Thursday, July 04, 2013

உன்னை பார்த்த பின்பு நான்...:)))

 
மொதல்ல ஒரு அதி முக்கியமான விசயத்த சொல்லிடறேன். நேத்தைக்கு ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ... ஹேப்பி பர்த்டே டு மீ...:) என்னதிது அல்பம் மாதிரி தன்னோட பர்த்டே'க்கு தானே பாடிக்குதுனு நெனைக்கறீங்களா. நான் அப்படி தாங்க
 
அப்ப மூணு வயசுலயும் சரி... இப்ப முப்பது வயசுலயும் சரி... ஒகே ஒகே டென்சன் ஆகாதீங்க. முப்பதை தாண்டி மூணு வருசமாச்சு. ஐயயோ இல்லைங்க நேற்றோட முப்பதை தாண்டி வருஷம் நாலாச்சு. என்னது இவ்ளோ சிம்பிளா வயச சொல்றேனு யாரும் நோ டென்ஷன் ஒகே. இதென்ன சிதம்பர ரகசியமா? சிலருக்கு பர்த்டே விஷ் சொன்னா "அதையேங்க ஞாபக படுத்தறீங்க. வயசு ஆகுதேனு வருத்தமா இருக்கு"னு பீல் பண்ணுவாங்க
 
எனக்கு அப்படியெல்லாம் இல்லப்பா. வயசு கூடினதால எதையும் இழந்துட்டதா நான் நினைக்கல. அந்த அந்த வயசுக்கு உள்ள சந்தோசங்களை அனுபவிக்கணும், அதுக்கு மேல நோ பீலிங்னு சமீப காலமா நான் முடிவுக்கு வந்துட்டேன். என்னத்த சாதிச்சுடேனு இவ்ளோ பீலா விடறேன்னு நீங்க கேக்கறது புரியுது. எல்லாரும் சாதிச்சா சாதனைக்கு மதிப்பில்லாம போய்டும் யு சி...:)
 
ஜோக்ஸ் அபார்ட்.... உத்ரகாண்ட்ல உயிர் பிழைச்சு வந்தவங்கள கேளுங்க.., உயிர் வாழ்றதே சாதனை தான்னு சொல்லுவாங்க. நிலவரம் அப்படி இருக்கு. இயற்கை பேரழிவுனு ஈஸியா பழிய இயற்கை மேல போட்டுட்டு தப்பிச்சுட்டோம். அதுல நம்ம தப்பு என்னனு யாரும் யோசிக்கற மாதிரி காணோம். முடிஞ்ச வரை இயற்கையோட கோபத்துக்கு ஆளாகாம இருக்க முயற்சி செய்வோம்... சரி தானா
 
என்ன சொல்லிட்டு இருந்தேன்னு இப்ப மறந்தே போச்சு... ஹ்ம்ம்... அதாவது என்னோட மூணு வயசுலயும் சரி இப்ப முப்பது சொச்சம் வயசுலயும் சரி, எனக்கு பர்த்டே எனக்கு பர்த்டேனு நானே சொல்லிக்கிட்டு இருப்பேன். சிலர் என்னை கிண்டல் கூட பண்ணுவாங்க. இதுல என்னங்க இருக்கு... ஏன் வயசு ஏற ஏற நாம இந்த பூமிக்கு வந்த தினத்தை கொண்டாடறது தப்பா? எனக்கெல்லாம் அப்படி இல்லப்பா. 80 ஆனாலும் (இருந்தா பாப்போம்) பிறந்த நாள் எனக்கு ஸ்பெஷல் தான்
 
நெறைய பேருக்கு மனசுல இப்படி தான் இருக்கும். ஆனா வெளிய காட்டிக்க மாட்டாங்க. நாம அப்படி இல்லைனு தெரிஞ்சுது தானே. சரி மேட்டர்க்கு வரேன். என்னை விட சின்னவங்க எல்லாம் "ஹேப்பி பர்த்டே டு யு" பாடிட்டு சண்டை போடாம ஆளுக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கோங்க, நன்றி தம்பி தங்கைகளே
 
 
 
அப்புறம், பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ், உங்களுக்கு பாயசம் கப்ல இருக்கு, நன்றி. பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணாம ஹேப்பி டு யு பாடினா, இனிமே உங்க வீட்டு இட்லி கல்லு கல்லா வரும்னு சாபம் போட்டுடுவேன், ஆமா சொல்லிட்டேன் ...:))
 
 
என்னோட பிறந்த நாளுக்கு தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், கூகிள் பிளஸ் மற்றும் பேஸ்புக் மூலமாக வாழ்த்திய ப்ளாக் நட்புகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எல்லாரும் பிஸி தான். அதுக்கு இடைலயும் பிறந்த நாளை நினைவு வெச்சு (அல்லது பேஸ்புக் ரிமைன்டர் உபயத்துல..;) வாழ்த்தறது இன்னைக்கி அவசர உலகில் பெரிய விஷயம். நன்றி மீண்டும்
 
எல்லாம் சரி... நீ இதுவரைக்கும் சொன்னதுக்கும் இந்த போஸ்ட் தலைப்புக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா. சொல்றேன் சொல்றேன்... அடுத்த மேட்டர் அதான்
 
ஜூன் மாதத்தின் இறுதி நாளில்... ஜவுளி கடைகளில் ஆடி தள்ளுபடிகள் ஆரம்பிக்கும் முந்திய நாளில்... கோவையின் பிரபலமான குறுக்கு சந்து தெருவில் (கிராஸ் கட் ரோடு) அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் வளாகத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது
 
..... இப்படி எல்லாம் பில்ட் அப் பண்ணி Facebookல ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு "என்னாச்சு?"னு பத்து பேர் கேக்க, அதை பாத்து இன்னும் பத்து பேர் "இவங்கதான அவங்கதான"னு கெஸ் பண்ண, அதை பாத்து இன்னும் பத்து பேர் லைக் போட, அதை பாத்து இன்னுமொரு பத்து பேர் "நான் அப்பவே சொன்னேன்ல"னு கமெண்ட் போட, ஹ்ம்ம்ம்ம்.... அப்படி இப்படி ஒரு அம்பது ஹிட் தேத்தலாம்னு நான் கனவுல மிதந்துட்டு இருந்த வேளையில்...
 
சென்னை மண்ல ஒரு கால் பதிச்ச கையோட... before we proceed further எனக்கு ஒரு டவுட், அதேங்க கால் பதிச்சாலும் கால் பதிச்ச கையோடனு சொல்றாங்க, கால் பதித்த காலோடனு சொல்றது தானே சரி... யோசிங்க நல்லா யோசிங்க... நோ நோ நோ அதுக்காக "சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறாள் அப்பாவி. கோவை களவாணி ச்சே கலைவாணி" அப்படினெல்லாம் பட்டம் குடுக்க கூடாது இப்பவே சொல்லிட்டேன்
 
ம்... எங்க உட்டேன்... ஆங் கால்ல உட்டேன்... சென்னை மண்ல கால் பதிச்ச காலோட கோயம்பேடு பஸ் ஸ்டேன்ட்ல ஒத்தை கால் தவமா இந்த விசயத்த ஸ்டேட்டஸ் மெசேஜ்'ஆ போட்டு கமெண்ட் அள்ளிட்டா அந்த அபூர்வ சாந்தாமணி... ஹ்ம்ம்... அவ இருக்காளே அவ...யாருனு கேக்கறீங்களா? ஒ... சாரி சாரி... என்ன இருந்தாலும் வயசுல மூத்தவங்கள அவ இவனு பேசறது தப்பு...:) அவங்க... இப்ப தான் சரி
 
அவங்க வேற யாரும் இல்லைங்க... மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன் அப்படினு சபதம் எடுத்து அந்த மகாதேவரையே மணாளனாய் பெற்ற அனன்யா தான். கொஞ்சம் ஓவரா இருக்கோ... சாரி லேட்லி கொஞ்சம் சரித்திர நாவல்களா படிச்சதோட எபக்ட். அதை பத்தி தனி போஸ்ட் வரும், ச்சே ச்சே இதுக்கெல்லாம் அழக்கூடாது. இதுவும் கடந்து போகும்னு கூலா இருக்கணும் ஒகே
 
இந்த அம்மணி "உங்க ஊருக்கு வரேன் உங்க ஊருக்கு வரேன்"னு கிட்டத்தட்ட ரெண்டு மாசமாவே மெரட்டிட்டு இருந்தா. உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் சமாளிச்சுட்டு "வாராய் என் தோழி வாராயோ... கோவை மண்ணில் கால் பதிக்க வாராயோ"னு பாடினேன்
 
அவளுக்கே நம்பிக்கை இல்ல போல இருக்கு "நெஜமாவா கூப்பிடரே"னு கேட்டா. "நிச்சியமா... எங்க வீட்லயே நீ தங்கிக்கலாம்"னேன். உடனே இந்த ஆபிசர் அம்மா "நோ நோ... எனக்கெல்லாம் CAG Prideல PH ப்ளோர்ல சூட் புக் பண்ணி இருக்காங்க என்னோட கிளையன்ட்"னு நான் எதிர்பாத்த மாதிரியே பீலா விட்டா. அதோட விட்டாளா "AUDI கார்ல தான் பிக் அப் பண்ண வருவாங்க"னு வேற பில்ட் அப்பு
 
ம்கும்... AUDI காராம் AUDI கார், ரெம்ப ஆடாதடி, ஆடி தள்ளுபடில உன்னை தள்ளி விட போறாங்கனு வாய் வரைக்கும் வந்தது. சரி நேர்ல பாக்கும் போது டெபொசிட் காலி பண்ணலாம்னு பொறுத்துகிட்டேன்.
 
இதோ வரேன் அதோ வரேன்னு அந்த நாளும் வந்தது (போன ஞாயிற்றுகிழமை). நான் வந்திருக்கேன், காந்திபுரம் வரியானு மெசேஜ் வந்தது. நாங்களும் அன்னைக்கி காந்திபுரம் போற பிளான் இருந்தது. பின்ன பர்த்டேக்கு டிரஸ் எடுக்க வேண்டாமோ. அதெல்லாம் நான் கரெக்டா கேட்டு வாங்கிடுவேன். அதுல எல்லாம் கூச்சமே படறதில்ல...:)
 
வேற ஒரு வேலையா காலைலையே வீட்டைவிட்டு கிளம்பினதுனால அன்னபூர்ணால லஞ்ச் முடிச்சுட்டு ஷாப்பிங் கெளம்பினோம். "மகாவீர்ஸ்ல நல்லா இருக்கும்"னு ரங்கஸ்கிட்ட சொல்ல "இதுக்கு முன்னாடி எப்ப போன"னு நான் எதிர்பாத்த மாதிரியே கிராஸ் கொஸ்டின் கேட்டார் நம்ம ஊட்டு வக்கீல் கோவிந்த்...:)
 
"அது...அது காலேஜ் படிக்கறப்ப போய் இருக்கேன்"னேன். ரெம்ப ரீசன்ட் தான் போல இருக்கு'னு நக்கல் விட்டுட்டு வந்தார். ஆனா என்னமோ அங்க எனக்கு எதுவும் பிடிக்கல. ரங்கஸ் என்ன பல்ப் தர போறாரோனு பயந்தேன்... நல்லவேள பெரிய மனசு பண்ணி ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். அதே நேரம் அனன்யாவிடமிருந்து போன் வந்தது
 
"வேலை முடிஞ்சுது"னா. வேலை இருந்தா தானே முடிய ஹையோ ஹையோனு மனசுக்குள்ள நெனச்சுட்டேன். சரி ஷாப்பிங் முடிச்சுட்டு ஹோட்டல் ரூமுக்கு வாங்கனு இன்வைட் பண்ணினா. சரின்னுட்டு சென்னை சில்க்ஸ் போய் மும்மரமா தேடிட்டு இருந்த நேரத்துல மறுபடி போன். "எங்க இருக்கே?" வேற யார் அனன்யாமணி தான்
 
"சென்னை சில்க்ஸ்"னேன். கொஞ்சம் அப்படியே முன்னாடி பாருனு என்னமோ பாரதிராஜி ரேஞ்சுக்கு காமெரா ஏங்கில் எல்லாம் சொன்னா. திரும்பி பாத்தா.... "உன்னை பார்த்த பின்பு நான்... நானாக இல்லையே"னு மண்டைக்குள்ள ரிங்க்டோன். இல்லையா பின்ன, இப்படி ஒரு டெரர் பார்ட்டிய பாத்தா நாம நாமளா இருக்க முடியுமா என்ன... கொஞ்சமாச்சும் பாதிப்பு இருக்குமில்லையா... ஒருவழியா அதிர்ச்சி விலகி சுதாரிச்சு "வெல்கம் வெல்கம்"னேன் (அப்பாடி ஒருவழியா தலைப்புக்கு லிங்க் பண்ணியாச்சு...:)
 
ஆனா சும்மா சொல்ல கூடாது. டிரஸ் செலக்சனுக்கு நல்லா ஹெல்ப் பண்ணினா. நடுல நடுல ரங்கஸ் கூட கூட்டணி சேந்துட்டு எனக்கு பல்புகளும் வழங்கினா. இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நான் காரியத்துல கண்ணா டிரஸ் வாங்கறதுல இருந்தேன். ஏன்னா, ஆடாத அருங்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க யு நோ...:)
 
அப்புறம் எனக்கு பூ வாங்கி குடுத்தா அனன்யா. வீட்டுக்கு வந்ததும் மொதல் வேலையா அதை ப்ரிஜ்ல வெச்சுட்டு, கொஞ்சம் கொஞ்சமா தினமும் வெச்சுட்டேன்... பர்த்டே அன்னைக்கும் தான். தேங்க்ஸ் அனன்யா
 
 
ஒருவழியா ஷாப்பிங் முடிச்சுட்டு மறுபடி அன்னபூர்ணா போனோம்... காபி சாப்பிட. எனக்கு ரெகுலரா காபி சாப்பிடற பழக்கமில்ல. சரி ஊரு விட்டு ஊரு வந்த அம்மணிக்கு கம்பனி தருவோம்னு சரின்னேன்... சாப்ட டீடைல்ஸ் வேணும்னா அம்மணி எழுதின போஸ்ட்ல இங்க பாருங்க. அதைமட்டும் பாருங்க, மத்தபடி என்னை டேமேஜ் பண்ணின மேட்டர் எல்லாம் படிக்க கூடாது ஒகேவா...;)
 
அப்புறம் என்ன... பிரியா வடை தான்.. ச்சே விடை தான்... அனன்யா ஒரே அழுவாச்சி... சரி சரி மறுபடி மீட்டலாம்னு தைரியம் சொல்லி தேத்தி அனுப்பினோம். இப்படியாக அப்பாவி ராமாயணத்தில் அனன்யா சந்திப்பு புராணம் முடிவுக்கு வந்தது...:)
 
ஜோக்ஸ் அபார்ட்... சோ நைஸ் டு மீட் யு அனன்யா... ப்ளாக்ல G+ல பேஸ்புக்ல எல்லாம் மொக்கை போட்டு மொதல் வாட்டி மீட் பண்ற மாதிரியே இல்ல...:) வெல்கம் பேக் டு கோவை
 
(தொடரும்...) என்னது தொடருமானு டென்சன் ஆகறீங்களா... பின்ன? அனன்யா மறுபடி வரேனு சொல்லி இருக்காளே...:)))
 

Friday, May 31, 2013

திருச்சி டு ஸ்ரீரங்கம் - வழி மலைக்கோட்டை...:)

 
 
வணக்கம் வணக்கம்... பலமுறை சொன்னேன்... ஏன் ஒருமுறை சொன்னா போதாதானு கேக்கறீங்களா? ரெம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வரோமேனு சேத்து வெச்சு சொல்றேன்னு வெச்சுக்கோங்களேன்
 
நானும் போஸ்ட் எழுதனும் எழுதனும்னு நெனச்சுட்டே தான் இருக்கேன்... ஆனா என்னமோ தெர்ல அப்படி ஒரு பிஸி... ஒரு வேலையும் இல்ல ஆனாலும் பிஸியோ பிஸி. என்னமோ போ அப்பாவி
 
அப்பப்போ கொஞ்சம் ஊர் சுத்தல் வேற கெளம்பிடறோம். முன்னாடி எல்லாம் எதாச்சும் ஊருக்கு போனா அங்க இருக்கற கோவில்கள் அப்புறம் சுற்றுலா தளங்கள் மட்டும் பாப்போம்
 
இப்ப அந்த அந்த ஊர்ல இருக்கற ப்ளாக் பிரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ற வாய்ப்பு கிடைக்கரதுல ஒரு கூடுதல் சந்தோஷம். எந்த ஊர் போனாலும் நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க அப்படிங்கறது ஒரு பெருமை தானே (ரங்கஸ்கிட்ட பீலா விட இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்குமா என்ன?)
 
இப்படிதான் போன சனிக்கிழமை திருச்சி போலாம்னு முடிவு பண்ணினதும், தலைநகர்ல இருக்கற தலையாய பிளாக்கர் ஒருத்தர் லீவுக்கு சொந்த ஊர் திருச்சிக்கு வந்திருக்காருனு கேள்விப்பட்டு, "வரோம் அண்ணா"னு சொன்னதும் "வாங்க வாங்க"னு சொன்ன கையோட எங்க கால் திருச்சி மண்ணுல படறதுக்கு சரியா எட்டு மணி நேரம் முன்னாடி டெல்லிக்கு ட்ரைன் புக் பண்ணிட்டார்
 
நான் இட்லி எல்லாம் செஞ்சுட்டு வரலைனு எவ்ளவோ சொல்லியும் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார்னு எட்டு பேர் கொண்ட "அப்பாவி ஆதரவாளர் சங்க" உறுப்பினர்கள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. விசாரணை கமிஷன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்...:)
 
அப்புறம் நம்ம கீதா பாட்டி, சாரி சாரி அவங்க பாட்டி ஆகி பல வருஷம் ஆகி இருந்தாலும் பாட்டினு சொன்னா டென்சன் ஆகிடுவாங்க. சோ கீதா மாமி, இல்ல இல்ல கீதா அக்கானு சொல்லிடுவோம் எதுக்கும்
 
வேண்டாம் கொஞ்சம் ஓவரா இருக்கு, கீதா மாமினே சொல்லிக்கறேன் வழக்கம் போல. அவங்களுக்கு மெயில் தட்டிட்டு புறப்பட ஆயுத்தமானோம். "வாங்க வாங்க... ஆனா இட்லி எல்லாம் வேண்டாம்"னு அவங்க முன்னெச்சரிக்கையா சொல்லிட்டாங்க
 
திருச்சிக்கு எப்பவோ ஸ்கூல் நாட்கள்ல போனது. உடனே கி.மு ரேஞ்சுக்கு யோசிக்காதீங்க பாஸ். சில வருசங்கள் அவ்ளோ தான்..:) ஆனா அப்போ அகண்ட காவிரில முங்கி எழுந்து அப்படியே அம்மா மண்டபம் வழியா பொடி நடையா கோபுர வாசல் நோக்கி நடந்த மலரும் நினைவுகளை அசை போட்டபடி ரயில் பயணம் தொடங்கியது. கார்ல போனா டிரைவிங் டென்சன், ட்ரைன் தான் ஜாலினு டைலாக் அடிச்சது நான் தான், ஆனா திருச்சி வெயில் பாத்ததும் தப்பு பண்ணிட்டமோனு தோணுச்சு
 
ட்ரைன்ல ஏறி உக்காந்ததும் ரங்கஸ் தூங்க ஆரம்பிச்சுட்டார். இதை வீட்லயே செய்யலாமேனு நான் டென்சன் ஆக, நீ படிக்கற இந்த ரமணிச்சந்திரன் புக்கை கூடத்தான் வீட்லயே படிக்கலாம்னு ஒரு பல்பு ப்ரெசென்ட் பண்ணினார், சந்தோசமா வாங்கி மூட்டை கட்டிட்டு படிச்சுட்டே வந்தேன், நடு நடுல ஜன்னல் வழியா எதுனா சீனரி நல்லா இருந்தாலோ இல்ல புதுசா எதாச்சும் கண்ணுல பட்டாலோ, அதை சாக்கா வெச்சு ரங்கஸ்'ஐ துயில் எழுப்பி அதுல ஒரு அல்ப சந்தோசத்தை அடைஞ்சேன்...:)
 
ஒருவழியா பகல் பதினொரு மணி வாக்குல ட்ரைன் திருச்சி போய் சேந்தது. ரூம்ல போய் ப்ரெஷ் ஆகிட்டு ரங்கனை தரிசிக்க போனோம். கோவில் உள்ள தரைல நொண்டி அடிச்சுட்டே போனோம், பின்ன ரெண்டு காலையும் ஒண்ணா அக்னி குண்டத்துல வெக்க முடியணுமே. ஆமாங்க, தரை அப்படியே தீ மாதிரி இருந்தது. இனிமே சம்மருக்கு கோவை விட்டு எங்கயும் போறதில்லைனு முடிவு பண்ணிட்டோம்
 
ஒருவழியா கோவில் உள்ள போனா, அப்ப ரங்கநாதருக்கு நேப் டைம்னு நடை சாத்திட்டாங்க. சரி இனி எல்லா கோவிலும் இப்படிதான் இருக்கும்னு, இருக்கற டைம்ல கீதா மாத்தாவையும், எஸ்கேப் ஆன தலைநகர் தலைவர் வெங்கட் அண்ணா குடும்பத்தையும் மீட் பண்ணிடுவோம்னு கெளம்பினோம்
 
ஆட்டோ பிடிச்சு வழி கேட்டுட்டே வெங்கட் அண்ணா வீட்டுக்கு போனோம். வெங்கட் அண்ணா குடும்பத்துல எல்லாரும் ரெம்ப பிரெண்ட்லியா பேசினது ரெம்ப சந்தோசமா இருந்தது. அதுலயும் வெங்கட் அண்ணாவோட அப்பா முதல் முறை பாக்கற மாதிரி இல்லாம, "ஏன் ஹோட்டல் எல்லாம், இங்கயே தங்கி இருக்கலாமே"னு சொன்னப்ப மனசு நெறஞ்சு போச்சு
 
ரிஷபன் சார் கூட அந்த ஏரியா தான்னு கேள்விப்பட்டு போன்ல கூப்ட்டா அவரும் எஸ்கேப் (மோரல் ஆப் தி ஸ்டோரி - இனிமே அந்த ஊர்ல இருக்கற ப்ளாக்கர்ஸ்கிட்ட அவங்க ஊருக்கு வர்ற விசயத்த சொல்லாம தான் போகணும். இல்லேனா எல்லாரும் எஸ்கேப் தான்..:) ஜஸ்ட் கிட்டிங்...:)) வை.கோபாலக்ருஷ்ணன் சாருக்கு மொதலே ஈமெயில் பண்ண விட்டுபோச்சு...:(
 
அப்புறம் பாட்டி வீட்டுக்கு சாரி கீதா மாமி வீட்டுக்கு போனோம். கீதா மாத்தா பேர் சொன்னதும் ஆட்டோகாரர் அவங்க அபார்ட்மண்ட் வாசல் இல்ல, லிப்ட்கிட்டையே கொண்டு போய் எறக்கி விட்டார். ஹ்ம்ம், பாவம் என்ன பயமோ அவனுக்கு
 
நாங்க போனப்ப மாமி மும்மரமா பூ கட்டிட்டு இருந்தாங்க, மாமா அமைதியா இருந்தார், பின்ன கூட இருக்கற ஆள் அப்படியாச்சே. எனக்கு மல்லிகை / முல்லை ரெண்டுமே உயிர், கெளம்பும் போது அவங்களா தரலைனா கேட்டு வாங்கிடனும்னு முடிவோட தான் இருந்தேன். பத்து வருசம் பாரின்ல இருந்தப்ப மிஸ் பண்ணினதுக்கு சேத்து வெச்சு இப்ப பூ வெச்சு என்ஜாய் பண்றேன், அவ்ளோ பிடிக்கும்
 
ப்ளாக்ல மாதிரி நேர்லயும் நல்ல ரகளை பண்ணனும் மாமிகிட்ட அப்படினு நெறைய கதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டு போனேன், ஆனா என்ன மாயமோ என்ன மந்திரமோ அவங்கள பாத்ததும் சைலண்ட் ஆகிட்டேன். வர்மக்கலை மாதிரி எதுனா மர்மகலை கத்து வெச்சு இருக்காங்களானு விசாரிக்கணும்
 
"எனக்கு கும்பகோணம் அவங்களுக்கு மதுரை"னு மாமா சொன்னப்ப "அவங்க மதுரைனு சொல்லாமையே தெரியுதே"னு தொண்டை வரை வந்த கமெண்ட், மாடரேசன்ல கட் ஆய்டுச்சு. என்னமோ போ அப்பாவி
 
அப்புறம், பாட்டி வடை சுட்ட கதை உங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம், ஆனா பக்கோடா சுட்ட கதை தெரியுமோ. இனிமே என் இட்லிய மாமி கமெண்ட் அடிச்சா இதான் ஒரே ஆயுதம்...:) என் ரங்கஸ்கிட்ட "இந்தாங்க பனிஷ்மண்ட்"னு பக்கோடா தட்டை நீட்டினாங்க மாமி. அவர் பாத்த பார்வைலயே "நான் பாக்காத பனிஷ்மெண்ட்டா"னு ஒரு மெசேஜ் தெரிய, நானே அதை சொல்லிட்டேன். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...:)
 
அவங்க அபார்ட்மெண்ட் மாடிக்கு அழைச்சுட்டு போனார் மாமா, வாவ்... ஒரு பக்கம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், ஒரு பக்கம் திருவானைக்கா கோவில் கோபுரம், இன்னொருபக்கம் மலைக்கோட்டை, அடுத்த பக்கம் காவிரிக்கரை. ஆனா நான் கற்பனை பண்ணின அகண்ட காவிரி இல்ல, இது வறண்ட காவிரி..:(. ஆனாலும் மாடியைவிட்டு எறங்கி வரவே மனசில்ல.
 
அப்புறம் டீ குடிச்சுட்டு, தாம்பூலம் (பூ அவங்களே குடுத்துட்டாங்க) மற்றும் ஆசீர்வாதம் எல்லாம் வாங்கிட்டு, போட்டோ செசன் எல்லாம் முடிச்சுட்டு டாடா பை பை சொல்லிட்டு கெளம்பினோம். லிப்ட்குள்ள போனதும் ரங்கஸ் கேட்ட முதல் கேள்வி "என்ன அதிசியமா இன்னைக்கி கம்மியா பேசின மாதிரி இருந்தது?". நேரம் தான்னு தொடர்ந்து அமைதியை கடைபிடித்தேன்
 
அங்கேருந்து திருவானைக்கா கோவில் போனோம். கோவில் வாசல்லையே "அகிலா" மேடம் (யானை) வரவேற்ப்புக்கு நின்னுட்டு இருந்தாங்க. ஒரு சலாம் போட்டுட்டு உள்ள போனோம். பொறுமையா கோவில் சிற்பங்கள் வேலைப்பாடுகள் எல்லாம் ரசிச்சு பாத்தா அந்த ஒரு கோவிலுக்கே ஒரு நாள் போதாதுன்னு தோனுச்சு. ஆனா நம்ம செடியூல் வேறயா இருக்க, அம்பாளை தரிசிச்சுட்டு மலைக்கோட்டை போக ஆட்டோ தேடினோம்
 
ஆட்டோக்காரர் 120 ரூபாய் கேட்க, நான் ரெம்ப தெரிஞ்சவ மாதிரி "என்னங்க அநியாயம் இது, நாங்க எப்பவும் 80 தானே தருவோம்"னு என்னமோ வாரா வாரம் அதே ரூட்ல போற மாதிரி பில்ட் அப் பண்ணவும், ரங்கஸ் "என்ன கொடுமம்மா இது"ங்கற மாதிரி ஒரு பார்வை பாத்தார். ஆட்டோக்காரர் 120ல இருந்து 100 ரூபாய்க்கு எறங்கி வந்தார். நானும் லாட்டரில மில்லியன் டாலர் ஜெயச்ச மாதிரி இல்லாத காலரை தூக்கி விட்டுகிட்டேன்
 
மலைக்கோட்டை போறோம்னு சொன்னதுமே "420 படி ஏறணும், ஏறிடுவீங்களா?"னு கீதா மாமி வீட்ல மாமா என்னை சந்தேகமா பாத்தபடி கேட்டார். உள்ளுக்குள்ள ஒதரினாலும், அதெல்லாம் ஏறிடுவேன்னு பந்தா பண்ணிட்டு வந்தேன். 420 படி 420 படினு மலைப்பா நெனச்சுட்டே இருந்ததாலயோ என்னமோ சீக்கரம் ஏறிட்ட மாதிரி இருந்தது
 
"Expectation Kills Joy"னு சொல்லுவாங்க, ஆனா சிரமமான விசயங்கள்ல அது எப்பவும் உல்டா. "இன்னும் கஷ்டமா இருக்கும்"னு மனசுக்குள்ள ஒரு உருவகம் பண்ணிட்டா சீக்கரம் அதை கடந்து போய்டலாம்னு நெறைய விசயங்கள்ல அனுபவப்பூர்வமா உணர்ந்து இருக்கேன். ரெம்ப சீரியஸா போகுதோ போஸ்ட், வேண்டாம் நிறுத்திக்கறேன், இல்லேனா அப்பாவி ஆள் வெச்சு போஸ்ட் எழுதுறானு சொன்னாலும் சொல்லிடுவீங்க...:)
 
மைண்ட்வாய்ஸ் : உன் சமையல் சாப்பிடறப்ப கூட ரங்கஸ் இப்படி தான் உருவகம் பண்ணிகுவார் போல...ஹ்ம்ம்
 
அப்பாவி : வேண்டாம் மைண்ட்வாய்ஸ், மறுபடி கோமாவுக்கு அனுப்பிடுவேன்
 
மைண்ட்வாய்ஸ் : மீ எஸ்கேப்
 
எங்க விட்டேன்... ஹ்ம்ம், மலைல விட்டேன். அட்டகாசமா இருந்தது மலைகோட்டை வெதர், தரிசனமும் தான். ஆனா திருச்சில தண்ணி தான் தலையாய பிரச்சனையா இருந்தது. கோவைல சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு திருச்சி தண்ணி தாகம் தணிக்கல. வேண்டாம் வாபஸ் வாங்கிக்கறேன்... திருச்சிகாரங்க சண்டைக்கு வந்துட போறாங்க...:)
 
அப்புறம் கீதா மாமி சொன்னபடி தாயுமானவர் சன்னதில வாழைத்தார் பூஜை பண்ணி விநியோகம் செஞ்சோம். அப்பவே மழை கொட்ட ஆரம்பிச்சது. மதியம் வெங்கட் அண்ணா வீட்ல பேசிட்டு இருந்தப்ப தான் "ஸ்ரீரங்கத்துல மழையே வராது"னு சொன்னாங்க,"நாங்க வந்த நேரம் பாத்தீங்களா"னு சொல்ல நல்ல சான்ஸ்னு நெனச்சுட்டேன்...;)
 
ஒருவழியா மழை நின்னதும் தண்ணில நீந்தாத கொறையா மெயின் ரோடுக்கு வந்து வசந்த பவன்ல சாப்பிட்டுட்டு ரூமுக்கு போய் சேந்தோம். மறுநாள் நேரமே கிளம்பி ரங்கநாதரை தரிசிக்க போனோம். நல்ல கூட்டம், நம்மால முடியாது சாமினு, ஸ்பெஷல் தரிசன் டிக்கெட் வாங்கி ஒரு மணி நேரத்துல தரிசனம் கிடைச்சது. இங்கயும் ஜரகண்டி ஜரகண்டி தான்
 
அப்புறம் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சமயபுரம் பஸ் ஏறினோம். அங்கயும் செம கூட்டம், மறுபடி ஸ்பெஷல் டிக்கெட் தான். எப்பா சாமி, அநியாயத்துக்கு வெயில் போங்க. ஆனா தரிசனம் திருப்தியா இருந்தது. வர்ற வழில பாலைவனம் மாதிரி ஒரு எடம் பாத்து ரங்கஸ் பக்கத்துல இருந்தவர்கிட்ட "என்ன இடம் இது"னு கேக்க "கொள்ளிடம் ஆறு"னு பதில் வந்தது. "கொல்லிடம்"னு சொன்னா பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு, கொடுமை தான் போங்க
 
எங்கம்மா ஊர்ல கெளம்பும் போதே "உறையூர் வெக்காளியம்மன் கோவில் கண்டிப்பா போயிட்டு வாங்க"னு சொல்லி இருந்தாங்க. ஊர் பேர் கேட்டதுமே எங்கயோ படிச்சா மாதிரி இருக்கேனு நெனச்சுட்டே போனேன். ஊர் வாயில்ல "சோழ மண்டலத்தின் தலைநகர் உறையூர்"னு போட்டு இருந்ததை பாத்ததும் "ஓ ஸ்கூல் புக்ல படிச்சு இருக்கோம்"னு ஞாபகம் வந்தது. அங்க கூட்டம் குறைவா இருந்தது, நல்ல தரிசனம்
 
முடிச்சுட்டு ஜங்சன் போய்ட்டோம். திரும்பி வர்றப்ப ரயில் பயணம் சூப்பர். அதுக்கு காரணம் எங்க எதிர் சீட்ல இருந்த ஒரு வாண்டு. நாலு மணி நேரம் போனதே தெரியாம ரகளை பண்ணிட்டு வந்தது. இவ்வாறாக பயணம் இனிதே நிறைவேறியது
 
என்ன கேட்டீங்க? அடுத்தது எந்த ஊருக்கு வரோமா? சொல்லமாட்டனே... சொன்னா நீங்க எஸ்கேப் ஆய்டுவீங்களே... சர்ப்ரைஸ் விசிட் தான் இனிமே...:)
 
பின் குறிப்பு :
ரங்கஸ் இன்னும் சென்னை / மதுரை ரெண்டும் சுத்தினதில்லைனு சொல்றார் . நான் பெங்களூரு இன்னும் பாத்ததில்ல. பாப்போம் அடுத்த முறை சென்னையா, மதுரையா, பெங்களூரானு ...:)
 
 

Monday, April 15, 2013

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)

 
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு

என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?

ஆமா டெங்கு காய்ச்சல்

ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?

இல்ல மால்குடி சுபா

ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது

இதெல்லாம் சரியா சொல்லு, ஆனா நான் தெலுகுல ஒரு வார்த்தை சொன்னது உனக்கு புரியலையா?

அ...அது... சுபா அக்காவுக்கு காய்ச்சல் பத்தி கிளாஸ் எடுத்த அன்னைக்கி எனக்கும் காய்ச்சல். அதான் அது மட்டும் தெரியாம போச்சு

நல்லாவே சமாளிக்கற. என்ன பிரெண்ட்ஸ்? நான் யார் கூட பேசிட்டு இருக்கேன்னு புரியலையா? வேற யாருங்க, டாங்கி கெட்டா ஸ்மால் வால்...:)

அப்பாவி ப்ளீஸ்... உன்னை நீயே கழுதைனு சொல்லிக்கறத என்னால அனுமதிக்க முடியாது

உஸ்ஸ்ப்ப்ப்பா... முடியல மைண்ட்வாய்ஸ் முடியல

அப்பாவி, நமக்குள்ள ஆயிரம் தான் இருந்தாலும்....

எந்த ஆயிரத்த சொல்ற, போன வாரம் கடன் வாங்கினியே அந்த ஆயிரமா? இல்ல போன மாசம் வாங்கினயே அந்த நாலாயிரமா?

அப்பாவி, ஓராயிரமோ, நாலாயிரமோ, வாரணமாயிரமோ... அதெல்லாம் இப்ப எதுக்கு? இப்ப இங்க வந்த மேட்டர் சொல்லு

மேட்டர் என்னனு தெரியணுமா பிரெண்ட்ஸ்... சிரமம் பாக்காம கொஞ்சம் இங்க வந்து பாருங்களேன். தேங்க்ஸ்...:)

Saturday, March 23, 2013

ஜோசியம் பாக்குலியோ ஜோசியம்...:)அப்பாவி : கிளிகார் கிளிகார்... கொஞ்சம் இப்படி வாங்க
கிளிஜோசியர் : கூப்ட்டீங்களா?
அப்பாவி : பின்ன கூப்டாமையே வர்றதுக்கு நீங்க என்ன சுனாமியா?
கி.ஜோ : எதுக்கு கூப்ட்டீங்க?
அப்பாவி : ஒரு நாலு கிலோ பச்சரசி வேணும்
கி.ஜோ : அதுக்கு எதுக்கு என்னை கூப்ட்டீங்க?
அப்பாவி : உங்களை எதுக்கு கூப்டுவாங்கன்னு தெரியுமல்ல, அப்பறமென்ன எதுக்கு கூப்ட்டீங்கன்னு ஒரு கேள்வி
கி.ஜோ :கெரகம் இன்னைக்கி யார் மூஞ்சில முழிச்சனோ (என முணுமுணுக்க)
அப்பாவி : இந்த கிளி ஜோசியம் சொல்லுமா?
கி.ஜோ : இல்ல ஆபரேசன் பண்ணும்
அப்பாவி : என்னது?
கி.ஜோ : நீங்க மட்டும் தான் எடக்கு மடக்கா பேசுவீகளா?
அப்பாவி : ஹ்ம்ம்... நேரம் தான். சரி சரி உங்க கிளிய என்ர பேருக்கு ஒரு சீட்டு எடுக்க சொல்லுங்க
கி.ஜோ : நீங்க என்ன நம்ம ஜில்லா கலக்டரா? பேரு சொல்லுங்க அம்மணி
அப்பாவி : ஹ்ம்ம்... டயமே சரி இல்ல. என்ர பேரு அப்பாவி
கி.ஜோ : நெசமாலுங்களா?
அப்பாவி : அப்படி என்ன நம்ப முடியாத விஷயம் நான் இப்ப சொல்லிட்டேன்?
கி.ஜோ : அதில்லீங்... ஆளுக்கும் பேருக்கும்... சரி சரி... உங்க பேரு உங்க பாடு. ஸ்ரேயா கண்ணு, கொஞ்சம் வெளிய வாம்மா (என பேச்சை மாற்ற)
அப்பாவி : ஸ்ரேயாவா? எங்க வீட்ல அப்படி யாரும் இல்லையே
கி.ஜோ : உங்கூட்ல இல்லீங்க... என்ர கூண்டுல இருக்குதுங்க... ஸ்ரேயா கிளி பேருங்க
அப்பாவி : என்னது கிளி பேரு ஸ்ரேயாவா? அநியாயமா இல்ல
கி.ஜோ : என்னங்க அம்மணி, நீங்க அப்பாவினு பேரு வெச்சுக்கலாம், என்ர கிளிக்கு ஸ்ரேயானு வெச்சா தப்பா?
அப்பாவி : எனக்கு நேரம் எப்படி இருக்குனு கேக்கதான் கூப்ட்டேன். அது எந்த லட்சணம்னு உங்ககிட்ட பேசினதுலையே தெரிஞ்சு போச்சு, சரி நடைய கட்டுங்க
கி.ஜோ : அட என்னங்க அம்மணி இதுக்கு போய் சடஞ்சுக்கறீங்க. நீங்க ரெண்டு வார்த்த பேசுனீங்க, நானும் பேசுனேன் அம்புட்டு தான? சரி ஸ்ரேயா உங்களுக்கு என்ன சீட்டு எடுத்து இருக்குனு பாருங்கம்மணி
அப்பாவி : என்ன சீட்டு? (என ஆர்வமாய் கேட்க)
கி.ஜோ : ஆஹா... பேஷ் பேஷ்
அப்பாவி : இங்க என்ன நரசூஸ் காப்பி விளம்பரமா ஓடுது
கி.ஜோ : அதில்லீங் அம்மணி. நம்ம பத்திரகாளி ஆத்தாவே வந்திருக்கு உங்க சீட்டுல
மைண்ட்வாய்ஸ் : ஆஹா என்ன பொருத்தம்
அப்பாவி : என்ன? (என முறைக்க)
மைண்ட்வாய்ஸ் : ஹி ஹி ... கே.டிவி'ல இன்னைக்கி "ஆஹா என்ன பொருத்தம்" படம் போடறான்னு பேசிக்கிட்டாங்க
கி.ஜோ : அம்மணி, இனி எல்லாம் நல்லாதாவே நடக்கும்
அப்பாவி : என்ன நல்லது?
கி.ஜோ : உங்கள பிடிச்சுருந்த கெட்ட கெரகமெல்லாம் ஓடியே போய்டும். ஆத்தா கைல இருக்கற ஆயுதங்கள் எல்லாத்தையும் அழிச்சிடும்
அப்பாவி : அதெல்லாம் இருக்கட்டும், இந்த வருசமாச்சும் கொஞ்சம் பல்பு வாங்காம இருப்பனானு சொல்லுங்க
கி.ஜோ : வெளிச்சம் வேணும்னா பல்பு வாங்கி தானேங்க ஆகோணும்
மைண்ட்வாய்ஸ் : ஹ ஹ ஹ... முடியல அப்பாவி முடியல. இதை விட பெரிய பல்பு வேணுமா?
அப்பாவி : எல்லாம் என் நேரம்
கி.ஜோ : உங்க நேரம் அமோகமா இருக்குதுங்கம்மணி
அப்பாவி : என்னத்த நல்லா இருக்குது? பொரி விக்க போனா காத்தடிக்குது, உப்பு விக்க போனா மழை பெயுது
கி.ஜோ : பொரி விக்கரீங்களா? எனக்கு ஒரு ரெண்டு பக்கா போடுங்கம்மணி. என்ற ஊட்டு அம்மணி பசங்களுக்கு லீவு மறக்காம பொரி வாங்கிட்டு வா மாமோய்'னு காலம்பரமே சொல்லிச்சு
அப்பாவி : அட ஒரு பேச்சுக்கு சொன்னனுங்க. நான் பொரியும் விக்கல உப்பும் விக்கல
கி.ஜோ : ஓஹோ... நீங்க வெசனப்படாதீங்க அம்மணி, ஆத்தா காட்சி குடுத்துட்டா இனி எல்லாம் நல்லாவே நடக்கும்
அப்பாவி : சரி சரி, என் எதிர்காலத்த பத்தி உங்க ஜோசியம் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் சொல்லுங்க
கி.ஜோ : அதுக்கென்னங்க... இனி பதினஞ்சு நாளைக்கப்புறம் உங்க சொல் பேச்சு எங்கயும் எடுபடும்
மைண்ட்வாய்ஸ் :அடிபடாம இருந்தா சரி
அப்பாவி : (மைண்ட்வாய்சை முறைத்து விட்டு கி.ஜோ'விடம்) நீங்க மேல சொல்லுங்க
கி.ஜோ : ரெம்ப நாளா விட்டு போன ஒரு வேலைய இனி தொடர்ந்து செய்யலாம்னு முடிவு பண்ணி இருப்பீங்க. அது நல்லாவே நடக்கும்
அப்பாவி : அட, நான் ப்ளாக்'ல ரீ-என்ட்ரி ஆகறது உங்களுக்கெப்படி தெரியும்
மைண்ட்வாய்ஸ்: (மனதிற்குள்) இதான் எங்கூர்ல போட்டு வாங்கறதுனு பேரு. ஹ்ம்ம்... ரீ-என்ட்ரியாமா? அரவிந்த்சாமி கூட "கடல்"ல ரீ-என்ட்ரி ஆனத பத்தி இவ்ளோ பீலா விட்டு இருக்கமாட்டாரு
கி.ஜோ : ப்ளாக் க்லீக் எல்லாம் நமக்கு தெரியாதுங்க. ஜோசியம் சொல்றத நான் சொல்றேன்
அப்பாவி : வேற என்ன சொல்லுது உங்க ஜோசியம்
கி.ஜோ : உங்களுக்கு உத்தியோக யோகம் இருக்குதுனு ஜோசியம் சொல்லுதுங்க
அப்பாவி : வாவ்... எனக்கு வேலை கிடைச்ச மேட்டர் கூட உங்க ஜோசியம் சொல்லுதா.... வொண்டர்புல்
மைண்ட்வாய்ஸ் : ரியலி? வேலை கிடைச்சுடுச்சா, சொல்லவே இல்லையே அப்பாவி. அதான் ரெண்டு மாசமா பிஸியா நீ?
அப்பாவி : வேலை கிடைச்சுடுச்சு, ஆனா அதனால பிஸி இல்ல
மைண்ட்வாய்ஸ் : அங்கயும் வெட்டியாதான் இருக்கியா அப்ப
அப்பாவி : அட அதில்ல, வேலை கிடைச்சுடுச்சு, ஆனா இப்போதைக்கு போக வேண்டியதில்ல
மைண்ட்வாய்ஸ் : புரியும் ஆனா புரியாது'னு உன் ப்ளாக் பேரை மாத்திக்கோ
அப்பாவி : நோ டென்சன் மைண்ட்வாய்ஸ். என்ன விசயம்னா, ஒரு காலேஜ்ல வாத்தியாரம்மா வேலை கிடைச்சு இருக்கு, ஆனா அடுத்த அகடமிக் இயர் தான் ஜாயின் பண்ணனும். அது MBA காலேஜ்'ங்கரதால கவுன்சலிங் எல்லாம் முடிஞ்சு ஆகஸ்ட் மாசம் தான் ஆரம்பிப்பாங்க. அப்ப வேலைக்கு போனா போதும்
மைண்ட்வாய்ஸ் : ஐயோ பாவம் யாரோ பெத்த புள்ளைங்களோ. ஆனா பேசியே கொல்ற வேலை, உனக்கு பொருத்தம் தான். அது சரி, எந்த காலேஜ் அது?
அப்பாவி : அஸ்கு புஸ்கு, அதெல்லாம் பப்ளிக்கா சொல்லி சொ.செ.சூ வெச்சுக்க நான் தயாரா இல்லை
மைண்ட்வாய்ஸ் : ஆஹா, சுதாரிச்சுட்டியே... வேலைக்கும் போகலயில்ல, அப்புறம் ஏன் மூணு மாசமா போஸ்டே காணோம்?
அப்பாவி : அதையேன் கேக்கற, வேலைக்கு போனா கூட இவ்ளோ பிஸியா இருக்க மாட்டோம் போல இருக்கு. சும்மா தான இருக்க வா போலாம்'னு எல்லா வேலைக்கு இழுத்துட்டு போயிடறாங்க மக்கள். அதான் வேலைக்கு போனா கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்
கி.ஜோ : அம்மணி, வேற எதாச்சும் கேக்கோனுங்களா, இல்லாட்டி போனா நான் உத்தரவு வாங்கிக்கரனுங்க
அப்பாவி : இருங்க இருங்க, அதுக்குள்ள என்ன அவசரம்... ஏதோ உலகம் அழியும்னாங்க, இல்லைனாங்க. அதைப்பத்தி உங்க கிளி என்ன சொல்லுது
கி.ஜோ : எங்க ஸ்ரேயாவுக்கு மனுசங்க ஜோசியம் தான் தெரியுமுங்க, உலக ஜோசியமெல்லாம் இல்லீங்க
அப்பாவி : அதாவது உங்க ஸ்ரேயாவுக்கு இது அவுட் ஆப் சிலபஸ்'னு சொல்றீங்க. சரி சரி
கி.ஜோ : அது என்னமோங்க.... ஆனா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றனுங்க
அப்பாவி : ரகசியமா? சொல்லுங்க சொல்லுங்க
கி.ஜோ : மார்ச் 31ந் தேதி உலகம் அழிய போகுதுங்களாமா
அப்பாவி : இதென்ன புதுக்கதை?
கி.ஜோ : கதை இல்லீங்க. விசயம் கேள்விபட்டதும் நான் அவசர அவசரமா பணத்தை எல்லாம் கொண்டு போய் பத்திரமா பேங்க்ல போட்டுட்டு வந்தனுங்க
அப்பாவி : அட ராமா... உலகம் அழியும் போது பேங்க் மட்டுமென்ன நிலாவுல போயா உக்காந்துக்கும். அதுவும் சேந்து தான்யா அழியும்
கி.ஜோ : அதெல்லாம் ஓண்ணும் ஆவாதுங்கம்மணி. இப்படி தான் ஒரு பதினஞ்சு வருஷம் முன்ன பொரளி கெளப்பி உட்டாங்க. நானும் உலகம் தான் அழிய போகுதேனு இருந்த பணமெல்லாம் செலவழிச்சு போட்டேன். அன்னைக்கி கோவிச்சுகிட்டு ஆத்தா ஊட்டுக்கு போனவ தான் என்ர பொண்டாட்டி...ஹ்ம்ம்... எம்புட்டு நாள் கழிச்சு இப்பதான் வந்திருக்கா
அப்பாவி : அடடே... ரெம்ப சோக கதையா இருக்கே. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, உங்க சொந்த கதைய கருவா வெச்சு என் ப்ளாக்ல ஒரு கதை எழுதிக்கட்டுமா?
மைண்ட்வாய்ஸ் :அதானே... என்னடா இன்னும் நம்ம அப்பாவியோட கற்பனை குதிரை புறப்படலியேனு நெனச்சேன்
கி.ஜோ : நீங்க சோக்கடிக்கரீங்க, நான் நெசமாத்தான் சொல்றனுங்க அம்மணி, உலகம் 31ந்தேதி அழியுதுங்க
அப்பாவி : யார் சொன்னாங்க உங்ககிட்ட?
கி.ஜோ : அதுங்க, போன வாரம் அண்ணா நகர்ல இருக்கற ஒரு பேங்க் ஆபிசர் ஊட்டுக்கு ஜோசியம் சொல்ல போய் இருந்தனுங்க. அந்த அய்யா போன்ல யார்கிட்டயோ "இயர் எண்டு மார்ச் 31, அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும்"னு சொல்லிட்டு இருந்தாருங்க
அப்பாவி : வேணாம்.... அழுதுருவேன்...
கி.ஜோ : அழுவாதீங்க அம்மணி, எல்லாருக்கும் நடக்கறது தானுங்க நமக்கும் நடக்கும். உங்களுக்கு சீட்டுல வந்திருக்கற பத்திரகாளியாத்தா காப்பாத்துவா
அப்பாவி : பொரளி எங்க இருந்தெல்லாம் ஆரம்பிக்குதுனு பாருங்க மக்களே... இதையெல்லாம் நம்பி இனி என்ன கலவரம் வெடிக்க போகுதோ.... ஹ்ம்ம் 
:))