Saturday, October 13, 2012

வரும்..... ஆனா வராது......:)

 
சித்ரகுப்தன் : மானிடா, நீ செய்த பாவபுண்ணியங்களை டேலி செய்து, அதன் பின் தான் உனக்கு சீட் அலாட் செய்யப்படும்
 
மானிடன் : ஒ ஐ சீ ... என்ன சாப்ட்வேர் யூஸ் பண்றீங்க மிஸ்டர்.குப்தா?
 
சித்ரகுப்தன் : சாப்ட்வேர் இல்லை, எல்லாம் ஹார்ட்வேர் தான், இதோ ஓலைசுவடிகள்
 
மானிடன் : இது ரெம்ப ஓல்ட் டெக்னாலஜியா இருக்கே? எனக்கு தெரிஞ்ச ஒரு...
 
சித்ரகுப்தன் : நிறுத்து நிறுத்து... உன் மார்கெடிங் புத்தியை இங்கும் காட்டுகிறாயா?
 
எமன் : சித்ரகுப்தா, பேச்சை குறை வேலையை கவனி. இல்லையென்றால் இந்த தீபாவளிக்கு உனக்கு போனஸ் கட் செய்து விடுவேன் மைன்ட் இட்
 
சித்ரகுப்தன் : ஐயோ அது மட்டும் வேண்டாம் பாஸ். இதோ கணக்கு பாத்தாச்சு. இவனுக்கு நரகத்தில் 1369வது ரூம் அலாட் செய்யப்பட்டிருக்கிறது ராஜா
 
எமன் : மானிடா, நரகமென்று வருத்தபடாதே, அவரவர் விதியை அவரவர் அனுபவித்து தான் ஆக வேண்டும்
 
மானிடன் : ஹ ஹ ஹா ஹ ஹ ஹா
 
எமன் : உனக்கென்ன பிராந்தா? நரகத்தில் இடமென்றால் சிரிக்கிறாயே?
 
மானிடன் : அடப்போப்பா நாங்க பாக்காத நரகமா ?
 
எமன் :என்னது ? நீ நரகத்தை பார்த்து இருக்கிறாயா?
 
மானிடன் : ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல நாப்பது வருஷம் அங்கதான் குப்ப கொட்டினேன்
 
சித்ரகுப்தன் : அது நீ பூலோகத்தில் வாழ்ந்த வருடங்கள் ஆயிற்றே?
 
மானிடன் : அதத்தான் சொன்னேன்
 
எமன் : மானிடப்பதரே உளறாதே, அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என அவ்வை பாட்டி பாடியது மறந்து போனதா உனக்கு
 
மானிடன் : ஐ சீ ... மனுசனா பொறக்கறது அரிதுன்னா அப்ப ஏன் மோட்சம் வேணும்னு கேக்குது அந்த பாட்டி? அஸ்கு புஸ்கு என்கிட்டயேவா. ஒரு நாள் போய் எங்கூர்ல இருந்து பாரு, அப்ப தெரியும் சங்கதி
 
எமன் : ஏன்? உன் ஊரில் மும்மாரி பெய்வதில்லையா?
 
மானிடன் : யோவ் ...வயித்தெரிச்சல கெளப்பாத, எமன்னு கூட பாக்க மாட்டேன்... கொண்டேபுடுவேன்
 
எமன் : என்னது?
 
மானிடன் : மும்மாரியும் எல்லாம் இல்ல கேப்மாரி வேணா கொள்ள கொள்ளா இருக்கானுவ. வருசத்துக்கு மூணுவாட்டி மழைய கண்ணுல பாக்கறதே பெரிய வேலையா இருக்கு, இது மும்மாரி முன்னூறுமாரினுட்டு...ஹ்ம்ம்
 
எமன் : அது...
 
மானிடன் : Let me finish Mr.எமன், இங்க ஜில்லுனு ஏ.சி போட்டா மாதிரி இருக்கு, இங்க உக்காந்துட்டு நீங்க பேசறீங்க பேச்சு. அங்க என்னடான்னா 'வரும்..... ஆனா வராது....' கணக்கா ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கரண்ட் கட் பண்றான். இதுல கொசுத்தொல்லை வேற?ஆமா , நீங்க ஏன் மிஸ்டர். பிரம்மாகிட்ட சொல்லி இந்த கொசு ப்ரொடக்சன் டிபார்ட்மென்ட்டை கொஞ்ச நாள் க்ளோஸ் பண்ண கூடாது
 
சித்ரகுப்தன் : அது எங்க செக்சன் இல்ல, நீ அதுக்கு தனியா தான் petition அனுப்பனும் அது சரி, கரண்ட் பிரச்சனைக்கு தான் ஏதோ கூடங்குளம் வருதுனு சொன்னாங்களே
 
மானிடன் : அது கூடங்குளம் இல்ல பாஸ், கூடாங்குளம். இந்த ஜென்மத்துல அது கூடாது
 
சித்ரகுப்தன் : மனித வாழ்வில் இதெல்லாம் சகஜம் தானே மானிடா
 
மானிடன் : வேண்டாம் மிஸ்டர் குப்தா , வாய்ல நல்லா வந்துருமாமா. நாங்க என்ன 24 மணிநேரம் கரண்ட் வேணும்னா கேட்டோம். எங்க UPS சார்ஜ் ஆகற அளவுக்கு விடுங்கனு தானே சொல்றோம்
 
எமன் : பேசி முடித்துவிட்டாயா மானிடா?
 
மானிடன் : ஏன், நீங்க பேசபோறீங்களா? யு கேன் ப்ரோசீட் யுவர் எமன்
 
எமன் : மின்சாரம் இல்லை என புலம்புகிறாயே, அதற்கு என்ன காரணமென யோசித்தாயா?
 
மானிடன் : அதான் ஊருக்கே தெரியுமே... பக்கத்து ஊர்க்காரன் தண்ணி குடுக்க மாட்டேங்கறான்
 
எமன் : ஏன், உன் ஊரில் நீர் வளம் இல்லையா?
 
மானிடன் : எங்க ஊர்ல டாஸ்மாக் வளம் வேணா நல்லா இருக்கு, நீங்க சொல்ற நீர் வளம் இல்ல
 
எமன் : புரிகிறது. ஏன் இல்லை என யோசித்தாயா?
 
மானிடன் : ஏன்னா ...மழை இல்ல
 
எமன் : ஏன் மழை இல்லை?
 
மானிடன் : நீங்க பார்த்திபனுக்கு ஒண்ணுவிட்ட அண்ணனா? ஏன் இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேக்கறீங்க?
 
எமன் : கேட்ட கேள்விக்கு பதில் சொல்
 
மானிடன் : ஏன் மழை இல்லைனா, இல்ல அவ்ளோ தான்.உங்க பங்காளி மிஸ்டர்.வருணன் ஆப்-டியூட்டி போயிட்டாரு போல இருக்கு
 
எமன் : அடிப்படை அறிவியல் கூட தெரியாத அற்பமானிடனே , நீ எப்படி இன்ஜினியரிங் பட்டம் பெற்றாய்
 
மானிடன் : அது...எப்படியோ மக் அடிச்சு பிட் அடிச்சு... அதுக்கென்ன இப்போ?
 
எமன் : மரம் இல்லையேல் மழை இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரிந்த பேசிக் சைன்ஸ். மரத்தை வெட்டி சாய்த்து, நச்சுபுகைகளை வெளியேற்றி இயற்கையை சூறையாடிவிட்டு வருணபகவான் மேல பழி போடுகிறாய்
 
மானிடன் : அது வந்து....
 
எமன் : அடுத்த பிறவியிலேனும் அடுத்தவரை குறை சொல்வதை விடுத்து இயற்கையை காப்பாற்றி வாழ கற்றுக்கொள்
 
மானிடன் : ஆனா...
 
எமன் : சித்திரகுப்தா, இவனை நரகத்தில் எண்ணெய் செக்கில் வேலைக்கு போடு, அப்போது தான் புத்தி வரும்
 
மானிடன் : எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு, அதனால ரீபைண்ட் ஆயில் செக்சன்ல போடுங்க ப்ளீஸ்
 
எமன் : உனக்கு கொலஸ்ட்ரால் அதிகம் என்று தான் உலகத்திற்கே தெரியுமே. இவனை எண்ணெய் கொப்பரையில் வேலைக்கு வேண்டாம்....
 
மானிடன் : தேங்க்ஸ் மிஸ்டர் எமன்... ஐ லைக் யு
 
எமன் : எண்ணெய் கொப்பரையில் டீப் பிரை செய்ய சொல் சித்திரகுப்தா
 
மானிடன் : ஐயோ... மிஸ்டர் எமன்
 
எமன் : ரெண்டும் ஒண்ணு தான்
 
மானிடன் : ப்ளீஸ் மிஸ்டர் எமன்... நான் சொல்றதகொஞ்சம் ...
 
எமன் : கோர்ட் இஸ் டிஸ்மிஸ்ட்
 
மானிடன் : அவ்வ்வ்வ்... என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா, உங்க வாய் தான் உங்களுக்கு எமன்னு, இன்னைக்கி எமன்கிட்டயே வாய குடுத்து வாங்கிகட்டிகிட்டனே ....:((
 

41 பேரு சொல்லி இருக்காக:

sulthanonline said...

welcome bake buvana akka , india vantha piragu blog la athigama elutha matreenga, indrilirunthu thodarnthu eluthuveengala, post nalla irukku continue pannunga

ஸ்ரீராம். said...

தக்க நேரத்தில் தாக்கும் பதிவு. ரெண்டு பக்கமும் தாக்கியிருக்கீங்களே...! சபாஷ்!

Vasudevan Tirumurti said...

மனுசனா பொறக்கறது அரிதுன்னா அப்ப ஏன் மோட்சம் வேணும்னு கேக்குது அந்த பாட்டி? //
அதானே! நியாயமான கேள்வி! :-))))

இராஜராஜேஸ்வரி said...

உங்க வாய் தான் உங்களுக்கு எமன்னு, இன்னைக்கி எமன்கிட்டயே வாய குடுத்து வாங்கிகட்டிகிட்டனே..

பாவம் எமன் !

Avargal Unmaigal said...

தகுந்த நேரத்தில் வந்த நகைச்சுவை பதிவு, முடிந்தால் இதை தமிழக முதல்வர் இமெயிலுக்கு பார்வேர்டு பண்ணுறேன் அவங்கலும் படிச்சு சிரிக்கட்டடும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அது கூடங்குளம் இல்ல பாஸ், கூடாங்குளம். இந்த ஜென்மத்துல அது கூடாது// சூப்பர்.

//
மானிடன் : எங்க ஊர்ல டாஸ்மாக் வளம் வேணா நல்லா இருக்கு, நீங்க சொல்ற நீர் வளம் இல்ல// ;)

//எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு, அதனால ரீபைண்ட் ஆயில் செக்சன்ல போடுங்க ப்ளீஸ்// ;)

//அவ்வ்வ்வ்... என் பொண்டாட்டி அடிக்கடி சொல்லுவா, உங்க வாய் தான் உங்களுக்கு எமன்னு, இன்னைக்கி எமன்கிட்டயே வாய குடுத்து வாங்கிகட்டிகிட்டனே ....:((//

ரொம்பவும் அசால்டா நகைச்சுவையா ஜோராக எழுதியிருக்கீங்க. நல்லா சிரித்தேன். மகிழ்ச்சி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

நானும் தாங்கள் சொல்லும் பூலோக நரகத்தில் மாட்டியிருப்பதால் வ்ருகைதர தாமதமாகி விட்டது, இப்போதான் உங்கள் மெயிலையே பார்க்க முடிந்தது.

இங்கு வந்தால் சொர்க்கம் போல சிரித்து மகிழ வைத்து விட்டீர்கள். சந்தோஷமாக உள்ளது.

சேட்டைக்கர்ரன் என்பவர் உங்கள் அண்ணனோ?

வாழ்த்துகள். vgk

சுடர்விழி said...

ஹ்ஹ்ஹாஹாஹா.... அருமையான காமெடி! நானும்தான் சிரிச்சு சிரிச்சு... முடியல! நகைச்சுவையோட சேத்து சிந்திக்கவும் வச்சுட்டீங்க! தொடர்ந்து நிறைய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்! நன்றி மேடம்!

கோவை ஆவி said...

sooper come back bhuvana.. I was imagining our santhaanam as manudan, vinuchakravarti as yemen and it was hilarious!! keep writing!! ungal sevai inaya ulagukku thevai!!

கோவை ஆவி said...

sooper come back bhuvana.. I was imagining our santhaanam as manudan, vinuchakravarti as yemen and it was hilarious!! keep writing!! ungal sevai inaya ulagukku thevai!!

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி தங்க மணி - நகைச்சுவையின் உச்சம் - நன்றாகவே இருக்கிறது - மிஅக் மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சேட்டைக்காரன் said...

நான் கூட எமலோகம்னு தனியா இருக்கா, இல்லாட்டி அது பூலோகத்தோட எக்ஸ்டென்ஷன் கவுன்ட்டரான்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்தேன்! டவுட்டைக் கிளியர் பண்ணிட்டீங்க! தேங்கீஸு! (உங்க ஸ்டைல்!)
:-)

சேட்டைக்காரன் said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சேட்டைக்கர்ரன் என்பவர் உங்கள் அண்ணனோ?//

சார், தம்பியான்னு கேட்டிருக்கணும்! இவங்க எனக்கெல்லாம் ரொம்ப சீனியர் - வலையுலகத்துலே! :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

சேட்டைக்காரன் said...
//வை.கோபாலகிருஷ்ணன் said...

சேட்டைக்கர்ரன் என்பவர் உங்கள் அண்ணனோ?//

சார், தம்பியான்னு கேட்டிருக்கணும்! இவங்க எனக்கெல்லாம் ரொம்ப சீனியர் - வலையுலகத்துலே! :-)//

Sir,

அப்படித்தான் கேட்கலாம் என்று நினைத்தேன்.

ஆக்சுவலாக “தாங்கள் சேட்டைக்காரனுக்கு அக்கா போலத் தெரியுறீங்க” என்று தான் எழுத நினைத்தேன்.

பிறகு தான் யோசித்தேன். அக்கா என்று சொன்னாலே சில பெண்மணிகளுக்குக் கோபம் வந்துவிடும். இது நான் என் அலுவலகத்தில் பல பெண்மணிகளுடன் பழகியதில் தெரிந்துகொண்ட முக்கியமான அனுபவம்.

அக்கா தம்பியோ, அண்ணன் தங்கையோ அந்த ஆராய்ச்சிகளெல்லாம் இப்போது நமக்குள் வேண்டாம்.

நீங்க ரெண்டுபேருமே என்னை அவ்வப்போது நல்லா சிரிக்க வைக்கிறீங்க. நானோ ஓர் நகைச்சுவை விரும்பி. அதனால் நாம் எல்லோரும் உடன் பிறப்புகளே. OK தானே Sir.

அன்புடன்
VGK

middleclassmadhavi said...

எமனின் மனைவியின்(ஐயோ!) வைக் கூப்பிட்டும் பயனில்லை!! பூலோகம் இப்ப நரகம் தான்! நல்ல பதிவு! :-))

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இந்தியா வந்து, முதல் பாதிப்பாக, தொல்லைக்காட்சிப் பதிவு!!

இப்ப, ரெண்டாவதா, மின்சாரப் பதிவு!!

அடுத்து, தண்ணீர், சமையல் காஸ் என்று வருமோ!!??

“இடுக்கண் வருங்கால் நகுக” என்பதை அழகாப் பின்பற்றி, எங்களையும் நகைக்க வைக்கிறீங்க!! நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// 'வரும்..... ஆனா வராது....' கணக்கா ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கரண்ட் கட் பண்றான். //

சென்னையில் 1 அவர்..... ஊர்ல 8 அவர்ஸ் :-(((

Anonymous said...

"I was imagining our santhaanam as manudan, vinuchakravarti as yemen and it was hilarious!! keep writing!! ungal sevai inaya ulagukku thevai!!"

Really Superb! Manam vittu sirithen,
Nalina

Subhashini said...

ஹுசைனம்மா சொல்ற மாதிரி ஒவ்வொரு பிரச்சனையா எழுத போற போல..... ஹ்ம்ம் பார்க்கலாம். நன்னா தான் போறது

RVS said...

வருது... சிரிப்பு வருது... :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

கானடா விட்ட அப்பறம் பிளக் விட்டாச்சுன்னு நினைச்சேன் . இந்தியாவிலே கூட கற்பனை பிச்சுக்கிட்டு போகுது.அதுவும் திருப்பூர் கிட்டே.வீட்டை வெச்சிகிட்டு.

sandhya said...

அப்பாவி தங்கமே சூப்பர் போஸ்ட் தான் கலாய்ச்சு கலாய்ச்சு அந்த யம தருமரஜனே கூட விடல்லே பாரு ...+

கோவை2தில்லி said...

ரசித்தேன். சிரித்தேன். பிரமாதம் போங்க.
அதானே இங்க விட நரகம் பெரிய விஷ்யமா என்ன!

மஞ்சுபாஷிணி said...

அப்பாவியா இருந்துக்கிட்டு என்னாமா ரௌண்ட் கட்டி அடி அடி அடின்னு அடிச்சிருச்சே இந்தப்பிள்ளை....

தங்கமணி தங்கமணி...

சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து நைசா கேள்வியும் கேட்டு இதான் சாக்குன்னு தாக்கு தாக்குன்னு தாக்கி...

வூடு கட்டி அடிக்கிறதுன்னா இதானாப்பா??

ஓல்ட் டெக்னாலஜி, ஹார்ட்வேர் ஓலைச்சுவடி.... எமனின் தர்மசங்கடமான பதில்கள், மானிடன் ஆனாலும் ஃபர்ஸ்ட் ரௌண்ட்ல எமனை தாக்கு தாக்குன்னு தாக்க... அடுத்த ரௌண்ட்ல எமன் இட்ஸ் மை டர்ன் மை பாய் அப்டின்னு வூடு கட்டி அடிச்சிருக்கார்ப்பா... சாரி சாரி.. வூடு கட்டி அடிச்சிருக்கீங்க தங்கமணி... இனிமே அப்பாவின்னு சொல்லவே மாட்டேன்பா..

நாட்டு நடப்பு எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா ஆத்தா இது கத்தி மேலே நடக்குற மாதிரி சமாச்சாரம்.... அதுவும் இப்போதைய பிரதான பிரச்சனைகள் எல்லாத்தையும் அழகா உங்க வட்டத்துக்குள் கொண்டு வந்து.. அதை நகைச்சுவையாகவும் அதே சமயத்துல கோண்டு புள்ளைகளா படிச்சு சிரிச்சது போதும் சிந்திக்க துவங்கு மனிதா என்பது போல் நெத்தியடிப்பா...

முதல் வரில தொடங்கி கடைசிவரி வரை நிறுத்தாம நான்ஸ்டாப்பா சிரிக்கவைத்த ரசிகமணி சிரோன்மணி தங்கமணியை எப்படி என்ன சொல்றதுன்னே தெரியல...

இப்படி கூட அசத்துவாங்களா என்ன??

போப்பா போப்பா வேலையப்பாருப்பா நரகமாம் நரகம் அதுல தானே இத்தனை வருஷம் குப்பை கொட்டினேன் இதுல ஆரம்பிச்சு லைனா எல்லா பிரச்சனைகளும் க்யூவில் நின்னு நான் நான் நான் அப்டின்னு கொட்டோ கொட்டுன்னு கொட்டி அடைமழை அடிச்சு தீர்த்தது போல் சூப்பர்ப்பா...

20 மணி நேர மின்வெட்டு தெரியுமா அப்டின்னு தேம்பி அழுதா....

அதுக்கு தான் கூடங்குளம் வருதேப்பா அப்டின்னு சமாதான சால்ஜாப்பு...

விடுவாரா வாயாடி மானிடர்... அது கூடாங்குளம் ம்க்கும் அப்டின்னு சொல்லிட்டு.... எமனையே முழி பிதுங்க வெச்சுட்டாரே ஹை சபாஷ் அப்டின்னு நாம நினைச்சால்....

ஒன் மினிட் மிஸ்டர் மானிடா அப்டின்னு ஒரே கேள்வில கவுத்துட்டாரே மானிடரை....

மரம் இல்லன்னா மழை இல்லை, மழை இல்லன்னா தண்ணி இல்லை.. தண்ணி இல்லன்னா அக்கம் பக்கம் கடன் கேட்டே ஆகனும். தர விருப்பம் இருக்கிறவன் தரான். தர விருப்பம் இல்லன்னா இப்படி தான் அவஸ்தைப்படனும் மின்வெட்டு லொட்டு லொசுக்கு அப்டின்னு....

சூப்பர்ப்பா தங்கமணி....இந்தாப்பா தங்கமணி எதுக்க் கையக்காட்டுப்பா... எதுக்கா? ம்ம்ம்ம் சாட்டை இருக்கான்னு பார்க்கத்தான்.. இந்த அடி அடிச்சிருக்கீங்களே.... அன்புநன்றிகள் எல்லோரையுமே சிந்திக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தமைக்கு....

மஞ்சுபாஷிணி said...

த.ம. 1

அருணா செல்வம் said...

ரசித்துச் சிரித்தேன் தோழி.
நன்றி.

மாதேவி said...

ஹா...ஹா..
நாட்டுநடப்பு யமலோகம் மட்டும் போய்விட்டது.

Geetha Sambasivam said...

hihihihi மீ டூ இன் த சேம் போட். அதான் வரதுக்கு இத்தனை நாளாச்சு. :))) நல்லா வாய்விட்டுச் சிரிச்சேன். :))))))இங்கேயும், வரும் ஆனா வராது ரகம் தான்.

Geetha Sambasivam said...

தொடர

Sri Seethalakshmi said...

பதிவு மிக அருமை. படித்தவுடன் சிரிப்பு வருது...
ஆனால் எல்லோரும் ஆழ்ந்து சிந்திக வேண்டிய விஷயம் இது.

இதை படித்தவுடன் எனக்கு அந்நியன் படத்தின் வசனம் நினைவுக்கு வருது.
(இது சிரிக்கிற விஷயம் இல்லை your honor, எல்லோரும் ஆழமா சிந்திக்க வேண்டிய விஷயம்)

குந்தவை said...

ha..ha.. super Bhuvana.

priya.r said...

ஆஹா ! பதிவு போட்டு மழையை வரவழைத்தது நம்ம அப்பாவியா தான் இருக்கும் :) :)

பிராந்து
கொண்டேபுடுவேன்......
வர வர தமிழ் சினிமா ரெம்பா பார்க்கறீங்களோ :) :)

Siva sankar said...

:)

ஆதிரா said...

//மானிடன் : வேண்டாம் மிஸ்டர் குப்தா , வாய்ல நல்லா வந்துருமாமா. நாங்க என்ன 24 மணிநேரம் கரண்ட் வேணும்னா கேட்டோம். எங்க UPS சார்ஜ் ஆகற அளவுக்கு விடுங்கனு தானே சொல்றோம்//

தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நெலம... கொண்டே புட்டீங்க பதிவுல.. அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...

நன்றி...

மாற்றுப்பார்வை said...

நல்ல நகைச்சுவை பதிவு

அப்பாவி தங்கமணி said...

@ sulthanonline - ரெம்ப நன்றிங்க சுல்தான். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்

@ ஸ்ரீராம்.- நன்றிங்க

@ Vasudevan Tirumurti -ஆஹா ... அதிசியமா எனக்கு ஆதரவா ஒரு கமெண்ட்... ஏற்கனவே மழை கொட்டுதே திவாண்ணா...:)

@ இராஜராஜேஸ்வரி - நான் பாவமில்லயாம்மா ...:)

@ Avargal Unmaigal - பண்ணுங்க பண்ணுங்க...நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க...சேட்டைக்காரன் மாதிரி நெறைய அண்ணன்கள் இங்க இருக்காங்க...:)

@ சுடர்விழி - ரெம்ப நன்றிங்க சுடர்விழி

@ கோவை ஆவி - ஆஹா ... நீங்க சொன்னா மாதிரி கற்பனையில் பாத்தா ஜோரா இருக்கு போங்க ...:)

@ cheena (சீனா) - நன்றிங்க சீனா

@ சேட்டைக்காரன் - நன்றிங்க... அதே அதே அண்ணன் என்ன தம்பி என்ன வலையுலகத்திலே ...:))

அப்பாவி தங்கமணி said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - ச்சே ச்சே அக்கானு சொன்னாவெல்லாம் நான் டென்சன் ஆக மாட்டேன் சார் ... மிக்க நன்றி

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

@ ஹுஸைனம்மா - தண்ணீர் பத்தி நான் எழுதி வெச்சு இருக்கறது உங்களுக்கு எப்படி தெரியும்...அவ்வவ்...:)

@ பட்டிகாட்டான் Jey - :)

@ Anonymous - நன்றிங்க நளினா

@ Subhashini - தேங்க்ஸ் அக்கா

@ RVS - வரணும் சிரிப்பு வரணும் ...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹ ஹ தேங்க்ஸ் அங்கிள்

@ sandhya - தேங்க்ஸ் சந்த்யா

@ கோவை2தில்லி - ரெம்ப சரிப்ப்பா...:)

அப்பாவி தங்கமணி said...

@ மஞ்சுபாஷிணி - ரெம்ப தேங்க்ஸ்'ங்க அலசி ஆராய்ஞ்சு கமெண்ட் போட்டதுக்கு

@ அருணா செல்வம் - ரெம்ப நன்றிங்க அருணா

@ மாதேவி - அதான் பாருங்களேன் ..:)

@ geetha Sambasivam - தேங்க்ஸ் மாமி

@ Sri Seethalakshmi - கரெக்ட் சீதா

@ குந்தவை - தேங்க்ஸ் குந்தவை

@ priya.r - ஹி ஹி ...எல்லாம் உங்க கூட சேந்து தான் இப்படி ஆச்சு ...:)

@ Siva sankar - :)

@ ஆதிரா - நன்றிங்க ஆதிரா

@ திண்டுக்கல் தனபாலன் - வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றிங்க

@ மாற்றுப்பார்வை - நன்றிங்க

Mr.Salem said...

no chance. Süper.

அப்பாவி தங்கமணி said...

@ Mr.Salem - Thank you

Post a Comment