Friday, November 18, 2016

"மங்கையர் மலரில்" பரிசு பெற்ற எனது சிறுகதை "இரண்டாவது அத்தியாயம்"




மங்கையர் மலர் நடத்திய இந்த ஆண்டின் "ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதை போட்டி" யில் எனது சிறுகதை ஆறுதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் பெற்றுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 

"இரண்டாவது அத்தியாயம்" என்ற இந்த சிறுகதை, நவம்பர் 16 - 30 மங்கையர் மலர் தழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதை என் மகள் "சஹானா"வின் பெயரில் அனுப்பிருந்தேன், பரிசு பெற்று அவள் பெயரில் பிரசுரமானதில் கூடுதல் மகிழ்ச்சி

மங்கையர் மலர் ஆசிரியர் மற்றும் போட்டி நடத்திய குழுவிற்கு நன்றிகள். அதோடு, இந்த போட்டி பற்றி முகநூலில் பதிவிட்டு தெரியப்படுத்திய தேனம்மை அக்காவுக்கும் நன்றி