Tuesday, June 02, 2015

எங்கள் வீட்டில் பூத்த குறிஞ்சிப்பூ...:)

Image result for its a girl teddy ரெம்ப நாளைக்கப்புறம் ப்ளாக் இருக்கா இல்லையானு எட்டி பாத்தேன். இதை யாரு தூக்கிட்டு போய்ட போறா. சும்மா குடுத்தாலும் தெரிச்சு ஓடிட மாட்டங்களா'னு மைண்ட்வாய்ஸ் ஸ்டமக் பயரை கிளப்புச்சு. ஹ்ம்ம்...

சரி ரெம்ப நாளா எழுதலியே, இப்படியே இருந்தா அப்புறம் நாம ஹிஸ்டரி ஆகிடுவமோனு ஒரு பயம் வந்துடுச்சு. புரியலையா? அதாங்க "போன நூற்றாண்டில் அப்பாவி என்ற பெயரில் ஒரு அப்பாவி பெண் ப்ளாக் எழுதி கொண்டிருந்தார்"னு ஒண்ணாம் வகுப்பு பாட புத்தகத்துல வர்ற மாதிரி ஆக வேண்டாம்னு நான் ரீ-என்ட்ரி ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்
 
மைண்ட்வாய்ஸ் : "ஹ்ம்ம்... ஜோதிகா கூட அவங்க ரீ-என்ட்ரி பத்தி இவ்ளோ பில்ட் அப் குடுத்து இருக்க மாட்டாங்க" என்ற குரல் பக்கவாட்டில் இருந்து வர 
 
அப்பாவி : ஒரு  வகைல பாத்தா நானும் ஜோதிகாவும் ரீ-என்ட்ரி ஆகரதுல ஒரு  ஒற்றுமை இருக்கு. அவங்க 36 வயதினிலே ரீ-என்ட்ரி, நானும் அதே அதே 
 
மைண்ட்வாய்ஸ் : ஹும்... இது வேறயா? 

அப்பாவி : ஆப்வியஸ்லி...

மைண்ட்வாய்ஸ் :  என்னது உனக்கு நீயே ஆப்பு வெச்சுட்டியா?

அப்பாவி : அதுக்கு தான் நீ இருக்கியே... நான் சொல்ல வந்தது... சரி வேண்டாம் விடு உனக்கு இங்கிலீஷ் புரியாது 

மைண்ட்வாய்ஸ் : உன்னை விட்டா நீ இப்படிதான் பேசிட்டே இருப்பே, என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லிட்டு கெளம்பு 
 
அப்பாவி : மைண்ட்வாய்ஸ், சும்மா நடிக்காத. இவ்ளோ நாள் நான் எழுதலைனு நீ எவ்ளோ பீல் பண்ணின 
 
மைண்ட்வாய்ஸ் : அது.... அது...
 
அப்பாவி : ம்ம்... சொல்லு சொல்லு 
 
மைண்ட்வாய்ஸ் : என்ன பண்றது, தொல்லையோ சொல்லை(கொசு)யோ பழகிட்டு இல்லைனா கொஞ்சம் கஷ்டம் தானே 
 
அப்பாவி : நல்லாவே சமாளிக்கறே... சரி சரி நான் போஸ்ட் போடணும், நீ எடத்த காலி பண்றியா?
 
மைண்ட்வாய்ஸ் : இனி தான் போஸ்டே'வா... ஹ்ம்ம். சரி, எதை பத்தி எழுதப்போற?  அது சரி இவ்ளோ நாள் எங்க போன? என்ன ஆச்சு?

அப்பாவி : எல்லாம் நல்ல  விஷயம் தான். ஓகே நீ விடு ஜூட். இனி நான் ப்ளாக் பிரெண்ட்ஸ்கிட்ட நேரடியா பேசிக்கறேன்
 
ஹாய் பிரெண்ட்ஸ்,
எல்லாரும் சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இந்த பக்கமே வரல, அதுக்கு மொதல்ல ஒரு சாரி கேட்டுக்கறேன்

சரியா சொல்லணும்னா அதுக்கு முன்னாடியும் அவ்ளோ அதிகம் போஸ்ட் போட முடியல. மூணு வருசத்துக்கு முன்னாடி கனடால இருந்தப்ப கதையே வேற, எந்நேரமும் ப்ளாக்கிங் தான். ஆமாங்க, கனடால இருந்து இந்தியா வந்து சரியா மூணு வருஷமாச்சு, என்னாலையே நம்ப முடில. நாளு ஓடியே போய்டுச்சு. அதுவும் கடந்த 9 மாசம் ஒன்பது நிமிசமா ஓடிடுச்சு 

அதுக்கு காரணம், எங்க வீட்டுல பூத்திருக்கும் குறிஞ்சிப்பூ. அதெப்படி குறிஞ்சிப்பூ வீட்டுல பூக்கும்னு நீங்க கேக்கறது புரியுது. நீங்களே சொல்லுங்க, பன்னிரண்டு வருஷம் கழிச்சு பூத்தா அது குறிஞ்சிப்பூ தானே :) எங்க அம்மா அப்படி தான் அவள கூப்பிடறாங்க 

ஆமாங்க, எங்க வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்திருக்கா. அவளுக்கு சஹானானு பேர் வெச்சுருக்கோம், 9 மாசம் ஆச்சு பாப்பாவுக்கு. அதான் லாங் லீவ். இதோட லீவ் லெட்டர் முடிஞ்சுது. இனி சஹானா புராணம் கொஞ்சம்...

அந்த நாள் என் வாழ்க்கைல மறக்க முடியுமானு தெர்ல. மொதல் மொதல்ல பட்டு செல்லத்த என்கிட்ட கொண்டு வந்து காட்டினப்ப, இது போதும்னு தோணுச்சு. அதுக்கப்புறம் ரெம்ப நேரம் கண்ணுலேயே காட்டல. ஒரே அழுவாச்சியா வந்தது, அப்புறம் ஒரு வழியா என்கிட்ட குடுத்தாங்க. யார் மாதிரினு குழம்ப வேண்டிய அவசியமே இல்லாம, அப்படியே அவங்க அப்பாவை போட்டோகாப்பி பண்ணின மாதிரி இருந்தா, உண்மையா சொல்லணும்னா அவர் மேல கொஞ்சம் பொறாமை கூட வந்தது அப்போ :)

அஞ்சாவது நாள் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தது தான் ஞாபகம், அப்புறம் நாட்கள் ரெக்கை கட்டிட்டு பறந்துடுச்சு. அதுவும் நாலு மாசத்துல இருந்து தனியா வெச்சுட்டு ஒரே காமடி தான் போங்க 

ஆனா ரெண்டு மாசம் முன்னாடி மொதல் மொதல்ல அம்மா சொன்னப்ப, என்னை கைல புடிக்க முடியல. இப்ப கொஞ்ச நாளா அண்ணாவும் (நாங்க அப்பாவை அண்ணா'னு  தான் சொல்றது) சொல்ல தொடங்கியாச்சு. இப்ப ஒரு வாரமா "அம்" "அண்" அப்படினு ஷார்ட் பார்ம்ல கூப்பிட தொடங்கி இருக்காங்க மேடம் :)

தவழவும் தொடங்கிட்டா, நைட் பத்து மணிக்கி நமக்கு சாமி ஆடும், அப்ப தான் மேடம் சூப்பர் ப்ரெஷ்'ஆ இருப்பாங்க. பகல்ல அவ தூங்கற நேரம் தான் நான் வேலய முடிக்கணும், அதான் குட் நியூஸ் போஸ்ட் போடக் கூட இவ்ளோ நாள் ஆய்டுச்சு 

இந்த ஒரு வாரமா நாம என்ன செஞ்சாலும் சொன்னாலும் ரிபீட் பண்ண ட்ரை பண்றா, பாத்து பேச வேண்டியதா இருக்கு. நேத்து அப்படி தான் சாப்பிட அடம் பிடிக்கறானு "அடி வேணுமா?"னு சும்மாவாச்சும் கைய தூக்கினதுக்கு, அவளும் அதே ரிபீட். ரங்கஸ்'க்கு ஒரே குஷி ஆய்டுச்சு. அவ்வ்வ்வ்வ்... கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல 

சரிங்க, சஹானா சிணுங்க தொடங்கியாச்சு. அப்புறம் பாப்போம். இனி வாரம் ஒரு போஸ்ட் தொடரும் பழையபடி. டேக் கேர். உங்களுக்காக சஹானா போட்டோ இதோ அன்புடன்,


அப்பாவி 

48 பேரு சொல்லி இருக்காக:

sambasivam6geetha said...

குழந்தைக்குச் சுத்திப் போடுங்க. வாழ்த்துகள். நிதானமாகக் குழந்தையோடு வேண்டிய நேரம் செலவு செய்துட்டு மெதுவா வலைப்பக்கம் வந்து பதிவு எழுதுங்க!

Sathish A said...

வாழ்த்துகள்...

தி. ரா. ச.(T.R.C.) said...

Congrats mami sends her best wishes to Kuriji poo

தி. ரா. ச.(T.R.C.) said...

Congrats mami sends her best wishes to Kuriji poo

தி. ரா. ச.(T.R.C.) said...

Congrats mami sends her best wishes to Kuriji poo

Vasudevan Tirumurti said...

இந்த ஒரு வாரமா நாம என்ன செஞ்சாலும் சொன்னாலும் ரிபீட் பண்ண ட்ரை பண்றா,...//
புதிய பதிவருக்கு நல்வரவு!

Vasudevan Tirumurti said...

இதென்ன முகத்தில பாதியை மறைச்சுகிட்டு ஒரு போட்டோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Vasudevan Tirumurti said...

தி.ரா.ச என்ன வாழ்த்திகிட்டே இருக்காரு! :-)))

Angelin said...

கியூட் பூ :) குறும்பு கொப்பளிக்கும் பார்வை ..அழகு செல்லம் ..

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துகள்.

Angelin said...

Sending waves of blessings and wishes for the little princess sahana ,mommy and daddy ..

BalajiVenkat said...

Heart filled wishes to u and Kutty .

Ranjani Narayanan said...

குழந்தைக்கும், உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள், நல்லாசிகள்.

Anandaraja Vijayaraghavan said...

Wow. Super good news Bhuvana. Happy for you! Convey Aavee uncle's hi to Sahana.

Anandaraja Vijayaraghavan said...

Wow. Super good news Bhuvana. Happy for you! Convey Aavee uncle's hi to Sahana.

ஸ்ரீராம். said...

குறிஞ்சிப்பூ சஹானாவுக்கு வாழ்த்துகள். உங்கள் மீள் வரவுக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

கீதா லட்சுமி said...

Best wishes to you :)

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.

குழந்தை சஹானாவிற்கு மனமார்ந்த நல்லாசிகள்.

Ramani S said...

சஹானாவிற்கு நல் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவன். நல்வரவு. சஹானா குறிஞ்சிப்பூ அழகா இருக்கா. த்ரிஷ்டி சுத்திப் போடவும். இப்போதைக்கு அவள் தான் முக்கியம். அதனால் அவளோட அப்பா வீட்டில இருக்கும்போது பதிவு எழுதலாம். இந்த நேர மகிழ்ச்சியைக் கைவிடவேண்டாம். வாழ்த்துகள். மா. குழந்தைக்கு ஆசிகள்.

middleclassmadhavi said...

Congrats!!

Nanjil Kannan said...

Akka !!!!!!! ☺☺☺☺ Vera ethum solala naan ...

தக்குடு said...

Welcome back to our adapavi Akka & blessings to our Kutty papa :)

கீத மஞ்சரி said...

கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு புவனா. குறிஞ்சிப்பூக்குட்டிக்கு என் அன்பும் ஆசியும்.

Vadivelan R. said...

நோய் நொடியின்றி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் குழந்தையை பத்ரமா பார்த்துக்கோங்க சின்ன வஸ்துக்கள் ( புளியங்கொட்டை பட்டன் இந்த மாதிரி ) பசங்க வாயில போட்டுப்பாங்க ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க பார்த்துப்பிங்க வாழ்த்துக்கள் தோழி

இமா said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாவி அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சஹானா க்யூட். குட்டிப் பெண்ணுக்கு அன்போடு ஒரு முத்தம்.

ஸ்ரீராம். said...

சஹானாவுக்கு இட்லி கொடுக்க ஆரம்பிச்சாச்சா? :P

ADHI VENKAT said...

congrats. porumaiyaa vaanga... naanga enge poka porom....:))

Thanai thalaivi said...

குட்டி பொண்ணை பார்த்துக்கோங்க, இப்பத்தைக்கு அது தான் ரொம்ப முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் தான்.
குட்டி பூக்கு அன்பும் ஆசிகளும்.

சுரேகா said...

வாவ்.. பாப்பாவுக்கு அன்பைத் தெரிவிக்கவும்...!! எத்தனை நாள் கழித்து வந்தாலும் நாங்களும் இப்படித்தான் அன்பா இருப்போம்னு சொல்லவும்!! :)

Malar Gandhi said...

Sahana is so pretty. :) Congrats Bhuvana. Enjoy Motherhood. And, how is life in India? I bet, with the lil one around...its would be super jolly!
Take Care.

geetha santhanam said...

Congratulations and best wishes to u and sahana

sandhya said...

Congratulations dear . Lots of love and kisses to kutty appavi sahana.

MV SEETARAMAN said...

KEEP BLOGGING YR STYLE IS GOOD , SHARE MANY HAPPY MOMENTS

Subhashini said...

Welcome Back Bhuvani. Kutti Pappa Super

குந்தவை said...

Very happy to hear. Hearty wishes to you and family. Convey my kisses to dear sahana. Really a great news. Take care bhuvana.

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி புவனா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (14.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html

அர்ஜூனம்மா said...

ஹை...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அப்பாவி :) கிட்டத்தட்ட உங்களோட எல்லா பதிவுகளுமே படிச்சிருப்பேனு நினைக்கிறேன். கொஞ்சநாளா (வருஷமா) வந்து பார்த்து ஏமாந்து போயிருக்கேன். ஆனா இப்ப இந்த விஷயம் கேள்விப்பட்டு ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு. சஹானாக்குட்டிக்கும் அப்பாவி அன்ட் மிஸ்டர் அப்பாவிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு விஷயம் நான்கூட எங்கப்பாவ அண்ணானுதான் கூப்பிடுவேன் :)). உங்கள் சேவை நாட்டுக்கு தேவை சீக்கிரமா நிறைய பதிவுகள் எழுதி தள்ளுங்கள். இட்லி, சேவைனு எழுதி உங்களை உசுப்பேத்துறேனு தவறாகணிச்சிடப்பிடாது.

vanathy said...

Super. Congrats.

‘தளிர்’ சுரேஷ் said...

வாழ்த்துக்கள்! சஹானா! அருமையான பெயர்! நன்றி!

Ezhilarasi Pazhanivel said...

Hearty wishes to you and your family! Enjoy parenting!-Ezhilarasi Pazhanivel

Anonymous said...

Congratulations!Happy to see the baby!

Bala said...

Congratulations...

swathium kavithaium said...

வணக்கம் ஜோதிகா...(ரீ எண்ட்ரீனு சொன்னதால..) இன்னொரு ஜோதிகாவை விட அழகானவளின் வணக்கம்...வந்து பாத்து, படித்ததாலே நானும் தங்கமான மணி ஆய்ட்டேன் தானே...?http://swthiumkavithaium.blogspot.com/

swathium kavithaium said...

வணக்கம் ஜோதிகா...(ரீ எண்ட்ரீனு சொன்னதால..) இன்னொரு ஜோதிகாவை விட அழகானவளின் வணக்கம்...வந்து பாத்து, படித்ததாலே நானும் தங்கமான மணி ஆய்ட்டேன் தானே...?http://swthiumkavithaium.blogspot.com/

கே. பி. ஜனா... said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Post a Comment