞாபகம் போகத்தானே செய்யும்... எப்படி வரும்?

மைண்ட்வாய்ஸ் - அது மத்த அதிர்ச்சிக்கு... இந்த அதிர்ச்சிக்கு இதான்... க.மு'னா கல்யாணத்துக்கு முன், க.பி'னா கல்யாணத்துக்கு பின்... கரெக்ட்?

அப்பாவி - ஆர் யு ஸூர்? லாக் பண்ணிடலாமா?

மைண்ட்வாய்ஸ் - பெரிய சூர்யானு நெனப்பு

அப்பாவி - பின்ன? நாங்கல்லாம் ஒரே ஊர் தான? (என அப்பாவி இல்லாத காலரை தூக்கிவிட்டு கொள்ள)

மைண்ட்வாய்ஸ் - ஒரு ஊர்ல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்...அதுக்கென்ன பண்றது (என முணுமுணுக்க)

அப்பாவி - என்னது?

மைண்ட்வாய்ஸ் - ஒண்ணுமில்ல நீ மேட்டரை சொல்லு

அப்பாவி - ம்... விசியத்துக்கு போவோம்.... க.மு Vs க.பி'னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு (இது போன பதிவுல இருந்து காபி அடிச்ச செண்டன்ஸ்...:)

ஒரு கற்பனைக்கு நாம பேச போற ஜோடி பேரு கெளதம்-ப்ரியா'னு வெச்சுப்போம், சும்மா ஒரு எபக்ட்'க்கு தான். இப்ப ஒரே கேள்விய மிஸ்டர். கெளதம்'கிட்ட கல்யாணத்துக்கு முன் கேட்டா என்ன பதில் வரும், கல்யாணத்துக்கு ஒரு வருசத்துக்கு பின் கேட்டா என்ன பதில் வரும்னு ஒரு சின்ன கற்பனை... ஸ்டார்ட் மீசிக்....;))

***************************************

கேள்வி 1 : ப்ரியாகிட்ட உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன கெளதம்?

கல்யாணத்துக்கு முன் : ம்... (கொஞ்சம் யோசித்து) அப்படி எதுவும் பெருசா இல்ல... ஒண்ணு வேணா சொல்லலாம், என்னை பத்தி ரெம்ப யோசிச்சு டென்சன் ஆய்டுவா, அவ்ளோ அக்கறை என் மேல

கல்யாணத்துக்கு பின் : அடிசனல் சீட் குடுப்பீங்களா இந்த ஏன்சர்க்கு... அட போங்க பாஸ், அது இருக்கு ஒரு மொழத்துக்கு. முக்கியமா சொல்லணும்னா, எப்ப பாத்தாலும் நான் என்ன பண்றேங்கறதே யோசனை, அதை வெச்சே டார்ச்சர். மனுஷனுக்கு ப்ரைவசியே போச்சு... ச்சே

***************************************

கேள்வி 2 : கெளதம், ப்ரியாகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்?

கல்யாணத்துக்கு முன் : எதையும் மனசுல வெச்சுக்க மாட்டா, அப்படியே பேசிடுவா... எனக்கு அந்த வெளிப்படையான குணம் ரெம்ப பிடிக்கும்... சோ ஸ்வீட் யு நோ...

கல்யாணத்துக்கு பின் : சரியான பஜாரிங்க அது... கொஞ்சம் கூட முகதாட்சண்யமே பாக்காம பிசாசு மாதிரி திட்டும். அடுத்தவன் மனசு எவ்ளோ பீல் பண்ணும்னு யோசிக்கவே மாட்டா ராட்சசி

***************************************

கேள்வி 3 : ஒருவேள ப்ரியா உங்களுக்கு கிடைக்காம இருந்துருந்தா?

கல்யாணத்துக்கு முன் : ப்ளீஸ், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. என்னாலே நெனச்சே பாக்க முடியல. My life will not be complete without her

கல்யாணத்துக்கு பின் : ஹும்....(பெருமூச்சு) என்னத்த யோசிச்சு என்னத்த... போங்க பாஸ், நமக்கேது அந்த அதிஷ்டம் எல்லாம். My life is 'completed' with her

***************************************

கேள்வி 4 : ரெண்டு பேரும் ஒரு நாளைக்கி எவ்ளோ நேரம் போன்ல பேசுவீங்க Mr. கெளதம்?

கல்யாணத்துக்கு முன் : அது கணக்கே இல்லங்க... எவ்ளோ நேரம் பேசாம இருப்போம்னு கேட்டா ஈஸியா சொல்லிடலாம்... என்னமோ தெர்ல, எவ்ளோ பேசினாலும் கட் பண்ணவே மனசு வராது. போன் பாட்டரி தீந்து நின்னாதான் உண்டு

கல்யாணத்துக்கு பின் : அது வேறயா... எப்படியும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து அந்த கொடுமைய அனுபவிச்சு தானே ஆகணும். உண்மைய சொல்லணும்னா இப்பவெல்லாம் நான் போனை வீட்லயே வெச்சுட்டு போய்டறேன்

***************************************

கேள்வி 5 : உங்களுக்குள்ள சண்டை வருமா?

கல்யாணத்துக்கு முன் : சும்மா செல்ல சண்டைகள் அப்ப அப்ப வர்றது தான், அதானே லைப்ல சுவாஷ்யத்த கூட்டும், மத்தபடி சீரியஸ் சண்டைகள் எப்பவும் வந்ததில்ல. அவளுக்கு கோபம் வரும் ரெம்ப கியூட்டா இருப்பா, அதை பாக்கவே செல்ல சண்டை போடலாம்னு தோணும்

கல்யாணத்துக்கு பின் : வருமாவா? நல்லா கேட்டீங்க போங்க, அது வராம இருந்தாத்தான் அதிசயம். சரியான பிடிவாதம். அவளுக்கு கோபம் வந்தா மனுஷன் பாப்பானா, அதுக்கே கண்ணு முன்னாடி நிக்காம வெளிய போய்டுவேன்

***************************************

கேள்வி 6 : ப்ரியா சமையல்ல உங்களுக்கு பிடிச்சது?

கல்யாணத்துக்கு முன் : என்னங்க கேள்வி இது? ஏன் ப்ரியாதான் சமைக்கணுமா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? அவள உள்ளங்கைல வெச்சு தாங்கனும்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். ஆனா இந்த விஷயம் சொல்லியே ஆகணும், நான் ஒரு வாட்டி அவங்க வீட்டுக்கு போய் இருந்தப்ப ஆனியன் பஜ்ஜி செஞ்சுருந்தா, செம டேஸ்டி... சந்தோசத்துல எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு போங்க (ஒரே Feeling)

கல்யாணத்துக்கு பின் : அட ஏங்க நீங்க வேற அந்த வயிதேரிச்ச்சலை கொட்டிக்கறீங்க? அநியாயத்துக்கு சமத்துவம் பேசுவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா ஒரு வெங்காய பஜ்ஜி செய்யணும்னா கூட நான் வெங்காயம் வெட்டி தரணும் அவ பஜ்ஜி போடுவா... வெங்காயம் வெட்டி வெட்டியே கண்ணுல தண்ணி நிக்கலங்க (இங்க Peeling & Feeling)

***************************************

கேள்வி 7 : ப்ரியாகிட்ட நீங்க அடிக்கடி சொல்றது?

கல்யாணத்துக்கு முன் : ஐ லவ் யு

கல்யாணத்துக்கு பின் : ஐ ஹேட் யு

***************************************

கேள்வி 8 : ப்ரியா உங்ககிட்ட அடிக்கடி கேக்கற கேள்வி?

கல்யாணத்துக்கு முன் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. ஒரு ஒரு வாட்டி அவ இதை கேக்கும் போதும் இன்னும் லவ் அதிகமாய்டும் எனக்கு

கல்யாணத்துக்கு பின் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. சரியான சந்தேக பிராணிங்க அது, தினமும் கேட்டு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும் அவளுக்கு... ஹும்

***************************************

கேள்வி 9 : கெளதம், நீங்க ப்ரியாவை செல்லமா கூப்பிடறது?

கல்யாணத்துக்கு முன் : ம்... ஒண்ணு ரெண்டு இருந்தா சொல்லலாம்... அது பெரிய லிஸ்ட் இருக்கே. சாம்பிள்'க்கு 'ஸ்வீட்டி', 'ஏஞ்சல்', 'பேபி' இப்படி சில

கல்யாணத்துக்கு பின் : ஹ்ம்ம்... அது ஒண்ணு தான் கொறச்சல். பேசினாலே சண்டை தான் வரும், இதுல எங்கத்த செல்லமா கூப்பிடறது?

***************************************

கேள்வி 10 : லாஸ்ட் கொஸ்டின்... Mr. Gowtham, Define Wife?

கல்யாணத்துக்கு முன் : No life without wife

கல்யாணத்துக்கு பின் : Wife is a knife to cut your life

***************************************

இந்த பத்து போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா...:)

Disclaimer Statement: (copied from Part 1) இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தாங்க்ஸ்

(தொற்றும்)
(தொடருமா முற்றுமானு தெரிலங்க... So, ரெண்டும் சேத்து "தொற்றும்"னு முடிச்சுட்டேன்...:)

ரங்கமணிகள் - ஒரு ஆய்வு - க.மு Vs க.பி (பார்ட்-1 ) படிக்க இங்கே கிளிக்கவும்

29 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

இதோ..படிச்சிட்டு வர்ரேன்...:))))))

Mahi said...

அப்பாவி rocks! :)) அதிலயும் அந்த "தொற்றும்"-!!! ஆஹா,புவனா எங்கியோஓஓஓஓஓ போயிட்ட போ!!
:)))))))

Anonymous said...

Ha Ha....

I could relate this to prasanna & sneha, but they are in க.மு stage, let's wait & see for க.பி

My favorite is No.10

-Nanditha

ஸ்ரீராம். said...

எல்லாம் இயற்கையாத்தான் இருக்கு....நடக்கறதுதான்...!

எல் கே said...

க்கும் ஒரு சிலது சரியா இல்லையே
//ஒருவேள ப்ரியா உங்களுக்கு கிடைக்காம இருந்துருந்தா? //

கல்யாணமே ஆகலை அதுக்குள்ள இந்த கேள்வி எப்படி ? ராங் கொஸ்டின் ...

எதிர்வினை விரைவில் வரும்

Esther sabi said...

ம்ம்ம்ம்ம் எல் கே யின் கேள்வியை நானும் கேட்கிறேன் ஆனாலும் கதை சூப்பர்

மோ.சி. பாலன் said...

"தொற்றும்" என்றால் பயமாக இருக்கிறது.... நம்ம க. பி. கொஞ்சம் நல்லாவே போகிறது.. இந்தப் பதிவைப் படித்து என் க.பி-க்கும் ஏதாவது தொற்று நோய் வந்துவிட்டால்?

தங்க்ஸ்(தங்கச்சி)... டிபன் சாப்பிட்டு யோசிக்கச் சொன்னீங்களே என்னது அது.....? இட்லி - கெட்டிச் சட்னி? இதை மட்டும் கொஞ்சம் மாத்திடுங்க தங்க்ஸ் .. கெட்டி இட்லி - சட்னி என்று! இப்போது புரிகிறதா கொஞ்சம் நல்லாவே என்றால் என்னவென்று?

வல்லிசிம்ஹன் said...

உங்க வீட்டுக்காரர் படித்தாரா. :)

Prasanna said...

hahaha hilarious :)
//My life is 'completed' with her //
:))

கோவை2தில்லி said...

நல்ல பேட்டி....

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

தொற்றும் புதுவிதமா நல்லா இருக்கே....

kg gouthaman said...

ரங்கமணிகள் ஒரு ஆய்வு கட்டுரைக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் தர பரிந்துரைக்கின்றேன். இனிமேல் டாக்டர் அ தங்கமணி - என்று போட்டுக் கொள்வீர்களாகுக!

priya.r said...

க.மு Vs க.பி போட்டு ரெம்ப நாளாச்சுங்... அதான் போடலாம்னுங்...;)//

போடுங் போடுங் .... வேண்டான்னா மட்டும் கேட்கவா போறிங் :)

மைண்ட்வாய்ஸ் - அதென்ன புது பிராண்ட் காப்பிதூளா? யாரு பிராண்ட் அம்பாசிடர்? சூர்யா ஜோதிகாவா?//

இல்லே சித்தார்த் தும் அமலாவும் :)

அப்பாவி - அம்பாசிடரும் இல்ல பென்ஸும் இல்ல... என்ன நீ, க.மு Vs க.பி மறந்துட்டியா... இங்க போய் ரிப்ரெஷ் பண்ணிட்டு வா... இல்லேனா நாலு இட்லி கெட்டி சட்னி சாப்பிடணும்...//

அப்பாவி பிராண்ட் இட்லி ன்னு தெளிவாதான் சொல்லேன் அப்பாவி :)

மைண்ட்வாய்ஸ் - ஐயோ வேண்டாம் வேண்டாம்... நீ குடுத்த அதிர்ச்சில எனக்கு ஞாபகம் வந்துடுச்சு//

போன ஜன்மம் கூட நியாபகம் வந்துருக்குமே !

அப்பாவி - அதிர்ச்சில ஞாபகம் போகத்தானே செய்யும்... எப்படி வரும்?//

இது பேரதிர்ச்சி அப்பாவி !அடிபாவி அப்பாவி ;இப்படி ப்ரியான்னு பேரை வைத்து பல்ப் கொடுத்துட்டாயே :))

எங்கே ! தைரியம் இருந்தா என்ர தலைவியை வைத்து ஒரு பதிவு போடு பாக்கலாம் :))

priya.r said...

வல்லிசிம்ஹன் said...


உங்க வீட்டுக்காரர் படித்தாரா. :) //


ஹய்யோ மாமி ! இதெல்லாம் சொன்னதே அப்பாவியின் ஆத்துகாரர் தானாக்கும் :)


என்ன ..படிக்கிற சுதந்தரத்தை அப்பாவி கொடுத்திருப்பாரோ; இல்லையோ :))

schmetterlingwords said...

Laughed out to my heart's content... Very lovely Appaavi :)

இராஜராஜேஸ்வரி said...

(தொடருமா முற்றுமானு தெரிலங்க... So, ரெண்டும் சேத்து "தொற்றும்"னு முடிச்சுட்டேன்...:)

தொற்றித்தொடர்ந்து பரவும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Avargal Unmaigal said...

உங்கள் வீட்டுக்கதையை இப்படி பொதுவில் போட்டு நகைச்சுவையாக போட்டு உடைக்கலாமா? எங்கள் அண்ணன் இதையெல்லாம் படித்தும் உங்கள் கூட மிக பொறுமையாக குடித்தனம் நடத்துகிறார் என்பதை நினைக்கும் போது மிக பெறுமையாக இருக்கிறது. இதுக்குமேலும் அவரை பற்றி எழுதினால் பொறுக்கமுடியாமல் அழுதுவிடுவார். ஜாக்கிரதை

Priyaram said...

நடக்கறதை அப்படியே சொல்லி இருக்கீங்க புவனா.
படிச்சிட்டு சிரிச்சுகிட்டே இருந்தேன்.

முகில் said...

// அடிசனல் சீட் குடுப்பீங்களா இந்த ஏன்சர்க்கு //
நானும் என்னவோ பதில் வரும்னு நினைச்சேன். ஆனா இதை எதிர்பார்க்கல. கெளதம் இப்படி கேட்கறதை அதே மாடுலேசன்ல கற்பனை பண்ணிப் பார்த்தேன். சூப்பர்.

venkat said...

வாசிக்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா...
கல்யாணம் ஆனா இவ்வளவு சங்கடம் வருமா...

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி...:)

@ Anonymous (Nanditha) - They're my favourite pair as well Nanditha....Thanks :)

@ ஸ்ரீராம். - நீங்க சொன்னா சரி தானுங்க...:)

@ எல் கே - அதாவது க.மு'ல இட் மீன்ஸ் "காதலியா கிடைக்காம இருந்துருந்தா". இப்ப ஒகேவா?...:)

@ Esther sabi - எல்.கே.க்கு சொன்ன பதிலை உங்களுக்கும் சொல்றேன்...ஹா ஹா... நன்றிங்க

@ மோ.சி. பாலன் - ச்சே ச்சே... படிச்சா எல்லாம் தொற்றாதுங்க... பாலோ பண்ணினீங்கன்னா தொட்றலாம்...;) கெட்டி இட்லியா? அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

@ வல்லிசிம்ஹன் - இனி தான் கேக்கணும் வல்லிம்மா...:)

@ Prasanna - சொந்த அனுபவமா பிரசன்னா..:)

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி..:)

@ kg gouthaman - ஐ சூப்பர்... இனிமே நான் டாக்டர் அப்பாவி தங்கமணி.. நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - அதானே கேக்கவா போறேன் ப்ரியாக்கா... :) ஐயோ பாவம் சித்தார்த்...:) அதை நீங்களே சொல்லுவீங்கன்னு தான் நான் சொல்லலை அக்கா..:) போன ஜென்மமா... ஐ அப்ப நீங்க என்னவா இருந்தீங்கனு சொல்லுங்க பாப்போம்...:) மாமி, உங்க கொ.ப.செ வன்முறையை தூண்டுகிறார்... இதுக்கு நான் பொறுப்பில்லை...:)

@ schmetterlingwords - ரெம்ப தேங்க்ஸ்'ங்க...:)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ Avargal Unmaigal - ஹா ஹா ஹா... :)

@ Priyaram - ரெம்ப நன்றிங்க ப்ரியா..:)

@ முகில் - ஹா ஹா... நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ venkat - ஆஹா... என்னங்க வெங்கட், ஜாலி போஸ்ட் போட்டா இப்படி சீரியஸ் கேள்வி கேக்கறீங்க...:) ஆனா, எனக்கு ஒரு கதைக்கான க்ளூ குடுத்துட்டீங்க... தேங்க்ஸ்...:)

ANaND said...

கல்யாணத்துக்கு பின் : சரியான பஜாரிங்க அது... கொஞ்சம் கூட முகதாட்சண்யமே பாக்காம பிசாசு மாதிரி திட்டும். அடுத்தவன் மனசு எவ்ளோ பீல் பண்ணும்னு யோசிக்கவே மாட்டா ராட்சசி //

ஹா ஹா ஹா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுகா ..

ANaND said...

அப்பறம் KM vs KP ல தங்கமணிகள் எப்படின்னு சொல்லவே இல்ல

(அடுத்த பதிவுக்கு மேட்டர் ஓகே வா அக்கா)

அப்பாவி தங்கமணி said...

@ ANaND - ரெம்ப நன்றிங்க ஆனந்த், பாராட்டுக்கும் அடுத்த பதிவுக்கு மேட்டர் கொடுத்ததுக்கும்...:)

தக்குடு said...

ஹலோ! நான் இந்த போஸ்டை படிக்கவும் இல்லை கமண்டும் போடலை! பேச்சு பேச்சாதான் இருக்கனும் சொல்லிப்புட்டேன் ஆமா!! :P

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - We all waited so long to see a "panick struked" Thakkudu as this... ha ha ha... bery bery happy...:))

venkat said...

எனது க்ளூ-வில் உருவாகும் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

அப்பாவி தங்கமணி said...

@ venkat - Sure thank you...:)

Post a Comment