Monday, October 24, 2016

அந்நாள் பெண்களூர் கண்ணர் இந்நாள் தோஹா மன்னர் பராக் பராக் பராக்... :)


Image result for thakkudu


2015 ஆகஸ்ட் மாசத்துல ஒரு நாள் ஒரு தாக்கல் வந்தது, அதாகப்பட்டது "அக்கா, அடுத்த மாசம் உங்கூர்ல எங்க சித்தி ஆத்துக்கு வர்ற ஜோலி இருக்கு, அப்படியே மருமாளையும் (சஹானா) பாக்க வரேன்"னு. ஆனா இட்லி பண்ணக்கூடாதுனு விர்ச்சுவல் கற்பூரத்துல அடிச்சு சத்தியமெல்லாம் வாங்கினது தனிக்கதை :)

தலைப்பை பாத்தே அந்த பிரபலம் யாருனு கண்டுபிடுச்சு இருப்பீங்க பலர். இருந்தாலும் சொல்றேன், நம்ம திரட்டுப்பால் தக்குடுவாள்(ல்) தான்

ஒரு வருஷம் முன்னாடி எழுத ஆரம்பிச்சது இந்த போஸ்ட், அப்புறம் என் பொண்ணு நடக்க ஆரம்பிச்சா, அதோட இந்த போஸ்ட் நின்னுடுச்சு :). போஸ்ட்டை, கொஞ்சம் பட்டி டிங்கரிங் எல்லாம் பாக்க வேண்டி இருந்ததால இவ்ளோ நாள் பெண்டிங் 

எங்க உட்டேன், ம்ம்ம் 2015ல செப்டம்பர்ல.... தக்குடுவை வரவேற்க ஹேப்பியா தயாரானோம். அந்த நாளும் வந்தது. வீட்டுக்கு வர்றதுக்கு வழி கேட்கவும், தக்குடுவை பத்தி தெரிஞ்சதால, அவருக்கு இஷ்டமான லேண்ட்மார்க் பியூட்டி பார்லர் எல்லாம் சொல்லி வழி சொன்னேன். அதான் வம்பா போச்சு, அந்த பியூட்டி பார்லர் பக்கத்துல வந்ததும் அதுக்கு மேல வண்டி நகரலை. ஒருவழியா என் ரங்கமணி போய் "மறுபடி வரலாம் வா"னு சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தார் 

தக்குடுவை ட்ராப் பண்ண கூட வந்த சித்தப்பாகிட்ட என்னைப்பத்தி என்ன சொன்னாரோ தெரில, நான் எவ்ளோ கெஞ்சியும் அவர் லன்ச் சாப்பிடாமயே எஸ்கேப் 

சித்தப்பா கெளம்பர வரைக்கும் டிப்ளமேடிக்கா போயிட்டு இருந்த கான்வர்சேஷன், அப்புறம் அப்படியே யூ டர்ன் எடுத்தது. அதுல மொதல் டயலாக் தக்குடு டு மை ரங்ஸ் "பிளாக்ல நாங்கெல்லாம் அக்காவை அப்பாவியோட தங்கமணினு தான் சொல்றது" அப்படினு போட்டாரே ஒரு பிட்டு, ரங்ஸ் கண்ணுல ஆனந்த கண்ணீர் வராத கொற தான் 

பத்தே நிமிசத்துல சஹானாவும் ஐக்கியம் ஆகிட்டா, எந்த மந்திரமோ தெர்லப்பா :) 

அப்புறம் ஆதி காலம் தொட்டு நம்ம பிளாக் கலாட்டாக்கள் எல்லாம் பேசி டைம் போனதே தெரில. பெரும்பாலும் என்னை டேமேஜ் பண்ணி தான், ரங்ஸ் ஒரே சிரிப்பு மழை, சரி சரி ஒரு நாள் தானே சிரிச்சுக்கட்டும் நானும் கண்டுக்கலை 

நானும் விடுவேனானு பெண்களூர், ஜிமிக்கி, வைஷு  இன்ன பிற கதைகள் எல்லாம் எடுத்து விட "ஆஹா நல்ல நேரத்துக்கு என் ஐஷு வரல"னு ஆறுதல்பட்டார் தக்குடு, பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் :) 

(ச்சே...ஐ மிஸ் யூசிங் திஸ் டயலாக். தொடர்கதை எழுதிட்டு இருந்த காலத்துல எபிசோட் முடிவுல இந்த டயலாக் போட்டு எத்தனை பேரை டென்ஷன் பண்ணி இருப்பேன், ஹ்ம்ம்... அதுவொரு அழகிய நிலாக்காலம் :)

சரி, நம்ம தக்குடு எபிசோடுக்கு வருவோம். தக்குடுவுக்கு ஏன் இந்த டயலாக் யூஸ் பண்ணினேனா, இந்த போஸ்ட் லிங்க் டைரக்ட்டா தங்கமணிக்கு வாட்ஸ்ஏப்ல போகப்போகுதே :)

பேசி பேசியே நேரத்தை கடத்தினார் தக்குடு. நடு நடுல நான் "சாப்பிடலாமா?"னு ஆரம்பிச்சா, மறுபடி நியூ டாபிக் ஆரம்பிச்சார் நம்ம தம்ப்ரி. இப்படியே ஓடுச்சு நேரம் 

"நீ எவ்ளோ நேரம் பேசினாலும் ஓகே, பட் இன்னைக்கி சாப்பிடாம தப்பிக்க முடியாது"னு நான் செக் வெக்கவும், "பயப்பாடாத, நான் இல்லையா"னு சஹானா அப்பா தேத்த 

"நீங்க இருப்பீங்க, நான் இருப்பேனா"னு தக்குடு கண் கலங்க, ஒரு வழியா சாப்பிட ஆரம்பிச்சோம் :). சாப்பிடறப்பவும் அதே கண்ணீர் தான், கொஞ்சம் காரம் போல இருக்கு, ஒரு திகில் படம் பாக்கற பீலிங்க்லயே எப்படியோ சமாளிச்சு சாப்பிட்டார் 

டேபிள் மேனர்ஸ் கருதி, போனா போகுதுன்னு "எல்லாம் நல்லா இருந்தது அக்கா"னு தொண்டை அடைக்க அசரீரி மாதிரி ஒரு குரல், வேற யாரு? தக்குடு தான்

அதிக காரத்துல பேச்சு வரலியோனு நெனச்சுட்டு "அடுத்த வாட்டி நீ வர்றப்ப காரம் கம்மியா போடறேன்"னு நான் சொல்லவும் "அடுத்த வாட்டியா"ங்கற மாதிரி ஒரு உறைந்த பார்வை மட்டும் பதிலா வந்தது, கொஞ்சம் முன்ன வந்த அசரீரி குரல் கூட இப்ப வரல :)

மறுபடி ஆரம்பிச்சது அரட்டை கச்சேரி, அப்புறம் டீ குடிச்சுட்டு புறப்பாடு. கிளம்பரப்ப "அடுத்த வருஷ சதுர்த்திக்கு கல்லிடை வாங்க"னு அழைச்சார். பின்ன, பழிக்கு பழி வாங்க வேண்டாமானு அசரீரி கேட்ட மாதிரியே இருந்தது எனக்கு :)

ஜோக்ஸ் அபார்ட், எனக்கு ஒரு தம்பி இல்லையேனு பீல் பண்ண வெக்கற பெர்சன் தக்குடு  

2009ல பிளாக் எழுத ஆரம்பிச்சப்பவே பரிச்சயம், நெறய நல்ல நட்புகள் தக்குடு மூலமா தான் எனக்கு அமைஞ்சது. தேங்க்யூ பிரதர் 

கமெண்ட்ல, சேட்ல, போன்ல நெறய வாட்டி பேசி இருந்ததாலேயே என்னவோ, மொதல் தரம் நேர்ல பாத்துக்கற மாதிரியே தோணல

2016 சதுர்த்திக்கு நாங்க கல்லிடை போனோமா, தக்குடு குடும்பத்தோட சேத்து, ஐஸ் ப்ரூட் மாமா, அகிலா மாமி, கோவில் மாமி, சௌக்கியமா மாமி எல்லாரையும் பாத்தோமா, நடந்தது என்ன? சுற்றமும் பின்னணியும் அடுத்த எபிசோட்ல சொல்றேன். இப்பத்திக்கி சஹானாவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரணும், டைம் ஆச்சு,  பை பை :)))

11 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

�� குட்..குட்!! ஸ்டார்ட் மீசிக்!! ��

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரு மாபெரும் நகைச்சுவை எழுத்தாளர்களின் சந்திப்பினை நேரில் பார்க்கும் பாக்யம் கிடைக்காவிட்டாலும், இந்தப்பதிவினில் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது மிகவும் அழகோ அழகாக உள்ளது.

பல இடங்களில் மிகவும் ரஸித்துச் சிரித்து மகிழ்ந்தேன்.

மனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

ஹுஸைனம்மா said...

/2015ல செப்டம்பர்ல//

இவ்ளோ சீக்கிரம் பதிவு எழுதிட்டீங்களே... வாவ்... வாட் எ சுறுசுறுப்பு!!
(எங்கிட்டயும் இப்படி நிறைய பெண்டிங் இருக்கு)

//வாட்ஸ்ஏப்ல //

இந்த ஆல்ஃபபெட் “ஏ”வுக்கும் உங்களுக்கும் ஏதும் வாய்க்கா வரப்பு தகராறா? வாட்ஸ்ஏப், ஏப்பிள், ஸ்நேக் - இப்பிடியெல்லாம் சொல்லி இது என்ன வார்த்தையோனு எங்களை குழப்புறீங்களே.... :-) :-) :-)

ஹுஸைனம்மா said...

/இந்நாள் தோஹா மன்னர்//

டைட்டிலைப் பாத்ததும், தோஹா மன்னரைப் பற்றி நீங்க ஏன் எழுதுறீங்கன்னு ஒரு கன்ஃப்யூஷன்... ஏன்னா, இருந்திருந்து நீங்க ஒரு வருஷம் கழிச்சு பதிவு போட்ட நாள் பாத்து, தோஹாவுல மன்னருக்கு ஒரு விசேஷம்!!

Avargal Unmaigal said...

உங்களின் நகைச்சுவை எழுத்த மிஸ் பண்ணிய எங்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு போல இருந்தது. குட்

ஸ்ரீராம். said...

குரல் வராத அளவுக்கு என்ன மெனு செய்தீர்கள் என்று சொல்லவே இல்லையே? அவர் இட்லியைத் தவிர்க்கத்தான் காலையும் இல்லாமல் இரவும் இல்லாமல் மதியத்தில் வந்தாரோ!

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா என்ன ஒரு சுறுசுறுப்பு.... இப்படிதான் இருக்கணும்.... நல்லதொரு ஆரம்பம். தொடருங்கள்.....

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா என்ன ஒரு சுறுசுறுப்பு.... இப்படிதான் இருக்கணும்.... நல்லதொரு ஆரம்பம். தொடருங்கள்.....

Thanai thalaivi said...

//கமெண்ட்ல, சேட்ல, போன்ல நெறய வாட்டி பேசி இருந்ததாலேயே என்னவோ, மொதல் தரம் நேர்ல பாத்துக்கற மாதிரியே தோணல//
இஸ் இட் !!! ஆச்சர்யம் !!! அப்புறம் இன்னொரு மேட்டர், அது வந்து என்னன்னா தக்குடு 2014ல எங்க வீட்டுக்கு வந்துட்டு போனான். அந்த பதிவை நான் இன்னமும் எழுதல. :) :) நல்ல நட்பு. வாழ்க பல்லாண்டு.

பரிவை சே.குமார் said...

ஹா..ஹா...

சிவகுமாரன் said...

கலகல நடை. படித்து மகிழ்ந்தேன்.

Post a Comment