Thursday, February 24, 2011

ஊடலும்...ஊடல் நிமித்தமும்... (சிறுகதை)"அரவிந்த்..."

"ம்... என்ன குணா?"

"என்னடா ஆச்சு உனக்கு?" என்றான் குணா கவலையுடன் நண்பனை பார்த்தபடி

"ஒண்ணுமில்லையே...ஏன்?" என விழித்தான் அரவிந்த்

"இந்த ரிப்போர்ட் கொஞ்சம் பாரு...இதை இப்படியே நான் அப்லோட் பண்ணி இருந்தா நம்ம ரெண்டு பேர் சீட்டையும் கிழிச்சுருப்பான்" என நண்பன் கூற, கலவரமாய் ரிப்போர்ட்ஐ வாங்கி பார்த்த அரவிந்த் தான் செய்த பெரிய தவறு புரிய

"சாரிடா குணா.... கரெக்ட் பண்ணி தரேன்" எனவும்

"நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்...நானே செஞ்சுக்கறேன்... மொதல்ல வா என்னோட...ஒரு டீ குடிச்சுட்டு வரலாம்" எனவும் மறுப்பு கூறாமல் குணாவுடன் இணைத்து FoodCourtக்கு சென்றான் அரவிந்த்

இவர்கள் அமர்ந்த இரண்டு டேபிள் தள்ளி ஒரு இளைஞர் பட்டாளம் ஏதோ கலாட்டா செய்து சத்தமாய் சிரித்து கொண்டிருந்தனர்

"அதுல ஒருத்தனுக்கு கூட கல்யாணமாகலை...நிச்சியமா சொல்றேன்" என்றான் அரவிந்த், அந்த இளைஞர் பட்டாளத்தை ஏக்கமாய் பார்த்தபடி

அவன் கூறிய அர்த்தம் புரிந்த போதும், நண்பன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் பேச வைப்பது தான் சரியான மருந்து என புரிந்தவனாய், வேண்டுமென்றே "எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற" என்றான் குணா

"மனசு விட்டு சிரிக்கறான் பாரு ஓவ்வொருத்தனும்...அதுலயே தெரியுதே" என முறுவலித்தான் அரவிந்த்

"ஹா ஹா ஹா... ஏண்டா அரவிந்த்....நீயும் நானும் அப்ப சிரிக்கறதே இல்லையா?"

"சிரிப்போம்...ஆனா இப்படி சிரிக்க முடியாது... அரை செகண்ட் சிரிக்கறதுக்குள்ள...இவ்ளோ சிரிக்கறோமே இன்னிக்கி வீட்டுல என்ன ஆப்பு காத்துட்டு இருக்கோனு தோணாம போகாது" என்றான் நிஜமான வருத்தத்துடன்

"இப்ப என்னடா இவ்ளோ பீலிங் திடீர்னு... சொல்லலாம்னா சொல்லு...நான் கட்டாயப்படுத்தல அரவிந்த்"

சற்று தயங்கியவன் "உன்கிட்ட சொல்றதுக்கு என்ன குணா... வைஷ்ணவி எதுக்கு எடுத்தாலும் எதாச்சும் குற்றம் கண்டுபிடிச்சு சண்டை தான் தினமும்...ச்சே"

"டேய்...வைஷ்ணவி அமைதியான பொண்ணு... அவள கல்யணம் பண்ணிக்க நான் லக்கினு நீயே சொல்லி இருக்கியேடா"

"அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட வேஷத்துல ஏமாந்தது... ஆனா, அது எப்பட்றா பொண்ணு பாக்க போறப்ப அப்படி ஒரு ஒண்ணும் தெரியாத லுக்கு குடுத்து ஏமாத்தறாங்க... அப்புறம் கல்யாணம் ஆன புதுசுல கூட என்னா ஒரு ஆக்டிங்... அடசாமி.... அதிர்ந்து பேசாத பொண்ணுனு நானும் ஏமாந்துட்டேன்"

"ஹா ஹா ஹா" என குணா சிரிக்க

"என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சா" என முறைத்தான் அரவிந்த்

"அரவிந்த்... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, நீ சொல்றதுக்கு எல்லாம் பதில் பேசாம மனைவி சும்மா தலை ஆட்டணும்னா... தட்ஸ் நாட் ரைட்"

"நான் அப்படி சொல்லல குணா... ஒண்ணுமில்லாத பிரச்சனை எல்லாம் பெருசு பண்ணி கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போனா...அது சரியா"

"அம்மா வீட்டுக்கா? அப்படி என்னடா பெரிய பிரச்சன" என அதிர்ச்சியாய் குணா கேட்க

"எல்லாம் இந்த வெந்த டே வேகாத டே பண்ற கொடுமை தான்...எவன்டா கண்டுபிடிச்சான் இந்த வேலன்டைன்ஸ் டே கண்றாவி எல்லாம்...என் கைல கெடச்சான் செத்தான்" என அரவிந்த் உணர்ச்சி வசப்பட

"அது என்னடா பண்ணுச்சு உன்னைய...ஆமா அது முடிஞ்சு பத்து நாள் ஆச்சே... இப்ப என்ன தகராறு?" என சிரித்தான் குணா

"அதை கேளு மொதல்ல... நான் கிப்ட் வாங்கி தரல... ஆனா மேடம் அதை உடனே கேக்க மாட்டாங்களாம்... ஒரு வாரம் எனக்கு டைம் குடுத்து நானே என் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்க கிரேஸ் டைமாம் அது... அதுலயும் நான் செஞ்ச கொலை குத்தத்த ஒத்துக்காததால கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போயாச்சு"  என்றவனின் குரலில் கோபமும் வருத்தும் கலந்து ஒலித்தது

"ஹா ஹா... இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல சகஜம் அரவிந்த்... ஆமா நீ ஏண்டா கிப்ட் வாங்கல... தப்பு தானே அது"

"நீயும் வேற ஏண்டா? இல்ல நான் தெரியாமதான் கேக்கறேன்... வருஷம் பூரா சண்டை போட்டுட்டு அந்த ஒரு நாள் கிப்ட் வாங்கி குடுத்தா அன்பான புருஷன்னு அர்த்தமா"

"அப்படி ஏன் நினைக்கற... வருஷம் பூரா அன்பு இருக்கு தான்... ஆனா வருஷம் பூரா கிப்ட் வாங்கி குடுத்தா கட்டுபடி ஆகுமா...அதுக்கு தான் இந்த மாதிரி அந்த டே இந்த டேனு வெச்சு கிப்ட் குடுத்துக்கறதுனு நினையேன்... வெள்ளைகாரன்கிட்ட  இருந்து வந்ததுங்கற காரணத்துனாலேயே இந்த நாளை திட்டறவன் பாதி பேரு... மனசுல தேக்கி இருக்கற அன்பை ஒரு  விருப்பமான செயலால் / செய்கையால் வெளிப்படுத்த ஒரு நாள் கிடைச்சதுன்னு சந்தோசமா கொண்டாட வேண்டியது தானே... டேய்... நீ என்ன கிப்ட் தர்றேங்கறது இல்ல மேட்டர்... எதாச்சும் ஒண்ணு.... To express that you love your wife.... அதான் மேட்டர்" என்றான் குணா

"அதெல்லாம் சும்மா... போன வருஷம் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் வேலன்டைன்ஸ் டேனு அவளுக்கு பிடிச்ச கடைல அஞ்சாயிரம் ரூபாய்க்கு கிப்ட் கார்டு வாங்கி குடுத்தேன்... அதுக்கும் சண்டை தான்... அதான் இந்த வருஷம்... செலவு பண்ணியும் எதுக்கு சண்டைனு விட்டுட்டேன்" என்றான் அரவிந்த் சலிப்பாய்

"நீ பண்ணினது தப்பு அரவிந்த்... கிப்ட் கார்டுங்கறது மூணாவது மனுஷனுக்கு தர்றது...அதாவது உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாது உனக்கு பிடிச்சத வாங்கிக்கோனு சொல்றதா அர்த்தம்... ஆனா மனைவிக்கு பிடிச்சது என்னனு கண்டுபிடிச்சு எது அவளை சந்தோசப்படுத்தும்னு மெனக்கெட்டு தேடி வாங்கி, அது மூலமா நீ எனக்கு முக்கியம், நான் உன்னை புரிஞ்சுட்டேன்னு சொல்லாம சொல்ற விதமா ஒரு ரூபாய் கிப்ட்னாலும் அப்படி வாங்கி தர்றதுல இருக்கற சந்தோஷம் நீ தர்ற அஞ்சாயிரத்துல வைஷ்ணவிக்கு எப்படி வரும் சொல்லு? It is the thought you put into it counts not how much it costs, my friend" என குணா கூறவும், நண்பன் கூறிய கருத்தில் இருந்த உண்மை சுட மௌனமானான் அரவிந்த்

திருமணத்தின் பின் அரவிந்தின் முதல் பிறந்த நாளன்று, வைஷ்ணவி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து கொண்டு, அவன் அம்மாவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து, அவன் அறியாமல் அவனது நெருங்கிய நண்பர் குடும்பங்களை அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்தது நினைவில் வந்தது அவனுக்கு

முதல் திருமண நாளன்று அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவன் மிகவும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் ஒரு மூத்த எழுத்தாளரை சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தாளே

அதுமட்டுமின்றி இந்த இரண்டு வருட திருமண வாழ்வில் சிறு சிறு செய்கையில், அக்கறையில் தன் மேலுள்ள அன்பை அவள் வெளிப்படுத்த என்றுமே தயங்கியதில்லையே என எல்லாமும் இப்போது நினைவில் வந்தது

அதெல்லாம் தனக்கு எத்தனை மகிழ்ச்சியை, நிறைவை  மற்றும் பெருமிதத்தை தந்தது என்பதை அவனால் மறுக்க இயலவில்லை. அந்த சந்தோசத்தை தான் ஏன் அவளுக்கு தர நினைக்கவில்லை

தரக்கூடாதென அவன் நினைத்ததில்லை, ஆனால் அப்படி மெனகெட வேண்டுமென ஏனோ உறைத்ததில்லை. மனைவி என்றால் "என் மனைவி தானே... யாரும் வெளி ஆள் இல்லையே... take it for granted" என பெரும்பான்மை ஆண்கள் போல் தானும் இருந்தது தவறென இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது

யாரோ முகம் தெரியாத வெள்ளைக்கார Clientக்காக English Accent மாற்றி பேச முடியும் போது, வேகாத வெய்யிலிலும் Management மீட்டிங் என கோட் சூட் அணிந்து வருத்தி கொள்ள முடிகிற போது, நமக்கே நமக்காய் வாழும் உறவாய் வாழ்நாள் முழுதும் உடன் வரும் துணையான மனைவிக்காக கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன குறைந்து போவேன் என தன்னை தானே கேட்டு கொண்டான் அரவிந்த்

அரவிந்த் அமைதியாய் சிந்தனையில் ஆழ்ந்ததை கண்ட குணா,  உணர்ந்து விட்டான் என புரிந்தவனாய் "என்ன அரவிந்த்? என்ன பலமான யோசனை?" என கேலியாய் கேட்க

 எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தான் அரவிந்த்

"சரி...கடைசியா ஒரே ஒரு கேள்வி உன்கிட்ட... கொஞ்ச நேரம் முன்னாடி அந்த கல்யாணமாகாத பசங்கள பாத்து பொறாமைபட்டையே... ஒரு வகைல நீயும் இப்ப பாச்சிலர் தானே...ஐ மீன் வைஷ்ணவி வீட்டுல இல்லாததால... அப்போ 'ஐ தங்கமணி என்ஜாய் ஜனகராஜ் மாதிரி' என்ஜாய் பண்றதை விட்டுட்டு ஏன் டென்ஷன்ஆ இருந்த?" என குணா குறுநகையுடன் வினவ

"அது... அதாண்டா எனக்கும் புரியல...ஹா ஹா" என மனம்விட்டு சிரித்தான் அரவிந்த்

நண்பனின் சிரிப்பில் அவன் மனமாற்றத்தை உணர்ந்து கொண்ட குணா "அது... விசு ஒரு படத்துல சொல்லுவாரே... இந்த பொண்டாடிக கூடவே இருந்தாலும் கஷ்டம்... கொஞ்ச நேரம் கண்ணுல படலைனாலும் கஷ்டம்னு... அதாண்டா அது" என குணா சிரித்தான்

அதை கேட்டதும், அரவிந்துக்கு அப்போதே வைஷ்ணவியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது

அன்று மாலை அலுவலகம் விட்டு நேரே வைஷ்ணவியின் அம்மா வீட்டுக்கு சென்றான் அரவிந்த்

அவன் சென்றதுமே ஆவலாய் வரவேற்றனர் வீட்டில் எல்லோரும். அவன் கருத்தில் எதுவும் பதியவில்லை. மருமகனின் கண்கள் தேடியதை உணர்ந்த வைஷ்ணவியின் அம்மா "வைஷ்ணவி மாடில இருந்தா மாப்ள... தலைவலின்னு படுத்துட்டா வந்ததும்... கூப்பிடறேன் இருங்க" எனவும்

"இல்லீங்க அத்த... டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்... நான் மேலேயே போய் பாத்துகறேன்" என பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்றான்

"வைஷு..." என்ற அழைப்பில் விதிர்த்து எழுந்தவள்

"அரவிந்த்..." எனும் முன்னே அவள் கண்ணில் நீர் துளிர்த்தது

இரண்டு நாள் பிரிவு அவளை இத்தனை பாதித்ததா என குற்ற உணர்வில் "சாரிடி...நான் தான் புரிஞ்சுக்காம..." என முடிக்கும் முன் அவன் தோளில் தலை சாய்த்து விசும்பினாள்

"ஏய்...வைஷு... என்னடா?"

"நேத்தே வருவீங்கன்னு எதிர்பாத்தேன்..." என அவள் தேம்ப

"அது...என் பிரெண்ட் குணா இருக்கானே..." என அரவிந்த்  நடந்ததை முழுதாய்  கூறும் முன்  இடைமறித்த வைஷ்ணவி

"எனக்கு தெரியும்... உங்க பிரெண்ட்ஸ் தான் எதாச்சும் பண்ணி உங்க மனச  கெடுத்து இருப்பாங்க" என கணவனை ஆசையாய் கட்டிகொண்டாள் வைஷ்ணவி. மனைவியின் அணைப்பில் பேச மறந்தவனாய் அவனும் அவளை  அணைத்து கொண்டான்(முற்றும்...)

65 பேரு சொல்லி இருக்காக:

Ramani said...

அனைவரையும் அதிகம் படுத்தும்
பிரச்சனையை கையில் எடுத்து
அதை மிகப் ப்ரமாதமாக கையாண்டு
அசத்தியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை நல்லாருக்கு (நெஜமாத்தாங்க........!)

ஸ்ரீராம். said...

நீதியைப் புரிந்து கொண்டேன்...

Chitra said...

Secondary நீதிக்காக இதுவரை, யாரும் கதை சொன்னது இல்லை என்று நினைக்கிறேன்... பின்னிட்டீங்க! :-)

BalajiVenkat said...

Itha pathi karuthu koorum alavukku anubhava paddle...

வசந்தா நடேசன் said...

வணக்கம், நான் புதியவன் உங்கள் பதிவுகளுக்கு (தொடர்லாம் படிக்கறதில்லை சார்).. சிறுகதை என்றதும் ஆவலாய் படித்தேன், குடும்ப உறவுகளின் அற்புதம்.. கண்களில் நீர் கட்ட ரசித்தேன்..

//"எனக்கு தெரியும்.. உங்க பிரெண்ட்ஸ் தான் எதாச்சும் பண்ணி உங்க மனச கெடுத்து இருப்பாங்க" //

அனுபவித்திருக்கிறேன் இதை... அழகான எழுத்து நடை, பகிர்ந்தமைக்கு நன்றி.

தெய்வசுகந்தி said...

நிறைய வீட்ல இப்படித்தான்னு நினைக்கிறேன். நல்ல கதை புவனா!!

Vasagan said...

டைமண்ட் ட்ராப்ஸ் வாங்கி கொடுக்கும் வரை விடமாட்ட,

பிரியா, கொடி,அனாமிகா எல்லாரும் உன்னை கும்ம பொறாங்க. கும்முறதுக்கு நெறைய மேட்டர் இருக்கு.

Vasagan said...

\கதையின் Secondaryநீதி : -
கணவன் மனைவி சண்டைல தலையிட்டா கடைசீல உங்களுக்கு தான் வில்லன் / வில்லி ரோல் (Bulb) கிடைக்கும்.... நீங்க நல்லதே செஞ்சாலும் கூட.... நன்பேண்டா... :-)... காமெடிக்காக மட்டும் சொல்லலை...நிஜமும் தான்...\

சரி சரி நீ பல்பு வாங்கினது எல்லாம் நீதியா போடுற தெறமை வேற யாருக்கும் வராது.

அமைதிச்சாரல் said...

ஜூப்பரு.. கணவன் மனைவி சண்டைல மட்டுமல்ல எந்த சண்டையில தலையிட்டாலும் பல்புதான் கிடைக்கும் :-))))))

எஸ்.கே said...

டேய் குணா உனக்கு இது தேவையாடா! கவலைப்படாதே! என்னைக்காவது ஒருநாள் இந்த அரவிந்தும் உன் மனைவியிடம் திட்டு வாங்குவாள்!:-)

Vasagan said...

உன்னுடைய characters எல்லாம் + attitue லேய இருகிரதுனலே படிக்கும் போது மனதில் நெகிழ்வு / சந்தோசம் வருகிறது.

middleclassmadhavi said...

Primary, secondary நீதி, கதை எல்லாம் நல்லாயிருக்குங்க!

vinu said...

echukichumeeeee chellaathu chellaathu ; ithu meeel pathivu...........

naan kandupudichchutteanneaaa.

ippa enna pannuveenga ; ippo enna pannuveenga;

olunga new story post pannunga.......... X-(

geetha santhanam said...

நல்ல கதை. கணவன்மார்களிடையே பிரபலமான ஒரு ஜோக்: 'dont forget your wife s birthday. but if u forget once, you will never forget it in your lifetime.'

Mahi said...

நல்ல கதை புவனா! படிச்சு முடிச்சதும் மனசு சந்தோஷமா இருந்தது. :)

ப்ரைமரி நீதி,செகண்டரிநீதி எல்லாம் நிறைந்த நீதிக்கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க. தங்கமணிப்பாட்டி(!!!???!!!) வா'ல்'க!!! ஹிஹிஹி

Mahi said...

கதை டைட்டில் ரெம்ப நல்லார்க்கு புவனா! ;)

Sathish said...

கதை நல்லா இருந்தது, அது என்னவோ பொதுவா மனைவிக்கு கணவனுடைய நண்பர்கள்னா வில்லன்கள் தான்...

siva said...

meeeeeeee the first...

siva said...

not bad..

vanathy said...

நல்லா இருக்கு, அப்பாவி. ரசிச்சேன்.
well written.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஹா ஹா. இது நம்ம புவனியோட (ஐ லைக் திஸ் நேம். சோ உங்கள இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு கூப்பிடப் போறேன். உங்களுக்கும் சந்தோசம்னு எனக்குத் தெரியும். அப்பத் தானே 20 வயசு யூத்தா காட்டிக்கலாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ) சொந்தக்கதைன்னு சொல்லவா வேண்டும்.

//"அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட வேஷத்துல ஏமாந்தது... ஆனா, அது எப்பட்றா பொண்ணு பாக்க போறப்ப அப்படி ஒரு ஒண்ணும் தெரியாத லுக்கு குடுத்து ஏமாத்தறாங்க... அப்புறம் கல்யாணம் ஆன புதுசுல கூட என்னா ஒரு ஆக்டிங்... அடசாமி.... அதிர்ந்து பேசாத பொண்ணுனு நானும் ஏமாந்துட்டேன்"//
இது கோவிந்த் மாமா தினமும் காயத்ரி மந்திரம் மாதிரி உச்சரிக்கற லைனு. ஹா ஹா ஹா. நீங்களே இப்படி உங்களப் பத்தி போட்டுக் கொடுக்கறீங்க.

எல்லா உண்மையையும் புட்டு புட்டு வைச்சவங்க ஒரு பெரீரீய்ய்ய்ய்ய்ய‌ பொய் சொல்லி இருக்காங்க.

//அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து//
யக்கோவ், எதுக்கு இம்மா பெரிய பொய் எல்லாம் சொல்றே. பொய் சொல்ற வாயுக்கு போஜனம் கிடையாதுன்னு சொல்லுவா! தெரியுமோ நோக்கு. உங்களுக்கு சுடுதண்ணி வைக்க மட்டும் தான் தெரியும்னு எங்களுக்கும் தெரியும்.

//இந்த பொண்டாடிக கூடவே இருந்தாலும் கஷ்டம்... கொஞ்ச நேரம் கண்ணுல படலைனாலும் கஷ்டம்னு...//
ஹா ஹா. ஐ லைக் இட். ஐ லைக்கிட்.

ரொம்ப கலகலன்னு சிரிக்கறமாதிரி ஒரு மொக்கை போடுக்கா. கதை எவ்ளோ நல்லா இருந்தாலும் நீங்க செவ்வாய் கிழமை பண்ணின டமேஜ் டென்ஷன் இன்னும் போகல எனக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

Anonymous said...

@ Vasu Maams,
//டைமண்ட் ட்ராப்ஸ் வாங்கி கொடுக்கும் வரை விடமாட்ட//
ஹி ஹி.புவனியாச்சே. வேற என்ன பண்ணுவா. ஹா ஹா.

Vasagan said...

//"அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட வேஷத்துல ஏமாந்தது... ஆனா, அது எப்பட்றா பொண்ணு பாக்க போறப்ப அப்படி ஒரு ஒண்ணும் தெரியாத லுக்கு குடுத்து ஏமாத்தறாங்க... அப்புறம் கல்யாணம் ஆன புதுசுல கூட என்னா ஒரு ஆக்டிங்... அடசாமி.... அதிர்ந்து பேசாத பொண்ணுனு நானும் ஏமாந்துட்டேன்"//

"இது கோவிந்த் மாமா தினமும் காயத்ரி மந்திரம் மாதிரி உச்சரிக்கற லைனு. ஹா ஹா ஹா. நீங்களே இப்படி உங்களப் பத்தி போட்டுக் கொடுக்கறீங்க."

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்

Vasagan said...

|யக்கோவ், எதுக்கு இம்மா பெரிய பொய் எல்லாம் சொல்றே. பொய் சொல்ற வாயுக்கு போஜனம் கிடையாதுன்னு சொல்லுவா! தெரியுமோ நோக்கு. உங்களுக்கு சுடுதண்ணி வைக்க மட்டும் தான் தெரியும்னு எங்களுக்கும் தெரியும்.\

ஒரு step additionala தெரியும் Stove வை ஆப் செய்ய. அப்போ on செய்யறது யார்னு கேட்காதே.

Vasagan said...

பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து,
erratum:
பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் அஞ்சப்பரில் வாங்கி

Vasagan said...

\ஐ தங்கமணி என்ஜாய் ஜனகராஜ் மாதிரி\
எனக்கு அந்த குடுப்பினை இல்லை பிறகு அடுத்த வீடுயே அவங்க அம்மா வீடா இருந்தா

சி.பி.செந்தில்குமார் said...

>>>.. ஆனா, அது எப்பட்றா பொண்ணு பாக்க போறப்ப அப்படி ஒரு ஒண்ணும் தெரியாத லுக்கு குடுத்து ஏமாத்தறாங்க

adadaa.. இந் த கதையை கல்யாணத்துக்கு முன்னேயே போட்டிருந்தா நான் எஸ் கேப் ஆகி இருப்பனே

தவமணி said...

கல்யாணம் ஆனதுமே பெண்களின் முதல் குறி மாமியார்கள் இல்லை. கணவனின் நண்பர்கள்தான். அவனுக்கு ஆப்பு வெச்சாச்சினா இவன் நம்பளை விட்டு போகமாட்டான்னு ஒரு நினைப்பு பெண்களுக்கு...

அன்னு said...

ஆஹா... இந்த தடவை அப்பாவி ரங்ஸ் எந்த பரிசும் தரலைன்னு மறைமுகமா கதையா?? :))

//"அது...என் பிரெண்ட் குணா இருக்கானே..." என அரவிந்த் நடந்ததை முழுதாய் கூறும் முன் இடைமறித்த வைஷ்ணவி

"எனக்கு தெரியும்... உங்க பிரெண்ட்ஸ் தான் எதாச்சும் பண்ணி உங்க மனச கெடுத்து இருப்பாங்க" என கணவனை ஆசையாய் கட்டிகொண்டாள் வைஷ்ணவி. மனைவியின் அணைப்பில் பேச மறந்தவனாய் அவனும் அவளை அணைத்து கொண்டான்//

அது சரி...!! அந்த பலா, இந்த பலா காஜி தலைமேலன்ற கதையா போச்சு போங்க :))

VELU.G said...

ஆஹா கடைசியில வைச்சாங்கலே ஆப்பு. இருந்தாலும் பரவாயில்லை இரண்டு பேர் ஒன்னு சேர ப்ரண்ட்ஸ்ப் இதலயும் help தான் செய்திருக்கு

karurkirukkan said...

interssting

ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார்.

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1EwwzZutw

பத்மநாபன் said...

கணவன் மனைவிக்கிடை ஊடல் காதலுக்கின்பம் ...... அரவிந்தே திருந்தன மாதிரி பில்டப்பு ....பாவம் நல்ல புத்தி சொன்ன நண்பன் குணாவுக்கு பல்புதான்...

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கதை....

வசந்தா நடேசன் said...

வாசகனும், தங்ஸ்ம்.. ம்ம்ம், நடத்துங்க, நடத்துங்க.. ஒங்க போதைக்கி, நாங்க ஊருகா??

வெட்டிப்பையன்...! said...

ஹும்ம்ம்ம்....! இவ்ளோ விஷயம் இருக்கா...!இப்ப தானே புரியறது ஏன் கொஞ்ச நாளா சாம்பார் ,ரசம் எல்லாத்திலையும் உப்பு அதிகமாக இருக்குனு. இன்னைக்கு கணக்க நேர் ஆக்கிவிடுறேன்...!//இந்த வெந்த டே வேகாத டே...//

:-)

மனம் திறந்து... (மதி) said...

ஆம்பளைங்க சோகத்துல கரைஞ்சு போற மாதிரி பாவ்லா காட்டி, உள்ளே கூட்டிட்டு போய் அவங்க என்னமோ ஒண்ணும் உருப்படியா செஞ்சதே இல்லைங்கற மாதிரியும், பொம்பளைங்க தான் சூப்பர்னு சொல்லி, எல்லா ஆம்பளைங்களுக்கும் நல்லா ஆப்பு வெச்சு, கடைசியிலே, நல்லதே செஞ்சாலும் கூட, ஆம்பளைங்க எல்லாம் கெட்டவங்கன்னு, பாவம் அந்த குணாவை கூண்டில ஏத்தாமலே, கொலைக் குற்றவாளின்னு ஒருதலைப் பட்சமா (Ex-parte) தீர்ப்பு சொல்லி எல்லார் காதுலயும் இப்பிடி பூ சுத்தரீங்களே, இதுக்குப் பேரு கதையா....? கதையான்னு கேக்கறேன்? இதைக் கேக்க யாருமே இல்லையா? இத வேற, பிரபல ஆண் பதிவர்கள் வந்து ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லப் போறாங்க! ஹூம்! என்னத்த சொல்ல...என்னத்த செய்ய!!!!

:))))))))))))

ஒரே ஒரு சின்ன திருத்தம் தோன்றியது:

//"இல்லீங்க அத்த... டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்... நான் மேலேயே போய் பாத்துகறேன்"// '....நானே மேல போய் ...' [மைண்ட் வாய்ஸ் : நீங்க சித்த இங்கயே இருங்கோ:))))] ன்னு இருக்கலாமோ?

Charles said...

கதை நல்லா இருந்தது. ஆச்சரியம் என்னன்னா எப்படி நீங்க டைம் Manage பண்றீங்க? கதை எழுத & பின்னூட்டம் பதில் சொல்ல? உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். வாழ்த்துக்கள்.

Vasagan said...

\வசந்தா நடேசன் சொன்னது…

வாசகனும், தங்ஸ்ம்.. ம்ம்ம், நடத்துங்க, நடத்துங்க.. ஒங்க போதைக்கி, நாங்க ஊருகா?? \

என்ன செய்றது எங்க அப்பாவி மாப்பிளை என் தங்கையிடம் கேட்க பயந்துகிட்டு இருக்கிறது எல்லாம் நான்தான கேட்க வேண்டும்.

அப்பாவி தங்கமணி said...

@ Ramani - ரெம்ப நன்றிங்க சார்..

@ பன்னிக்குட்டி ராம்சாமி - ஆஹா..அதிசியமா இருக்கே.. நன்றிங்க..

@ ஸ்ரீராம். - நன்றிங்க...:)

@ Chitra - தேங்க்ஸ் சித்ரா...:)

@ BalajiVenkat - ஒகே பாஸ்... மன்னிச்சுகோங்க...

@ வசந்தா நடேசன் - நான் சார் இல்லிங்க மேடம்... அதுவும் வேண்டாம் ஒரு அப்பாவி பொண்ணு... நன்றிங்க...:)

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ் சுகந்தி...

@ Vasagan - diamond drops ரெம்ப காலம் முன்னாடியே கிடைச்சாச்சு... :)

@ அமைதிச்சாரல் - இதுல கூடுதலா கிடைக்கும்... ஹஹா...நன்றிங்க... :)

@ எஸ்.கே - ஹா ஹா...நல்ல எண்ணம்... நன்றிங்க...

@ Vasagan - நன்றிங்க...

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க மாதவி

@ vinu - மீள் பதிவா? இது என்ன புது கதை? நான் இதுவரைக்கும் போஸ்ட் ரிப்பீட் பண்ணினதே இல்லையே பிரதர்... இது முதல் தடவை போடறேன்... வேற ப்ளாக்ல போடற கமெண்ட் அவசரத்துல மாத்தி போட்டுடீங்களா...:))

@ geetha santhanam - I heard about that too...good one Geetha ...thanks...:)

@ Mahi - ரெம்ப தேங்க்ஸ் மகி... நான் பாட்டினா நீங்களும் அதே தான்...டீலா? ஹா ஹா... டைட்டில் பாராட்டினதுக்கும் ரெம்ப நன்றிப்பா... :)

@ Sathish - அப்படி சிலர் இருக்கறதால எல்லாரையும் அப்படியே நினைக்க வேண்டி இருக்கு போல.. ஹா ஹா..நன்றிங்க...:)

@ siva - you the last...:)

@ vanathy - Thanks Vanathy..:)

@ அனாமிகா - அடப்பாவி என்ன எழுதினாலும் சொந்த கதையா? ஹா ஹா... அது சரி... கோவிச்சுட்டு போக எனக்கு அம்மா வீடு பக்கத்துல இல்ல யு சி....:) கேட்டதா சொன்னா எல்லாம் என்னை பத்தி, நல்லது சொன்னா பொய்யா? கலி காலம்டா சாமி....ஹா ஹா...:)

@ Vasagan - அஞ்சப்பர்லயா? அது தினமும் வாங்கினா வெறுத்து போய்டும்... வழியே இல்ல, என் சமையல் தான் கதி.... :)

@ சி.பி.செந்தில்குமார் - மொதலே கேட்டு இருந்தா நான் சொல்லி இருப்பேன்... ஹா ஹா...நன்றிங்க... :)

@ தவமணி - சில சமயம் நண்பர்களும் அப்படிதாங்க இருக்காங்க... ஹா ஹா... நன்றிங்க...:)

@ அன்னு - பரிசு தரலைனா தானே அதெல்லாம்... பிடிச்சதா பரிசு எல்லாம் வந்தாச்சு அன்னு...ஹா ஹா ஹா... :)

@ VELU.G - ஆமாங்க...நன்றிங்க...

@ karurkirukkan - நன்றிங்க...

@ பத்மநாபன் - ஹா ஹா...நன்றிங்க...:)

@ MANO நாஞ்சில் மனோ - நன்றிங்க...

@ வசந்தா நடேசன் - :)

@ வெட்டிப்பையன்...! - ஓஹோ... அப்படியா மேட்டர்... சீக்கரம் சரி பண்ணுங்க... இல்லேனா வம்பு தான்... எனக்கு கன்சல்டிங் பீஸ் எல்லாம் வேண்டாம்...:))

@ மனம் திறந்து... (மதி) - நன்றிங்க... திருத்தும் சொன்னதுக்கும்...:)

@ Charles - டைம் management தான் கொஞ்சம் வர வர கஷ்டம் ஆகிட்டு இருக்குங்க... வாரம் ஒரு போஸ்ட் மட்டும் போதுமோனு யோசிச்சுட்டு இருக்கேன்... படிக்கறவங்களுக்கும் சந்தோசமா இருக்குமே... ஹா ஹா... நன்றிங்க...:)

@ Vasagan - :)

Lakshmi said...

நிறைய வீடுகள்ல இதானே நடக்குது. நல்ல கதை.

சுந்தரா said...

//"எனக்கு தெரியும்... உங்க பிரெண்ட்ஸ் தான் எதாச்சும் பண்ணி உங்க மனச கெடுத்து இருப்பாங்க"//

இதைத்தான் பழி ஓரிடம், பாவம் ஓரிடம்ன்னு சொல்லுவாங்களோ :)

கதை நல்லாருக்கு புவனா.

மகி said...

/நான் பாட்டினா நீங்களும் அதே தான்...டீலா? /நோ டீல் புவனா! பேங்க்கர் குடுக்கற ஆஃபர் ஏத்துக்கமுடியாத மாதிரி இருக்கு.கேமை கன்டினியூ பண்ணுவம். :)

43 கமெண்ட்டுத்தான் ஆகிருக்கா?! எங்கே கடகடகடகடன்னு கமெண்ட் மழை பொழியும் ப்ரியாக்காவைக் காணோம்?!!

BTW,எனக்கு கத கேக்கத்தான் தெரியும்,சொல்லத்தெரியாது.அதுக்கெல்லாம் தங்கமணிப்பா*@$& (சிம்பல் உபயம்:தக்குடு :) ) இருக்கைல நமக்கென்ன கவலை?ஹிஹிஹி

கோவை ஆவி said...

அம்மணி ரங்க்சுக்கு ஏதோ ரிக்வெஸ்ட் வெக்கற மாதிரி தெரியுது!! ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!!

priya.r said...

மகி ,வாசகன் மற்றும் வாசக வாசகிகளுக்கு முதலில் எனது நன்றியையும்
அப்புறம் இந்த பதிவை பாராட்டிய பாசமிகு எதிரி சுனாமிக்கும் ,எழுதிய அப்பாவிக்கும் எனது கண்டனத்தையும் சொல்லி எனது பின்னூட்டத்தை துவங்க இருக்கிறேன்

priya.r said...

இலக்கிய தரம் வாய்ந்த கதை ;இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நல்ல கதைகளை அளித்த அப்பாவி அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்
அவர் இருக்கும் இந்த கால கட்டத்தை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம் என்று நாங்கள் எல்லாம் சொல்லும் காலம்
எப்போ வரும் என்று எனது ஆதங்கத்தை இங்கே பதிவு செய்கிறேன் .ம் ஹும்ம்ம்மம்ம்ம்ம்

priya.r said...

//திருமணத்தின் பின் அரவிந்தின் முதல் பிறந்த நாளன்று, வைஷ்ணவி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து கொண்டு, அவன் அம்மாவிடம் கேட்டு அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து, அவன் அறியாமல் அவனது நெருங்கிய நண்பர் குடும்பங்களை அழைத்து பார்ட்டி ஏற்பாடு செய்தது நினைவில் வந்தது அவனுக்கு //

நான் கூட இது அப்பாவியின் சொந்த கதையோ என்று நினைத்து படித்து கொண்டு வந்தேனா !அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து என்பதை படித்தவுடன் தான் அப்பாவியை பற்றிய கதை அல்ல என்று தெரிந்து கொண்டேன் !

டி சுனாமி ! நோக்கு விஷயம் தெரியுமா
இங்கே இருக்கிற அப்பாவி வேறு ;பேஸ் புக் லில் இருக்கும் அப்பாவி வேறு
அங்கே அவள் சமையல் கலை மன்னி என்று ஒரே ஜம்பம் தான்
நிறைய பேரு அவள் கிட்டே அங்கே டிப்ஸ் கேட்கிராங்கன்னா பாரேன்
அட்சோ ! அதுக்கு அவ பண்ற பந்தா இருக்கே
அதுக்கு தனியா ஒரு பதிவு தான் போடோணும்

priya.r said...

இதுக்கு அப்பாவி கையாளர டெக்னிக்கே தனி
எல்லாம் சில ஜோச்யகாரர் கதை தான் பத்துக்கு எட்டு பலிக்காது ;ஒன்னு ரெண்டு தான் பலிக்கும்
பலிக்காதவங்க நம்ம விதி அவ்வளோ தான்னு பேசாம இருந்துடுவாங்க ;
சொன்னது பளித்தவங்க பார்க்கும் எல்லோரிடமும் அவரின் புகழ் பாடுவாங்க
அப்பாவியின் சமையல் குறிப்பும் அப்படி தான்
அப்பாவியின் சமையல் குறிப்பை படித்த ஒன்னு ரெண்டு பேரும் இப்படி தான்
marvellous
tasty
yummy
மௌத் watering என்று அப்பாவியின் சமையல் ப்ளாக் ஒரே பாராட்டு மழை தான்
அப்பாவி இதுக்கும் விவேக் ஒரு படத்தில் நம்பும் வாசிங்டன் சண்முகம் கேரக்டருக்கும் எந்த
சம்பந்தமும் இல்லே!

தக்குடு said...

@ அப்பாவியோட தங்கமணி - கதை எல்லாம் நன்னா தான் இருக்கு,ஆனா என்னோட பச்சப்புள்ளை மனசுக்கு ஒன்னுமே புரியலை.....:)

இப்படிக்கு,
மனசு விட்டு சிரிப்பவர்கள் சங்கம்

priya.r said...

சரி சரி அப்பாவியின் புகழ் பாடுவதை நிறுத்தி விட்டு கதைக்கு வருவோம்
-
-
-
-
-
அட்சோ ! அப்பாவி கதை எங்கே !

priya.r said...

அதெப்படி அப்பாவி தலைப்பு மட்டும் சங்க கால ரேஞ்சுக்கு சூப்பர் ஆ இருக்கு
உன்ற பதிவை படித்து இந்த சுனாமி மாதிரி சின்ன பொண்ணுங்க எப்படி எடுதுக்குவாங்களோன்னு
வளர்த்த மனம் பதைபதைக்கிறது !

priya.r said...

//முதல் திருமண நாளன்று அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவன் மிகவும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் ஒரு மூத்த எழுத்தாளரை சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தாளே//
உமது கற்பனை திறனை யாம் மெச்சினோம்

//அதுமட்டுமின்றி இந்த இரண்டு வருட திருமண வாழ்வில் சிறு சிறு செய்கையில், அக்கறையில் தன் மேலுள்ள அன்பை அவள் வெளிப்படுத்த என்றுமே தயங்கியதில்லையே என எல்லாமும் இப்போது நினைவில் வந்தது

அதெல்லாம் தனக்கு எத்தனை மகிழ்ச்சியை, நிறைவை மற்றும் பெருமிதத்தை தந்தது என்பதை அவனால் மறுக்க இயலவில்லை. அந்த சந்தோசத்தை தான் ஏன் அவளுக்கு தர நினைக்கவில்லை

தரக்கூடாதென அவன் நினைத்ததில்லை, ஆனால் அப்படி மெனகெட வேண்டுமென ஏனோ உறைத்ததில்லை. மனைவி என்றால் "என் மனைவி தானே... யாரும் வெளி ஆள் இல்லையே... take it for granted" என பெரும்பான்மை ஆண்கள் போல் தானும் இருந்தது தவறென இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது

யாரோ முகம் தெரியாத வெள்ளைக்கார Clientக்காக English Accent மாற்றி பேச முடியும் போது, வேகாத வெய்யிலிலும் Management மீட்டிங் என கோட் சூட் அணிந்து வருத்தி கொள்ள முடிகிற போது, நமக்கே நமக்காய் வாழும் உறவாய் வாழ்நாள் முழுதும் உடன் வரும் துணையான மனைவிக்காக கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன குறைந்து போவேன் என தன்னை தானே கேட்டு கொண்டான் அரவிந்த்//

நல்லா சொன்னீங்க அப்பாவி ;அனைவரும் உணர வேண்டிய ,கடை பிடிக்க வேண்டிய விசயமும் கூட

priya.r said...

அடுத்த தடவை பதிவு இப்படியும் எழுதலாம்
ரங்க்ஸ் கோவித்து கொண்டு அவங்க அப்பா வீட்டுக்கு போகிற மாதிரியும் உன்னை மாதிரி தங்க்ஸ்
அவரை பரிசு கொடுத்து சமாதான படுத்தற மாதிரி உண்மை சம்பவத்தையும் எழுதலாம் தானே
ஹ ஹா

priya.r said...

//நண்பனின் சிரிப்பில் அவன் மனமாற்றத்தை உணர்ந்து கொண்ட குணா "அது... விசு ஒரு படத்துல சொல்லுவாரே... இந்த பொண்டாடிக கூடவே இருந்தாலும் கஷ்டம்... கொஞ்ச நேரம் கண்ணுல படலைனாலும் கஷ்டம்னு... அதாண்டா அது" என குணா சிரித்தான்//

உங்க பதிவை படித்தாலும் கஷ்டம்
படிக்கலைன்னாலும் கஷ்டம்ன்னு
யாரும் சொல்ல கூடாது
அப்புறம் அப்பாவி மொக்கை போடறதை நிறுத்திர போறாங்க

priya.r said...

பாருப்பா உன்ற பதிவை படிச்சுட்டு மனமே ஆறலே
எல்லாம் கீதாம்மா சொல்ற மாதிரி அஜித் லெட்டர் :(
வேற என்ன சொல்றது

எல் கே said...

////முதல் திருமண நாளன்று அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் அவன் மிகவும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் ஒரு மூத்த எழுத்தாளரை சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தாளே////

இதை அப்படியே மாத்திக்கணும் அதுதான் அப்பாவியின் வாழ்வில் நடந்தது ...

அனாமிகா சொல்ற மாதிரி இது உன் சொந்தக் கதை மாதிரிதான் எனக்கும் படுது. எங்கள் சந்தேகம் தீர கோவிந்த் மாம்ஸை பதிவு போட சொல்லவும்

மனம் திறந்து... (மதி) said...

ரொம்ப பிசியா இருக்கீங்க போல...நம்ம கடைப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆவுதே! புதிய சரக்கு வந்து இறங்கியிருக்கு! அந்தப் பக்கமா வாரையிலே தலையக் காமிங்கோ, அம்மணீ...!

கோவை2தில்லி said...

நடைமுறை வாழ்வில் நடப்பதை அழகாக கதையாக எழுதியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் புவனா. என்னையும் வீட்டில் அழைக்கும் பெயர் புவனா தான்.

அப்பாவி தங்கமணி said...

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மிம்மா...

@ சுந்தரா - நன்றிங்க சுந்தரா...:)

@ மகி - ஹா ஹா ஹா...அப்படி வாங்க வழிக்கு... தேங்க்ஸ் மகி... ப்ரியா அக்கா லீவ் லெட்டர் ஈமெயில்ல வந்தது "As I'm suffering from home work..."னு... அதான் லேட் கமெண்ட்..:)

@ கோவை ஆவி - ஹா ஹா ஹா... சொந்த அனுபவமா ஆனந்த்...:)

@ priya.r - உங்க கமெண்ட்ஸ் வழக்கம் போல கடைசீல போடறேன் சிஸ்டர்...:))

@ தக்குடு - சிரி சிரி... elephant க்கு ஒரு டைம் வந்தா எலியாருக்கு ஒரு டைம் வரும் யு சி... நோ நோ... யு வில் சி...:))))

@ எல் கே - அவர் வேற பதிவு போடணுமா... சுத்தம்... அதுக்கு என் பதிவே பெட்டர்...:)

@ மனம் திறந்து... (மதி) - சாரிங்க... கொஞ்சம் வேலை...கண்டிப்பா உங்க கடை பக்கம் வரேன்...மிக்க நன்றி

@ கோவை2தில்லி - நன்றிங்க... ஓ...நீங்களும் புவனாவா...அப்படினா நீங்க ரெம்ப நல்லவங்களா தான் இருக்கணும்... :))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//மகி ,வாசகன் மற்றும் வாசக வாசகிகளுக்கு முதலில் எனது நன்றியையும் //
பாருங்க உங்கள காணோம்னு உங்க ரசிகர்கள் எல்லாம் தேட ஆரம்பிச்சுட்டாங்க அக்கா...:)

//எப்போ வரும் என்று எனது ஆதங்கத்தை இங்கே பதிவு செய்கிறேன் //
சங்கத்துக்கிட்ட எழுதின ஒப்பந்ததுக்கு குறை இல்லாம பேசியாச்சு...ஒகே...சங்கத்தோட அடுத்த தலைவர் நீங்க தானாமே... :)

//அவனுக்கு பிடித்த பல வகை உணவு வகைகளை ஒரே ஆளாய் சமைத்து என்பதை படித்தவுடன் தான் அப்பாவியை பற்றிய கதை அல்ல என்று தெரிந்து கொண்டேன்//
நூலை போல சேலை...அக்கா போல தங்கை...:)))

//அங்கே அவள் சமையல் கலை மன்னி என்று ஒரே ஜம்பம் தான்//
நான் ஒரு அப்பாவிங்க...
என்னை நல்லா புரிஞ்சவங்க நாலு பேரு சொன்னாங்க...
நான் ஒரு அப்பாவிங்க...:)

//அப்பாவி இதுக்கும் விவேக் ஒரு படத்தில் நம்பும் வாசிங்டன் சண்முகம் கேரக்டருக்கும் எந்த
சம்பந்தமும் இல்லே//
ஹா ஹா ஹா... சிரிக்காம இருக்க முடியல ப்ரியா..:))

//அட்சோ ! அப்பாவி கதை எங்கே//
கண்டுபிடிச்சு தர்ரவங்களுக்கு ஆயிரம் பொற்காசுனு நியூஸ்ல வந்ததே பாக்கலையா?...:)

//அதெப்படி அப்பாவி தலைப்பு மட்டும் சங்க கால ரேஞ்சுக்கு சூப்பர் ஆ இருக்கு//
அதை பாத்து நாலு பேரு உள்ள வருவாங்கன்னு ஒரு ஆசைல வெக்கறது தான்..:)

//வளர்த்த மனம் பதைபதைக்கிறது//
பொறுத்தது போதும் பொங்கி ஏழு அப்பாவினு என் மைண்ட்வாய்ஸ்ஏ சொல்லுது... யாரு சின்ன பொண்ணுனு எனக்கு உண்ம தெரிஞ்சாகணும் ப்ரியா...:)

//உமது கற்பனை திறனை யாம் மெச்சினோம்//
மிக்க நன்றி உங்கள் மெச்சலுக்கு..:)

//நல்லா சொன்னீங்க அப்பாவி ;அனைவரும் உணர வேண்டிய ,கடை பிடிக்க வேண்டிய விசயமும் கூட //
கை தவறி டைப் பண்ணிட்டீங்க போல இருக்கு... உங்க சங்கத்துல திட்ட போறாங்க..:)

//அடுத்த தடவை பதிவு இப்படியும் எழுதலாம்//
ஐடியாவுக்கு நன்றி.... அதுல ஹீரோயன் பேரு ப்ரியானு வெக்கலாம்னு இருக்கேன்...வாட் டூ யு சே?....:))

//உங்க பதிவை படித்தாலும் கஷ்டம்
படிக்கலைன்னாலும் கஷ்டம்ன்னு//
ஹா ஹா ஹா ஹா ஹா...

//பாருப்பா உன்ற பதிவை படிச்சுட்டு மனமே ஆறலே//
புண் பட்ட மனசை பதிவை இன்னொரு வாட்டி படித்து ஆத்து ப்ரியா...:))

எல் கே said...

http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_28.html


உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்

இராஜராஜேஸ்வரி said...

புரிய வைத்த நண்பனுக்கு புதிய பட்டம் கொடுத்த
அப்பாவி வாழ்க!

priya.r said...

ஏனுங்க அப்பாவி
நாளைக்கு பதிவு உண்டுங்களா
மெறகாமே
பாவும் ஊடை நூலும் போல ன்னு
ஏதாவது கெவிதை கொஞ்சமும் சொல்லி போடுங்க
மெறக்க மாடீங்களே !

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - thanks Bro... :)

@ இராஜராஜேஸ்வரி - ha ha....thank you...:)

@ priya.r - பருத்தியும் நூலுமா பார்த்து வளந்தவா நானு எனக்கே பாவும் நூலுமா...ஹா ஹா ஹா...:))))
கவிதை போட்டாச்....உங்கள் சித்தம் எந்தன் பாக்கியம் (யாரு பாக்கியம்னு மொக்க கேள்வி கேக்கறவங்கள என்ன செய்யலாம்னு எங்க ப்ரியா அக்கா முடிவு பண்ணுவாங்க..:))))

Post a Comment