Friday, July 01, 2016

ஒற்றை ரோஜா ... :)


"ஐயோ பாவம் கடைக்காரர் எப்படி முழிக்கறார் பாரு, பிரிண்ட்ல வராத புக் எல்லாம் கேக்கறியேம்மா. நீ படிக்கற வேகத்துக்கு எழுதறதுக்கு எழுத்தாளர் இல்ல போல"னு என்னோட ரங்ஸ் கிண்டல் செஞ்ச காலம் ஒண்ணு இருந்தது. அதெல்லாம் லாங் லாங் எகோ சோ லாங் எகோ...

"பாண்டவர் அணி அறுபடை வீடு ஆனதன் பின்னணி என்னனு குமுதத்துல வந்திருக்கே படிச்சீங்களா?"னு நான் போன வாரம் ரங்ஸ்'ஐ பாத்து கேட்க, அவர் சிரிச்ச சிரிப்புல சஹானா மெரண்டு போய் அவ கைல வெச்சிருந்த 4X4 சைஸ் வெஜிடபிள்ஸ் போர்டுபுக்கை விட்டெறிய, அது நங்குனு என் நெத்தில வந்து மோதுச்சு 
மோதின எடத்துல தேச்சு விட்டுட்டு இருக்கறத கூட பொருட்படுத்தாம, கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம "அந்த காந்தி செத்து பல மாசம் ஆச்சு"னு ரங்ஸ் தனது ஸ்டாக்கில் இருந்து ஒரு பல்பை பார்ஸல் செய்தார்

"இந்த அவமானம் உனக்கு தேவையா"னு மைண்ட்வாய்ஸ் கேட்க, "சரவணன் மீனாட்சி பார்ட் 4 வர்ற வரைக்கும் புக் வாங்கினா என் பேரை மாத்திக்கறேன்"னு சபதம் போட்டேன்

நேத்தைக்கு மதியம் அதிசயமா என் புத்திரி கொஞ்சம் எஸ்ட்ரா லார்ஜ் தூக்கம் போடவும், கண்ணு நம நம'ன்னது. ஆடின காலும் பாடின வாயும் மட்டுமில்ல, படிச்ச கண்ணும் சும்மா இருக்கறது சிரமம்னு அனுபவப்பட்டவங்களுக்கு புரியும்

கண் நம நமப்பை போக்க, எங்காச்சும் ஏதாச்சும் சிக்குதானு தேடினேன். மூணு மாசம் முன்னாடி வாங்கி, சஹானா கைல சிக்கி சின்னா பின்னமாவதில் இருந்து தப்பித்த ஒரு ராணி முத்து சிக்குச்சு. அதெப்படி அந்த அதிகம் யூஸ் பண்ணாத கபோட்'குள்ள போனது எனும் மர்மம் இன்னும் மர்மமாவே உள்ளது

நான் எப்படி அதை நேரத்துல அங்க தேடினேங்கறதும் அனன்யானுஸ்யமே சாரி சாரி அமானுஷ்யமே. அது வேற ஒண்ணுமில்ல, கப்போர்ட்'னதும் எனக்கு Ananya Mahadevanதேடும் படலம் ஞாபகம் வந்து கை ஸ்லிப் ஆகி அவ பேர் டைப்பிடுச்சு. ஏம் ஐ ரைட் Hema Sridhar
என்ன சொல்லிட்டு இருந்தேன்? ஆங்... ராணி முத்து சிக்குச்சு. அதுல கல்கி எழுதின "ஒற்றை ரோஜா"னு ஒரு கதை. படிக்க படிக்க வெக்கவே மனசில்லை. ஒரே மூச்சுல படிச்சு முடிச்சேன்

ஒரு ரோஜா ஒரு வைரம் ஒரு பொண்ணு இதை மட்டும் வெச்சுட்டு என்னமா எழுதி இருக்கார். இதுக்கு மேல நான் விளக்கினா கதையோட சுவாரஷ்யம் போய்டும். சான்ஸ் கிடைச்சா படிங்க, இதை சொல்ல தான் இந்த போஸ்ட். இதை ஒரு வரில சொன்னா ஆகாதானு Srinivasan Govindan(தக்குடு) சபிக்கறது இங்க வரைக்கும் கேக்குது

அப்படி ஒரு வரில மட்டும் நான் சொல்லி இருந்தா "அச்சச்சோ அப்பாவி அக்கௌன்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க"னு நம்ம Hussain Amma,  Geetha Sambasivam மாமி & Shanthy Mariappan அக்கா, மற்றும் நம்ம உறவினரெல்லாம் மார்க்குக்கு பெட்டிஷன் அனுப்பிடுவாங்களோனு தான் இப்படி ஒரு வில்லங்கமான சாரி விளக்கமான பதிவு

உண்மைய சொல்லனும்னா இதை பிளாக்ல போடணும்னு தான் மொதல்ல நெனச்சேன். நான் நெனச்சு தொவச்சு காயவெக்கறதுக்குள்ள என் குல கொழுந்து லேப்டாப்பை கும்மி விடும் அபாயம் இருப்பதால் இப்போதைக்கு முகநூல் மட்டுமே நான் நூல் விட சிறந்த இடம்னு முடிவோட இங்கன வாலிட்டேன். 

அப்போ இதென்னாவாம்னு கேக்கறவங்களுக்கு, அது போன வாரம் இது  வாரம். அதோட ஒரிஜினாலிட்டி கெட்டு போய்ட கூடாதுன்னு அப்படியே போட்டுட்டேன் அதன் பின் இப்போ பிளாக்லையும் போட்டாச். இப்படியே விட்டா பிளாக் துருபிடிச்சு போய்டும்னு ஒரு பயம் தான் :)

இன்னும், அதே ராணி முத்துல இரட்டை நாவலா Vidya Subramaniam மேடத்தோட "கற்பூர காற்று" படிக்கறது பாக்கி. அதை படிச்சுட்டு இன்னொரு பதிவிடறேன்

இந்த அழகுல நேத்து ரங்ஸ் சொன்ன ஒரு மேட்டர் கொளுத்தற வெயில்லே கொள்ளு தண்ணி வேணுமானு கேட்டாப்ல இருந்தது எனக்கு

அப்படி என்ன சொன்னாரா "போன வருஷம் மாதிரியே இந்த வருசமும் நம்மூர்ல ஆகஸ்ட் மாசம் புக் பேர் போடறாங்களாம், போலாமா?"னு கேட்டார். இதுக்கு அவர் Madhuram Prabhakar செஞ்ச உப்புமாவையே எனக்கு பார்ஸல் பண்ணி குடுத்து இருக்கலாம்னு தோணி போச்சு

"போங்க சார், போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க"னு சொல்லலாம்னு நெனச்சேன், அதேயே பொழப்பா செய்யற வாத்தியார்கிட்ட வேற ஏதாவது புதுசா சொல்லலாம்னு நான் யோசிக்க, அதுக்குள்ள "அம்மா ஜீ ஜீ ஜீ"னு ஆரம்பிச்சா என் தங்கம்

"யாரது அமிதாப் ஜீ வந்திருக்காரா உங்க வீட்டுக்கு?"னு நீங்க டென்ஷன் ஆக வேண்டாம், இது அந்த ஜீ இல்ல குடிக்கற ஜீ, அதாவது ஜிய்யாவின் (தண்ணி) மழலை வடிவம் 

மீண்டும் சந்திப்போம்...:) 

7 பேரு சொல்லி இருக்காக:

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா.... Welcome back அப்பாவி!

Vasudevan Tirumurti said...

அட! ஏடிஎம்! வருக வருக!

Vasudevan Tirumurti said...

வெல்கம் சொன்னாக்கூட ரெஸ்பாண்ட் பண்ணறதில்லே. எப்படி இங்க வருவாங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

meera janakiraman janaki said...

ராணிமுத்துல கல்கி கதையா??? எந்த வருஷத்தது??? எங்க கிடைக்கும்? விவரம் சொல்லுப்பா ப்ளீஸ்.

meera janakiraman janaki said...
This comment has been removed by the author.
Anuradha Prem said...

முதல் முறை இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன்....ஆஹா அனைத்து கதைகளும் அருமை...

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - நன்றி அண்ணா

@ Vasudevan Tirumurti - நன்றி திவாண்ணா. சாரி பார் தி லேட் கமெண்ட். நேரம் சரியா இருக்கு, எனக்கும் அடிக்கடி பிளாக் பக்கம் வர ஆசை தான். சஹானாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு பழையபடி தொடரலாம்னு இருக்கேன். எங்க ஓடறீங்க, இருங்க... :)

@ meera janakiraman janaki - ரெண்டு மூணு மாசம் முன்னாடினு நினைக்கிறன், மறுபதிப்பு அக்கா

@ Anuradha Prem - மிக்க நன்றிங்க அனுராதா. நீங்களும் ரெண்டு வருசமா எழுதறீங்க போல இருக்கு, இப்ப தான் உங்க வலைப்பக்கம் பாத்தேன். நல்லா இருக்கு

Post a Comment