Saturday, July 21, 2012

அப்பாவி டிவியில் இது எது அது - பதிவர் ஸ்பெஷல்... :))

வணக்கம் அண்ட் வெல்கம் டு உங்கள் அழுக்கான சாரி... உங்கள் அபிமான "இது எது அது" நிகழ்ச்சி. என்னை பத்தி நானே சொல்லிக்க கூடாதுங்க, ஆனா பாருங்க இதுக்காக இன்னொரு ஆளை கூட்டிட்டு வந்தா பட்ஜட்ல ஜெய்பூர் ஜமுக்காளமே விழுந்துருங்கறதால நானே சொல்லிர்றேனுங்க
 
என்ர பேரு கோயமுத்தூர் கோமளவல்லிங்க. நான் "கொலைவெறியும் கோன் ஐசும்" அப்படிங்கற பேர்ல ஒரு வலைப்பதிவு வெச்சுருக்கறனுங்க. இன்னைக்கி "இது எது அது" பதிவர் ஸ்பெஷல் ப்ரோக்ராமை தொகுத்து வழங்கறதுக்கு வந்திருக்கரனுங்க
 
முதல்ல நான் ஒரு தத்துவம் சொல்ல போறானுங். அது என்னனு கேட்டீங்கன்னா "ப்ளாக் வெச்சுருக்கறவன் எல்லாம் வெட்டி ஆபிசரும் இல்ல வெட்டியா இருக்கறவங்க எல்லாம் ப்ளாக் வெச்சுரக்கறதும் இல்லிங்க". என்னங் புரியலையாங்? டோண்ட் வொர்ரிங், இதை பத்தி ஒரு பத்து பக்க பதிவு அடுத்த வாரம் போட்றனுங்க
 
நாம ப்ரோக்ராம்க்கு போலாமுங்க... இன்னிக்கி ப்ரோக்ராம் பாத்தீங்கன்னாக்க அப்ரகாம் லிங்கன் ப்ரோக்ராம்னு சொல்லலாமுங்க
 
என்னது? ஆப்பக்கடை பிரியாணியா? (என ஆடியன்ஸ் பக்கமிருந்து குரல் வர)
 
அது அப்பற மேட்டுக்கு ப்ரோக்ராம் முடிஞ்சப்புறம் தருவோம். இப்போ, இதை ஏன் ஆபிரகாம் லிங்கன் ப்ரோக்ராம்னு சொன்னேன்னு கேட்டீங்கன்னா இன்னிக்கி ப்ரோக்ராம் for the bloggers of the bloggers by the bloggers, அதாவது பதிவர்களால் பதிவர்களை கொண்டு பதிவர்களுக்காக நடக்க போற ஒரு ஜனநாயக ஸ்பெஷல் ப்ரோக்ராமுங்க
 
(ஆடியன்ஸில் சிலர் எழுந்து ஓட முயற்சி செய்ய)
 
அம்பது ரூபாயும் ஆப்பக்கடை பிரியாணியும் மறந்து போகுமா? (என சூப்பர் ஸ்டார் பட பாடலை கோமளவல்லி ரீமிக்ஸ் செய்ய, ஆடியன்ஸில் அமர்ந்தால் தரப்படும் என சொல்லப்பட்ட 'சன்மானம்' நினைவுவுக்கு வந்து, ஓடிய ஆடியன்ஸ் மனதை கல்லாக்கி கொண்டு அமர்கின்றனர்)
 
 
இன்னைக்கி நம்ம ப்ரோக்ராமுக்கு வரப்போற மூணு கெஸ்ட் யாருன்னு கேட்டீங்கன்னா பிரபலமான மூணு பதிவர்கள். ரெம்ப நல்லவங்க... என்னை மாதிரியே (என கோமளவல்லி சிரிக்க, ஆடியன்ஸில் இருந்த ஒரு பொண்ணு மிரண்டு போய் மயக்கம் போடுது)
 
இதோ நம்ம கெஸ்ட்ஸ் சிகாகோ சின்ராசு, இலுப்பநாயக்கன்பட்டி இலியானா, அம்பாசமுத்திரம் அலமேலு மூவரையும் வருக வருக என வரவேற்கிறோம் (மூணு பேரும் MLA எலக்சன் கேண்டிடேட்ஸ் மாதிரி வணக்கம் சொல்லிட்டே செட்டுக்குள்ள வராங்க. அடிச்சு பிடிச்சு எடம் புடிச்சு சீட்ல உக்கார்றாங்க)
 
 
(இனி பின் வரும் பதிவில் இவர்கள் பின் வருமாறு சுருக்க பெயரில் விளிக்கபடுவார்கள். கோயமுத்தூர் கோமளவல்லி as "கோம்ஸ்", சிகாகோ சின்ராசு as "சின்ராஸ்", இலுப்பநாயக்கன்பட்டி இலியானா as "இலியான்ஸ்", அம்பாசமுத்திரம் அலமேலு as "அலம்ஸ்" & ஆடியன்ஸ் as "ஆடியன்ஸ்" தான், பின்ன ஆடாத டான்ஸ்'னா சொல்ல முடியும்...:)
 
 
இனி... தொடர்கிறது...
 
கோம்ஸ் : வெல்கம் வெல்கம். மொதல்ல மிஸ்டர் சிகாகோ சின்ராசு, உங்கள பத்தி கொஞ்சம் வெவரமா சொல்லுங்க
 
சின்ராஸ் : ஹாய் ஹாய் ஹாய்... மீ தி சின்ராசு ஆப் தி சிகாகோ
 
கோம்ஸ் : அதான் பேர்லயே இருக்கே, மேல சொல்லுங்
 
 
சின்ராஸ் : (மேலே பார்த்தபடி) லைட் ஆல் நைஸ், கலர் லைட் ஆல்சோ நைஸ்...
 
 
கோம்ஸ் : அட கெரகமே... அதில்லைங்க. உங்கள பத்தி இன்னும் சொல்லுங்கனேன்
 
 
சின்ராஸ் : யு மீன் மீ?
 
 
கோம்ஸ் : நான் மீன் எல்லாம் சாப்பிடறத்தில்லைங்க
 
 
சின்ராஸ் : ஹா ஹா... யு ஆர் ஹிலாரியஸ் (என சிரிக்க)
 
 
கோம்ஸ் : (டென்ஷன் ஆகி) இந்தா பாரு சின்ராசு. இப்ப நீ தமிழ்ல பேசுலீனா நான் இங்கிலீஷ்ல பேசி போடுவனாமா சொல்லிட்டேன் (என மிரட்ட)
 
 
சின்ராஸ் : அகர முதல எழுத்தெல்லாம் அரிய வைத்தாய் தேவி (என உணர்ச்சிவசப்பட)
 
கோம்ஸ் : சரி சரி... உங்க வலைப்பதிவு பத்தி உங்கள பத்தி சொல்லுங்க சின்ராசு
 
 
சின்ராஸ் : என்னோட வலைப்பதிவு பேரு "ஜிங்குச்சா-மங்குச்சா". நான் அமெரிக்கா தொடங்கி அமிஞ்சிகரை வரைக்கும் எல்லாத்தை பத்தியும் நெறைய பதிவு எழுதி இருக்கேன். அதோட பேச்சிலர்களுக்கு ஏத்த எளிய சமையல் பத்தியும் எழுதறேன். நான் சிகாகோல ஒரு சின்ன வீட்ல இருக்கேன்
 
 
கோம்ஸ் : என்னது சின்ன வீடா? (என அதிர்ச்சியாய் பார்க்க)
 
சின்ராஸ் : ஐயையோ... அதில்லைங்க. சும்மா ஒரு ரைமிங்'க்கு அப்படி சொன்னேன். ப்ளாக்ல எழுதி எழுதி அப்படியே வருது
 
கோம்ஸ் : ரைமிங்காமா ரைமிங்கு... ரணகளமா போயிற போவுது. ம்... வெல்கம் டு தி ஷோ. அதென்ன "ஜிங்குச்சா-மங்குச்சா", உங்க குலதெய்வத்தோட பேரா?
 
 
சின்ராஸ் : நோ நோ... சும்மா கேட்சியா இருக்கட்டும்னு அப்படி வெச்சேன். அப்பதான நாலு பேரு வந்து படிப்பாங்க
 
 
கோம்ஸ் : எது? "ஜிங்குச்சாமங்குச்சா"ங்கறத பாத்துட்டு நாலு பேரு வந்து படிப்பாங்களா? ஹ்ம்ம்... யாரு பெத்த புள்ளைங்களோ? சரி விடுங்க, அடுத்தது நம்ம இலுப்பநாயக்கன்பட்டி இலியானா. உங்கள பத்தி சொல்லுங்க இலியானா, பேரே ரெம்ப அட்டகாசமா இருக்குதுங்களே
 
 
இலியான்ஸ் : ஹி ஹி...தேங்க்ஸ் கோம்ஸ். எங்க கொள்ளு பாட்டி தாத்தாவோட பேரை சுருக்கித்தான் எனக்கு வெச்சாங்க (என பெருமையாய் கூற)
 
 
சின்ராஸ் : என்னது? உங்க கொள்ளு பாட்டி பேரு இலியானாவா? அப்ப "நண்பன்"ல நடிச்ச இலியானா உங்க சொந்தமா?
 
 
இலியான்ஸ் : (எரிச்சலாய்) ஆமா... என் ஒண்ணுவிட்ட ஓரகக்தியோட மூணுவிட்ட முறை பையனோட நாலு விட்ட நாத்தனாரோட அஞ்சு விட்ட அத்தை பொண்ணு தான் அந்த இலியானா
 
 
சின்ராஸ் : ஓ...வெரி க்ளோஸ் ரிலேசன் போல இருக்கே... எனக்கு இலியானாவோட நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்...அப்புறம், எனக்கு ரெம்ப நாளாவே ஒரு டவுட், இந்த ஒண்ணுவிட்டனா என்ன அர்த்தம்?
 
இலியான்ஸ் : (ஓங்கி சின்ராசின் கன்னத்தில் ஒரு அறை விட்டு) இதான் ஒண்ணு விட்ட, புரிஞ்சதா?
 
 
சின்ராஸ் : ம்... நல்லாவே புரிஞ்சது, நல்லவேள அஞ்சு விட்டனா என்னனு கேக்கல (என கன்னத்தை தடவி கொள்கிறார்)
 
கோம்ஸ் : தேவையா இது தேவையா (என கோமளவல்லி ரீமிக்ஸ் ஆரம்பிக்க)
 
இலியான்ஸ் : (சுதாரித்து) என்ன சொல்லிட்டு இருந்தேன். ம்... எங்க கொள்ளு பாட்டி பேரு "இளவஞ்சி" தாத்தா பேரு "லிங்குசாமி". ரெண்டு பேரோட முதல் எழுத்தை எடுத்து "இலி"னு வெச்சாங்க. இலி'யா நீ இலி'யா நீ' னு எல்லாரும் கேட்டு கேட்டு அது அப்படியே மருவி 'இலியானா'னு ஆகி போச்சு
 
சின்ராஸ் : இலினு வெச்சதுக்கு பதிலா வலினு வெச்சுருக்கலாம் (என இன்னும் வலித்த கன்னத்தை தடவியபடி முணுமுணுக்கிறார்)
 
இலியான்ஸ் : அப்புறம் கோம்ஸ்... என் ப்ளாக் பேரு "இலக்கியமும்-இஞ்சிமரப்பாவும்". தினம் ஒரு கவிதைனு வருசத்துக்கு 365 கவிதை எழுதறேன். அதோட சமையல் குறிப்பு கூட எழுதறேன்
 
 
சின்ராஸ் : (மனதிற்குள்) வாட் அ பிட்டி
 
இலியான்ஸ் : நான் இலுப்பநாயக்கன்பட்டி மெட்ரோபாலிட்டன்ல பண்ணை மேக்கரா இருக்கேன்?
 
சின்ராஸ் : என்னது பன்னி மேய்க்கரீங்களா? (இலியானா முறைக்க, ஒண்ணுவிட்ட நினைவு வந்து சின்ராசு சைலண்ட் ஆகிறார்)
 
கோம்ஸ் : அவர விடுங்க... அதென்ன பண்ணை மேக்கர்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க இலி
 
 
இலியான்ஸ் : வீட்டுல இருக்கறவங்க ஹோம் மேக்கர்'னு சொல்றாங்க. நாங்க பண்ணைல இருக்கோம், அதான் பண்ணை மேக்கர்னு சொன்னேன் (என பெருமையாய் இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள)
 
கோம்ஸ் : ரெம்ப நாளா ப்ளாக் எழுதறீங்களோ?
 
 
இலியான்ஸ் : எப்படி கண்டுபுடிச்சீங்க? (என ஆச்சிர்யமாய் கேட்க)
 
 
கோம்ஸ் : ஹி ஹி... நீங்க பேசற விதத்தை வெச்சு தானுங் அம்மணி. ஒகே வெல்கம் இலியானா. அடுத்தது அம்பாசமுத்திரம் அலமேலு. உங்கள பத்தி சொல்லுங் அலம்ஸ்
 
 
அலம்ஸ் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சி எந்தன் ப்ளாக் புகழை. சொல்லமுடிவில்லையம்மா கமெண்ட் விழும் எண்ணிக்கையை (என பாட்டாய் பாட)
 
கோம்ஸ் : ஆஹா ஆஹா, நடுல நடுல பொன்மானே தேனே மட்டும் போட்டுட்டா போதுங்க, கமல் சார் அடுத்த படத்துல கண்டிப்பா சான்ஸ் குடுத்துடுவாருங்க
 
அலம்ஸ் : ஓ ஓ... நன்றி கோம்ஸ். உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரில பாருங்கோ. வேணும்னா இனி ஒரு மாசத்துக்கு என் ப்ளாக்ல உங்களை பத்தி தெனம் ஒரு போஸ்ட் போட்டு தள்ளிடறேன், என்ன சொல்றேள் கோம்ஸ்?
 
கோம்ஸ் : ஐயையோ... அந்த பாவம் எனக்கு வேண்டாமுங்க அலம்ஸ். உங்கள பத்தி சொல்லுங்க ரெண்டு வரில
 
 
அலம்ஸ் : ரெண்டு வரின்னா கஷ்டம் தான். சரி ட்ரை பண்றேன். நான் அம்பாசமுத்தரத்துல இருக்கேன்...
 
கோம்ஸ் : ஐயோ பாவம். சமுத்தரதுலையா இருக்கீங்க? அப்ப சுனாமி வந்தா என்ன பண்ணுவீங்க?
 
அலம்ஸ் : அட ராமச்சந்திரா... உங்களுக்கு ஜாங்கிரி சுத்தமா தெரியலயே
 
கோம்ஸ் : ஜாங்கிரி எனக்கு நல்லா தெரியுமேங்க, ஆரஞ்சு கலர்ல வட்டமா சுத்தியும் வளையமா இனிப்பா... (என ஜாங்கிரி நினைவில் கோம்ஸ் லயித்து நிற்க)
 
 
அலம்ஸ் : ஐயோ அதில்ல கோம்ஸ். இந்த எடம் பத்தி எல்லாம் படிக்கறதுக்கு என்னமோ சொல்லுவாளே... ஜாங்கிரியோ ஜாமன்டிரியோ என்னமோ
 
 
சின்ராஸ் : யு மீன் ஜாக்ரபி?
 
அலம்ஸ் : பிரம்மஹத்தி... மீன் மாமிசம் எல்லாம் ஏன்டா என்னிட்ட சொல்ற (என முறைக்க)
 
 
சின்ராஸ் : (சோகமாய்) யு லேடிஸ் ஆர் ஆல் சோ மீன் டு மீ (எனவும்)
 
 
அலம்ஸ் : மறுபடி மீனா? (என பாய)
 
 
சின்ராஸ் : நான் ஆணியே புடுங்கல போங்க (என எழுந்து போக முயற்சிக்க)
 
கோம்ஸ் : விடுங்க சின்ராசண்ணே... பெரிய மனசுகாரங்க நீங்க பொறுத்து போலாமுங்களே. நீங்க சொல்லுங்க அலமேலு
 
 
அலம்ஸ் : அம்பாசமுத்திரம்'ங்கறது எங்க ஊர் பேரு. தண்ணில எல்லாம் இல்ல, நெலத்துல தான் இருக்கு
 
கோம்ஸ் : ஓஹோ... உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?
 
அலம்ஸ் : எங்காத்துல...
 
கோம்ஸ் : இப்பதான தண்ணில இல்லைனு சொன்னீங்... மறுக்கா ஆத்துலனு சொல்ரீங்... (என புரியாமல் விழிக்க)
 
 
அலம்ஸ் : இது ஆறு இல்ல ஆம் புரிஞ்சதோ
 
 
கோம்ஸ் : என்னமோ சொல்றீங்... சொல்லுங்க
 
 
அலம்ஸ் : எங்காத்துல நான், எங்காத்துகாரர், என் பொண்ணு வைஷு, என் புள்ளயாண்டான் கேசவ் எல்லாரும் இருக்கோம்
 
கோம்ஸ் : சரிங்... உங்க ப்ளாக் பத்தி சொல்லுங் அலம்ஸ்
 
 
அலம்ஸ் : என் ப்ளாக் பேரு "மெக்சிகோமுதல்மோர்கொழம்புவரை"
 
கோம்ஸ் : அதாவது மெக்சிகோ வானிலை பத்தியும் எழுதுவீங்க, மோர்கொழம்பு வாணலி சட்டில எப்படி செய்யறதுன்னும் சொல்லி தருவீங்க, சரிங்களா?
 
அலம்ஸ் : கோம்ஸ் ரெம்ப புத்திசாலினு வெளில பேசிண்டா, இப்ப நன்னா புரியறது போ
 
 
கோம்ஸ் : ஹி ஹி ஹி...
 
 
சின்ராஸ் : அது சரி... ஏதோ கேம்ஷோனு சொன்னாங்களே... அது எப்போ? இலியானா பாட்டி ஆனப்புறமா?
 
 
இலியான்ஸ் : இல்ல நீ கொள்ளு பேரன் எடுத்தப்புறம்
 
கோம்ஸ் : சைலன்ஸ் சைலன்ஸ்... கேம் ரூல்ஸ் பத்தி சொல்றதுக்கு முன்னாடி இந்த ஷோவை மூணு பேர்ல யார் பாத்திருக்கீங்க. உண்மைய சொல்லுங்க பாப்போம்
 
 
(மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி விழிக்க)
 
 
கோம்ஸ் : ஹும்க்கும், வெளங்கிரும்... சரி விடுங்க. நானே சொல்லிடறேன். மொதல் ரவுண்டு "குரூப்ல ஒரிஜினல்", அதாவது மூணு பேரு இந்த படிக்கட்டு வழியா வருவாங்க. அவங்க மூணு பேருல ஒருத்தர் நிஜமான பிளாக்கர் ரெண்டு பேரு டூப். அந்த ஒரிஜினல் யாருனு நீங்க கண்டுபிடிக்கணும்
 
 
சின்ராஸ் : இது ரெம்ப ஈஸியாச்சே
 
கோம்ஸ் : எப்படி?
 
 
சின்ராஸ் : பாம்பின் கால் பாம்பறியும் யு சி?
 
 
இலியான்ஸ் : இந்த ஆளு புரியற மாதிரியே பேச மாட்டாரா?
 
 
சின்ராஸ் : ஐயையோ... புரியற மாதிரி பேசினா அப்புறம் பிளாக்கர்ஸ் அசோசியேசன்ல இருந்து தூக்கிருவாங்க
 
 
கோம்ஸ் : நான் ரூல்ஸ் சொல்லணுமா வேண்டாமா?
 
 
அலம்ஸ் : நீ சொல்லு கோம்ஸ். இவாளுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல
 
 
கோம்ஸ் : ம்... buzzer பிரஸ் பண்ற ஆர்டர்ல நீங்க ஒரிஜினலை லாக் பண்ணனும். மொதல் வாட்டியே ஒரிஜினலை கரெக்டா கண்டுபுடிச்சா உங்களுக்கு நூறு பாய்ன்ட். அப்புறம் பிளாக்கர்ஸ் எதாச்சும் பேசுவாங்க. அதுக்கப்புறம் ரெண்டாவது சான்ஸ்ல மறுபடி லாக் பண்ணலாம். அப்ப நீங்க மாத்தினா மைனஸ் நூறு. மாத்தி தாப்பா போனா மைனஸ் இருநூறு
 
 
இலியான்ஸ் : எனக்கு ஒரு சந்தேகம்?
 
 
சின்ராஸ் : 2012 டிசம்பர்ல உலகம் அழிஞ்சுருமாம். அதுக்குள்ள கேம் முடியுமா?
 
 
கோம்ஸ் : ஸ்ஸ்ஸ்பப்பப்பப்பா... உங்க சந்தேகம் என்ன இலி
 
 
இலியான்ஸ் : லாக் பண்ணலாம் லாக் பண்ணலாம்னு சொன்னீங்களே. அதுக்கு பூட்டி எல்லாம் திண்டுக்கல்ல இருந்து வாங்கினீங்களா?
 
 
கோம்ஸ் : (கடுப்பாகி) இல்ல திஹார் ஜெயில்ல வாங்கினோம்
 
 
இலியான்ஸ் : ஓ... அப்ப சாவி ஈஸியா நம்ம ஊர்லையே கிடைக்கும்... தேங்க்ஸ்
 
 
அலம்ஸ் : நேக்கு கூட ஒரு சந்தேகம்
 
 
கோம்ஸ் : நான் ரூல்ஸ் சொல்லி முடிக்கறேன், அப்புறம் கொஸ்டின் டைம்னு ஒண்ணு வெச்சு உங்க எல்லா சந்தேகங்களையும் தீக்கலாம். இப்ப செகண்ட் ரவுண்டு பத்தி சொல்லிடறேன். அது பேரு "அழுதா போச்சு". பிளாக்கர் ஒருத்தர் வந்து நெறைய ஜோக் எல்லாம் சொல்லுவாரு. நீங்க அழுவாம இருக்கணும். மொதல்ல அழுவறவங்களுக்கு நூறு பாயிண்ட் தான் தருவோம், ரெண்டாவது அழு மூஞ்சிக்கி இருநூறு, கடைசி வரைக்கும் அழுவாம இருந்தா முன்னூறு பாயிண்ட் கிடைக்கும்
 
சின்ராஸ் : ஐயோ... இது சான்சே இல்ல
 
கோம்ஸ் : அப்புறம் மூணாவது ரவுண்டு "மாத்தாம யோசி". நான் கேக்கற கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லணும், மாத்தி மாத்தி சம்மந்தம் இல்லாம பதில் சொன்னா அவுட். எவ்ளோ நேரம் கரெக்டா பதில் சொல்றீங்களோ அதுக்கு தகுந்த மாதிரி பாய்ன்ட். புரிஞ்சதா?


சின்ராஸ் : புரிஞ்சது... ஆனா புரியல...
 
 
(தொடரும்)
இதன் தொடர்ச்சி எப்ப வரும் எப்படி வரும்னு எனக்கே தெரியாது... ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்... கொஞ்சம் ஓவரா இருக்கோ... சரி விடுங்க...:)
 
ஒண்ணு புரியலைன்னு முழிக்கரீங்கன்னா நீங்க விஜய் டிவில சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு வர்ற "அது இது இது" மொக்கைய பாக்கறதில்லைனு அர்த்தம்...அது பாத்தா இது புரியுமான்னு கேக்கறீங்களா... அதுக்கு நான் கேரண்டீ இல்ல... அது "சிவகார்த்திகேயனுக்கே" வெளிச்சம்...:)

51 பேரு சொல்லி இருக்காக:

Lakshmi said...

ஆரம்பத்துலேந்தே சிரிச்சுகிட்டே வந்தனா என்ன கமெண்ட் போடனும்னு மறந்துட்டேன்.

Siva sankar said...

meeeeeeeee the first ellai second..

அப்பாவி தங்கமணியை அன்புடன்
வரவேற்கிறோம்

நீண்ட நாட்கள் கழித்து
நீண்ட பதிவு

இப்படிக்கு
அப்பாவி வருத்த படா வாலிபர் சங்கம்
கிளை எண் 6335.

Siva sankar said...

அதுக்கு நான் கேரண்டீ இல்ல... அது "சிவகார்த்திகேயனுக்கே" வெளிச்சம்...:)////


அவர்கிட்ட என்ன கோவமோ ..:)


மொக்கை நிகழ்ச்சிக்கு ஒரு விளம்பரம்
இல்லை
விளம்பரத்துக்காக மொக்கை நிகழ்ச்சியா தெரியவில்லை

Siva sankar said...

(தொடரும்)..///

ushhha appaa..Marupadiyumaa?

Thanai thalaivi said...

இந்தியா வந்து அதுக்குள்ளே கெட்டு போய்டீங்களே. இப்படி எங்க மேல கொலைவெறி தாக்குதல் நடத்தற அளவுக்கா அந்த ப்ரோக்ராம் உங்களை பாதிச்சிடிச்சு. ஆக மொத்ததுல ஆரம்பிச்சிடாங்கையா.......... :))))

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. ரசித்தேன்.... நன்றி...

NIZAMUDEEN said...

ரசித்து சிரித்தேன்

NIZAMUDEEN said...

ரசித்து சிரித்தேன்

NIZAMUDEEN said...

ரசித்து சிரித்தேன்

NIZAMUDEEN said...

ரசித்து சிரித்தேன்

NIZAMUDEEN said...

ரசித்து சிரித்தேன்

Priyaram said...

புவனா, ரொம்ப நாட்களுக்கு அப்புறம் உங்க பதிவு... உங்க ஸ்டைல் ல இந்த ப்ரோக்ராம் காமெடியாகவே இருக்கு... சிரிச்சுகிட்டே இருக்கேன்... பதிவு காமெடியோ காமெடி...

புதுகைத் தென்றல் said...

இந்தியா வந்து அதுக்குள்ளே கெட்டு போய்டீங்களே. இப்படி எங்க மேல கொலைவெறி தாக்குதல் நடத்தற அளவுக்கா அந்த ப்ரோக்ராம் உங்களை பாதிச்சிடிச்சு. ஆக மொத்ததுல ஆரம்பிச்சிடாங்கையா.......... :)))) //

கன்னாபின்னா ரிப்பீட்டு. அப்பாவி இனி அதிகமா டீவி பாக்காதீங்க சொல்லிப்புட்டேன்.

ஸ்ரீராம். said...

எனெக்கென்னவோ அப்பப்போ பதிவு போட்டுடறது நல்லதுன்னுதான் படுது... இவ்வளவு இடைவெளி விட்டு வந்து அதை ஈடு கட்ட இவ்வளவு நீளமா பதிவிட வேணாம் பாருங்க...! :))

துளசி கோபால் said...

:-)))))))))))))

Avargal Unmaigal said...

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா நீங்க.....குட்....அப்பாவி போட்டின்னு வந்த நீங்க ஜெயிச்சுருவிங்க......கூடிய சீக்கிரம் உங்களை விஜய் டிவியில பார்க்கலாம்....

Avargal Unmaigal said...

சிரிக்க வைத்த பதிவு....( உங்க மைண்ட் இப்ப சொல்லுது நாம மக்களை அழவைக்க எழுதின பதிவை படித்துட்டு இந்த ஜனங்கள் சிரிக்க வைக்கும் பதிவுன்னு எழுதுறாங்களே..கொடுமையடா கொடுமை என்று

arul said...

arumai

Chamundeeswari Parthasarathy said...

ஐயோ முடியவே இல்ல.... அதுலையும் நீங்க சொல்லி இருக்க தத்துவம்.... ச்சான்சே இல்ல.... சீக்கிரமா அடுத்த போஸ்ட்டை எதிர்பார்க்கும்....அப்பாவியின் தொண்டர்கள் சங்கம்:

by sindanaisiragugal
வாங்க பழகலாம் வாங்க!
http://www.sindanaisiragugal.blogspot.in/2012/06/blog-post_29.html

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அது இது எது - பேசாம விஜய் டிவிக்கே அப்ளை ப்ண்ணூங்க - சிவகார்த்திகேயன் திரை உலக்த்துகுல பிஸியாய்ட்டாரு நல்லாவெ நடத்துறீங்க - மிக மிக இரசிச்சுச்ச் சிரிச்சேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

சே. குமார் said...

நல்லா நடத்தி... இல்ல எழுதியிருக்கீங்க அக்கா...

Kousalya said...

ரொம்ப ரொம்ப ரசித்தேன்....சிரித்தேன் !! சூப்பர் !! :)))

கீதமஞ்சரி said...

சரளமா நகைச்சுவையை அள்ளி வழங்கறீங்க. பிரமாதம். இந்தியா வந்த கொஞ்சநாளிலேயே நம்ம ஊர் தொலைக்காட்சியின் தாக்கம் உங்களை எந்தளவு தாக்கியிருக்குதுன்னு புரியுது. பாராட்டுகள்.

எல் கே said...

சொன்னா கேட்டாதான இந்த பாழ போன டிவியை கட்டிக்கிட்டு அழறா.. என்னை படுத்தினது போதாதுன்னு
இப்ப உங்களையும் .. என்ன சொல்ல...

இப்படிக்கு
அப்பாவி கோவிந்த்

முகில் said...

welcome back...

இராஜராஜேஸ்வரி said...

கோயமுத்தூர் கோமளவல்லி

nice...

தெய்வசுகந்தி said...

:)))

Jey said...

அம்மனி அசத்துறீங்க.....கண்டினியூ

Vasudevan Tirumurti said...

TV, ATM .... idly combination.... sorry deadly combination .....

ஹுஸைனம்மா said...

//Thanai thalaivi said...
இந்தியா வந்து அதுக்குள்ளே கெட்டு போய்டீங்களே. இப்படி எங்க மேல கொலைவெறி தாக்குதல் நடத்தற அளவுக்கா அந்த ப்ரோக்ராம் உங்களை பாதிச்சிடிச்சு//

100 x repeat!!

Anuradha Kalyanaraman said...

Hi Bhuvana,

///கோம்ஸ் :மேல சொல்லுங்

சின்ராஸ் : (மேலே பார்த்தபடி) லைட் ஆல் நைஸ், கலர் லைட் ஆல்சோ நைஸ்..///

Eppadinga ippadi ellam yosikireenga. Aana coffeeyo, thanniyo kudichikitte unga blog kandippa padikkakoodathunga (namakku daan velai jaasthi apuram).

eppavum pola arumai.

வெங்கட் நாகராஜ் said...

:))

geethasmbsvm6 said...

//ஸ்ரீராம். said...
எனெக்கென்னவோ அப்பப்போ பதிவு போட்டுடறது நல்லதுன்னுதான் படுது... இவ்வளவு இடைவெளி விட்டு வந்து அதை ஈடு கட்ட இவ்வளவு நீளமா பதிவிட வேணாம் பாருங்க...! :))//

ஹெஹெஹெஹெ, ஸ்ரீராமை வழிமொழியறேன்.

அது சரி, அது யாரு சிவ கார்த்திகேயன்? ம்ம்ம்ம்ம்ம்????? புரியலையே?

geethasmbsvm6 said...

தொடர

தக்குடு said...

ஒரு வழியா மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக் பண்ணியாச்சா!! சூப்பர்ர்ர்ர்ர்! அம்பாசமுத்திரம் அலமுவோட ஆத்து மனுஷா பேர் எல்லாம் டாப்டக்கரா இருக்கு! :)

chezhiyan said...

வணக்கம்
நகைசுவையுடன் கூடிய பதிவு
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Sri Seethalakshmi said...

அன்புத்தோழி / அக்கா / தங்கை / எங்கள் அப்பாவி தங்கமணியை அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம்...

வீட்டில் அனைவரும் சுகமா / நலமா ?

வழக்கம் போல் அருமையான பதிவு. மிகவும் ரசிச்சு சிரிச்சேன்..

--
கனடால இருந்தப்பே ஒவ்வொரு டிவி சீரியலும் பதிவா இடம் பெரும்... இனிமே கேக்கவே வேண்டாம்... :)

Sri Seethalakshmi said...

அப்பாவிக்கும் விஜய் டிவிகும் ஏதோ உள்குத்து இருக்குனு எங்க ஏரியால பேசிகிட்டாங்க... அட ஆமா அது நிஜந்தான் போலிருக்கு :)

ஒரு முறை "ரசித்து சிரித்தேன்" சொன்னாலே பதிவா போட்டு தள்ளிடுவாங்க நம்ப அப்பாவி.... NIZAMUDEEN வேற 5 முறை போட்டுடற இனி ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்... :)

(NIZAMUDEEN கோவிகாதீங்க, எல்லாம் நம்ப அப்பாவியா குஷி படுத்ததான்.)

Jagannathan said...

ஒரு வழியாக தாய்மண்ணில் இருந்து முதல் பதிவு போட்டு, மற்ற பதிவர்களை ஒரு வழி பண்ணிவிட்டீங்..! இங்கிருக்கும் அசௌகரியங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வைக் குறைக்கவில்லை என்பதில் சந்தோஷம். இருந்தாலும் இந்த மாதிரி தொடரும் போட்டு மெகா சீரியலுக்கு எழுத முயற்சி பண்ணக்கூடாது! - ஜெகன்னாதன்

raji said...

இந்தியா வந்து இப்பிடியா ஆகிப் போச்சு உங்க நிலம?

எல் கே சார்!இந்த முகப் புத்தகத்துல லாம் லைக் போடுவோமே அப்படி இங்க அந்த வசதி இருந்திருந்தா, நான் நீங்க போட்ட கமென்ட்டை லைக்கோ லைக்குன்னு லைக்கியிருப்பேன்:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

India vantha apparamaavathu konjam improvement irukkumnuboru nappaasaithan hmmmmm...

அப்பாதுரை said...

பார்த்தேன்..படித்தேன்..சிரித்தேன்.

Sowmya said...

ரசிச்சிகிட்டே சிரிச்சிகிட்டே படித்து முடித்தேன்

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

mazhai.net said...

இதெல்லாம் எப்பங்க படிச்சி முடிக்கிறது!!!!!!!! ஹ்ஸப்பா...

kalyani said...

sooper.vayaru punnapochu.keep it up.

anubharat said...

enna appavi namma India kku vandhu settle aanadhoda effect a idhu. Good post aana innum muzhusa padikkala. eppidi pogudhu life? enga irukeenga India la ippo?

அப்பாவி தங்கமணி said...

@ Lakshmi - ஆஹா...இது நல்லா இருக்கே...:)@ Siva sankar - நன்றி நன்றி நன்றி...:) எஸ் மறுபடியும் தான்...:)@ Thanai thalaivi - ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா... பொழுது போகணுமே...:)@ திண்டுக்கல் தனபாலன் - நன்றி...


@ NIZAMUDEEN - அஞ்சு வாட்டி சிரிச்சு இருக்கீங்க போல... அஞ்சு கமெண்ட் இருக்கே...:) நன்றிங்க


@ Priyaram - தேங்க்ஸ்ங்க ப்ரியா


@ புதுகைத் தென்றல் - டிவி பக்கம் எங்கிங்க போறது ... அதான் கரண்ட்டுக்கு ஆப்பு வந்துடுச்சே...:)


@ ஸ்ரீராம். - ஹா ஹா... அப்படி ஒண்ணு இருக்கோ... சரிங்க, இனிமே வாரம் நாலு பதிவு போட்டுடறேன்...:)


@ துளசி கோபால் - :))))


@ Avargal Unmaigal - பாத்துங்க... விஜய் டிவி உங்க மேல கேஸ் போட்டுட போறாங்க...:) நன்றிங்க உங்க ஆதரவுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ arul - நன்றிங்க


@ Chamundeeswari Parthasarathy - நன்றிங்க


@ cheena (சீனா) - நன்றிங்க உங்க நம்பிக்கைக்கு... விஜய் டிவில பாவம் விட்டுடுவோம்னு தாங்க போகலை...:)


@ சே. குமார் - நன்றிங்க குமார்


@ Kousalya - நன்றிங்க தோழி ...:)


@ கீதமஞ்சரி - ஹா ஹா... நன்றிங்க... இந்த ப்ரோக்ராம் கனடால இருக்கும் போதே பாத்ததுதானுங்க...:)


@ எல் கே - ஹா ஹா... அவரும் இந்த ப்ரோக்ராம் பாப்பார் கார்த்தி..:)


@ முகில் - தேங்க்ஸ்ங்க முகில்


@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா


@ தெய்வசுகந்தி - :)))

அப்பாவி தங்கமணி said...

@ Jey - நன்றிங்கோ அண்ணாச்சி...:)


@ Vasudevan Tirumurti - அவ்வவ்வ்வ்வ்.... வீக் பாயிண்ட்ல புடிச்சுட்டீங்க... ஆனா அது இப்ப வீக் பாயிண்ட் இல்லையே திவாண்ணா... இப்ப இட்லி டெட்லியா வருதே...:))


@ ஹுஸைனம்மா - ஹி ஹி ஹி...:)))


@ Anuradha Kalyanaraman - ஆஹா... நன்றிங்க அனு...:)


@ வெங்கட் நாகராஜ் - :))


@ geethasmbsvm6 - சிவகார்த்திகேயனை தெரியாதா மாமி... டூ பேட் த்ரீ பேட்... :) டிவி உலகில் ஒரு உருப்படியான காமெடியன்...


@ தக்குடு - தெரியுமே...நீ அங்க தான் வருவேன்னு தெரியும் பிரதர்... இன்னுமா வைஷு? ஐஷுக்கு தெரிஞ்சா நீ பீஸ் பீஸு ஐ சே...:)))


@ chezhiyan - நன்றிங்க... நிச்சயம் வாசிக்கிறேன்... லிங்க் கொடுத்ததுக்கு நன்றி


@ Sri Seethalakshmi - ஹா ஹா ஹா... நன்றிங்க சீதா... உள்குத்து ஒண்ணும் இல்லீங், புடிச்ச ப்ரோக்ராம்னு தான் போட்டேன்... நான் போட்ட நேரம் இப்ப சிவா கார்த்திகேயன் அந்த ப்ரோக்ராம் விட்டு போய்ட்டார்... வாட் அ பிட்டி வாட் அ பிட்டி...:((


@ Jagannathan - ஹா ஹா... சரிங்க இனிமே மெகா சீரியல் எழுதல... குட்டி சீரியல் மட்டும் போடறேன்...:)

அப்பாவி தங்கமணி said...

@ raji - அவ்வ்வ்வ்... யு டூ ராஜிக்கா...:)


@ தி. ரா. ச.(T.R.C.) - :))))))


@ அப்பாதுரை - நன்றிங்க, நன்றிங்க, நன்றிங்க


@ Sowmya - நன்றிங்க சௌமியா


@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா


@ mazhai.net - வேணும்னா ரெண்டு பிரேக் எடுத்து ட்ரை பண்ணி பாருங்களேன்...:)


@ kalyani - நன்றிங்க கல்யாணி


@ anubharat - நன்றிங்க அனு... நல்லா இருக்கோம், சொந்த ஊர் கோயம்புத்தூர்ல இருக்கோம், லைப் நல்ல்லா போயிட்டு இருக்குங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

Post a Comment