தனித்திருந்த பொழுதினில்
தனிச்சையாய்என் பெயர்சொன்னவழக்கம்
பெற்றோர் முன்சொல்லிவிட்டு
பதறிநாக்கு கடித்தாயே
கடித்ததென்னவோ உன்நாவைத்தான்
கடிவாளம்கழன்றது என்இதயத்திற்கு !!!
நீஇல்லாத பொழுதினில்
நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!
நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே - ஆனால்
வெற்றிஎன்னவோ எனக்குத்தானடி
வாகைசூடிய மகிழ்வோடு
பழிப்புக்காட்டி நீசிரிப்பாயே
பிறகென்ன வேணுமெனக்கு !!!
...

27 பேரு சொல்லி இருக்காக:
ஆஹா...அருமை.
நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே - ஆனால்
வெற்றிஎன்னவோ எனக்குத்தானடி
வாகைசூடிய மகிழ்வோடு
பழிப்புக்காட்டி நீசிரிப்பாயே
பிறகென்ன வேணுமெனக்கு !!
அருமையான வரிகள்
தோற்பதில் மகிழ்வு கொள்வது உண்மையில்
உண்மையான அன்பில் மட்டுமே சாத்தியம்
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Nice buvana!
மகளின் மணவாழ்க்கையின் புரிதல், பெற்றோரை பெருமகிழ்வில் திளைக்கச் செய்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் முதல்பத்தி. கடித்த நாக்கும் கடிவாளம் கழண்ட இதயமும் அழகான சொல்லாடல்கள்.
நயமான வரிகளில் நளினமாயொரு காதல் கவிதை! அருமை. வாழ்த்துக்கள்.
welcome welcome welcome..
நீஇல்லாத பொழுதினில்
நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!
///
கலக்கல் அப்பாவி
வாகைசூடிய மகிழ்வோடு
பழிப்புக்காட்டி நீசிரிப்பாயே
பிறகென்ன வேணுமெனக்கு !!!
// so sweet...
Kavithai is short & sweet Bhuvana!
நல்லா இருக்குங்க
//நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே//
கோவிந்த் மாம்ஸ் சொல்ற மாதிரியே இருக்கே
//நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!
/
ஆள் இல்லைன்னு சந்தோசப் பட்டிருப்பார் . தாடி விட மாட்டார். ஒழுங்கா விசாரி
//நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!//
அழகாக இருக்கு வரிகள்.
நல்ல கவிதை.
//தனித்திருந்த பொழுதினில்
தனிச்சையாய்என் பெயர்சொன்னவழக்கம்
பெற்றோர் முன்சொல்லிவிட்டு //
கல்யாணமான புதுசுல நாக்கைக் கடிச்சது ஓகே. இப்பகூடவா? :-)))))
அருமையான வரிகள்
நம்வாக்குவாத முடிவினில்
நாள்தோறும் வெல்பவள்நீயே
>>>
பொம்பளைங்ககிட்ட பேசி என்னிக்குதான் ஆம்பிளைங்க ஜெயிச்சிருக்காங்க.?!
கவிதை மிக அருமை...
வாழ்த்துக்காள்.
முறுவல்.
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி.
வாங்க புவனா,பார்த்து நாளாச்சு,கவிதை சூப்பர்.
aang presenttu presenttu
ரமணி மாதிரி ஆவாய்ன்னு பார்த்தா
இப்படி தாமரை ஆவேன்னு அடம் பிடிச்சா எப்படி புவனி :))
இவ்வளோ திறமையை வைத்து கொண்டு நீ ஏன்
திரைபடத்திற்கு பாடல் எழுத கூடாது புவனி :))
//நீஇல்லாத பொழுதினில்
நித்தமும் கேலிசெய்தது
நீவளர்க்கும் முல்லைகொடி
நான்வளர்த்த தாடியைபார்த்து !!!//
மேற்கண்ட உன்ற கவிதையை படிக்கும் போது
கீழ்க்கண்ட இந்த படபாடல்
ஏனோ நினைவுக்கு வருகிறது!
திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!
@ஸ்ரீராம். - நன்றிங்க ...:)
@ Ramani - நன்றிங்க
@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ் சுகந்தி
@ கீதமஞ்சரி - நன்றிங்க கீதா
@ Siva sankar - நன்றி நன்றி நன்றி
@ Mahi - தேங்க்ஸ் மகி
@ முகில்- நன்றிங்க முகில்
@ எல் கே - அடப்பாவி...;)
@ RAMVI - நன்றிங்க ராம்வி
@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா...நீங்க அப்டி வரீங்களா... :))
@ Vairai Sathish - நன்றிங்க
@ ராஜி - அதுவும் சரி தாங்க...:)
@ சே. குமார் - நன்றிங்க குமார்
@ அப்பாதுரை - நன்றிங்க
@ ராஜி - நன்றிங்க ராஜி
@ Asiya Omar - நன்றிங்க ஆஸியா
@ vinu - ஒகே ஒகே...:)
@ priya.r - ஆஹா... என்னா ஒரு வார்த்தை விளயாட்டு அக்கோய்..:) திரைப்படத்துக்கு எழுதலாம், ஆனா யார் சான்ஸ் குடுக்கறது...:) சூப்பர் பாட்டு இது... எனக்கு ரெம்ப பிடிச்ச பாட்டு...;)
hii.. Nice Post
Thanks for sharing
Celeb Saree
For latest stills videos visit ..
@ Swapna 2v - thank you
Post a Comment