Friday, February 04, 2011

பிரசவ வைராக்கியம்...(சிறுகதை)
குறிப்பு:
இந்த கதை திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. உங்களிடம் இங்கு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. திண்ணையில் பார்த்து வாழ்த்து சொன்ன நட்புகளுக்கு மிக்க நன்றி...
 
"ஐ டாடி டாடி...டாடி வந்தாச்சு" என ஓடி வந்த செல்ல மகளை அள்ளி அணைத்தான் சிவா

"நேஹா குட்டி என்ன பண்ணின இன்னிக்கி?"

"ஒரே போர் டாடி... மம்மி நைநைனு ஒரே திட்டு" என மழலை குரலில் கொஞ்சலாய் கூற அதை அவன் ரசித்து சிரிக்க

"ஆமாண்டி மூணு வயசு கூட ஆகல... உனக்கு கூட என்னை பாத்தா அப்படித்தான் இளக்காரமா இருக்கும்... வீட்டுல பெரியவங்க எனக்கு மரியாதை குடுத்தாதானே கொழந்தைக்கு அந்த எண்ணம் வரும்" என எங்கோ பார்த்தபடி கோபமாய் கூறினாள் சோபாவில் அமர்ந்து இருந்த சிவாவின் மனைவி வித்யா

"என்ன வித்தி... கொழந்த சொன்னதுக்கு இப்படி கோவிச்சுக்கற" என சிரித்தவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள் வித்யா

அவளின் கோபத்திற்கான காரணம் என்னவென அறிந்தபடியால் மௌனமாய் சிரித்தான் சிவா

"டாடி... இன்னிக்கி பார்க் போலாமா...ப்ளீஸ்?" என நேஹா கெஞ்சலாய் கேட்க

"சரிடா செல்லம்... டாடி பிரெஷ் ஆய்ட்டு வர்றேன் அப்புறம் போலாம்... அதுவரைக்கும் குட்டி செல்லம் மம்மிய தொந்தரவு பண்ணாம வெளையாடணும் சரியா?"

"ஒகே டாடி" என சிவாவின் பிடியில் இருந்து இறங்கி வேகமாய் ஓடினாள் தன் பக்கத்துக்கு வீட்டு தோழிகளுடன் விளையாட

"ஏய் மெல்ல மெல்ல..." என்றான் சிவா பதறி

********************************************************************

உடை மாற்றி சமயலறைக்கு சென்றவன் வித்யா அடுப்படியில் நிற்க, பக்கவாட்டில் தெரிந்த அவள் முகத்தில் கோபம் சற்றும் குறையாமல் இருந்ததை உணர்ந்தான்

அவன் அங்கு நிற்பது தெரிந்தும் தெரியாதவள் போல் ஏதோ வேலை செய்யும் பாவனையில் இருந்தாள் வித்யா

சிவாவே மௌனத்தை உடைத்தான் "வித்தி... ஒரு காபி கெடைக்குமா?"

அவன் குரலில் இருந்த சோர்வு அவளை இளக செய்திருக்க வேண்டும்

எதுவும் பேசாமல் காபி டம்ளரை சமையல் அறையில் ஒரு புறம் போட்டிருந்த டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு விலகினாள்

விலகியவளை விடாமல் மென்மையாய் கரம் பற்றினான் சிவா. கோபமாய் அவனிடம் இருந்து கையை விடுவித்து கொண்டு நகர்ந்தாள்

இப்போது சமாதானம் செய்ய முயன்றால் மீண்டும் அதே பிரச்னையில் வந்து நிற்பாள் என புரிய எதுவும் பேசாமல் மௌனமாய் காபி அருந்தினான்

அதே நேரம் உள்ளே வந்த நேஹா "டாடி... இப்போ பார்க் போலாமா?" எனவும் மம்மிகிட்ட கேளு என்பது போல் ஜாடை காட்டினான் குழந்தையிடம் வித்யா அறியாமல்

"மம்மி... நீயும் வர்றியா பார்க் போலாம்"

"ஒண்ணும் தேவையில்ல... அப்பாவும் மகளும் தானே ஒரு கட்சி... நான் எதுக்கு நடுவுல வேண்டாதவ... " என வித்யா முகம் திருப்ப சிவா எதுவும் பேசாமல் நேஹவை அழைத்து கொண்டு வெளியேறினான்

********************************************************************

மௌனப்போராட்டம் இப்படியே மேலும் இரண்டு நாள் தொடர்ந்தது

கடந்த ஒரு வாரமாய் படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே முதுகு காட்டி படுப்பவள் இன்று கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்க விவாதம் செய்ய தயாராய் இருக்கிறாள் என புரிந்து கொண்டான் மனைவியை நன்கு அறிந்த சிவா

வேண்டுமென்றே படுத்து உறங்க முயற்சிப்பவன் போல் கண்ணை மூட, அவன் எதிர்பார்த்தது போலவே ஆரம்பித்தாள் வித்யா

"பேசாம இருந்தா அப்படியே கெடக்கட்டும் என்ன நஷ்டம்னு விட்டுடுவீங்க இல்ல" என கோபமாய் கையில் இருந்த புத்தகத்தை தூக்கி கீழே போட்டாள்

இதற்கு மேல் பேசாமல் இருந்தால் பூகம்பம் வெடிக்கும் என்பதை உணர்ந்த சிவா எழுந்து அமர்ந்தான்

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான், அவள் கோபமாய் முகத்தை திருப்ப மெல்ல அவள் கரங்களை பற்றியவன்

"நான் வந்து பேசினாலும் நீ பேசல... நான் என்ன செய்யட்டும்"

"அப்போ... நான் பேசாம போனா தொலையட்டும்னு விட்டுடுவீங்க அப்படிதானே"

"நான் எப்பம்மா அப்படி சொன்னேன்"

"சொன்னா தானா... அதான் செயல்ல காட்றீங்களே..."

"வித்துமா... இங்க பாரு... நீயே சமாதானம் ஆகட்டும்னு தான் அதிகம் பேசல... பேசினா இப்படி டென்ஷன் ஆவேன்னு தான்..." என அவன் முடிக்கும் முன்

"ஒகே... அப்போ இப்படியோ இருந்துகோங்க... எப்பவும்" என கையை உதறி விட்டு படுத்து கொண்டாள்

"வித்து ப்ளீஸ்... இங்க பாரு"

"ஒண்ணும் வேண்டாம்"

"பாத்தியா.. இதான் கெஞ்சினா மிஞ்சறது..." என சிவா குரலில் கோபம் காட்ட விசும்பினாள் வித்யா

அதற்கு மேல் தாங்கமாட்டாமல் அவளை அணைத்து கொண்டான். அவளும் பேசாமல் அப்படியே இருந்தாள்

"குட்டிமா... நான் தான் அன்னைக்கே இந்த பேச்சை எடுக்க வேண்டாம், என் முடிவுல மாற்றம் இல்லைன்னு சொன்னேன்ல... மறுபடியும் நீ தான் பிரச்சன பண்ணி டென்ஷன் ஆகற"

"நான் என்ன பிரச்சன பண்ணினேன்... இந்த முடிவுல எனக்கு விருப்பம் இல்ல... அதை சொல்ல எனக்கு உரிமை இல்லையா?"

"அப்படி இல்லடா... ப்ளீஸ்... சொன்னா புரிஞ்சுக்கோ"

"சொன்னா புரிஞ்சுக்கறேன்... எதுவும் சொல்லாம சும்மா வேண்டாம் வேண்டாம்னா நான் ஒத்துக்க மாட்டேன்"

"அதான் சொன்னேனே... நேஹா மட்டும் நமக்கு போதும் வித்யா... நம்ம மொத்த அன்பையும் அவளுக்கு மட்டும் குடுக்கணும். அதை பங்கு போட்டுக்க இன்னொரு குழந்தை வர்ரதுல எனக்கு உடன்பாடு இல்ல... அவ ஏங்கிடுவா"

"இது சுத்த பைத்தியக்காரத்தனம்... "

"நோ... ஐ அம் ப்ராக்டிகல்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது... நேஹா என்னை போல கூட பிறந்தவங்க இல்லாம ஒரு பிள்ளையா நிக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல"

"உன்னோட விருப்பத்துக்காக நேஹா வேதனைபட்ரதுக்கு அனுமதிக்க முடியாது" என அழுத்தமாய் அது தான் முடிவு என்பது போல் கூறினான்

"ஏன் இப்படி பிடிவாதம் பண்றீங்க... வீட்டுல ஒரே பொண்ணா மத்த வீட்டுல கூட பிறந்தவங்க கும்பலா சந்தோசமா இருக்கறதை நான் ஏக்கமா பாத்திருக்கேன்... இப்ப கூட நாம உங்க அம்மா அப்பாவை பாக்க ஊருக்கு போறப்ப உங்க அக்கா தங்கை அண்ணா கூட நீங்க கலாட்டா பண்றதையும் பாசமா நெகிழ்றதையும் ஏக்கமா பாக்கறவ நான்... அது உங்களுக்கே தெரியும்... அப்ப கல்யாணமான புதுசுல என்னோட ஏக்கத்தை பாத்துட்டு நீங்க என்ன சொன்னீங்க, உன் விருப்பபடி வீடு நெறைய பிள்ளைகள பெத்துக்கலாம்னு நீங்க சொன்னீங்களா இல்லையா?" என குற்றம் சாட்டுவது போல் வித்யா கேட்க பதில் பேசாமல் மௌனமானான் சிவா

"இப்படி எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்"

"இங்க பாரு வித்யா... ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் எனிதிங்... நேஹா போதும் நமக்கு" என்றான் தீர்மானமாய்

"முடியாது முடியாது முடியாது" என வித்யா கோபமாய் கத்த

"ஜஸ்ட் ஸ்டாப் இட் ஐ சே... " என அவளை பிடித்து உலுக்கினான் சிவா

"எனக்கு தெரியும் என்ன காரணம்னு...காசு செலவாய்டும்னு தானே... நான் வேணும்னா கொழந்த பொறந்த மூணாவது மாசமே வேலை தேடறேன்... கொழந்தைக்கு ஆகற செலவை நானே பாத்துக்கறேன்" எனவும்

"பைத்தியம் மாதிரி ஒளராத... நேஹா பொறக்கறதுக்கு முந்தியே உன்னை கம்பல் பண்ணி வேலைய விட சொன்னவன் நான்... எப்பவும் நான் காச பெருசா நெனச்சதில்ல... இன்னும் பத்து பிள்ளைகள நீ பெத்துகிட்டாலும் என்னால காப்பாத்த முடியும்"

"அப்ப வேற என்ன? ஓ... என் அழகு போயிடும்னா?" என வேண்டுமென்றே அவனை சீண்ட

"ஸ்டாப் யுவர் நான்சன்ஸ்... நீ இன்னொரு வாட்டி வலி படறத பாக்கற சக்தி எனக்கில்லடி... அதான் காரணம், போதுமா?" என்றவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காதவன் போல் எழுந்து பால்கனியில் சென்று அமர்ந்தான்

அவனிடமிருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பாராத வித்யா அதிலிருந்து வெளியேவர சற்று நேரமானது

********************************************************************

பால்கனி ஊஞ்சலில் அவனருகே சென்று அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

அவன் கோபத்தை உணர்த்துவது போல் அவனுடைய சூடான மூச்சுக்காற்று நெற்றியில் பட "சாரி" என்றாள்

அவன் எதுவும் பேசவில்லை

"நீங்க சும்மா பிடிவாதம் பண்றீங்கன்னு தான் உங்கள ஒத்துக்க வெக்கறதுக்காக வேணும்னே காசுக்காக சொல்றீங்க, அழகு போய்டும்னு சொல்றீங்கன்னு வம்பு பண்ணினேன்... சாரி"

இப்போதும் அவன் எதுவும் பேசவில்லை

"காசும் அழகும் உங்களுக்கு பெருசில்லைன்னு எனக்கும் தெரியும்பா... ஆனா இப்படி ஒரு காரணம் எதிர்பாக்கல, சாரி... இன்னும் கோபமா?" என அவன் முகத்தை தன்புறம் திருப்பினாள்

பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் அவன் கண்கள் கலங்கி இருந்தது தெரிய பதறினாள்

"என்னப்பா... என்னாச்சு... சாரி... நான்... " என விசும்ப அதற்கு மேல் தாங்காமல் அவளை சேர்த்து அணைத்தான்

சற்று நேரம் அப்படியே இருந்த வித்யா "நான் சொல்றத கோபபடாம கேப்பீங்களா?" எனவும்

"இன்னொரு கொழந்தைங்கறதை தவிர வேற என்ன சொன்னாலும் கேக்கறேன்" என்றான் சிவா

"ப்ளீஸ்பா... "

"வித்தி... ஏன் என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்கற"

"இல்லங்க..."

"ப்ளீஸ்... இன்னும் என்னால மறக்க முடியல... நீ வலில துடிச்சத கதறினத... ஐயோ... வேண்டாம்... போதும்... அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன் நமக்கு நேஹா மட்டும் போதும்னு" என அந்த நாள் நினைவில் அவன் உடல் நடுங்க

"நான்னா அவ்ளோ உயிரா சிவா?" என காதலுடன் வித்யா கேட்க

"அத நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?" என கண் பனித்தான் சிவா

"என்னை விட அதிஷ்டசாலி யாருமில்ல சிவா... ஆனா... "

"ப்ளீஸ்...வேண்டாம் வித்தி... உன்ன கெஞ்சி கேக்கறேன்"

"ப்ளீஸ்பா நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க... என்னோட ஒரு நாள் வேதனைக்காக நம்ம நேஹா காலம் பூரா ஏக்கபடணுமா? நமக்கு பின்னாடி அவளுக்கு பிறந்து வீட்டு உறவுன்னு கூட பிறந்தவங்க வேணுங்க... ஆயிரம் பேரு இருந்தாலும் ஒரு கஷ்டம்னு வர்றப்ப உடன் பிறப்புகளோட தோள் பெரிய ஆதரவுப்பா... "

"நீ சொல்றதெல்லாம் சரின்னு எனக்கும் புரியுது வித்யா... எனக்கு கொழந்தை வேண்டாம்னு இல்லம்மா... ஆனா...."

"கொஞ்சம் யோசிச்சு பாருங்க... என்னோட ஒரு நாள் வலி பத்தி யோசிச்சு நேஹா வேண்டாம்னு இருந்திருந்தா நேஹா இல்லாத ஒரு வாழ்கைய உங்களால நெனைக்க முடியுதா" என கேட்க இல்லை என தலை அசைத்தான்

"அதே போல தான்... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"  என வெகு நேர கெஞ்சலுக்கு பின்

"சரி... " என்றான் அப்போதும் அரைமனதாய்

"தேங்க்ஸ் தேங்க்ஸ்... தேங்க்ஸ் அ மில்லியன்" என கணவனை கட்டிக்கொண்ட வித்யா சத்தமாய் சிரித்தாள்

அவள் சிரிப்பு சிவாவை மகிழ்வித்தபோதும் வேண்டுமென்றே கோபம் போல் "இப்ப என்ன சிரிப்பு என்னை ஜெய்ச்சுட்டேனா?" என கேட்க

"ம்...இல்லப்பா... எங்க பாட்டி சொல்லுவாங்க... அந்த காலத்துல நெறைய கொழந்தைங்க பெத்துபாங்க தானே... ஆனா ஒரு ஒரு பிரசவத்தப்பவும் வலி படறப்ப பொண்ணுங்க இது தான் கடைசி இனி இல்லைன்னு வைராக்யமா சொல்லுவாங்களாம்... ஆனா அடுத்த வருசமே வயத்த தள்ளிட்டு பிரசவத்துக்கு  நிப்பாங்களாம்... அதை பிரசவ வைராக்கியம்னு அந்த காலத்துல கிண்டல் பண்ணுவாங்களாம்" என சிரிக்க

"இப்ப எங்க இது வந்தது" என ஆசையாய் மனைவியின் முன் நெற்றியில்  இதழ் பதித்தவாறே கேட்டான் சிவா

"ம்... அந்த காலத்துல மனைவிக்கு வந்த பிரசவ வைராக்கியம் இப்ப என் கணவனுக்கு வந்ததை நெனச்சு சிரிச்சேன்" என அவள் மீண்டும் சிரிக்க

"என்னை கிண்டலா பண்ற... உன்ன... என்ன பண்றேன் பார்... " என குழந்தையை தூக்குவது போல் அவளை தூக்கி கீழே போடுவது போல் பாவனை செய்ய அவனை இறுக பிடித்து கொண்டே சிரித்தாள் வித்யா

அவர்களின் அன்பை கண்டு வெட்கிய முழு நிலவு அந்த கணத்தை பதிவு செய்து மேகத்துள் மறைந்தது

(முற்றும்)
 ...

99 பேரு சொல்லி இருக்காக:

Porkodi (பொற்கொடி) said...

hahaha! nice appavi!

ராமலக்ஷ்மி said...

கதையும் நடையும் அருமை புவனா. திண்ணையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!! தொடருங்கள்:)!

திவா said...

ஒத்தக்குழந்தை பிரச்சினை இப்ப பெரிய பிரச்சினை ஆகிகிட்டு இருக்கு! ஹும்!

Porkodi (பொற்கொடி) said...

இதே இன்னொரு ஆளா இருந்தா "இன்னொரு குழந்தை வேண்டும் என்று ரொம்பவே சண்டையிட்டு பின் சமாதானமாகி ஒரு வழியாக அவர்களுக்கு இரண்டாவது வாரிசும் வந்தது" அப்படின்னு முடிச்சுருப்போம்.. நீங்க ஒத்த வரியை வச்சுக்கிட்டு அதையே ஒரு குட்டி கவிதையா மாத்திட்டீங்க.. தொடர்கதை விட உங்க சிறுகதைகள் தான் எனக்கு ஃபேவரிட்.

திவா said...

ஹாப்பி வெள்ளி ன்னா ஏதோ டாலர் தரப்போறயாக்கும்ன்னு நினைச்சா! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Gopi Ramamoorthy said...

single daughter syndrome பெரிய பிரச்சனை. மரமண்டை சிவாவுக்கு அது புரியலயே

'பெண் புத்தி பின் புத்தி'. பின்னாடி வரப் போறதை நெனச்சு இப்பவே சரியான முடிவெடுப்பாங்க.

அப்பாவி, குடுத்த காசுக்கு மேல ரொம்பவே கூவிட்டேன். ஏதாவது பாத்து செய்யுங்க:-)

Porkodi (பொற்கொடி) said...

நான் ஒரே குழந்தை தான். ஒண்ணும் பெரிய குறையோ ஏக்கமோ இல்லை, ஆனா ஆளாளுக்கு வேறுபடுமே..

Gopi Ramamoorthy said...

அது எப்படி பதிவு போட்டு பத்து பதினாறு நிமிஷத்தில் ஆறு கமென்ட். எனக்குக் காதில் புகை எல்லாம் வரலை:-)

Gopi Ramamoorthy said...

@பொற்கொடி, சில சமயங்களில் ஒரே பொண்ணா இருப்பதால் அந்தப் பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு ரொம்ப அன்புத் தொல்லை கொடுப்பார்கள்:-)

Porkodi (பொற்கொடி) said...

@Gopi, அதுவும் உண்மை.. அதுக்கு ஆப்போசிட்டா ஒரே பொண்ணுனா அவள் குடும்பத்தில் இருந்து தொல்லை செய்ய ஆட்கள் கம்மி, ஈசியா பிரிச்சுடலாம்னு நினைக்கறவங்களும் தெரியும்.. என்னவோ உலகமப்பா!

Chitra said...

சுபம் போடுற நேரத்தில மங்களம் பாட வந்துட்டேனே....

Gopi Ramamoorthy said...

@பொற்கொடி, நான் சொல்றது அச்சு அசல் அனுபவம்:-( நான் ஒரு புக்கே போட முடியும் இதைப் பத்தி. அவ்ளோ நொந்து போயிருக்கேன்:-)

இந்தப் பதிவு ஒரு சாம்பிள்
http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_06.html

MANO நாஞ்சில் மனோ said...

அட அசத்தலா இருக்கே.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

//சுபம் போடுற நேரத்தில மங்களம் பாட வந்துட்டேனே....//


ஹா ஹா ஹா ஹா ஹா....

Vasagan said...

இது உண்மை கதை புவனா
ஆனல் என்னுடைய தம்பி எடுத்த முடிவை இதுவரை மற்ற முடியவில்லை.
கதையும் நடையும் அருமை.

பத்மநாபன் said...

இது ஒரு வித்தியாசமான சிந்தனைக் கதை..

குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும் என்றாலும்...கூட்டு குடும்பம் தொலைந்து போன இந்த காலத்தில் உடன்பிறந்தது ஒன்று இருந்தால் பரவாயில்லை என தோன்றத்தான் செய்யும்.

அன்னு said...

இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதேன் புவனா... யாரையுமே திருத்த முடியாது, including me ஹி ஹி ஹி...

அருள் சேனாபதி said...

வெகு எதார்த்தமான , அதே சமயம் இன்றைய சூழலுக்குத் தேவையான கதை.

உங்களுக்கு இது போன்ற எழுத்து நடை இயல்பாக வருகிறது .

நன்றி.

எஸ்.கே said...

very nice story!

எஸ்.கே said...

ஒற்றைக் குழந்தை பிரச்சினையும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது!

S.Menaga said...

very nice story bhuvana!!

தெய்வசுகந்தி said...

எல்லா வீட்லயும் நடக்கறத அழகான நடையில சொல்லியிருக்கீங்க!!

Ramani said...

கதைக்கான கரு.
அதை சொல்லியிருக்கு விதம்
அனைத்தும் பாராட்டுக்குரியவை
தொடர வாழ்த்துக்கள்

siva said...

:)nalla erukkunga...

siva said...

ம் அழகான குட்டி கதை ....ம் ரசித்தேன்
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்

எல் கே said...

//தொடர்கதை விட உங்க சிறுகதைகள் தான் எனக்கு ஃபேவரிட். //


ரிபீட்டு ...

எல் கே said...

//சுபம் போடுற நேரத்தில மங்களம் பாட வந்துட்டேனே.... /

யாருக்கு சுபம் போடற நேரம் ?? அப்பாவியோட பதிவுக்கா ??

vanathy said...

அருமை, தங்ஸ். திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

siva said...

தொடர்கதை விட உங்க சிறுகதைகள் தான் எனக்கு ஃபேவரிட்.
///Eppadi usupeethinalum enga appavi thodarthan eluthuvaanga...//appavi neenga elunthunga..(tamil font not working)

middleclassmadhavi said...

நல்ல கதை. ஒவ்வொரு ந்யூகிளியர் ஃபாமிலிலிலயும் நடக்கிற பிரச்னை!

ஆனந்தி.. said...

ஹாய் தங்ஸ்...சூப்பர் கதை...பல குடும்பங்களில் இந்த கூத்து தான் நடக்குது...:)) எங்க வீட்லயும்...:)) ஹீ..ஹீ..ஆனால் உல்டா..:))) இங்கே சிவா தான் "பொட்ட புள்ள பெத்து குடு "னு கெஞ்சுறார்...இங்கே வித்யா "போதும் என்னை விட்டு விடு" னு கூவுறேன்...ஹ ஹ...நமக்கும் ஒத்தை புள்ளை போதும் பாலிசி தான்...:))

Mahi said...

ப்ரெசென்ட் புவனா! :)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

super story sister

ஸ்ரீராம். said...

திண்ணை வாழ்த்துக்கள்.
சின்னக் கருவை வைத்து பெரிய கதை (சிறுகதைதான்!) சொல்லியிருக்கீங்க... என் மனைவி கூட ஒரே குழந்தைதான்...ஒரே புலம்பல்ஸ்தான் இப்பவும்...!

கண்ணகி said...

வாழ்த்துக்கள்....ஒரு மரம் தோப்பாகாது...ஒற்றைப்பிள்ளைகளின் ஏக்கம் அவ்ர்களுக்குத்தான் தெரியும்...நல்ல கதை..

BalajiVenkat said...

very good narration....

கோவை2தில்லி said...

எனக்கும் தொடர்கதையை விட சிறுகதை தான் பிடிச்சிருக்கு புவனா. இந்த கதைக்கரு ரொம்ப நல்லாயிருக்கு. இது எல்லார் வீட்டிலும் உள்ள விஷயம் தான். திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

பிரதீபா said...

எது எப்படியோ, உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் காதல்ங்கறது நல்லா புரிஞ்சுதுங்க :) கதை காதல் குணாதிசயங்கள் கொண்டிருக்கிறது நன்றாய் .

சி.பி.செந்தில்குமார் said...

COMEDY IN FAMILY,,? GOOD THANGKS

சே.குமார் said...

அருமையா கதை சொல்லியிருக்கீங்க. அழகான நடை.

கீதா சாம்பசிவம் said...

பின்னூட்டம் கொடுத்தால் page not found error no.404 னு வருதே? :(

தக்குடு said...

நீங்க சொல்லற விஷயம் எதுவுமே எனக்கும் எங்க அக்கா கொடிக்கும் தெரியாது என்பதால், வெளில நேஹாவோட நாங்க விளையாட போய்க்கறோம்...:P

திண்ணைல வந்ததுக்கு வாழ்த்துக்கள்! ஒத்தப் பிள்ளைக்கு விட்டுக் கொடுக்கும் சுபாவம் எல்லாம் ரொம்ப கம்மி என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அருள் குமார் said...

ம்ம்ம்...நல்ல கதை கரு.

// நீ இன்னொரு வாட்டி வலி படறத பாக்கற சக்தி எனக்கில்லடி... அதான் காரணம், போதுமா?"// எந்த ஒரு கணவனுமே பிரசவ வலியை பார்த்தபிறகு இன்னொரு குழந்தைக்கு ஆசை பட மாட்டான். கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஆழமான காதலை இந்த வரி வெளிபடுத்துகிறது. நல்லா இருக்கு . தொடரட்டும் இந்த சிறு கதை முயற்சி.

அருள் குமார் said...

திண்ணை உரலி கொடுத்தமைக்கு நன்றி...!

அமைதிச்சாரல் said...

கதை நல்லாருக்குப்பா..

தி. ரா. ச.(T.R.C.) said...

nalla kathai
kalam maarikitte varuthu
ellathulayum penkalthaan mthalla nikkiraankakirathai suusakama sollittenka

RAZIN ABDUL RAHMAN said...

சகோ புவனா..
ஆச்சர்யமாத்தான் இருக்கு..கணவன் மனைவி அன்யோன்யத்த வார்த்தைலையும் எழுத்துலையும் கொண்டுவர்ரதும்,அந்த ரசம் குறையாம எழுதுரதும்,உண்மையிலேயெ பிரம்மிக்க வைக்கிது..

உங்களது கதைகளுக்கு எப்பவுமே நான் வாசகன்..அதிலும் குறிப்பாக இந்த கதை ரொம்ப அருமை...

சில இடங்களில் கண்கள் பனிப்பதை தவிர்க்கமுடியவில்லை..

ஒரு நல்ல கதை படித்த திருப்தி..

அன்புடன்
ரஜின்

Krishnaveni said...

congrats thangam, nice story

vinu said...

me 49

vinu said...

ithellaaaam nallaa illea; ambuttuthaan sollitean; ennai maathri bacelorsay;singlersay kaduppu eaththarathukkunnea vaaram oru episode lovve story; ippo athu paththaathunnu; intha maathiri oodal niraintha story vera;


kaduppudan,

kaathil pugay viduvor sangam

சிவகுமாரன் said...

உள்ளத்தை தொட்ட. கதை. ம்ம்ம்ம் .. ஒன்னுமில்லை... பெருமூச்சுங்க.. எங்களுக்கு ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு தான்.

priya.r said...

Thanks for the nice post ATM

priya.r said...

//கீதா சாம்பசிவம் சொன்னது…
பின்னூட்டம் கொடுத்தால் page not found error no.404 னு வருதே? :( //
வாங்க கீதாம்மா
உங்கள் வருகையை பார்த்ததும்
அடடா மழைடா அடை மழைடா என்ற பாட்டு தான் நினைவுக்கு வந்தது என்றால் பாருங்களேன்
சரி உங்க கமெண்ட்ஸ் எங்கே கீதாம்மா ?!

priya.r said...

// "நான் வந்து பேசினாலும் நீ பேசல... நான் என்ன செய்யட்டும்"

"அப்போ... நான் பேசாம போனா தொலையட்டும்னு விட்டுடுவீங்க அப்படிதானே"

"நான் எப்பம்மா அப்படி சொன்னேன்"

"சொன்னா தானா... அதான் செயல்ல காட்றீங்களே..."//

மனதை கொள்ளை கொள்ளும் உரையாடல்கள் ;மெருகேற்றிய விதம் அருமை !

priya.r said...

கழகத்துக்காக சில வார்த்தைகள்
objection your honour
ஏன் அப்பாவி தெரியாம தான் கேட்கிறேன் இந்த காலத்திலே எங்கே வலி வந்து சுக பிரசவம் நடக்க விடறாங்க
பெரும்பாலும் ஆபரேஷன் தானே!

Vasagan said...

அப்பாவி நாளைக்கு post உண்டுல.

பார்த்தியா இன்னைக்கே கேட்டுடேன். அதுனால நாளைகழிச்சு வந்து யாரும் என்னை தேடல என்று சண்டை போடகூடாது.

எல் கே said...

/ஏன் அப்பாவி தெரியாம தான் கேட்கிறேன் இந்த காலத்திலே எங்கே வலி வந்து சுக பிரசவம் நடக்க விடறாங்க
பெரும்பாலும் ஆபரேஷன் தானே! //

ப்ரியா அப்பாவி ஐடியல் உலகத்தில் இருப்பவங்க ... இதெல்லாம் கேட்கக்கூடாது.. கனடா போனாலும் விண்ணைத் தாண்டி வருவாயா பார்க்கறப்ப இது நடக்காதா

எல் கே said...

sari inniku nite un regular psot podu

priya.r said...

நானும் கேட்டு வைக்கிறேன் ! இன்னைக்கு பதிவு கிதிவு உண்டா !
இல்லைப்பா .,இன்னும் இதுக்கே பதில் சொல்லலே
அதனாலே தான் கேட்டேன் .,
சிலசமயம் உன் பதிவை விட நீ போடற பதில்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அப்பாவி!
என்னை ஏதாவது கிண்டலோ கேலியோ செய்தா 001 இருந்து 111 வரை நீ பதில் சொல்லோனும் ! ஹ ஹா
007 007 ஆர் யு ரெடி

priya.r said...

அப்பாவி !

எங்க சங்கத்தில இருந்து ஒரு 50 டு 60 கமெண்ட்ஸ் நீ எதிர்பார்க்கலாம்!

ஒரு கண்டிசன் நல்ல பதிவா நேரமா நீ போடோணும் !

priya.r said...

"நல்ல பதிவா !அப்பாவி கிட்டே இருந்தா! ஏங்க உங்களுக்கு எப்படி ஒரு பேராசை" ன்னு சங்கத்தில எல்லோரும் சொல்றதாலே

நல்ல பதிவு என்பதை நான் வாபஸ் வாங்கி கொள்கிறேன் .............

எல் கே said...

பிரிந்தே இருப்பது அப்பாவியும் நல்ல பதிவும்

இராஜராஜேஸ்வரி said...

நல்ல கதை!!??

vgr said...

Now thats a story!!! well written..

neenga enna anniyan madiri ya? anda 'jillunu oru kadalum' neenga than ezhudureenga? inda mari kadaiyum neenga than ezhudureengale...

inda quality ella ezhuthilum iruka vendumena iraivanai prathikiren :)

-vgr

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - சொன்னது நீ தானா சொல் சொல் சொல் பொற்கொடியே......ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் கொடி...

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மிக்கா

@ திவா - ஆமாங்க... அப்படி தான் இருக்கு...நன்றி நேரம் எடுத்து படித்ததுக்கு

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - //தொடர்கதை விட உங்க சிறுகதைகள் தான் எனக்கு ஃபேவரிட். // ஆஹா...thank you madam...happy to hear that from you...:)

@ திவா - இவ்ளோ தானே திவாண்ணா....இதோ இப்பவே (முருகன்)டாலர் மெயில் பண்ணிடறேன்... ஹா ஹா ஹா... (கீதாமாமி டயலாக் "கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!" காபி அடிச்சதுக்கு கேஸ் போட போறாங்களாம்... கேசரி பொது குழுல இருந்து கசிந்த ஒரு 'நெய்'தி... ச்சே... செய்தி...:))

@ Gopi Ramamoorthy - ஹா ஹா ஹா... ரெம்ப நன்றிங்க கோபி... பாத்து உங்க ப்ளாக்லயும் நானும் கூவிடறேன்... டீல்?...:))

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - கேள்வியும் நீயே பதிலும் நீயே...ஆளாளுக்கு வேறுபடுமேனு சொல்லிட்டீங்க... To be honest, while growing up during sibling fights, I used to think I should've been a single child to get all the love from my parents myself... but as I always say I miss my sis more than anything now.... சும்மா ஷேர் பண்ணிக்கணும்னு தோணுச்சு... :)

@ Gopi Ramamoorthy - ஹி ஹி ஹி... சங்கம் வெச்சு ப்ளாக் வளக்கரோமே பாஸ்...ஹா ஹா:))

//சில சமயங்களில் ஒரே பொண்ணா இருப்பதால் அந்தப் பெண்ணின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு ரொம்ப அன்புத் தொல்லை கொடுப்பார்கள்//
ரெம்ப நொந்த சொந்த அனுபவம்னு உங்க ப்ளாக்ல படிச்சு தெரிஞ்சுட்டேன்... I heard similar stories from some of my friends too... :))

@ Porkodi (பொற்கொடி) - ஆஹா.... இப்படி வேற இருக்கா?

அப்பாவி தங்கமணி said...

@ Chitra - வந்தீங்களே... அதுவே சந்தோஷம்... தேங்க்ஸ் சித்ரா

@ MANO நாஞ்சில் மனோ - ரெம்ப நன்றிங்க

@ Vasagan - ரெம்ப நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க... well said ..

@ அன்னு - தேங்க்ஸ் அன்னு

@ அருள் சேனாபதி - ரெம்ப நன்றிங்க அருள்

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - தேங்க்ஸ் எஸ்.கே

@ S.Menaga - ரெம்ப தேங்க்ஸ்ங்க மேனகா

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க அக்கா

அப்பாவி தங்கமணி said...

@ Ramani - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கும் சேர்த்து

@ siva - தேங்க்ஸ்ங்க சிவா

@ எல் கே - நன்றிங்கோ...

//யாருக்கு சுபம் போடற நேரம் ?? அப்பாவியோட பதிவுக்கா ??//
விட்டா அப்பவிக்கே போடுவீங்க எல்லாரும் சேந்து...grrrrrrrrrrrrrrrrrrrrrrr............

அப்பாவி தங்கமணி said...

@ vanathy - தேங்க்ஸ்ங்க வானதி

@ siva - ஹா ஹா ஹா... நல்லா புரிஞ்சு வெச்சுருகீங்க நான் என்ன சொன்னாலும் திருந்தமாட்டேனு.... ஹா ஹா ஹா...:)

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

அப்பாவி தங்கமணி said...

@ ஆனந்தி.. - ஆஹா...இங்க உல்டாவா? ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க படிச்சதுக்கு...

@ Mahi - மொதலே திண்ணைல பாத்து வாழ்த்து சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் மகி உங்களுக்கு...:) (ப்ரெசென்ட் நோடேட் மேடம்...)

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ரெம்ப நன்றிங்க பிரதர்

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - நன்றிங்க ஸ்ரீராம் அண்ணா...

@ கண்ணகி - ரெம்ப நன்றிங்க கண்ணகி...ரெம்ப நாள் கழிச்சு இந்த பக்கம்... மீண்டும் நன்றி....

@ BalajiVenkat - தேங்க்ஸ்ங்க பாலாஜி

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க ஆதி

@ பிரதீபா - கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க... வாழ்க்கைய காதலிக்கரவ நான்... அது பிடிக்காம யாரும் இருக்கா முடியுமா? ரெம்ப நன்றிங்க பிரதீபா...

@ சி.பி.செந்தில்குமார் - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ கீதா சாம்பசிவம் - என்ன மாமி சொல்றீங்க? இப்படி எல்லாம் நான் கேட்டதே இல்லையே...என்னமோ இ.பி.கோ நம்பர் போல இருக்கே... நீங்க அதிசியமா கமெண்ட் போட்டு இருக்கீங்க... உங்க கமெண்ட் என்னனு பாக்க ஆவலா இருக்கு மாமி... இன்னொரு வாட்டி போடுங்களேன் ப்ளீஸ்... தேங்க்ஸ் மாமி... (அடிக்கடி இந்த பக்கம் வந்தா frequent visitor pass குடுப்பாங்களாம்... அப்போ இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்...:))))

@ தக்குடு - சரிங்கோ... நீங்க சொன்னா சரி தான்... நன்றிங்கோ...:)
//அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்//... இதென்ன புது கதை... எல்லாரும் கொஞ்சம் விஜாரிங்கப்பா....:))

அப்பாவி தங்கமணி said...

@ அருள் குமார் - ரெம்ப நன்றிங்க அருள்குமார்

@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க அக்கா

@ தி. ரா. ச.(T.R.C.) - ரெம்ப நன்றிங்க... நேரம் எடுத்து படிச்சது ரெம்ப சந்தோஷம்

அப்பாவி தங்கமணி said...

@ RAZIN ABDUL RAHMAN - ரெம்ப நன்றிங்க சகோ... இதை போன்ற வார்த்தைகள் தான் எனக்கு எழுதுவதற்கான ஊக்கம்... மிக்க நன்றி மீண்டும்

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...

@ vinu - வாங்க...50 போட்டாச்சா? நன்றிங்கோ... ஹா ஹா ஹா... நோ டென்ஷன் பிரதர்... சுபஷ்ய சீக்ரம்... உங்களுக்கும் சொல்லிட்டேன்... போதுமா... ஹா ஹா ஹா...

@ சிவகுமாரன் - ஓ... உங்களுக்கும் ஒண்ணா? நன்றிங்க படிச்சதுக்கு...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//Thanks for the nice post ATM //
தேங்க்ஸ் அக்கோவ்... ATM ஆ? grrrrrrrrrrrrr.....

//சரி உங்க கமெண்ட்ஸ் எங்கே கீதாம்மா ?! //
அதான் நானும் ஆவலா இருக்கேன்...மறுபடி போடுவாங்கன்னு ஒரு நம்பிக்கைல

//மனதை கொள்ளை கொள்ளும் உரையாடல்கள் ;மெருகேற்றிய விதம் அருமை//
தேங்க்ஸ் ப்ரியா

//ஏன் அப்பாவி தெரியாம தான் கேட்கிறேன் இந்த காலத்திலே எங்கே வலி வந்து சுக பிரசவம் நடக்க விடறாங்க
பெரும்பாலும் ஆபரேஷன் தானே//
Objection overruled...:)
I've seen it... My own sister, her first baby was by natural birth by doctor's compulsion.2nd baby as well the doctor insisted for natural birth but my sister couldn't take it and my parents compelled the doctor for operation... also I heard such stories from my friends, cousins in coimbatore in the recent past Priya... I was so happy that things are changing... hopefully all doctors will follow that too... Thanks for giving me a chance to share this...:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - கண்டிப்பா இருக்குங்க... முன்னாடியே விவரமா கேட்டுட்டீங்க... ஹா ஹா ஹா... மிக்க நன்றி

@ எல் கே -
//ப்ரியா அப்பாவி ஐடியல் உலகத்தில் இருப்பவங்க ... இதெல்லாம் கேட்கக்கூடாது.. கனடா போனாலும் விண்ணைத் தாண்டி வருவாயா பார்க்கறப்ப இது நடக்காதா//
என்னய்யா வம்பா போச்சு...அதுக்காக மூணு வருசத்துக்கு ஒரு தரம் வந்து இந்தியா வர்ற வரைக்கும் இங்க இருக்கறவன்ல்லாம் Inceptionம் Shutter Islandsமேவா பாத்துட்டு இருக்க முடியும்... grrrrrrrrrrrr..... :)))

//sari inniku nite un regular psot podu //
In a minute சாரே....:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//இன்னைக்கு பதிவு கிதிவு உண்டா//
பதிவு உண்டு கிதிவு இல்லிங்க... :)))

//சிலசமயம் உன் பதிவை விட நீ போடற பதில்கள் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அப்பாவி//
படுபாவி அக்கா...

//எங்க சங்கத்தில இருந்து ஒரு 50 டு 60 கமெண்ட்ஸ் நீ எதிர்பார்க்கலாம்//
எந்த சங்கம்? உங்க அ.எ.ச (அப்பாவி எதிர்ப்பு சங்கம்) தானே... ஓ... சூப்பரா எதிர்பாக்கறேன்... :))

//ஒரு கண்டிசன் நல்ல பதிவா நேரமா நீ போடோணும்//
grrrrrrrrrrrrrrrrrrrrrr.............

//"நல்ல பதிவா !அப்பாவி கிட்டே இருந்தா! ஏங்க உங்களுக்கு எப்படி ஒரு பேராசை" ன்னு சங்கத்தில எல்லோரும் சொல்றதாலே... நல்ல பதிவு என்பதை நான் வாபஸ் வாங்கி கொள்கிறேன் ............. //
சங்கம் எதுக்கு...இந்த ஒரு ஆள் போதாது... டோட்டல் டேமேஜ் அப்பாவி...avvvvvvvvvvvvvv............

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே -
//பிரிந்தே இருப்பது அப்பாவியும் நல்ல பதிவும் //
சேர்ந்தே இருப்பது LKவும் ப்ரூட்டஸ்ம்...

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நல்ல கதைன்னு சொல்லிட்டு கொஸ்டின் மார்க் வேற போட்டுடீங்க... திட்டறீங்களா பாராட்டறீங்களானு தெரில... ஹா ஹா ...ஜஸ்ட் கிட்டிங்... முதல் வருகைக்கும் மிக்க நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ரெம்ப நன்றிங்க VGR ... ஆஹா... அந்நியனா? ஹா ஹா...

Well, I figured that you like "short & crisp" like stories thats why you liked this... but தொடர்கதைகள் is a different type... If I use this "short & crisp" formula there மூணு வாரத்துல it will be done you see... then what will I do :)... just kidding... thanks a lot for reading this and giving great comments...

vgr said...

AT, Nope. Don't agree :) I don't think thats the reason. Novels/Long stories lam neraya padikarome...sollunga...'ponniyin selvan' ethanai athayayam...? it does not have to be short & crisp always...but kadai la oru pidipi irukanam illaya? I guess inda dadavai 'subject matter' la than kozhappam...Neenga solra karanam mega-serial director solradu pola iruku :)

anyways, i figured that since lots of people appreciate it kinda falls in to the good category....Thats why i was clueless to write any comments in ur past few episodes.

Bottom line..my sincere comment is to let you know that you should write more quality stuff...avalo than...vera onnum illai:) Good luck with that!!!

அப்பாவி தங்கமணி said...

VGR - Thanks a lot... may be the 'subject matter' not very intriguing and attracts some for some other interest... I understand what you mean,didn't know how to put it back in words... thanks again for your goodluck message... :)

vgr said...

Your most welcome. I hope that neenga thavara nenaikalai :)

-vgr

அப்பாவி தங்கமணி said...

vgr - //I hope that neenga thavara nenaikalai :)//

Not at all vgr... I always appreciate honest opinions... Thanks once more..:)))

தக்குடு said...

//I hope that neenga thavara nenaikalai :)//

அதெல்லாம் கவலையே படவேண்டாம் vgr அண்ணாச்சி! எவ்ளோ அடிச்சாலும் ATM அசராம அடுத்த எப்பிசோட் எழுதுவாங்க. அவங்க பாக்காத பல்பா இல்லைனா அவங்க பாக்காத தக்காளியா!!..:)) ஹைய்யோ! ஹைய்ய்ய்யோ!

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - yes yes...naama ellam ore maadhirinu solriyaa... very good...:))))

Sathish said...

அருமையான எழுத்து நடை, கதை ஓட்டம் , எல்லாத்துக்கும் மேல் நிறையபேருக்கு தெரியாத (நமக்கு தெரியலன அப்படிதானே சொல்லுறது ) ஒரு பழமொழி பிரசவ வைராக்கியம், அது புரியுறமாதிரி ஒரு அழகான கதை, அருமை வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி said...

@ Sathish - ரெம்ப நன்றிங்க Sathish...

Thena said...

Neenga appaviya?!! :)))
Kathai super bhuvana. U know what, RC novels enaku evlo pidikumo avlovuku avlo RC short stories pidikathu. She cannot bring out the same touch/feel in anything less than 200 pages. LOL. But u have brought abt the feel of a novel in this short 2 or 3 pages story. Neenga RC clo0ne illapa. athukum mela.. unga thiramai athaiyum thandi punithamanathu..punithamanathu..

அப்பாவி தங்கமணி said...

@ Thena - உங்க மெசேஜ் பாத்து செம ஹாப்பி ஆய்ட்டேன்... you made my day...!!! இப்படி எல்லாம் புகழ்த்தீங்கன்னா நான் பறக்க ஆரம்பிச்சுடுவேன்... ஹா ஹா... Many Thanks Thena. I'm still lingering in "mithuna & nalandhan"...:)

yathavan nambi said...

அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

அப்பாவி தங்கமணி said...

@ yathavan nambi - Sorry, seeing msg now only. Thank u

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான கதை.

அருமையான இனிமையான தித்திப்பான எழுத்து நடை.

சுகமான + சுபமான முடிவு.

கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"ம்...இல்லப்பா... எங்க பாட்டி சொல்லுவாங்க... அந்த காலத்துல நெறைய கொழந்தைங்க பெத்துபாங்க தானே... ஆனா ஒரு ஒரு பிரசவத்தப்பவும் வலி படறப்ப பொண்ணுங்க இது தான் கடைசி இனி இல்லைன்னு வைராக்யமா சொல்லுவாங்களாம்... ஆனா அடுத்த வருசமே வயத்த தள்ளிட்டு பிரசவத்துக்கு நிப்பாங்களாம்... அதை பிரசவ வைராக்கியம்னு அந்த காலத்துல கிண்டல் பண்ணுவாங்களாம்" என சிரிக்க //

சிரிக்கவே கூடாது என வைராக்யமாக உள்ள சில ஜடங்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்த வரிகளைப்படித்ததும் நான் மீண்டும் மிகவும் பலமாகச் சிரித்து விட்டேன். :)))))

அப்பாவி தங்கமணி said...

@வை.கோபாலகிருஷ்ணன்- ரெம்ப நன்றிங்க Sir

Post a Comment