Thursday, November 01, 2012

மௌன ராகம்... (சிறுகதை - வல்லமை இதழில்)

 

வல்லமை இதழில் எனது இந்த சிறுகதை பிரசுரிக்கபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு

1962 

“மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி”
 
“சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி
 
அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”
 
“இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள்
 
ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க
 
அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள்
 
ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல்
 
தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா
 
சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது
 
ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது
 
கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை, தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது
 
அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள்
 
“கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள்
 
மற்றொரு நாள்…
“சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற
 
“இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய்
 
செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள்
 
அன்று மதியம்…
“என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை
 
"இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர
 
அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள்
 
“காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன்
 
தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா
__________________________________

1972 

“மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”
 
“எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள்
 
“மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணன் வர “போலாம்’ண்ணா” என்றாள்
 
“என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க
 
ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன்
 
சில மாதங்களுக்கு பின்…
“மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற
 
“ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள்
 
“ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”
 
“ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள்
 
சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா
 
மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான்
 
மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள்
 
“என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா
 
“அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல
 
“கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி
 
கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன
_________________________________

2012

காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன்
 
அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா, மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள்
 
ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள்
 
“சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன் தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி
 
தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது
 
அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்
 
ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா
 
தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது
 
முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான்
 
“அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான்
 
“அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி
 
ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு
 
அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி விழுந்தாள் மைதிலி
 
பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை
 
சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது
 
எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன்
 
தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர்
 
தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது
 
(முற்றும்)

37 பேரு சொல்லி இருக்காக:

geethasmbsvm6 said...

அப்பாடா, சொன்னதும், அதாவது கூப்பிட்டதும் வந்துட்டேன். வடை எனக்கே எனக்கு

geethasmbsvm6 said...

ஹிஹி இனிமேத் தான் கதையைப் படிக்கணும், படிச்சுட்டு வரேன். :)))

geethasmbsvm6 said...

ம்ஹூம், சரியில்லை, முடிவு எனக்குப் பிடிக்கலை. எழுபது வயசுக்கப்புறம் செத்தும் போனப்புறம் மாறினா என்ன? மாறாட்டி என்ன? இருக்கிறச்சேயே காலா காலத்திலே மாறிட்டதாக் கதையை ஏதேனும் ஒரு நிகழ்வைக் காட்டி மாத்துங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ வோட் இந்தக் கதைக்கு.

Vasudevan Tirumurti said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கதை படிக்காமலே கமென்டராங்கப்பா!

புவனி ஏற்கெனெவ்வே வாசல்ல தெருவில் வெள்ளம் ஓடுது. நீ வேற இப்படி கதை எழுதினா... எனக்கு அளுவாச்சியா வருது!

geethasmbsvm6 said...

ரங்கப்பா தெரியும், அது யாராக்கும் ராங்கப்பா? :P:P:P:P

கதையைப் படிச்சுட்டுத்தான் விமரிசிச்சிருக்கேனே? பார்க்கலை?

sandhya said...

geethasmbsvm6 said...

ம்ஹூம், சரியில்லை, முடிவு எனக்குப் பிடிக்கலை. எழுபது வயசுக்கப்புறம் செத்தும் போனப்புறம் மாறினா என்ன? மாறாட்டி என்ன? இருக்கிறச்சேயே காலா காலத்திலே மாறிட்டதாக் கதையை ஏதேனும் ஒரு நிகழ்வைக் காட்டி மாத்துங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ வோட் இந்தக் கதைக்கு.

naanum invanga side thaan ..eppothum vaayilla poochiyaa irunthu ellaam sahikkarathu ennamopaa enaku avlo sariyaa padale...
aanaalum en snehithi appavi ezhuthina kathaiyaache ...nalla irukku nalaa thaan irukkum ..all the best
with love
sandhya

கோவை ஆவி said...


கொஞ்சம் Tissue இருந்தா கொடுங்க.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல.. ( சந்தானம் சீரியசா நடிச்சா எப்படி பாக்க முடியாதோ, அது மாதிரி, உங்க கிட்ட இருந்து நாங்க எதிர் பாக்குற Variety வேற.) ஆனா நல்ல கதை BTW.

வெண்கல கடை said...

Naattaaama....theerpa maathi sollu :)

கோவை ஆவி said...

கதை 1960s ல நடக்கறதா சொன்னதால தப்பிச்சீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க எங்க இப்படி இருக்காங்க?

திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... 'நல்ல' கதை...

நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு அழுவாச்சியா வருது.... ஒரு பாட்டம் அழுதுட்டு வரேன்....

அதுக்குள்ள ஒரு நகைச்சுவை பதிவு போட்டு compensate பண்ணிடும்மா....

vinu said...

tooooooooooooooooo boaring................

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றவள் மனதை கனக்கவைத்தாள்

Porkodi (பொற்கொடி) said...

//ம்ஹூம், சரியில்லை, முடிவு எனக்குப் பிடிக்கலை. எழுபது வயசுக்கப்புறம் செத்தும் போனப்புறம் மாறினா என்ன? மாறாட்டி என்ன? இருக்கிறச்சேயே காலா காலத்திலே மாறிட்டதாக் கதையை ஏதேனும் ஒரு நிகழ்வைக் காட்டி மாத்துங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோ வோட் இந்தக் கதைக்கு. //

for once, i second geethu paati's thoughts. :)

அந்த படத்துல இருக்கும் வாக்கியத்துக்கு பொருத்தமான கதை தான், மற்றபடி அல்ல.(செத்தப்புறம் திருந்தினா என்ன, திருந்தலேன்னா என்ன, தண்டனை நினைச்சு இருந்தா என்ன, இல்ல அவள் மன்னிச்சுடுவாள்னு ஃபீல் பண்ணா தான் என்ன, doesnt matter anyway!) அதுவும் ஆயுசுல முக்கால்வாசி குடும்பம் நடத்துவாராம்.. ஆனா யாரும் உண்மையை சொல்ல மாட்டாங்களாம்.

ராதா இருந்தது கூட பொறுமையும் இல்ல (இளிச்சவாய்த்தனம், கணவனை அவனின் தங்கை முட்டாளாக்க அனுமதித்தது, பிள்ளைகள் அநியாயம் நடந்தாலும் எதிர்க்காமல் வாய் மூடி மவுனியாக இருக்கும்படி வளர்த்தது, அவங்களியும் பிடிச்சு ஜெயில்ல போட்டுருக்கணும் யுவர் ஆனர்.)

அப்பாதுரை said...

கதைக்கரு 2012 1972 1962 என்று பின்னோக்கி flash cut எழுதியிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்.

துளசி கோபால் said...

என்னப்பா........... மனைவியைக் கொஞ்சம்கூடப் புரிஞ்சுக்காத ஒரு கணவன்?????

கடைசிவரை கண்ணீரோடும் கனத்தமனத்தோடும் வாழ்ந்துருக்காளே இந்த ராதா!!!!

ம்ஹூம்...... சரிப்பட்டு வரலை:(

செத்தபிறகு திருந்தினா என்ன கதறுனா என்ன?

Siva sankar said...

:(

கோவை2தில்லி said...

முடிவு தான் எனக்கும் சரியாத் தோணலை. செத்தப்பிறகு யார் திருந்துனா தான், என்ன ஆகப் போறது? வாழும் போது நிம்மதியில்லாமல்? ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாளாவது தங்கையின் பேச்சை ப்ற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

geethasmbsvm6 said...

ஹாஹா, எனக்கே வோட்டு. ஏடிஎம், கதையை மாத்துங்கப்பா. முடிவையானும் மாத்துங்க. இல்லைனா முற்றுகை, போராட்டம், பின்னூட்டம் போட்டுட்டே இருப்போம். நண்பர்கள் நாங்கள் சேர்ந்துவிட்டோம், மாற்றாமல் விட மாட்டோம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம். :))))))))

RAMVI said...

என்ன அப்பாவி? ராதா இறந்த பிறகுதான் அவர் மனம் மாறனுமா? இருக்கும் போதே உணர்ந்திருக்காலாமே? எனக்கு கஷ்டமா இருக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

Good

Jaleela Kamal said...

இப்படியும் பல பேர் இருக்கிறார்கள் என்பது உண்மை தான் ஆனால் அது காலக்கட்டத்தில் சரியாகிடும்.


ஆனால் இந்த கதையில் அவளும் வாயே திறக்காமல் எப்படி 50 வருடம் ஓட்டினால், இவரும் இறந்த பிறகு அழது திருந்தி என்ன பயன்?

மோகன்ஜி said...

நல்ல கதை.. எனக்கும் அப்பாதுரை சொன்னது தான் தோன்றியது.. ( "அப்போ கீழிருந்து படிச்சிட்டு போங்களேன்" எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது!)

Jagannathan said...

Very artificial. Doesn't invoke any sympathy for the lady or the husband. Irritation only remains. Seems you have started seeing a lot of TV serials after coming to India and like tears! Please switch if off for some time!

I had also once requested you not to encourage people who write for 'vadai' and you had agreed with it. Sadly it continues. - R. J.

geethasmbsvm6 said...

ஏடிஎம், இந்தியா வந்ததும், தமிழ் சீரியல்களாப் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா? சரியாப் போச்சு போங்க, உங்க ஒரிஜினாலிடி காணாமப் போயிடும் அப்புறம்.

ஜகந்நாதன் சாருக்கு வடைனா அலர்ஜியா? :))))))) சும்மா உள உளாக்கட்டிக்குச் சொல்றது தானே. சீரியஸா எடுத்துக்கச் சொல்லாதீங்க. நண்பர்களுக்குள்ளே விளையாட்டுப் பேச்சு சகஜம். :)))))))

geethasmbsvm6 said...

அதோட அவர் உங்க கிட்டே சொன்னதோ, நீங்க வடை வேண்டாம்னதோ எனக்கு இப்போத் தான் தெரியும். :))))

Jagannathan said...

Madam Geetha, Please don't mistake me for the comment. I felt it will be an honour to the blog writer if more people read the posts and give their true opinions on the same. (No doubt, comments praising the post will be more welcome!). We all read the blog as well as the comments. But who posts the first comment - even without reading the post - may not be of interest to any one. Thanks for taking it in the right spirit. - R. J.

geethasmbsvm6 said...

Oh, take it easy Mr. Jegannathan, I did not mistake you. No hard feelings from my side. Thank you for your concern. Have a Happy Deepavali. Adavance Greetings.

அமைதிச்சாரல் said...

அப்பாவி நாட்டாமை.. தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... எப்பவும் விளையாட்டு புள்ளையா இல்லாம கொஞ்சம் சீரியஸ்'ஆ எழுதுவோம்னு ஒரு எதார்த்த படைப்புக்கு முயற்சி செஞ்சா....அதுக்கு இவ்ளோ பாராட்டா? அவ்வ்வ்வவ்வ்...:)@ geethasmbsvm6 - வடை பஜ்ஜி போண்டா எல்லாமும் உங்களுக்கே டீ கடைல இருந்தே நேரா பார்சல் அனுப்பியாச்....:) மாமி, எல்லாரும் அங்கிள் மாதிரியே நல்லவங்களா இருப்பாங்கன்னு நம்பினா எப்படி, இப்படியும் மனிதர்கள் உண்டுனு சொல்லத்தான் இந்த பதிவு. போய் சேந்தபுறம் கூட புரிஞ்சுக்காதவங்களும் உண்டு.@ Vasudevan Tirumurti - திவாண்ணா, இது ரெம்ப நாள் முன்னாடி ஆரம்பிச்ச கதை, முடிக்க இப்ப தான் டைம் கிடைச்சது. வெள்ளத்தோட வெள்ளமா இருக்கட்டும்னு ரிலீஸ் பண்ணிட்டேன்...:)@ sandhya - ஆஹா... உங்க ஆதரவுக்கு நன்றி சந்த்யா...:)

@ கோவை ஆவி - அவவ்வ்வ்வ்....அப்போ என்னை காமடி பீஸா மட்டும் தான் பாப்போம்னு சொல்றீங்களா ஆனந்த்...:)
@ வெண்கல கடை - என்னமோ மாத்த மனசு வரலைங்க சாரிங்க@ கோவை ஆவி - ஆனந்த்... எனக்கு தெரிஞ்சே சில பொண்ணுங்க இந்த 2012லயும் இப்படி இருக்காங்க. கதையல்ல நிஜம் சார்@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க@ வெங்கட் நாகராஜ் - ஒகே அண்ணே... இதோ போட்டுடறேன்...:)@ vinu - :(((

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - தேங்க்ஸ் அம்மா


@ Porkodi (பொற்கொடி) - ஹே...... ஒருவழியா கீதா பாட்டிக்கு உங்களை ஆமாம் போட வெச்சாச்சு சக்சஸ் ...:) யாரும் உண்மையா சொல்லாம இல்ல கொடி, ஆனா அந்த மனுஷன் நம்பணுமே. அவர் பொண்ணு அத்தை மேல தப்பு சொன்னப்பவும் அடி தானே விழுந்தது. காது கேக்காதவங்களுக்கு சத்தமா சொல்லி புரிய வெக்கலாம், கேக்காத மாதிரி நடிக்கரவங்கள என்ன செய்ய முடியும் சொல்லுங்க. இந்த கதையின் நோக்கம் இதை படிக்கற யாரோ ஒருத்தருக்காச்சும் வாழும் காலத்துலேயே (இளம் வயது என்றாலும்) உடன் இருப்பவர்களின் அருமையை புரிய செய்வது தான். ஓவரா புழிஞ்சுரிந்தா ஒரு தபா பொறுத்துக்கோங்க அம்மணி...:)


@ அப்பாதுரை - ரெம்ப சரிங்க... எனக்கு அது தோணாம போச்சேனு வருத்தமா இருக்கு...:(


@ துளசி கோபால் - உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு நெனச்சனே...அவ்வ்வ்வ்


@ Siva sankar - :)


@ கோவை2தில்லி - நீங்க சொல்றது சரிதான்ப்பா...ஆனா அந்த ஆள் திருந்தலயே...:(


@ geethasmbsvm6 - அவவ்வ்வ்வ்... எவ்ளோ யோசிச்சும் மாத்த மனசே வரலை மாமி... அடுத்த கதை வேணா உங்களுக்கே டெடிகேட் பண்ணிடறேன் சரியா...:)


@ RAMVI - ரெம்ப சரி, எனக்கும் வருத்தம் தாங்க... கொஞ்சம் எதார்த்தமா இருக்கணும்னு இந்த முடிவு சாரி


@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்


@ Jaleela Kamal - அவள் வாய திறக்காமல் இல்லை அக்கா, ஏழை சொல் அம்பலம் ஏறவில்லை என்பது தான் நிதர்சனம், இன்றும் கூட

அப்பாவி தங்கமணி said...

@ மோகன்ஜி - ஹ ஹ... கீழ இருந்தெல்லாம் படிக்க சொல்லலைங்க. எனக்கு அது தோணலியேனு வருத்தம் தான்...:)

@ Jagannathan - Vanakkam sir, I understand what you're trying to say. But this was written long before I moved to India, couldn't complete it then, so released it now. TV serial ellam paakaradhilla sir. But I wanted to ensure, this is not just fiction, there are still people living like this. Only thing is, we dont get to know about it, as affected people never say it out loud. Not just elders, youngsters of this generation also doing the same thing. Just to satisfy their parents, husband simply ignores what his wife has to say (I agree it is viceversa as well). What I'm trying to say is "Sadly, it is not just fiction... though I'm not a victim, I did witnessed some parts of this story here and there in various people's lives"...:(

@ geethasmbsvm6 - ஆஹா... இல்ல மாமி, நான் சீரியல் எல்லாம் பாக்கறதில்ல, கரண்ட் இருந்தா தானே பாக்க...:) அவரும் வடை பத்தி தப்பா சொல்லை மாமி. படிக்காமையே சிலர் கமெண்ட் போட்டப்ப ஒரு முறை வருத்தபட்டார் மாமி, வேற ஒண்ணுமில்லை

@ Jagannathan - Not a problem sir, I understood what you meant. Geetha mami is a wonderful person, no hard feelings at all

@ அமைதிச்சாரல் - செம்பு தொலஞ்சு போச்சு அக்கா... கிடைச்சதும் தீர்ப்ப மாத்திடலாம் ஒகே....:))))

Sri Seethalakshmi said...

நீங்க எந்த அளவுக்கு சிரிக்க சிரிக்க எழுதுரீன்களோ அவ்வளோ அழ வைக்கிறீங்க ...

கண்கள் குளமாகி விட்டது.
யார் எப்படி சொன்னாலும் இந்த கதை என் வரையில் 80% உண்மை.

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - Thanks a lot Seetha

Jagannathan said...

Thank you for your and Mrs Geetha's responses to my comments. I understand you have seen such people who suffered in silence. Only thing is that they seem to be masochists to me. May be I am wrong and they are all prisoners of circumstances or brought up in such a way as not to oppose any one. May God help them. - R. J.

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - Thank you

Post a Comment