Thursday, May 24, 2012

பை பை கனடா ஹாய் ஹாய் இந்தியா...:)தலைப்பை பாத்தே உங்களுக்கு என்ன மேட்டர்'னு புரிஞ்சுருக்கும்'னு நினைக்கிறேன். கொஞ்சம் மொக்கை போட்டு கொஞ்சம் பீட்டர் விட்டு அப்புறம் சொல்லலாம்னு தான் நெனச்சேன். சரி ஊருக்கு வர்ற நேரத்துல ஏன் உங்களை எல்லாம் வீணா பகைச்சுக்கணும்னு நேராவே விசயத்துக்கு வந்துட்டேன் (ஒரு பயம் தான்..:)

ஆமாங்க, நாங்க இந்தியா'வுக்கு மூவ் பண்றோம். இன்னும் ரெண்டு வாரத்துல "தாய் மண்ணே வணக்கம்" பாட நாங்க ரெடி...:)

கனடா வந்து இறங்கின நாளுல இருந்தே ஊருக்கு போலாம்னு ஆரம்பிச்சவ நான். பின்ன என்னங்க... துபாய்ல அம்பது டிகிரி வெயில் முடிஞ்சு நேரா நவம்பர் மாசம் கனடால மைனஸ் அஞ்சு டிகிரில வந்து எறங்கினா எப்படி இருக்கும். ஒரே டென்சன்ஸ் ஆப் கனடாவா இருந்த காலம் அது. நாங்கெல்லாம் நம்ம ஊர் மார்கழி குளிருக்கே எட்டு மணி வரைக்கும் கம்பளிய விட்டு வெளிய வராத கேஸ்'க. யோசிச்சு பாருங்க என் நெலமைய

அப்புறம் எப்படியோ, வந்ததுக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு போலாம்னு ரங்க்ஸ் அப்படி இப்படி சரி கட்டினார். கொஞ்ச நாளுன்னா எத்தனை நாள்னு அப்ப கேக்காம விட்டது தப்பா போச்சு. அவரோட டிக்சனரில அதுக்கு அர்த்தம் ஒம்பது வருஷம்னு இப்ப தான் புரிஞ்சது...;)

ஆரம்பத்துல தெரியாத ஊர், புரியாத மொழி (accent), அறியாத மக்கள், அலற வரைக்கும் குளிர்னு கொஞ்சம் டெரர்ரா தான் இருந்தது. ஆனா பழக பழக பழகி போச்சு. கொஞ்சம் பிடிச்சும் போச்சு

ஆனாலும் ஊர் நெனப்பு விடற மாதிரி காணோம். "ஒரு ஒரு வருசமும் விண்ட்டர் வந்தா மட்டும் ஊருக்கு போலாம்னு ஆரம்பிக்கற, சம்மர்ல அப்படி சொல்ற மாதிரி காணோமே. நிஜமாவே ஊருக்கு போகணுமா இல்ல குளிருக்கு தப்பிக்கணுமா"னு ரங்க்ஸ் கிண்டல் பண்ணுவார்

எப்பவும் போகணும்னு தான் இருக்கும், ஆனா விண்ட்டர்ல வீட்லயே அடைஞ்சு கெடக்கும் போது அது கொஞ்சம் ஓவரா இருக்கும். சம்மர்ல இங்க பிரெண்ட்ஸ் கூட ஊர் சுத்தற மூட்ல அது கொஞ்சம் வெளில வர்றதில்ல, அதான் மேட்டர். ப்ளாக் எழுத வந்ததே அப்படி ஒரு சமயத்துல தான். பதிவுகள் ரகளைகளில் கொஞ்சம் டைவர்ட் ஆகும்

ஆனா உண்மைய சொல்லணும்னா, போகணும்னு ஆசையும் வேகமும் இருந்த போதும், போறதுன்னு முடிவு பண்றது அவ்ளோ சுலபமா இருக்கல

இங்கயும் முழுசா ஓட்ட முடியல அங்கயும் முழுசா போக முடியல'னு ஒரு தொங்கு பாலத்துல இருக்கற மாதிரி ஆகி போச்சு நிலைமை. ஊர்ல எதாச்சும் கல்யாணம் காட்சி, பண்டிகை விசேஷம் இல்லேனா யாருக்காச்சும் ஒடம்புக்கு முடியலைனாலோ "எப்ப போலாம்?"னு டிஸ்கசன் ஆரம்பிக்கும்

முதல் கேள்வி, அங்க போய் என்ன பண்றது? இங்க மாதிரி வேலை அங்க கிடைக்குமா? இங்க உள்ள வசதிகள் அங்க இருக்குமா? இங்க இருக்கற சோசியல் லைப் அங்க இருக்குமா? இப்படி கேள்விகள் வந்துட்டே இருக்கும். அப்புறம் பிஸி வாழ்க்கைல அப்படியே அது மறந்து போகும். மறுபடி எதாச்சும் ஊர்ல கல்யாணம் காட்சினு வரும் போது மறுபடி ஆரம்பிக்கும்

நம்ம ஊர்ல பொதுவா சொல்லுவாங்க "நல்லதுக்கு போகலைனாலும் கெட்டதை விடக்கூடாது"னு. உண்மையாவே, நல்லதுகளில் கலந்து கொள்ள முடியாம போகும் போது கூட மனம் சமாதானம் ஆகும், ஆனா இழப்புகளில் பங்கெடுக்க முடியாம போற வருத்தம் ரெம்ப கொடுமைங்க. அப்படி ஒரு தருணம் தான் இந்த முடிவை எடுக்க தூண்டியது

யாரோட மரணத்தையும் நாம தடுத்து நிறுத்த முடியாது. அவங்களுக்குனு விதிக்கபட்ட நேரம் தாண்டி ஒரு கணம் கூட எந்த மருத்துவமும் அறிவியலும் உயிரை பிடித்து வைக்க முடியாது. ஆனா, கடைசி கொஞ்ச நாட்கள் அவங்களோட இருந்தோம் அப்படிங்கற நிம்மதி கிடைக்கும் இல்லையா. "World is a global village"னு புரிஞ்சாலும் அது எல்லாருக்கும் அப்படி ஏத்துக்க முடியறதில்ல இல்லைங்களா

சில பேரோட மனநிலை வேற மாதிரி இருக்கும். ஒருத்தரை பத்தின நல்ல நினைவுகள் மட்டும் நமக்கு இருந்தா போதும், அவரோட இறுதி நாட்களை / அவங்க பட்ற கஷ்டங்களை பாக்காமையே இருந்துட்டா நல்லதுனு தோணும். அது ஒரு வகை ஏற்று கொள்ளல். அப்படி இருக்க முடிஞ்சா அதுவும் சரி தான்

உணர்ச்சிவசப்படும் நிலையில் எடுக்கற முடிவுகள் சரியா இருக்காதோனு கொஞ்சம் தள்ளி போட்டோம். மூணு நாலு மாதம் கடந்த பின் யோசிச்சு பாத்தப்பவும் நமக்கு ஊருக்கு போறது தான் சரிப்படும்னு தோணுச்சு, சரினு முடிவு பண்ணியாச்சு

நெறைய பேருக்கு ஊருக்கு போகனுங்கற ஆசை எண்ணம் எல்லாமும் இருக்கும். ஆனா பிள்ளைகள் படிப்பு, கலாசார மாற்றம், குடும்பத்தின் தேவைகள், வசதிகள், சுய-மனநிலைனு நெறைய விஷயங்கள் குறுக்க வந்து தடுக்கும். அதை குறை சொல்ல முடியாது. ஒரு ஒருத்தரோட சூழ்நிலை வேற தானே

இனி, கனடாவை பத்தி கொஞ்சம்...

கனடா - இந்த ஊரை பத்தி நெறைய பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கேன். பிளஸ் மைனஸ் எல்லா இடத்துலயும் இருக்கு. இங்கயும் அப்படிதான். இந்தியால இருபது சொச்சம் வருஷம் இருந்தேன். இங்க கிட்டத்தட்ட அதுல பாதி இருந்தாச்சு. So, this feels like a second home for sure...

இந்த ஊருக்கு வந்ததையோ இங்க இருந்த அனுபவத்தயோ நான் ஒரு நாளும் regret பண்ணவே மாட்டேன். இந்த ஊர் எனக்கு நெறைய கத்து குடுத்து இருக்கு. இங்க இருந்து கெளம்பறோம் அப்படிங்கரதுக்க்காக இதை இப்ப சொல்லல

முக்கியமா இங்க கிடைத்த நட்பு வட்டம், என் வாழ்நாள் முழுதும் மனதில் நிலைத்து இருப்பார்கள். அவங்கள ரெம்பவே நான் மிஸ் பண்ணுவேன். ஒரு குடும்பம் மாதிரி இருந்த அந்த அமைப்பு தான் எங்க பலமா இருந்தது. யாருக்கு ஒண்ணு'ன்னாலும் யோசிக்காம உதவிக்கரம் நீட்டும் அந்த மாதிரி நட்புகள் அமையறது கஷ்டம் இல்லைங்களா

அடுத்து, என்னோட ஆபிஸ். என்னதான் குறை சொன்னாலும் பொலம்பினாலும், நிச்சியம் மிஸ் பண்ணுவேன். அப்படியே ஒருத்தர ஏத்துக்கறது ரெம்ப கஷ்டமான விஷயம். எங்க ஆபிஸ்ல நெறைய பேர் அப்படி இருந்தாங்க. ஊருக்கு போறேன்னு சொன்னதும் உண்மையான வருத்தம் சில பேர்கிட்ட பாத்தேன். I made a difference அப்படினு தோணுச்சு

எங்க போனாலும் சமாளிக்க கூடிய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் எனக்கு குடுத்தது இந்த ஊர். ஒருத்தர் கோழையா இருக்கறதும் தைரியமா இருக்கறதும் ஒருத்தரோட மனோவலிமையை பொறுத்த விஷயம் மட்டுமில்ல, அமையும் சந்தர்ப்பங்களும் கூடத்தான் என்பது என்னோட கருத்து. எனக்கு அப்படி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தது இந்த ஊர்'னு சொல்லலாம்

உண்மையா சொல்லணும்னா, இப்ப I'm in kind of mixed emotions'னு தான் சொல்லணும். இங்க மிஸ் பண்ணுவேன்'னு வருத்தமாவும் தோணுது, ஊர்ல எல்லாரோடவும் இருக்க போறோம்னு சந்தோசமாவும் இருக்கு. இது இயல்பு தான்னு நினைக்கிறேன். ஆனா, கனடா ஒண்ணும் வேற கிரகத்துல இல்லை தானே, எப்ப வேணாலும் வரலாம்

நம்ம ஊருக்கு வந்து கொஞ்ச நாள் இது ஏன் இப்படி அது ஏன் அப்படினு கேள்வியின் நாயகியா பொலம்புவேனு நல்லாவே தெரியும். That is natural Human Tendency. ஆனா, நெனச்சா அம்மா அப்பா அத்தை மாமா சொந்தம் பந்தம் எல்லாரையும் பாக்கலாம். அவங்களுக்கு  முடியலைனாலும் எனக்கு முடியலைனாலும் பாத்துக்க முடியும். எல்லா நல்லது கெட்டதுலயும் கலந்துக்கலாம். இவ்ளோ பிளஸ் இருக்கும் போது I can't ask for more, right?

சரி, இதுக்கு மேல ரெம்ப சீரியசா போக வேண்டாம்னு நினைக்கிறேன். அப்புறம் "யார் நீ?"னு நீங்க கேள்வி கேக்கற மாதிரி ஆய்டும்...:)

"இந்தியா போய்ட்டா அப்பாவி பிஸி ஆய்டுவா, இனி நெறைய போஸ்ட் வராது, அப்பாடா நிம்மதி" அப்படினு நீங்க சந்தோசப்படுவீங்கனு எனக்கு தெரியும். பட், அயம் சாரி யுவர் ஆனர். அப்படி எல்லாம் யாரும் தப்பிக்க முடியாது

இந்தியா போனப்புறம் கொஞ்ச நாள் நான் வெட்டியா இருக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். வெட்டியா இருக்கறதுக்கு என்னத்த பிளான் வேண்டி கெடக்குனு கேக்கறீங்களா? வேலைக்கு போறவங்களுக்கு அது மட்டும் தான் பிளான், ஆனா வெட்டியா இருக்கறவங்க என்ன செய்யறதுன்னு எவ்ளோ பிளான் பண்ணனும் தெரியுமா? அது மட்டுமில்லாம, எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ணனும்னு வடிவேல் சித்தர் சொல்லி இருக்கார் யு நோ...:)

சும்மா இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அது எப்படி தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கணும், அட்லீஸ்ட் ஒரு ஆறு மாசமாச்சும். அப்புறம் பழையபடி ஊர்ல இருந்தப்ப செஞ்சுட்டு இருந்த வாத்தியாரம்மா வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு ஒரு எண்ணம். பாப்போம் என்ன நடக்குதுனு

இப்ப ஒரு அதிர்ச்சியான நியூஸ் சொல்ல போறேன். வயசானவங்க / குழந்தைகள் / ஹார்ட் வீக்கா இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கோங்க

அது என்ன மேட்டர்'னா, என்னோட draft folder'ல கிட்டதட்ட 30 சிறுகதைகள், 40 மொக்கை போஸ்ட்ஸ், 30க்கும் மேல நாவல்கள் தூங்கிட்டு இருக்கு. இங்க அதை எழுத நேரம் இருக்கல. இனி அதான் புல் டைம் ஜாப்... சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. வாரத்துக்கு ஏழு  போஸ்ட்க்கு மேல போட மாட்டேன் ஒகே...:)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எனக்கு பெரிய சந்தோஷம் என்னனா இனிமே "கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவேன்"னு ரங்க்ஸ்கிட்ட மெரட்டலாம்... Just kidding... :)))

ஒகே... பை பை பிரெண்ட்ஸ்... இனி இந்தியா போய் செட்டில் ஆனப்புறம் தான் அடுத்த பதிவு... அது வரை என்ஜாய். டேக் கேர்
அன்புடன்,
அப்பாவி
 

82 பேரு சொல்லி இருக்காக:

சே. குமார் said...

//எனக்கு பெரிய சந்தோஷம் என்னனா இனிமே "கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போய்டுவேன்"னு ரங்க்ஸ்கிட்ட மெரட்டலாம்//

அக்கா... கோவிச்சுக்கிட்டு போறது பெரிய சந்தோஷமா உங்களுக்கு...

//இனி இந்தியா போய் செட்டில் ஆனப்புறம் தான் அடுத்த பதிவு//

ஓ.கே... சந்தோஷங்களை முதல்ல அனுபவிங்க...
அப்புறம் எழுதுங்க...\

Porkodi (பொற்கொடி) said...

yakka as already said, ALL THE BEST!!! :D awaiting your posts...

Mahi said...

Good luck with the move bhuvana! :)

sriram said...

Wish you and Govind Good Luck
Regards
Boston Sriram

Chitra said...

Best wishes! Ensoy ..... And continue to Ensoy ....

Avargal Unmaigal said...

உங்களின் முடிவு மிக நல்ல முடிவாக இருக்க எனது வாழ்த்துக்கள் .

தமிழக மக்களே ஆபத்து உங்களை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கை

இனிமேல் அந்த தமிழக மக்களை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது.

முனியாண்டி said...

Best wishes :-)

சுசி said...

வாழ்த்துகள் புவனா.. மனம் போல இனிமையான வாழ்வு தொடரட்டும் இந்தியாவில் :)

பத்மநாபன் said...

குளிரும் தூரமும் அதிகம் இருந்தாலும் , கனடா போன்ற நட்பான நாட்டிலிருந்து இந்தியா திரும்பும் முடிவு எடுப்பது குழப்பமான நிலைதான்.. வெற்றிகரமாக முடிவெடுத்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் தாய் மண்ணிலும் வெற்றிகள் தொடர......

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தியாவுக்கு
வருக வருக
என
அன்புடன்
வரவேற்கிறோம்.
வாழ்த்துகள்.

divyadharsan said...

Hai appavi,

kelambureengala..yenaku kastamvum eruku santhosamavum eruku.sari vidunga..athan tirisangu sorgamnu munavey writiteengaley...

40 novelsaaaa...akka yevlo thadavi kenjirukeyn kaathal kathai podunga terror katah podunganu..unga rasigaiya yeamthittu avlo thayum draftla vechi sambrani poteengala neenga.grrrr!!

miss u so bad appavi and ur stories too.india la poi kalakunga.yenga ponalum appaviyin thola..chaa pughazh oangatum..coimbatore nagaramengum appaviyin pughazh paravattum..

yetho namala mudinjathu,take care appavi.tata.please post ur novel soon.

vanathy said...

I know you made a very hard decision. Enjoy India. See you soon.

துளசி கோபால் said...

நல்ல அலசல் அப்பாவி.

போகணுமுன்னு நினைச்ச முடிவு எடுப்பது ரொம்பக்கஷ்டம்.

எனக்கும் அப்பப்ப இப்படி வந்து...... அதையேன் கேக்கறீங்க.

மூணு வருசமுன்பு கோபாலுக்கு இந்தியாவில் ஒரு ப்ராஜெக்ட் வந்தப்ப அதை ஒரு பரிசோதனையா எடுத்துக்கிட்டோம். நாலு சீஸன் இருந்து பார்த்துட்டு முடிவு செய்யலாமுன்னு போனது ரெண்டரை வருசமா நீண்டு போனதும் எப்படா இங்கே திரும்ப நியூஸி வருவோமுன்னு ஆகிப்போச்சு.

நாட்டை விட்டு வந்து 30 வருசம் ஆச்சுன்றதால் அங்கே போய் சரியா ஒட்ட முடியலை.

குடும்பத்தோடு கலக்கப்போகும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்துகளும்.

நல்லா இருங்க.

எங்கே செட்டில் ஆகப்போறீங்க?
சிங்காரச்சென்னையா?

middleclassmadhavi said...

All the best! Welcome to India!

ஸ்ரீராம். said...

இது மாதிரி ஒரு தீர்மானமாய் முடிவுகள் எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நிறைய பேர் மாற்றித்தான் முடிவு எடுப்பார்கள். மேலும் நீங்களே சொல்லியிருப்பது போல கானடா என்ன வேற்று கிரகத்திலா இருக்கு, நினைத்தால் மறுபடி போகலாம் என்பதும் சரிதான்! வெல்கம் டு இந்தியா...சென்னையா, கோவையா?

விச்சு said...

வாங்க வாங்க... வாரத்துக்கு ஏழு போஸ்டா!!! படிக்க நாங்க இருக்கோம்.

Siva sankar said...

INDIA WELCOMES YOU WITH VANAKKAM..

VAANGO VAANGO APPAVI...

எல் கே said...

welcome back appavi

atchaya said...

வாருங்கள். வந்த பின் நிறைய மொக்கை போட ஆரம்பிக்கலாம்! பயணக் கட்டுரை போட ரெடி பண்ணிடுங்க! கனடா, மற்ற இடங்களில் எடுத்த போட்டோ எல்லாம் போடனும்.... அன்புக் கட்டளையா எடுத்துக்கோங்க! பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

எல் கே said...

இட்லி மாமி , இங்க வந்தாவது ஒழுங்கா இட்லி பண்ணு

வல்லிசிம்ஹன் said...

நின்னு நிலைச்சு இடம் புரிந்து
பிறகு பதிவெழுதுங்கள்.
இங்கே எல்லாவிதமான சந்தோஷங்களும் கிடைக்க வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

துபாய்ல அம்பது டிகிரி வெயில் முடிஞ்சு நேரா நவம்பர் மாசம் கனடால மைனஸ் அஞ்சு டிகிரில வந்து எறங்கினா எப்படி இருக்கும். ஒரே டென்சன்ஸ் ஆப் கனடாவா இருந்த காலம் அது.

ஒரு வழியாய் கால நிலை மாற்றம் பழகிய பிறகறிந்திய வருகை ! வாழ்த்துகள் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க வாழ்க ..அட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆனாலும் நல்லாத்தான் இருக்கு வாங்க வாங்க..:)
ஆமாங்க பக்கத்துல இருந்தா ஹஸ் ஐ மிரட்டற அந்த ஒரு ஐடியாவுக்காகவே வரலாம்..

Joe said...

All the best, hope you have a good time in India.

ராமலக்ஷ்மி said...

நல்வரவு புவனா:)!

தீர்மானிக்கும் வரையே திகைப்பு. அதன் பிறகு மகிழ்ச்சிதான்! அது பகிர்வில் தெரிகிறது:)! மனம் போல் எல்லாம் அமைய வாழ்த்துகள்!

தெய்வசுகந்தி said...

All the best Bhuvana!

Thanai thalaivi said...

ஹையா ....! வரீங்களா வாங்க வாங்க !

ரொம்ப சந்தோசம் ! செட்டில் ஆகறது எங்கே ? எங்க சிங்கார சென்னைல தானே ? இல்ல பெண்களூரா ? :)))

என்னது வெட்டியா இருக்கிறதுன்னா என்னனே தெரியாதா ? இங்க நான் என்னத்துக்கு இருக்கேன் . நான் சொல்லித்தரேன்.

கோவிச்சிக்கிட்டு அம்மாவீட்டு போனீங்கன்னா பாவம் உங்க அம்மா. அதனால கோவம்வந்தா உங்க ரங்கமணிய அவங்க அம்மாவீட்டுக்கு அனுப்பிடுங்க ஓகே:))

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி தங்கமணி - வருக வருக - தாயகம் வருக - தூங்கிக் கொண்டிருக்கும் நூறு கதைகள் காடுரைகள் மொக்கைகள் அனைத்தையும் தூசி தட்டி வெளியிடுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

புதுகைத் தென்றல் said...

வாங்க வாங்க.

தாய்நாடு திரும்புவோர் கழகத்துக்கு வரவேற்பு.

:)) (அப்புறம் அதைப்பத்தி நிறைய்ய எழுத வாய்ப்பு கிடைக்கும்.)

kg gouthaman said...

வெளுத்துக் கட்டு, வெளுத்துக் கட்டு, வெளுத்துக்கட்டு!
மல்லிகை பூப்போலே மிருதுவான இட்லி செய்து, மங்காத புகழ் பெற்று மனமகிழ்ந்து,
எல்லா நலமும் பெற்று,
இனிதாக இந்தியாவில்
என்றும் வாழ
எங்கள் வாழ்த்துகள்!

Nanjil Kannan said...

akkaa welcome :)) vanthathum solunga :)))

திண்டுக்கல் தனபாலன் said...

இந்தியாவுக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் ! வாழ்த்துக்கள் !

Anonymous said...

Anbulla Bhuvana,

I know you from Abhi appa. I used to come and read yr blog silently. I thought one day I will come and meet you in Canada. (My son is in Vancouver) But now you are leaving. Best of luck. Hope to see you in India. (i am in Hong Kong)

With best regards,
Nalina

vinu said...

welcome home!!!!!!!!!!!!!!!!!!!

முகில் said...

//"இந்தியா போய்ட்டா அப்பாவி பிஸி ஆய்டுவா, இனி நெறைய போஸ்ட் வராது, அப்பாடா நிம்மதி" //

அப்படின்னு நினைச்சு கொஞ்சம் வருத்தம் ஆச்சு. ஆனா இதுக்கு அப்புறம் தான் நீங்க தினம் ஒரு post சொன்னதுக்கு அப்புறம் "ஐ ஜாலி" அப்படினு ஆச்சு.

காவேரிகணேஷ் said...

ஒருத்தர் கோழையா இருக்கறதும் தைரியமா இருக்கறதும் ஒருத்தரோட மனோவலிமையை பொறுத்த விஷயம் மட்டுமில்ல, அமையும் சந்தர்ப்பங்களும் கூடத்தான் .

அருமையான வரிகள்..

வாருங்கள்.. சென்னைக்கு,..

Lakshmi said...

வெல் கம் இண்டியா.

G3 said...

wow.. Varuga varuga :))) Endha oornu sollunga cut out bannerkkellam ready pannidalaam Yaaruppa anga Appaviya varaverka cut out banner ellam ready panna aarambingappa :)))

Vaarathukku 7 post dhaana??!!! Y this kanjathanam??? :P Unga kitta irundhu naan neraiya edhirpaakuren :P

RVS said...

”தாயகம் திரும்பும் தங்கத்தலைவி”ன்னு நாற்பதடிக்கு ஒரு கட் அவுட் ரெடி பண்ணிடலாம்!

வெல்கம் டு இந்தியா!! :-)

கோவை ஆவி said...

Welcome home Bhuvana!
After 1 year I still miss US..
Keep in touch.

Kriishvp said...

Welcome Back to India!!!Bhuvana Sis :)

ஹுஸைனம்மா said...

சரியான சமயத்தில் எடுத்த நல்ல முடிவு. வாழ்த்துகள்ப்பா. போற வழியில் துபாய்/அபுதாபி வந்துட்டு போக முடியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

welcome to mother india vaanka vaanka nanka payapata mattom. psunamiyaiye samalichavunka naanka. potha kuraikku akka piriya freeya irukkaanka:)

Srinivasan Krishnamoorthy said...

என்ன இருந்தாலும் தாய் மண் தாய் மண் தாங்க.
உங்கள் வரவு நல்வரவாகுக

Geetha Sambasivam said...

ஆனா இழப்புகளில் பங்கெடுக்க முடியாம போற வருத்தம் ரெம்ப கொடுமைங்க. அப்படி ஒரு தருணம் தான் இந்த முடிவை எடுக்க தூண்டியது //

:((((((( good thinking in the right time.

Geetha Sambasivam said...

இப்போக் கொஞ்சம் வந்த வேலையைப் பார்ப்போமா?

எல்கே, இவங்க இங்கே வந்து இட்லியை ஒழுங்காத் தான் பண்ண முடியும். ஏன்னா மாவு வாங்கப் போறாங்க,. அவங்க அரைக்கலை. ரங்க்ஸ் பாவம் பிழைச்சார். இத்தனை நாள் இட்லிங்கற பேரிலே கல்லைச் சாப்பிட்டு அதையும் ஜீரணிச்சுட்டு. சில சமயம் இட்லியா பாலா, இல்லாட்டி வொயிட் சாஸானு தெரியாம மாவைக் குடிச்சு!

போதுண்டா சாமினு ஆயிடுச்சாம் அவருக்கு. :P:P:P

Geetha Sambasivam said...

வெளுத்துக் கட்டு, வெளுத்துக் கட்டு, வெளுத்துக்கட்டு!
மல்லிகை பூப்போலே மிருதுவான இட்லி செய்து, மங்காத புகழ் பெற்று மனமகிழ்ந்து, //

கெளதம் சார், அவங்க இங்கே இட்லியை மிருதுவாத் தான் செய்ய முடியும். அவங்க அம்மாவோ, இல்லாட்டி மாமியாரோ தானே அரைச்சுத் தருவாங்க.

என்ன ஏடிஎம் சரியா? :)))))

Geetha Sambasivam said...

நல்ல இடத்திலே வேலை கிடைச்சு, வாழ்க்கையில் நல்லபடியா செட்டில் ஆகி எல்லா நலனும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.

கோவை உங்களை வரவேற்கிறது. பக்கத்திலேயே திருப்பூர்! கேட்கவே வேண்டாம்! :P:P:P

Gayathri said...

Hi akka! aaha super enjoy..marakkama post ezhudhunga..ennala than vandhu mokka poda muaidlaa temp leave vitruken blogukku.
bhadhrama reach ayttu mail panunga

ALL THE BEST

arul said...

aarambichuteengala amma veetukku poraennu

புதுகை.அப்துல்லா said...

// அப்புறம் பழையபடி ஊர்ல இருந்தப்ப செஞ்சுட்டு இருந்த வாத்தியாரம்மா வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு ஒரு எண்ணம். பாப்போம் என்ன நடக்குதுனு


//

very good :)

Geetha Sambasivam said...

அப்புறம் பழையபடி ஊர்ல இருந்தப்ப செஞ்சுட்டு இருந்த வாத்தியாரம்மா வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு ஒரு எண்ணம். பாப்போம் என்ன நடக்குதுனு//

குழந்தைங்க பயந்துக்கும். வேறே என்ன?

சுரேகா said...

வாவ்...வாழ்த்துக்கள்..வாங்க...வாங்க..!!! இந்த முடிவை எடுத்ததற்கு ரங்கமணிக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்...!!


வாங்க..நாம இந்தியாவை கனடாவா மாத்துவோம்..!! :))

தக்குடு said...

ஊருக்கு போகர்து அப்பிடிங்கர்து எப்போதுமே சுகமான ஒரு விஷயம் தான். 9 வருஷத்துக்கு அப்புறம்னா தைரியமா போகலாம்.

'மூத்த பதிவர்' கீதா பாட்டி சொன்ன மாதிரி தாய் நாட்டுல எல்லா விதமான நலமும் வளமும் பெற்று அமோகமா இருக்கர்துக்கு அம்பாளை பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

Jagannathan said...

Welcome Home! Canada cries!

You have analysed your decision to move correctly. It will be difficult to settle down here after so many years in Dubai and Canada - considering the weather, traffic etc. But your proximity to your parents should compensate these 'minor' difficulties!

You mentioned correctly - that living abroad broadens one's thinking, enhances self-confidence and improves human relationship!

Best wishes,

R. J.

Rajan said...

வாழ்த்துக்கள் சகோதரி

காற்றில் எந்தன் கீதம் said...

ஒரு முறை முடிவு பண்ணிட்ட அவுங்க பேச்ச அவுங்களே கேக்க மாட்டாங்க அப்பாவி அக்கா...
இந்தியா வந்துட்டு அப்பிடியே ஒரு எட்டு இங்கயும் வாங்க என்ன....

Gopi Ramamoorthy said...

\\வெட்டியா இருக்கறதுக்கு என்னத்த பிளான் வேண்டி கெடக்குனு கேக்கறீங்களா? வேலைக்கு போறவங்களுக்கு அது மட்டும் தான் பிளான், ஆனா வெட்டியா இருக்கறவங்க என்ன செய்யறதுன்னு எவ்ளோ பிளான் பண்ணனும் தெரியுமா?\\

கரெக்டா சொன்னீங்க:-)

\\சும்மா இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான். \\

யார் சொன்னா? இப்போ நான் இல்லை:-) செமை ஜாலியா இருக்கேன்:-)

Sreeja Anand said...

ஆனா உண்மைய சொல்லணும்னா, போகணும்னு ஆசையும் வேகமும் இருந்த போதும், போறதுன்னு முடிவு பண்றது அவ்ளோ சுலபமா இருக்கல......
“May the dreams of your past be the reality of your future.” Wishing you all the best. Sreeja & Anand

geetha santhanam said...

Wish good luck.

priya.r said...

வாங்க வாங்க !!

தங்கள் வரவு நல்வரவாக அமைய எங்கள் வாழ்த்துக்கள் :))

Thanai thalaivi said...

தங்கம் ! ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்பா ! வரும் போது மைன்ட் வாய்ஸை அங்கேயே விட்டுட்டு வந்துடுங்கப்பா :)) திக்கு தெச தெரியாம நல்லா திண்டாடட்டும். :)))

ANaND said...

வாங்க வாங்க வாத்தியாரம்மா

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

வெங்கட் நாகராஜ் said...

இந்தியா உங்களை வரவேற்கிறது.....

இட்லியும் காத்திருக்கிறது...... :))))

ஜெய்லானி said...

ஊரில் செட்டில் ஆக நானும் ஒவ்வொரு தடவையும் நினைப்பதோடு சரி ,முடியவில்லை வருடங்கள் ஓடிகிட்டே இருக்கு :-( .

வெல்கம் பேக் இந்தியா

Kavitha Bhargav said...

இன்னுமா செட்டில் ஆகலை? பதிவு போடுங்க தங்ஸ்...

Thanai thalaivi said...

Belated birthday (july 3rd) wishes thangamani !

அப்பாவி தங்கமணி said...

@ சே. குமார் - சும்மா சொல்றது தானுங்...:) நன்றிங்க


@ Porkodi (பொற்கொடி) - தேங்க்ஸ் கொடி...:)


@ Mahi - மெனி தேங்க்ஸ் மகி


@ sriram - ரெம்ப நன்றிங்க


@ Chitra - ரெம்ப ரெம்ப தேங்க்ஸ்'ங்க


@ Avargal Unmaigal - நன்றிங்க... ஹா ஹா, வார்னிங் எல்லாம் அநியாயமுங்க... நான் ஒரு அப்பாவிங்க...:)


@ முனியாண்டி - நன்றிங்க


@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி


@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா


@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - தேங்க்ஸ் திவ்யா... டோண்ட் வொர்ரி, எங்க போனாலும் என் தொல்லை தொடரும்...:) நன்றி உங்கள் வாழ்த்துக்கு... சீக்கரம் நாவல் போடறேன்...:)


@ vanathy - தேங்க்ஸ் வானதி


@ துளசி கோபால் - நன்றிங்க... கொஞ்சம் கஷ்டமான டெசிசன் தான்... ஆன சொந்த ஊர் இழுக்குதே... சிங்கார சென்னை இல்லங்க... சொந்த மண் கோவை தானுங்க...நன்றி உங்கள் வாழ்த்துக்கு@ middleclassmadhavi - நன்றிங்க@ ஸ்ரீராம்.- நன்றிங்க... கோவை தானுங்க... சொர்கமே என்றாலும் எங்கூரு போல வருமா...:)@ விச்சு - நன்றிங்க... உங்க தைரியத்த பாராட்டியே ஆகணும்...:)@ Siva sankar - நன்றிங்க சிவா@ எல் கே - தேங்க்ஸ் கார்த்தி@ atchaya - நன்றிங்க... வெட்டியாத்தானே இருக்க போறேன்... நெறைய டைம் இருக்கும்னு நெனசெங்க... ஆனா வேளைக்கு போய்ட்டு இருந்தப்ப விட பிஸியா இருக்கு போங்க...:)@ எல் கே - ஹா ஹா... கண்டிப்பா ... இங்க இட்லி நல்லாவே வருது பிரதர்..இதுல இருந்து என்ன புரியுது, தப்பு என் மேல இல்ல ஊர் மேல தான்... .;)

அப்பாவி தங்கமணி said...

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ் வல்லிம்மா...@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க@ முத்துலெட்சுமி/muthuletchumi - சரியா சொன்னீங்க... நன்றிங்க...;)@ Joe - ஐ டூ... தேங்க்ஸ்@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க@ தெய்வசுகந்தி - நன்றிங்க சுகந்தி@ Thanai thalaivi - வந்துட்டோம் வந்துட்டோம்... :) அவர அம்மா வீட்டுக்கு அனுப்பறதா... அது முடியாதே.... அவங்க அம்மாவும் எங்க கூட தானே இருக்காங்க..:)@ cheena (சீனா) - ரெம்ப நன்றிங்க சார்@புதுகைத் தென்றல் - ரெம்ப சரி... நன்றிங்க..:)@ kg gouthaman - ஆஹா... கவித கவித... நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ Nanjil Kannan - தேங்க்ஸ் கண்ணன்@ திண்டுக்கல் தனபாலன் - ரெம்ப நன்றிங்க@ Anonymous (Nalina) - நன்றிங்க... அபி அப்பா ஒரு முறை சொன்னார், பேசும் வாய்ப்பு கிடைக்கலை மன்னிக்கவும்... இந்தியா வரும் போது சொல்லுங்க... கண்டிப்பா மீட் பண்ணுவோம்... நன்றி மீண்டும்@ vinu - நன்றிங்க பிரதர்@ முகில் - ஆஹா... என்னே உங்கள் மனதிடம்...;) நன்றிங்க@ காவேரிகணேஷ் - நன்றிங்க... சென்னை இல்லிங்க கொங்கு நாட்டு மண்... கோவை...:)@ Lakshmi - நன்றிங்க அம்மா


@ G3 - ஆஹா... நன்றி நன்றி... சிவப்பு கம்பளம் பேனர் வாத்தியம்னு ஒரே அதகளம் தான் போங்க கோவை ஏர்போர்ட்ல...:) என்னது வாரத்துக்கு ஏழு போஸ்ட் பத்தாதா... சரி விடுங்க ஆட்டோ டாடா சுமோ எல்லாம் உங்க ஊட்டுக்கு அனுப்பிடறேன்...:)


@ RVS - நன்றிங்க...கட் அவுட்'க்கும் சேத்து...:)


@ கோவை ஆவி - நன்றிங்க... பழகின இடத்தை மிஸ் பண்றது இயல்பு தானுங்க... ஆனா நம்ம ஊரு நம்ம ஊரு தான்...:)

அப்பாவி தங்கமணி said...

@ Kriishvp - ரெம்ப நன்றிங்க


@ ஹுஸைனம்மா - தேங்க்ஸ் அக்கா... துபாய் இப்ப பக்கம் தானே அக்கா... இன்னொரு முறை சாவுகாசமா வரோம்... நீங்க எப்ப கோவை வரீங்க?@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்...:)


@ Srinivasan Krishnamoorthy - ரெம்ப நன்றிங்க


@ Geetha Sambasivam - தேங்க்ஸ் மாமி...என்னது மாவு வாங்கறதா... ச்சே ச்சே, அதெல்லாம் இல்லை, இட்லி இப்ப சூப்பர்'ஆ வருது... மல்லிகை பூ தோத்து போய்டணும் யு சி...:) ஒன்லி அப்பாவி brand இட்லி... விவரங்களுக்கு கீதா மாமியை அணுகவும்..:)


@Gayathri - தேங்க்ஸ் காயத்ரி


@ arul - ஏதோ முடியறப்ப தாங்க சொல்ல முடியும்..:)


@ புதுகை.அப்துல்லா - நன்றிங்க


@ Geetha Sambasivam - சரி விடுங்க... பெரிய குழந்தைகள (காலேஜ்) பயமுறுத்துவோம்...:)


@ சுரேகா- ரங்கமணிக்கு பாராட்டுக்களா... அநியாயம்'ங்க இது... உசுர வாங்கி சம்மதிக்க வெச்சது நானாக்கும்...;) பாவங்க இந்தியா இன்டியாவாவே இருந்துட்டு போகட்டும்.. அதை ஏன் கொடுமை படுத்தனும்...:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு


@ Jagannathan - ரெம்ப நன்றிங்க சார்... சரியா சொன்னீங்க


@ Rajan - நன்றிங்க


@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க... ஆனா எங்க வர்றதுன்னு நீங்க சொல்லுலீங்'க்கா...:)


@ Gopi Ramamoorthy - அப்படியா... அப்ப ட்ரைனிங் க்ளாஸ் ஆரம்பிங்க... நானும் சேந்துக்கறேன்...:)


@ Sreeja Anand - தேங்க்ஸ் ஸ்ரீஜா அண்ட் ஆனந்த்@ geetha santhanam - ரெம்ப நன்றிங்க கீதா@ priya.r - ரெம்ப ரெம்ப நன்றிங்...:)@ Thanai thalaivi - ஐ... சூப்பர்... ஐ லிக் திஸ் டீல்...அப்படியே செஞ்சுடறேன் அக்கா..:)@ ANaND - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க... இட்லிக்கும் நன்றிங்க...:)


@ ஜெய்லானி - நன்றிங்க... நீங்களும் விரைவில் செட்டில் ஆக வாழ்த்துக்கள்...:)@ Kavitha Bhargav - ஆகிட்டமுங்கோ... இன்னைக்கி பதிவு போட்டுடரனுங்கோ...:)@ Thanai thalaivi - தேங்க்ஸ் அக்கா...:)

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - Thanks for your wishes Amma...

கோவை2தில்லி said...

இப்பத் தான் இந்த பதிவை படித்தேன். வாழ்த்துகள்.

//அம்மா அப்பா அத்தை மாமா சொந்தம் பந்தம் எல்லாரையும் பாக்கலாம். அவங்களுக்கு முடியலைனாலும் எனக்கு முடியலைனாலும் பாத்துக்க முடியும். எல்லா நல்லது கெட்டதுலயும் கலந்துக்கலாம்.//

நானும் இப்ப இப்படி ஒரு முடிவு தான் எடுத்திருக்கேன்.....
பார்க்கலாம்....எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

கோவை2தில்லி said...

கோவைக்கு வந்தால் உங்களை சந்திக்கலாம்...

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ஆஹா... நீங்க என்னை விட சூப்பர் போல இருக்கே ஆதி, இவ்ளோ சீக்கரம் போஸ்ட் பாத்துட்டீங்க... ஜஸ்ட் கிட்டிங்'மா... தேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு...:)

Asiya Omar said...

இப்ப தான் இந்த போஸ்டிங்கை பார்க்கிறேன்..எப்படி விட்டுப் போனது?வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ Asiya Omar - ஆஹா... இவ்ளோ நாள் தெரியாதா உங்களுக்கு? அது ஒரு வருசமே ஆக போகுதுங்க... லேட் பட் லேட்டஸ்ட் கமெண்ட்டுக்கு நன்றிங்கோ...:)

Post a Comment