Tuesday, December 21, 2010

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 1)


Toronto University வளாகம் புது பொலிவு பெற்று இருந்தது

விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்கள் இரண்டு மாத கால கதையை பிரதாபித்து கொண்டு இருந்தனர்

அப்போது தான் சேர்ந்திருந்த புது மாணவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கமும் நிறைய கனவுமாய் வலம் வந்தனர்

அந்த கூட்டத்துல இந்த கதைக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு பேர் யூனிவர்சிட்டிகுள்ளேயே இருக்கற ஒரு Food Courtல உக்காந்துட்டு என்னமோ பேசிட்டு இருக்காங்க... என்ன பேசறாங்கன்னு கேப்போம் வாங்க...

"சதீஷ் அங்க பாரேன் ஒருத்தன் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"எங்க மீரா?"

"உனக்கு சைடுல நமக்கு அடுத்த டேபிள்ல...சட்டுன்னு திரும்பாத"

"ம்... " என்றவன் மெதுவாய் இயல்பாய் திரும்புவது போல் திரும்பி பார்த்தான்

"என்ன நான் சொன்னது கரெக்டா சதீஷ்?"

"ம்... கரெக்ட் தான்... அவனை இன்னிக்கி ஓரியன்டேசன்ல பாத்தா மாதிரி ஞாபகம்"

"ஓ...நம்ம க்ளாஸ்ஆ?"

"தெரியல...எல்லா மேஜர்க்கும் ஜெனரல் ஓரியன்டேசன் செசன் தானே இங்கெல்லாம்... மே பி நம்ம க்ளாஸ்ஆ இருக்கலாம். எல்லாரும் Self Introduce பண்ணிகிட்டப்ப இவன் தன்னை இட்டாலியன்னு சொன்னதா ஞாபகம்"

"ஓ... நான் கவனிக்கல"

"ஆமா பாத்தனே நீ தூங்கி தூங்கி விழுந்ததை"

"ஏய்... நான் ஒண்ணும் தூங்கல... ஓரியன்டேசன் பைண்டர் படிச்சுட்டு இருந்தேன்"

"நம்பிட்டேம்மா..." என சதீஷ் சிரிக்க

"உனக்கு ரெம்ப கொழுப்புடா ஆனாலும்... ஏய் அவன் மறுபடியும் நம்மளையே பாக்கறான்"

"நம்மளை இல்ல உன்னைனு சொல்லு... அழகா ஒரு பொண்ணு இருந்தா பாக்கத்தானே செய்வாங்க"

"நெஜமாவா சொல்ற... நான் அவ்ளோ அழகா இருக்கேனா?" என மீரா வெட்கப்படுவது போல் நடித்து அழகாய் கேட்க

"Sorry I lied" என குறும்பாய் சிரித்து கொண்டே சதீஷ் கூற

"ஏய்... யு... யு... " என அவனை அடிக்க புத்தகத்தை எடுத்தாள்

"ஒகே ஒகே... சமாதானம் சமாதானம்" என கையில் இருந்த வெள்ளை பேப்பரை காட்டினான்

"சதீஷ்... அந்த பையன் இன்னும் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"பாத்துட்டு போகட்டும் விடு மீரா"

"நேத்து ஒருத்தி பிசாசு மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தானு நான் ஒரு நிமிஷம் முழிச்சு பாத்ததுக்கு starring is bad manners, did your mom not teach it னு ஒரு மணிநேரம் இங்கிலீஷ் லெக்சர் குடுத்தாளே அதை அப்படியே இப்ப இவனுக்கு குடுக்கட்டுமா?"

"வேண்டாம் மீரா... பாவம் அவனுக்கு இங்கிலீஷ் மறந்துடும், பொழச்சு போகட்டும் விடு" என சதீஷ் சிரிக்காமல் சொல்ல

"உன்ன... இரு இரு... நோட்ஸ் வேணும்னு வந்து நிப்பெல்ல அப்ப சொல்றேன் யாருக்கு இங்கிலீஷ் மறக்கும்னு" கோபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னாள் மீரா

"ஒகே ஒகே... சும்மா கிண்டல் தானே...சாரி" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்ச அவர்கள் பின்னால் இருந்த அவன் லேசாக புன்னகைத்தான்

"ஏய் ஏய்... அவன் சிரிக்கறான்.. என்னமோ நாம பேசறது ரெம்ப புரிஞ்ச மாதிரி"

"அவன் ஏதோ Magazine வெச்சுருக்கான் பாரு... அதுல ஏதோ படிச்சுட்டு சிரிக்கறான் போல இருக்கு"

"ம்...ஆமாம் கரெக்ட்... அவனும் அவன் மூஞ்சியும்"

"ஏன் அவன் மூஞ்சிகென்ன?"

"இல்ல... அடிக்கற கிரீன் கலர் ஷர்ட்... கண்றாவி... நம்ம ஊர்ல கட்டிட வேலைக்கு வர்றவன் மாதிரி இருக்கான்"

"ஹா ஹா ஹ... நல்ல கம்பாரிசன்"

"ம்... அவன் தலைய பாரேன் என்னமோ எலி கரண்டி வெச்ச தேங்கா மாதிரி"

"சான்சே இல்ல மீரா... நல்லா சிரிக்க வெக்கற... பேசாம நீ அசத்த போவது யாரு ப்ரோக்ராம்க்கு போலாம்"

"நக்கல் தான் உனக்கு"

"எஸ் எஸ்"

"அவன் பேரு என்ன சொன்ன?"

"நான் எப்ப சொன்னேன்?"

"காலைல ஓரியன்டேசன்ல என்னமோ சொன்னான்னு சொன்னியே"

"இட்டாலியன்னு சொன்னான்... பேரு சொல்லல"

"ஐ சி... அவனோட ஹேர் அது நேச்சுரல் கலர் இல்லைன்னு தோணுது... கலர் பண்ணி இருக்கான்..."

"இல்ல மீரா... இட்டாலியன்ஸ்க்கு Black Hair தான் நம்மள போல... Blonde இல்ல"

"ஓ... அவன் ஷூவ பாரேன்... என்னமோ பார்முலா ஒன் ரேஸ் கார் கூட ஓட போறவன் மாதிரி வில் எல்லாம் வெச்சு.. கண்றாவி"

"ஹா ஹா... " என சிரித்தான் சதீஷ்

"கைல ஒரு புக் கூட இல்ல... இவனெல்லாம் என்ன படிக்க போறானோ"

"ஏய்... இந்த வாரம் முழுக்க ஜஸ்ட் ஓரியன்டேசன் தானே மீரா... நீ தான் நான் சொல்ல சொல்ல கேக்காம நாலு நாளா என்னையும் சேத்து புக் பாக்னு தூக்க வெச்சுருக்க... பொண்ணுங்க எல்லாம் என்னை லூசா நீ ங்கற மாதிரி பாக்கறாங்க"

"அது என்ன பொண்ணுங்க... பசங்க உன் கண்ணுல படலியா"

"பொண்ணுங்க அளவுக்கு படல"

"சரியான ஜொள்ளு பார்ட்டிடா நீ... ச்சே"

"சரியா சொல்லு... no harm ஜொள்ளு பார்ட்டி"

"எப்படியோ போ... அந்த பையன் வெச்சுருக்கற Magazine பாரு... என்னமோ யோகானு போட்டிருக்கு.. சரியான சாமியார் போல இருக்கு"

"மீரா... திஸ் இஸ் டூ மச்... " என அவனும் அடக்க மாட்டாமல் சிரித்தான்

"அவன் கைல பாரேன் ஒரு லிட்டர் பாட்டில் சைஸ்ல காபி கப்... இந்த ஊரு ஜென்மங்க எப்படி தான் இப்படி காப்பிலையே உயிர் வாழுதுங்களோ... எப்படா MBA முடிச்சுட்டு ஊர் போய் சேருவோம்னு இருக்கு"

"அடிப்பாவி நீ தானே அடம் பிடிச்சு இங்க வரணும்னு என்னையும் சேத்து வம்புல மாட்டி விட்ட"

"அப்படியாச்சும் நீ உருபடட்டும்னு தான்"

"நேரம் தான்... சிவனேன்னு செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளை சைட் அடிச்சுட்டு சந்தோசமா இருந்தவனை இப்படி பனி காட்டுல கொண்டு வந்து தள்ளிட்டீங்க எல்லாரும் சேந்து"

"ஏய்...ரெம்ப டிராமா பண்ணாத சதீஷ்... இந்த ஒரு வாரத்துல யுநிவர்சிட்டில உன் ரவுசு தாங்காம நெறைய பொண்ணுங்க Torontoவ விட்டு போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்"

"எல்லாம் நேரம் தான்... பேசு பேசு"

"சரி அதை விடு... சதீஷ் அங்க பாரு அவன் ஐ-போன் வெச்சுட்டு செம அலப்பறை செய்யறான். நம்ம ஊர்ல இதை விட சூப்பர் மாடல் போன் எல்லாம் இருக்குனு இவனுக்கு என்ன தெரியும்... கூமுட்ட"

"என்ன மீரா... ஓவரா லோக்கல் பாஷை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட"

"அப்பப்பா பேசறது தான்... அது சரி... நீ அந்த இத்தாலிகாரன் பத்தி என்ன நெனைக்கற"

"என்ன நெனைக்கிறேன்னா... " என ஏதோ சீரியஸ்யாய் சிந்திப்பவன் போல் பாவனை செய்துவிட்டு "அவன் உன்னை பாக்கறதை விட நீ அவனை அதிகம் பாக்கறேன்னு நினைக்கிறேன்" என சிரித்து கொண்டே சதீஷ் குறும்பாய் கூற

"யு...யு... " என கோபத்தில் கையில் இருந்த புத்தகத்தை அவன் மேல் வீசினாள்

சதீஷ் அதை எதிர்பார்த்தவன் போல் சட்டென குனிய அவள் வீசிய புத்தகம் சதீஷ் பின் அமர்ந்திருந்த அந்த இத்தாலிக்காரன் மேல் போய் விழுந்தது

அவன் தன் கையில் வைத்திருந்த காபி கோப்பை சிதறி அவன் மேல் அபிஷேகம் ஆகியது

மீரா சதீஷ் இருவரும் செய்வதறியாது திகைக்க அவன் இவர்கள் இருவரையும் ஒன்றும் பேசாமல் பார்த்தான்

அவன் கண்களில் தெரிவது கோபமா கேலியா என புரியாமல் மீரா தடுமாறினாள்

மீரா தான் முதலில் சுதாரித்து "Sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

இனி...

அப்பாவியின் நோட்ஸ்:
இயக்குனர் சங்கர் தான் Foreignல போய் சினிமா எடுக்கணுமா? நாங்களும் எடுப்போம்ல... ச்சே... எழுதுவோம்ல... ஆமாங்க இந்த கதை கனடா நாட்டில் டொரோண்டோ (Toronto) என்ற மாநகரத்தில் நடக்கும் ஒரு கதை... அதாவது "ஜில்லுனு ஒரு காதல்" கதை... See you in next episode...

(ஜில்லுனு தொடரும்...) - Next Tuesday

அடுத்த பகுதி படிக்க...


...

91 பேரு சொல்லி இருக்காக:

Anonymous said...

vadai

Anonymous said...

Next Tuesday????? va

Anonymous said...

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய் யாரது என்னோட வடையை சுட்டது.... =((
நான் வேற என்னோட டாஷ்போர்ட்டை திறந்து வச்சுட்டு இவங்க பதிவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தா இந்த கல்பனா என்னோட வடையை சுட்டுட்டாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

priya.r said...

Super ATM.,Very Nice!.,Pl proceed!

LK said...

அப்பாவி, கனடாவில் காதலா , வழக்கம் போல முக்கோண காதல் போல தோணுது .. நடக்கட்டும் . இதையாவது சீக்கிரம் முடி

Anonymous said...

இந்த தமிழ் பேசற இத்தாலிகாரன் ஸ்டோரி நான் சொன்னது. இவங்க காப்பி அடிச்சுட்டாங்க. நான் இப்பவே போய் வழக்கு போடப்போறேன்.

Anonymous said...

ஹா ஹா ஹா. எப்பூடி.

Anonymous said...

Next Tuesday???!!???
NO WAY. We need it before that.

LK said...

/NO WAY. We need it before that. //

ஏன்மா இப்படி வாரம் ஒன்னு போதாதா

LK said...

இத்தாலியன் தெரியும் அது என்ன இட்டாலியன்???

Anonymous said...

என்ன பண்ணறது கார்த்தி சார். இல்லேன்னா இவங்க சீரியல் கணக்கா இழுத்துட்டே போய்டுவாங்க. அதை விட உசுப்பேத்தி உசுப்பேத்தி முடிக்க வச்சிடனும்னு ஒரு நல்ல எண்ணம் தான். =)

Anonymous said...

அவங்க CANNADTA ஆளுங்க அப்படித் தான் சொல்லுவாங்க. நீங்க கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது. ஹி ஹி.

LK said...

அதுக்குன்னு வாரும் மூணு பகுதிலாம் படிக்க முடியாது

LK said...

//CANNADTA ஆளுங்க//

apapdinaa ?

Anonymous said...

Sorry. typing error. It supposed to be CAANNADDA (That's how they pronounce) he he

Anonymous said...

//அதுக்குன்னு வாரும் மூணு பகுதிலாம் படிக்க முடியாது//


இல்லேன்னா இவங்க மூணு மாசத்துக்கு மேல இழுத்தடிப்பாங்க. வாரத்தில மூணு நாளுன்னு நாலு வாரத்திலேயே கஷ்டப்பட்டு முடிச்சுடுவோம். இல்லேன்னா மூணு மாசத்துக்கு மேல கஷ்டம். என்ன சொல்றீங்க?

LK said...

hmmm

Anonymous said...

ஓக்கே. ஆஸ்ரேலியால நடந்த கதைல, இத்தாலிக்காரன் நம்ம பொண்ண டாவடிக்கறான். நம்ம பொண்ணும் இத்தாலிகாரனை டாவடிக்குது. சோ, எனக்கு கதை முடிவு தெரியுமே. ஹா ஹா ஹா.

@ இட்லி மாமி, நான் முடிவ சொல்லிட்டேன்னு கதையை மாத்தினீங்க, அப்புறம் நான் தீக்குளிப்பேன். அது வில்லங்கம் ஆகிடும்.

திவா said...

இங்க மழை இன்னும் விட்டபாடில்லை; குளுருது. சில்லுன்னு காதல் வேண்டி இருக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்!

வெங்கட் நாகராஜ் said...

The beginning is good. continue. i will also.. :)

LK said...

anamika, maximum 2 mnthsla kathai mudiyatti bloga hack pannidalaam okvaa

Anonymous said...

நீங்க சொல்லிட்டீங்கள. செஞ்சுடுவோம்.

LK said...

raittu

Anonymous said...

ஜெய்லானி, டக்குடு எல்லாம் சீக்கரம் வாங்கப்பா.

Anonymous said...

இன்னிக்கு என்ன கூத்து நடந்துச்சுன்னு கேக்க மாட்டீங்களா?

இரண்டு வாரத்துக்கு முன்னே நம்ம பொண்ணு ஒன்னு லைஃப் ரொம்பவே சக்கின்னு ரொம்ப ஃபீலிங்கான்னளா? சரி சரி எனக்கு ஒருத்தரத் தெரியும், அவர் புளொக் படின்னு சொல்லி உங்க தளம் பத்தி சொன்னேனா? எங்க விட்டேன்? ஓ உங்க புளொக் பத்தி சொன்னேன். சரியா?

அதப் படிச்ச புள்ள இரண்டு நாளா காம்பஸ் பக்கம் வரல..... என்னடா ஆச்சுன்னு பயந்துட்டே இருந்தேன். இன்னுக்கு சாயந்திரம் என்னடான்னா, நான் ரோட்ல அந்தப்பக்கம் நின்னுட்டிருந்தேன். எதிர் புறத்தில இருந்து பேய் அடிச்ச மாதிரி ஓடி வந்தா. ஹேய் என்னாச்சுன்னு கேட்டா? அவ என்ன தெரியுமா சொன்னா?

"நீ சொன்னது ரொம்ப சரி அனாமிகா. இந்த டெடர் தங்கமணியோட ரங்கமணியை நினைச்சா என்னோட கஷ்டம் எல்லாம் தூசு யா"ன்னு சொன்னா. நான் அப்படியே உருண்டு உருண்டு சிரிச்சேன். ரொம்ப நேரமாகியும் சிரிச்சு முடியவே இல்லை. பக்கத்தில நிக்கறவங்க எல்லாம் என்னாச்சு இவளுக்குனு பாத்துட்டே இருந்தாங்க. ரொம்ப ஷேமாகிப் போச்சு. ஹி ஹி.

Anonymous said...

ஆனாலும், உங்கள மாதிரி ஒருத்தர் வீட்டுக்கு, இல்ல இல்ல பிளாட்டுக்கு ஒருத்தர் இருந்தாலே போதும்க்கா. லைஃப் ரொம்ப சுவாரசியமாகப் போகும்.

ரொம்ப ஸ்ரெஸ்புல்லா இருக்கறப்போ உங்க பதிவுல ஒன்னு படிக்க வேண்டியது தான். ரொம்ப ரிஃப்ரெஸ்ஷிங்காக இருக்கும். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

(ஹேய் என்ன நீ. நீ அடப் பாவி தங்கமணியோட எனிமி ஆச்சே. ஏன் இப்டி நல்ல விசயம் எல்லாம் அடப் பாவியப் பத்தி சொல்றே?) இது என்னோட மயின்ட் வொய்ஸ்.

ஙே! இது நான்னு.

Gayathri said...

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்


ரொமான்ஸ் கதைன்னு போட்டுட்டு உங்க டிரேட்மார்க் காமெடியையும் விடல போல இருக்கே
ஹஹா சேகரமா அடுத்த பாகம் ப்ளீஸ்

LK said...

/சேகரமா//

appadinaa

LK said...

//அவர் புளொக் படின்னு சொல்லி உங்க தளம் பத்தி சொன்னேனா? //

பாவம் உங்க பிரெண்ட் .. ஏன் இப்படி

vgr said...

AT, Well..You wrote well..no doubt about it. But i am not very sure of your "Kadai Kalam" :) Toronto University and Canada nu solirukeenga...India pinnani mari iruku...Pakalam inime eppadi kondu poreengannu...:)

-vgr

Porkodi (பொற்கொடி) said...

அழகு தமிழில் பேசறவன் ஏன் "தமிழ்ல பேசிருக்கலாமே புரிஞ்சுருக்காது"ன்னு சொல்வான்?!

கதை சூப்பர், ஆனா எங்க காலேஜ் போனாலும் நம்ம பசங்க லவ்ல தான் விழுவாங்களா.. எ.கொ.ச.இ. :))) அடுத்த செவ்வாயா!!!!! :(

Porkodi (பொற்கொடி) said...

vgr!!! same to same!

Nithu Bala said...

:-) arumayana thuvakkam..

அமைதிச்சாரல் said...

//அவன் தலைய பாரேன் என்னமோ எலி கரண்டி வெச்ச தேங்கா மாதிரி//

ஜல்லிக்கரண்டி,குழிக்கரண்டி.. ஏன் பாதாளக்கரண்டி கூட கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன எலி கரண்டி!!!.. சரவணாஸ்டோர்ஸ்லேர்ந்து புதுச்சா வாங்கிட்டு வந்திருக்கீங்களா :-)))))))))

dineshkumar said...

நீங்க எழுதுங்க பாஸ் கலக்கல்

தக்குடுபாண்டி said...

ம்ம்ம்... ஆரம்பம் எல்லாம் நன்னா தான் இருக்கு. மேல் கொண்டு கதை எப்பிடி நகருதுன்னு பாக்கலாம். (நடுல நடுல மானே! தேனே! பொன்மானே! மாதிரி US சம்பந்தமான ஜார்க்கனெல்லாம் கொஞ்சம் போட்டுக்கோங்கோ!

முனியாண்டி said...

கதை நல்ல போகுது. உங்கள் எழுத்து நடை எப்பவும்போல் நல்ல இருக்கு. அவன் தமிழ் பேசப்போகிறான் என்பதை முதலிலே யூகிக்க முடிந்தாது.

தெய்வசுகந்தி said...

:-)

நசரேயன் said...

ஜில்லுன்னு ஒரு ஜவ்வு மாதிரி இருக்க௬டாது

வெறும்பய said...

அருமையான தொடக்கம்... அடுத்த பாகம் உடனே வருமா. இல்ல அடுத்த வருஷம் தானா...

சி.பி.செந்தில்குமார் said...

ரொமான்ஸ் + காமெடி = கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>>LK சொன்னது…

இத்தாலியன் தெரியும் அது என்ன இட்டாலியன்???

எல் கே பெரியப்பா அது சும்மா ஸ்டைலு

Balaji saravana said...

ஜில்லு சும்மா ஜிவ்வுன்னு ஸ்டார்ட் ஆயிடுச்சு :)
//அமைதிச்சாரல் சொன்னது…


ஜல்லிக்கரண்டி,குழிக்கரண்டி.. ஏன் பாதாளக்கரண்டி கூட கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன எலி கரண்டி!!!.. சரவணாஸ்டோர்ஸ்லேர்ந்து புதுச்சா வாங்கிட்டு வந்திருக்கீங்களா :-))))))))) //

ஹா ஹா :))

siva said...

no no.....

vadai---enakuthan..

middleclassmadhavi said...

கதையும் பின்னூட்டங்களும் சூப்பர் :-))

Arun Prasath said...

லவ் ஸ்டோரினா நான் ஆஜர் ஆய்டுவேன்... ஹி ஹி... நல்ல தொடக்கம்...

ரஜின் said...

சகோ..ஆரம்பத்துலயே அலம்பலா???..நல்லாத்தா இருக்கு,இருந்தாலும்,நம்ம பாரதிராசா மாதிரி,"என் இனிய தமிழ்மக்களே"ன்னு ஒரு கிராமத்து சிச்சுவேஷன்ல ஆரம்பிச்சு இருந்தா கத 100 நாள் ஓடும்.(ஏன் படம் மட்டும் தா ஓடுமா..)

இந்த கதைய படிச்சஒடன....இப்டித்தா 25 வருஷத்துக்கு முன்னாடி....

வேணா நீங்களே கத சொல்லுங்க..

அன்புடன்
ரஜின்

Anu said...

Superb starting..

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க.. தொடருங்க.. நாங்களும் வர்றோம்..

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

"இத்தாலியன் தெரியும் அது என்ன இட்டாலியன்"

நல்ல வேலை "இட்லி"யன்னு சொல்லாம போனாங்களே

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

நல்லா தான் போகுது.
"அதே கண்கள்" மாதிரி அழுகாச்சி தொடரா இல்லாம இருந்தா சரி.

கோவை ஆவி said...

அவ்வளவு பெரிய ஹிட் குடுத்த சுமேதாவுக்கு இந்த கதையில ஹீரோயின் சான்ஸ் கொடுக்காததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

- சுமேதா ரசிகர் மன்றம், சிகாகோ.

கோவை ஆவி said...

சின்ன கன்ப்யுசன்!!

அந்த இத்தாலியன் நம்மள பாக்கிறான்னு மீரா சதீஷ் கிட்ட சொல்றா.. அப்போர்ந்து அவதான் அவனப் பார்த்துகிட்டு இருக்கா. அதே போல ஆரம்பத்திலிருந்து சதீஷ் மீராவை மட்டும் பார்த்து பேசிகிட்டு இருக்கான். மீரா விடாம எதிர் டேபிளில் உள்ள ஆணைப் பார்க்கிறாள். ஆனா "சரியான ஜொள்ளு பார்ட்டிடா நீ... ச்சே" அப்புடின்னு மீரா சலிச்சுக்கறா.

ஆனா மீராதான் ஜொள்ளு பார்ட்டி மாதிரி தெரியறா!! லாட் ஆப் கன்ப்யுசன்ஸ்!!

Vasagan said...

Appavi,

Your story reminds me my Master’s study. That time boy is Indian; girl is French (she did her schooling in Pondichery). In your previous story (Athey Kannkal) lot of miss links and finished abruptly. Don’t worry about the length of story and try to avoid the previous errors.

Sankar.

அனாமிகா கலாய்தல் - super.

சந்ரு said...

அழகாக எழுதி இருக்கிங்க. தொடருந்தால் பகுதி 2 க்காக காத்திருக்கிறோம்...

Mahi said...

புவனா,ஜில்லுன்னு கதைய ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க! கொஞ்சம் சூடா கொண்டுபோங்களேன்,இங்கே ரொம்ப குளிருது!! :)

இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
Be prepared! :))))))

http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html

கோவை2தில்லி said...

ஆரம்பமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

ஆரம்பமாகட்டும் அமர்க்கள்ம்.

இது தொடர்கதை என்பதால் சற்று நீளத்தைக் குறைத்து பதிவிட்டால் நல்லாயிருக்குமே...

அசத்துங்க அக்கா. முக்கோணக் காதல் கதை மீண்டும் வராமல் இருந்தால் நல்லது.

அப்பாவி தங்கமணி said...

@ கல்பனா - எஸ் எஸ்... வடை கலபனாவுக்கே... ஹா ஹா... ஆமா கல்பனா... நெக்ஸ்ட் tuesday அடுத்த போஸ்ட்... தேங்க்ஸ்

@ அனாமிகா - டாஷ்போர்ட் மேல பழிய போடறியா? ஒகே ஒகே... வட போனது போனது தான்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - Thanks your honour...(ha ha ha)

@ LK - சரிங்க சார்... ஆனா சீக்கரம் முடிக்கறது கஷ்டம் யு நோ... திஸ் இஸ் அப்பாவி... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - அடப்பாவி...அதெப்போ நீ சொன்னது? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் அம்மணி... போடு போடு வழக்கெல்லாம் வந்தாச்சும் கொஞ்சம் பிரபலம் ஆவோம்... ஹா ஹா... செவ்வாய் கிழமை தான்... not before that...வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலையும் பாக்கணுமே அம்மணி... நான் என்ன அனாமிகாவா படிச்சுட்டே இருக்க? ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ LK - //ஏன்மா இப்படி வாரம் ஒன்னு போதாதா//
அதானே சொந்த செலவுல சூனியம் கேக்கறா பாரு... ஹா ஹா

//இத்தாலியன் தெரியும் அது என்ன இட்டாலியன்???//
என்ன இன்னும் நக்கீரர காணோமேனு நெனச்சேன்? அது தமிழ் இது ஆங்கிலம் சாரே...

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நல்லா சமாளிக்கற அனாமிகா? உனக்கு என் கதையில் ஆர்வம்கறதை ஒத்துக்கிட்டா யாரும் அடிக்க வர மாட்டாங்க...ஹா ஹா

@ LK - //அதுக்குன்னு வாரும் மூணு பகுதிலாம் படிக்க முடியாது//
பார்சல் வருது இரு...

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - //இல்லேன்னா மூணு மாசத்துக்கு மேல கஷ்டம். என்ன சொல்றீங்க?//
உன்னைய அப்பறம் கவனிச்சுகறேன்...

//இட்லி மாமி, நான் முடிவ சொல்லிட்டேன்னு கதையை மாத்தினீங்க, அப்புறம் நான் தீக்குளிப்பேன். அது வில்லங்கம் ஆகிடும்//
நிஜமாவா சொல்ற... நீ சொல்றத செய்யரவன்னு நான் பெருமை பேசுவது உண்மையென்றால் ஆகட்டும் உன் பணி... சிறக்கட்டும் உன் சபதம்... (ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ திவா - //இங்க மழை இன்னும் விட்டபாடில்லை; குளுருது. சில்லுன்னு காதல் வேண்டி இருக்கா? கர்ர்ர்ர்ர்ர்ர்//
ஆமாங்க... மைனஸ் பிளஸ் மைனஸ் = பிளஸ் தானே... அதான் என் கணக்கு... ஹா ஹா

@ வெங்கட் நாகராஜ் - தேங்க்ஸ்ங்க வெங்கட்

@ LK - அடப்பாவி... hacking ஆ ? ஏன் இந்த கொல வெறி மிஸ்டர் கார்த்திக்... உன் கூட்டணி வேற சரி இல்ல... சொல்லிட்டேன்... ஆமா?

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஏனுங்க அம்மணி? கோட்டணி சேத்தரயா? ஹா ஹா...
படுபாவி அனாமிகா? பொய் பொய் பொய் சுத்த பொய்... அந்த பொண்ணு பாராட்டினதை எல்லாம் மறைச்சு... சும்மா சொல்ற... ஐ நோ... ஐ நோ..ஐ நோ...

//(ஹேய் என்ன நீ. நீ அடப் பாவி தங்கமணியோட எனிமி ஆச்சே. ஏன் இப்டி நல்ல விசயம் எல்லாம் அடப் பாவியப் பத்தி சொல்றே?) இது என்னோட மயின்ட் வொய்ஸ்//
பாத்தியா...உண்ம வெளிய வருது... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - you too Gayathri.. நீயாச்சும் என் கதைய ஆர்வமா படிப்பேன்னு நெனச்சேன்...அவர்கிட்ட கூட சொன்னேன்... எனக்கு ஒரு ரசிகை உண்டுனு... இப்படி என்னை காமெடி பீஸ் ஆக்கிட்டியே காயத்ரி... very bad very bad... (இந்த சீரிஸ் கமெண்ட்க்காச்சும் reaction இருக்கானு பாப்போம் ஹா ஹா)

அப்பாவி தங்கமணி said...

@ LK - //பாவம் உங்க பிரெண்ட் .. ஏன் இப்படி//
எதிரி வெளில இல்ல... ஹும்...

@ vgr - thanks vgr ... may be next part will move the clouds a bit...thanks again

@ Porkodi - //அழகு தமிழில் பேசறவன் ஏன் "தமிழ்ல பேசிருக்கலாமே புரிஞ்சுருக்காது"ன்னு சொல்வான்?!//
அதுக்கு பேரு தான் நக்கல்... யு நோ? எஸ் எஸ் அடுத்த செவ்வாய் தான்..ஹ்ம்ம்

அப்பாவி தங்கமணி said...

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து

@ அமைதிச்சாரல் - //இது என்ன எலி கரண்டி!!!..//
எக்கோவ்...ஹா ஹா ஹா... உங்களுக்கு தான் இப்படி எல்லாம் தோணும்... ஹா ஹா... அது கரண்டி இல்ல..எலி கடிக்றதை தான் கரண்டறதுக்கு சொல்றது பேச்சு வழக்குல.... அதோட பல்லு அப்படி இருக்கறதால... ஹா ஹா ஹா...ROFTL for your comment

@ dineshkumar - நன்றிங்க தினேஷ்

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - //நடுல நடுல மானே! தேனே! பொன்மானே! மாதிரி US சம்பந்தமான ஜார்க்கனெல்லாம் கொஞ்சம் போட்டுக்கோங்கோ//
ஹா ஹா ஹா...சூப்பர் தக்குடு... உன் விருப்பம் நிறைவேற்றப்படும்... ஹா ஹா
@ முனியாண்டி - நன்றிங்க

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ் அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - சரிங்க சார்...

@ வெறும்பய - தேங்க்ஸ்... ஹா ஹா...அடுத்த பார்ட் அடுத்த செவ்வாய்...

@ சி.பி.செந்தில்குமார் - தேங்க்ஸ்ங்க
//எல் கே பெரியப்பா அது சும்மா ஸ்டைலு//
this is too good...ha ha ha

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - தேங்க்ஸ்ங்க பாலாஜி

@ siva - ஊருக்கு கடைசீல வந்து வடையா? வாட் இஸ் திஸ்? ஹா ஹா

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

அப்பாவி தங்கமணி said...

@ Arun Prasath - எஸ் எஸ்... அது உங்க ப்ளாக் பாத்ததுமே நெனச்சேன்...நன்றிங்க..

@ ரஜின் - ஹா ஹா ஹா...நன்றிங்க பிரதர்... பாரதிராஜா பாவம் விட்டுடுவோம்... அதான் சங்கர் சார் லைன்ல போயிட்டேன்... ஹா ஹா...
//இப்டித்தா 25 வருஷத்துக்கு முன்னாடி....//
ஹா ஹா...

@ Anu - தேங்க்ஸ் அனு

அப்பாவி தங்கமணி said...

@ பிரியமுடன் ரமேஷ் - நன்றிங்க ரமேஷ்

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - //நல்ல வேலை "இட்லி"யன்னு சொல்லாம போனாங்களே//
உங்களுக்கு எப்பவும் என் இட்லி மேல தன் காண்டு? ஹா ஹா ஹா...

//"அதே கண்கள்" மாதிரி அழுகாச்சி தொடரா இல்லாம இருந்தா சரி//
சரிங்க sir

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - வாங்க சுமேதா ரசிகர் மன்ற தலைவரே... அவங்க கால்சீட் கிடைக்கலைங்க... அதான் ஹீரோயன் மாத்திட்டோம்... இப்ப ஒகேவா?

//சின்ன கன்ப்யுசன்!! //
இது????? இது???? இது சின்ன கன்ப்யுசன்????????? இதெல்லாம் அநியாயமா இல்ல பிரதர்? உங்க இஷ்டபடி சுமேதாவுக்கு ஒரு ரோல் வேணா குடுத்துடறோம்.. (veg roll or chicken roll எது புடிக்கும்னு கேட்டு சொல்லுங்க) மீ எஸ்கேப்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - நன்றிங்க... போன கதையின் தவறுகள் நேராமல் தவிர்க்க முயற்சிக்கிறேன்... சொன்னதுக்கு ரெம்ப நன்றி...

@ சந்ரு - நன்றிங்க சந்துரு

@ Mahi - ஹா ஹா...இங்கயும் குளிரே தான்.. can't complaint its december ha ha.... thanks for the award Mahi

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நன்றிங்க

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்... நீளம் குறைத்து போட்டா நல்லா இருக்கும்னு சொல்றீங்களா? ஒகே... thanks again

Anonymous said...

ஆமா வாங்கற சம்பளத்துக்கு நீங்க வேலை செய்லன்னு யார் அழுதா? அவன் கெடக்கறான் போங்க.

சனி ஞாயிறு கோவிந்த் மாமாவ இம்சை பண்ணாமல் எழுதறது. ஹா ஹா ஹா. அவருக்கும் சந்தோசம். எங்களுக்கும் சந்தோசம். எங்களுக்கு எப்டி சந்தோசம்னு கேட்கலயே? கேளுங்களேன். சொல்றேன்.

Anonymous said...

@ சே.குமார்,

யோவ் உங்களுக்கு இந்தம்மா பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். இவங்க இதை விட நீளமா எழுதியே 25 எபிசோட்டுக்கு போவாங்க. இதில நீளத்தை குறைச்சா ஒரு 100 ஆவது போகும். எதுக்குய்யா இந்த வில்லத்தனம் பண்றேள்?

Anonymous said...

@ சி.பி.செந்தில்குமார்,
எங்க கார்த்தி சாரை பெரியப்பான்னு கூப்பிடதற்காக உங்களுக்கு இட்லி பார்சல் அனுப்புவோம்.

Anonymous said...

//நான் என்ன அனாமிகாவா படிச்சுட்டே இருக்க? //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

//நீ சொல்றத செய்யரவன்னு நான் பெருமை பேசுவது உண்மையென்றால் ஆகட்டும் உன் பணி... சிறக்கட்டும் உன் சபதம்... //

அடிப்பாவி அக்கா. என்னய போட்டுத் தள்றதுள்ள உங்களுக்கு என்ன சந்தோசம். ஐயாம் ஹேர்ட். (மூக்க உறிஞ்சறது கேக்குதா) ஹி ஹி

//பொய் பொய் பொய் சுத்த பொய்.//
இல்லை . அவ இதெலாம் சொன்னா. அப்புறம் நன்னா இருக்குன்னு சொன்னா. நான் கடைசி லைனை இங்க சொல்லல. அது பொய்யாகாது. ஹி ஹி.

Krishnaveni said...

interesting starting, continue.........

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//எங்களுக்கு எப்டி சந்தோசம்னு கேட்கலயே? கேளுங்களேன். சொல்றேன்//
அது எப்படின்னு எனக்கே தெரியும்... அது சரி... ரெம்ப பாவம்... யாருன்னு நீ கேக்கலியே... நீ கேக்கலைனாலும் நான் சொல்றேன்... உன்னோட ரூம் மேட்ஸ் ரெம்ப ரெம்ப பாவம்... ஹா ஹா ஹா

//இதில நீளத்தை குறைச்சா ஒரு 100 ஆவது போகும். எதுக்குய்யா இந்த வில்லத்தனம் பண்றேள்? //
என்னை யாராச்சும் சப்போர்ட் பண்ணினா பொறுக்காதே.. ஹ்ம்ம்...

//எங்க கார்த்தி சாரை பெரியப்பான்னு கூப்பிடதற்காக உங்களுக்கு இட்லி பார்சல் அனுப்புவோம்//
ஹா ஹா ஹ...

//ஐயாம் ஹேர்ட். (மூக்க உறிஞ்சறது கேக்குதா) ஹி ஹி//
are u hurt? oh no... என்னாச்சு? கை போச்சா கால் போச்சா? ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...

//அப்புறம் நன்னா இருக்குன்னு சொன்னா. நான் கடைசி லைனை இங்க சொல்லல. அது பொய்யாகாது. ஹி ஹி.//
see .... you're hiding facts which is also called lie...helooooooooo don't run wait...ha ha

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - Thanks Veni, as always for your encouraging words

நிஜாம் என் பெயர் said...

known ending of this session,WELL DONE for narration, Keep going.

நடத்து நடத்து நாடகத்தை... ;-)

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - Thank you

Anonymous said...

என் ரூம்மேட்சா? யாரும் அப்படி இல்லையே. நான் மட்டும் தான் என் ரூம்ல இருக்கேன். இது கூட தெரியாத நீங்க எல்லாம் என் அக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அந்த மூணு குரங்குகளும் என்னோட ஹவுஸ்மேட்ஸ்.

ஆஷ் சொன்னது: இந்தவாட்டியும் அதே கண்கள் மாதிரி அதே காதுகள் மூக்குகள்னு திகில் கதை எழுதி தன்னோட பிழைப்பை கெடுக்காமல் இருப்பதற்கு அடப்பாவி தங்கமணிக்கு ரொம்ப நன்றி. இல்லேன்னா இது (நான் தேன். ஏதோ ஆடு மாடை சொல்ற மாதிரி இதுன்னு சொல்றான் அந்த டாக்) பாட்டுக்கு நான் தூங்கும் வரைக்கும் பேசிட்டு இருங்கடான்னு தொல்லை பண்ணிட்டு இருக்கும். (என்னா வில்லத்தனம். இருங்கடா இருங்க. இன்னைக்கு சமையல எலிப்பாயசம் கலக்கல, என் பேரு அனாமிகா இல்லை)

அப்பாவி தங்கமணி said...

@ Anamika - Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr..............

Jaleela Kamal said...

mmm supper

கதைஅருமை

தமிழ் பேசும் இத்தாலியனா/

5 வது கதை படித்தேன், ரொம்ப நலல் இருந்தது,.
ஆனால் கமெண்ட் போடல , முதலில் இருந்து ப்டிச்சிட்டு போடலாமுன்னு போய்ட்டேன்
கதை வசனம் சூப்பராஆரம்பிச்சு இருக்கு

Jaleela Kamal said...

நல்ல ஆரம்பம்
ஏற்கன்வே பதில் போட்டேன் எரர் காண்பித்தது

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal- ரெம்ப நன்றிங்க ஜலீலா டைம் எடுத்து எல்லா பார்ட்ஸ்ம் பொறுமையா படிச்சதுக்கு

Post a Comment