Monday, August 01, 2011

ராங் காலும் ரங்கமணியும்...:)(டெலிபோன் மணி அடிக்கிறது)

தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்... ச்சே...  ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)

ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)

எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி

தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க

(ச்சே... இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)

எதிர்முனை : நை நை

தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல... பிச்சுபுடுவேன் பிச்சு

எதிர்முனை : நை நை ஜி... (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)

தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை'ங்கற

எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)

தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் "ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு... ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது... கொழுப்பு" என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)


சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி....

"ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... என்னா வெயிலு என்னா வெயிலு... சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ" என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

"ஹ்ம்ம்... ஊட்டில ஒரு வேல பாருங்க... குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா" என்றாள் கேலியாய்

"ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?" என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு

"ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்... இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்" என கழுத்தை நொடிக்கிறாள்

"பாத்து பாத்து... ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது..."

"இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல"

"ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற... அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல"

"மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்... மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்"

"ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி... என்ன டிபன் இன்னிக்கி?" என பேச்சை மாற்றுகிறார்

"சேமியா கிச்சடி"

"எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்"

"என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை... இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?" என முறைக்கிறார்

"அதில்லம்மா... இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?"

"அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்..." என்கிறாள் கடுப்பாய்

"ஹ்ம்ம்... இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?" என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார்

"ஓஹோ... அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?" என தங்கமணி டெரர் லுக் கொடுக்க

"இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்... நீ மட்டும் 'உம்'னு ஒரு வார்த்த சொல்லு...."

அதற்குள் இடைமறித்து "என்ன சொன்னீங்க?" என தங்கமணி முறைக்க

"ஹி ஹி... அதில்ல தங்கம்... உனக்கும் கூட மாட உதவியா... " என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து

"ஹா ஹா... டென்ஷன் ஆகாத... சும்மா கிண்டலுக்கு சொன்னேன்... நான் டிரஸ் மாத்திட்டு வரேன்... கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்" என்றபடி அறைக்குள் செல்கிறார்

அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

"ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ" என ஒரு நொடி நினைத்தவர், "என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென" என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள்

"வா தங்கம்... டிபன் வேலை எல்லாம் ஆச்சா?" என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா

"செஞ்சாச்சு ஐஸு...  இனி தான் சாப்பிடணும்... அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள்

"உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்"

"ஐயையோ என்னாச்சு?" என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய்

"அதையேன் கேக்கற... என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்....னு...அப்படி தான் ஆச்சு கதை... இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல"

"ஹ்ம்ம்... " என்றாள் யோசனையாய் "சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்... பாப்பா வா போலாம்" என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள்


அன்றிரவு...."கிச்சடி நல்லா இருந்தது தங்கம்" என்றார் ரங்கமணி

"ம்... அது சரி... உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?"

"என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே"

"ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க... அதெல்லாம் யாரு நம்பினா"

"அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?" என்றார் பாவமாய்

"இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்.."

"ஹும்... நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்... எல்லாம் வீணா போச்சே" என பீலிங் காட்டுகிறார்

"சரி சரி... அத விடுங்க... உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?" என மேட்டர்க்கு வருகிறார்

"ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்" என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்

"எப்படி கத்துகிட்டீங்க?" என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி

"அது... எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா... சும்மா சொல்லக்கூடாது... நல்ல பொண்ணு... லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா... அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ" என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம

தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி "ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?"

"ஹி ஹி... ஆமாம்... அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது"

"அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி 'நீ மட்டும் உம்'னு சொல்லு' னு சொன்னீங்களோ"

"என்ன தங்கம் நீ..."

"அதுவும் எனக்கு கூட மாட உதவியா?"

"ஐயோ... என்னை கொஞ்சம் பேச விடேன்..."

"ஐயையோ... இப்படி மோசம் போயிட்டனே... அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே" என தங்கமணி அழத்துவங்க

"என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்" என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார்

"எனக்கு தெரியும்...எல்லாம் தெரியும்... அவ பேரு கூட சசிரேகா தானே... " என அழுகிறாள் தங்கம்

"இல்லையே... அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே.." என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார்

"ஓஹோ... அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?"

"இல்ல தங்கம்..." என்றவரை பேச விடாமல்

"நீங்க பொய் சொல்றீங்க... அவ பேரு சசிரேகாதான்... இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா... என்னை கூட நை நை'னு என்னமோ திட்டினா... நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா"

"ஐயோ...இல்ல தங்கம்....அது வந்து..." என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல்

"நான் எங்க ஊருக்கே போறேன்... நாளைக்கே போறேன்" என தங்கமணி புலம்பல் தொடர்கிறது

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

"அட ஆண்டவா... அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி... பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது... ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா... என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்... இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா..."

நிரந்தர பின் குறிப்பு:
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))


:-))


61 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

//ங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தாயாராவதை உணர்ந்து //

அதுக்கு எதுக்கு தாயார் ஆகணும் ???

இதுல வர தங்கமணி நீ இல்லாட்டியும் ரங்கமணிக்குதான் எங்கள் ஆதரவு. பாவம் மனுஷன் சப்பாத்தி கேட்டா இப்படியா படுத்தறது. தங்கமணிகள் டவுன் டவுன்

vanathy said...

Karthik remba overa irukku!!! thangamanis valga.
Well written, appavi.

Chitra said...

நிரந்தர பின் குறிப்பு ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அதிலேயும் ஸ்பெஷல் தான்.....

siva said...

எப்படி பாடாய் படுத்தும் தங்கமணி அராஜகங்களை எதிர்த்து
மாமா ரங்கமணி தலைமையில் இன்று ஊருவலம் நடைபெறும்
இப்படிக்கு வருங்கால
ரங்கமணி ரசிகர்மன்றம்
நிரந்தர உறுப்பினர் kilai enn 5326

kggouthaman said...

//நல்ல பொண்ணு... லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா... அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ" என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம..//
ஹா ஹா ஹா - வாய் விட்டுச் சிரித்தேன்!

siva said...

imagination super..

மகி said...

ஹாஹ்ஹா! நல்ல காமெடி புவனா!

மனைவியின் மனதைப் புரிந்துகொள்ள முடியாத ரங்கமணிகள் டவுன்,டவுன்! ;)

இராஜராஜேஸ்வரி said...

மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்... மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்" //

அருமையான ரீமிக்ஸ்...பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

தங்க்ஸுக்கு அது சஸ்ரிகா இல்லை,.. 'சத் ஸ்ரீ அகால்'ன்னு தெளிவா உச்சரிக்க சொல்லிக்கொடுக்காத ரங்கமணி டவுன் டவுன்..டவுன்.

பஞ்சாபி பொண்ணு கொண்டாந்த புலாவை மொசுக்கறதுலேயே கவனமா இருந்த மனுஷன், அவங்க ஒருத்தரையொருத்தர் எப்படி வாழ்த்திக்கறாங்கன்னு கவனிக்க வேணாமோ :-)))

//தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட//

சனி பகவான் ஜதி பாட, தங்க்ஸ் ருத்ரதாண்டவம் ஆட.. அடடா!!.. செம கச்சேரிதான் ரங்கமணிக்கு :-)))))))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. கடைசியில.. அந்த பஞ்சாபி பொண்ணு செட் ஆயிரும் போலன்னு நினச்சனே... சரி சரி விடுங்க. ரங்கஸ்... கோவம் முடிஞ்சு திரும்பி வரட்டும்..முதல்ல!! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்... எல்லாம் வீணா போச்சே" என பீலிங் காட்டுகிறார்//

எல்லாரும் இப்படித்தான் போல ஓவர் நினைப்பு..:)

Thanai thalaivi said...

எனக்கு புரிஞ்சு போச்சு! என் பேரை தலைவிஜி ன்னு மாத்தி, அப்புறம் ஆங்.... அது என்ன ஆங்... தஸ்ரிகாவோ...கத்ரிகாவோ. இந்த தங்கமணி எப்பவுமே இப்படித்தான் எங்கியாவது புதுசா போயிட்டு வந்தா அந்த எபக்ட்ல நம்மள நல்லாவே படுத்துவாங்க. ஒரு பத்து நாள் காணாம போய் இருந்தாங்களே. ஒரு வேளை பஞ்சாப் பக்கம் போயிட்டு வந்திருபாங்களோ!!! இவங்க எல்லா பாஷை லையும் ஒரு நாலு வார்த்தையை கத்து வச்சிக்கிட்டு நம்மள படுத்தற பாடு இருக்கே. ஐயோ ! முடியலைடா சாமி.

இதுக்கு இவங்கள பூச்சாண்டியே புடிச்சிண்டு போய் இருக்கலாம்.

Thanai thalaivi said...

சூப்பர் காமெடி! பாவம் ரங்கமணி இனிமே சப்பாத்தியே கேட்க இல்லை..இல்லை நினைக்ககூட மாட்டார்.

divyadharsan said...

ஹாய் அப்பாவி!!

எப்படி இருக்கீங்க?? நல்ல போஸ்ட்!! அப்போ அது நீங்க இல்லையா (நீங்க இல்லையா ....நீங்க இல்லையா .....நீங்க இல்லையா ......)
ஒண்ணுமில்லை என் வாய்ஸ்சோட எக்கோ எபக்ட்டு:))
செம காமெடி (நிரந்தர) பின்குறிப்பு இல்லன்னா நீங்கன்னுதான் நினைசிருப்பேன்.
வேலை செஞ்சிகிட்டே கஷ்டப்பட்டு மூலைய கசக்கி நீங்க எங்களுக்காக காதல் கதை எழுதறத்துக்கு
நாங்கதான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்!!
Not you "The Great Writer Appavi".


அத ஏன் கேக்கறீங்க..இந்தியால ஜாலியா சுத்தி வந்தேன் பாப்பாவ ஷிப்ட் போட்டு.. போட்டி போட்டு. பார்த்துகிட்டாங்க..
இங்க வந்து டப்பா டான்ஸ் ஆடுது:(( ஒரே சமயத்துல பாப்பா கத்துது.. குக்கர் கத்துது.. என் வீட்டுக்காரர் கத்தராரு..
கூட சேர்ந்து நானும் கத்தறேன்.. மொத்தத்துல தினம் கண்ண கட்டுது. இப்போ கொஞ்சம் பரவால்ல.got used to it:)
3வதா கமெண்ட் போடவேண்டியது இப்போ 13வதா போடறேன். அப்போ எழுத ஆரம்பிச்சேன். பாப்பா வேல வாங்குது:))


March-14th பாப்பா பர்த்டே .இன்விடேஷன் அனுப்புறேன். கண்டிப்பா வரணும் நீங்க.
அதுகின்னும் 8 மாசம் இருக்கு. சைக்கிள் கேப்ல அடுத்த கதைய நீங்க இழுக்கர்த்துக்கு பிளான் பண்ற மாறி தெரிது??
உங்கள மாறி நானும் பேசாம ஒடப்புலபோட்ட என் cooking bloga refurbish
பண்ணி அரட்டை blogaa மாத்தலாம்னு இருக்கேன்.
மேட்டர் என்னனா?? எனக்கு என்ன எழுதறதுன்னு தான் தெரில.
தமிழும் தகிடுதத்தம்!! இங்கிலீஷ் கேக்கவே வேணாம் (அஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
உங்களத்தான் மானசீக குருவா மனசுல கோவில் கட்டி
கும்பிகிட்டுருக்கன்.எதுக்கு வீனா விஷபரீட்சை!!
உங்கள நான் கலாய்கிறேனா!! no way. பாராட்டி தள்றேன்!! ஹிஹி
என்ன கொஞ்சம் வஞ்சபுகழ்ச்சி அணி எட்டிபார்க்குது அப்பப்ப.. அது சும்மா லுலுவாய்க்கு!!

"East or west Appavi is best" (yeppppuuuudddiiiii??? English T.R)

Take care Appavi.Tata.

நிரந்தர பின்குறிப்பு:- உங்கள அறிவாளின்னு புகழிந்திருக்கேன் (Note this point your honour)
பார்த்து எதாவது போட்டு கொடுங்க! காஷ் னா கூட ஒகேதான்:)

சே.குமார் said...

ஹா ஹா ஹா - வாய் விட்டுச் சிரித்தேன்!

புதுகைத் தென்றல் said...

சூதனமா இருந்துக்க சொல்லிக்கொடுத்திருக்கீங்க. மக்கள்ஸுக்கு உதவும்.

வாழ்க தங்கமணி வளர்க அவர் புகழ் :))

Sathish A said...

நல்ல இனிமையான பதிவு, "இதுல வர்ற தங்கமணி நான் இல்ல..." - பாவம் தாங்க்ஸ், காலைல யாரு முகத்துல முளிசாருன்னு தெரியல....

அமைதிச்சாரல் said...

எனக்கு ஒரு டவுட்டு...

இந்த நவரத்ன குருமாவுல, நவரத்னங்களை அரைச்சு ஊத்தணுமா, இடிச்சு பொடியாக்கி தூவணுமா, இல்லே அவிச்சு மசிச்சுப்போடணுமா???????

இடிச்சு பொடியாக்கிப்போடறதாயிருந்தா வறுத்துப்பொடிக்கணுமா, இல்லேன்னா வறுக்காம பொடிக்கணுமா????

பொடிக்கறது மிக்சியிலயா, அம்மியிலயா, இல்லே ஆட்டுக்கல்லுலயா, அட!!.. அதுவும் இல்லேன்னா உரல்லயா????

இஸ்மைலி போடலை.. ஆகவே சிரியஸா கேக்கப்பட்ட கேள்விகள் என்று கொள்க யுவர் ஹானர் :-)))))))

அந்த பஞ்சாபி பொண்ணுகிட்ட கேட்டு பதில் எழுதுங்க
:-)))

Jagannathan said...

இது சிரிக்க மட்டும்தான் என்றாலும், கொஞ்ஜம் விஷயத்தையும் சேர்த்திருக்கலாம் - போன் பெண் சொன்னது ‘ ஸத் ஸ்ரீ அகால் ‘ . இது பொதுவாக ஒரு சீக்கியர் இன்னொரு சீக்கியருக்கு சொல்லும் வண்க்கம். - ஜெ.

திவா said...

சஸ்ரிகாஜி//
???
சத் ஸ்ரீ அகால்?

kriishvp said...

செம கூத்து போங்க :):):)

தக்குடு said...

கனடால பஞ்சாபிகள் ஜாஸ்தினு கேள்விப்பட்டு இருக்கேன். இட்லி மாமி என்ன எழுதலாம்னு மோட்டுவளையை பாத்து யோசிச்சுண்டு இருக்கும் போது எதோ ஒரு பஞ்சாபி பொண்ணு ராங்க் கால் பண்ணி இருக்கு, அதை கொஞ்சம் டிங்கரிங் பண்ணி நடுல ரங்கமணியோட மண்டையை உடைச்சு மாவிளக்கு ஏத்தி ஒரு போஸ்ட் போட்டாச்சு!! நல்லா இருங்கடே!!

priya. r said...

வரவர அப்பாவியின் கற்பனைக்கும் அளவே இல்லாம போயிட்டுடுது :))

geethasmbsvm6 said...

சஸ்ரிகாஜி//
???
சத் ஸ்ரீ அகால்? //

சே, இதைச் சொல்லணும்னு வந்தா ஏற்கெனவே ரெண்டு பேர் முந்திக்கிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏடிஎம், ரங்க்ஸ் விட்டது தொல்லைனு ஜாலியா இல்லை இருந்தாராம்? காதிலே விழுந்தது.

பத்மநாபன் said...

செம ரகளையான போஸ்ட்.... என்னதான் நிரந்தர பின்குறிப்பு போட்டாலும், சில பல நடவடிக்கைகள் பொருத்தாமா தான் வருது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அது... எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா... சும்மா சொல்லக்கூடாது... நல்ல பொண்ணு... லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா... அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ" என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம//

அருமையான நகைச்சுவை விருந்து. பாராட்டுக்கள்.

ஹுஸைனம்மா said...

எல்லாஞ் செரிதான்!! அது எதுக்கு, ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை’ங்கிற டைப்புல ஒரு டிஸ்கி??? ;-)))))))

HajasreeN said...

தங்கமணிகள் டவுன் டவுன் //

koduma daaa

அமைதிச்சாரல் said...

//இதைச் சொல்லணும்னு வந்தா ஏற்கெனவே ரெண்டு பேர் முந்திக்கிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்//

@கீதாம்மா,.. ரெண்டுபேர் இல்லை.. என்னையும் சேத்து மூணுபேர் :-))

அமைதி அப்பா said...

//"சேமியா கிச்சடி"

"எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்"//

அது சரி, கிச்சடிய யார்தான் கண்டுப்பிடிச்சாங்க?!

சுரேகா.. said...

சூப்பர் ! :)


பல வீடுகளில் இப்படித்தான் நடக்குது!

Priya said...

நிரந்தர பின் குறிப்பு....
ராங் கால்...
அந்த‌ imaginary character..

....எல்லாமே கலக்கலா இருக்கு புவனா:)

Anonymous said...

Test

அப்பாதுரை said...

ம்ம்ம்... நிரந்தரப் பின்குறிப்பு எனக்கென்னவோ சரியா தோணலியே? ரங்க்சை விசாரிச்சுட வேண்டியது தான்.

நல்ல நகைச்சுவை.

ஸாதிகா said...

செம காமெடி.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

very good.

இந்திரா said...

//என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. //


சரி சரி விடுங்க.. நம்புறோம்.

விக்னேஷ்வரி said...

சத்ஸ்ரியாகால் ஜி. :)

Priyaram said...

எங்க போனாங்க இந்த அப்பாவி... ரொம்ப நாளா காணோமேனு பார்த்து கிட்டு இருந்தோம். வந்து நல்ல ஒரு போஸ்ட் டா போட்டு இருக்கீங்க...

மோகன்ஜி said...

அப்பாவியா? அடப்பாவியா? நல்லா சிரிக்க வச்சீங்க

DREAMER said...

ரகளை Super

வெட்டிப்பையன்...! said...

ஹி ஹி ஹி . ... ஆப்கா யே போஸ்ட் பகூத் காமடி ஹ...!

கீதா said...

தவறுதலா வந்த ஒரு தொலைபேசி அழைப்பை வைத்தே அழகான கதையைக் கொடுத்திட்டீங்க. உங்கள் அபரிமிதமான ரசனையை எப்படிப் பாராட்டுறதுன்னே தெரியல. அற்புதம்.

Anonymous said...

//இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா..."// இது நெஜமான ரங்கஸ் ஒட பொலம்பல் போல இருக்கே??

//என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல... பிச்சுபுடுவேன் பிச்சு// ஸூ...பப்பர் சிரிச்சு சிரிச்சு தாங்கலே

//நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது // ஹையோ அபோவ் கமெண்ட் ரிபீட்டு

தி. ரா. ச.(T.R.C.) said...

இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Jஉச்ட் அன் இமகினர்ய் சரcடெர். நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு

இது தெரியாதக்கம் எங்களுக்கு அவ எவ்வளவு புத்திசாலித்தனமா கேள்விகேட்டு மடக்கிட்டா. நம்மளுக்கு சரி வேண்டாம் விடுங்க......... எனக்கு ராங்கால் இல்லம்யே சேட்டிலேயே ஒருத்தி தங்கமணி கிட்டே வத்தி வெச்சு துக்கம் இல்லாம பண்ணீட்டா. அவ மத்திரம் கையிலே கிடச்சா............TRC

க.பாலாசி said...

செம கலக்கலுங்க.. கலகலன்னு உருண்டோடுற எழுத்து, நகைச்சுவை உணர்வு.. எனக்கு இத படிக்கப்படிக்க மந்திரப்புன்னகை படத்தில் ‘எதுக்கு இந்தப் புடவை’ன்னு சந்தானம் பொண்டாட்டி மல்லுக்கட்டுகிற காட்சி ஞாபகம் வந்தது.. (மேட்டர் மன்ஸ்லாயி..)

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - why brother why? awwwwwww.... :)@ vanathy - Super Vanathy... we always vaalga only....:)@ Chitra - நன்றிங்க சித்ரா...:)@ siva - ஓஹோ... வருங்கால ரங்கமணி இப்பவே ரெடி ஆகரீங்க போல... சூப்பர்...:)


@ kggouthaman - நன்றிங்க சார்...:)@ மகி - சூப்பர் சூப்பர் சூப்பர் மகி...:)@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா..:)@ அமைதிச்சாரல் - அது 'சத் ஸ்ரீ அகால்'னு தெரியுமுங்க அக்கா.. நிஜமா தெரியும்... ஆனா மொதல் வாட்டி இங்க ஒரு பஞ்சாபி அதை சொன்னப்ப எனக்கு "சஸ்ரிகாஜி"னு தான் காதுல விழுந்தது... அதான் அப்படியே போட்டேன்...:))@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - கடைசீல இல்ல ஆனந்தி மொதல்ல இருந்தே பஞ்சாபி பொண்ணு தான்.... இருங்க உங்க போன் நம்பர் தரேன் அந்த பஞ்சாபி பொண்ணுகிட்ட...:)@ முத்துலெட்சுமி/muthuletchumi - ரெம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ Thanai thalaivi - உங்களுக்கு புரியறது இருக்கட்டும்... உங்க பேரை கிளிக் பண்ணினா உங்க ப்ளாக் லிங்க் வர்றதில்ல... அது ஏன்னு எனக்கு புரியலியே...:)) அய்யோ... நான் பஞ்சாப் எல்லாம் போகலைங்க... இங்க ஒரு மினி பஞ்சாபே இருக்கே...:) ஆஹா.. பூச்சாண்டியா? மீ எஸ்கேப்...:) நன்றிங்க ...@ divyadharsan - ஹாய் திவ்யா, //"The Great Writer Appavi"// அப்புறம் அதென்னது //உங்களத்தான் மானசீக குருவா மனசுல கோவில் கட்டி// ஏன் ஏன் இந்த கொல வெறி? என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம் திவ்யா...:)) ஹா ஹா ஹா... குக்கர் கத்துது பாப்பா கத்துது நானும் கத்தறேன்... சூப்பர் சூப்பர்... சீக்கரம் உங்க ப்ளாக்ஐ அரட்டை ப்ளாக்ஆ மாத்துங்க... நானும் கும்மிக்கு வரேன்... பாப்பா மார்ச் 14th ஆ? சூப்பர்... பாத்து போட்டு தர்றதா... இருங்க இப்பதான் இட்லிக்கு ஊற வெச்சு இருக்கேன்... ஒரு டஜன் அனுப்பி விடறேன்... இனிமே கேப்பீங்க நீங்க? ...:))@ சே.குமார் - நன்றிங்க குமார்..:)@ புதுகைத் தென்றல் - நீங்க தான் ஹச்பண்டாலாஜில PHD... நானெல்லாம் இப்ப தானுங்க அக்கா ஆ"ரம்பம்"... :))


@ Sathish A - ஹா ஹா... நன்றிங்க...:)


@ அமைதிச்சாரல் - இப்படி எல்லாம் டவுட் கேட்டு என்னை உசுப்பேத்தினா அப்புறம் இதை வெச்சே ஒரு போஸ்ட் போடுவேன்... எப்படி உங்க வசதி?... சரி சரி... அழுவாதீங்க அக்கா...:))


@ Jagannathan - நன்றிங்க சுட்டி காட்டியதற்கு... இனி வரும் பதிவுகளில் கவனமாய் இருக்கிறேன்...


@ திவா - அதே தான் திவாண்ணா... சும்மா மொக்கை போஸ்ட் தானேனு அப்படி போட்டேன்...:)


@ kriishvp - நன்றிங்க...:)


@ தக்குடு - சரி சரி... ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும் யு சி...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya. r - எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அக்கோய்...:)


@ geethasmbsvm6 - எல்லார் கண்ணுலயும் தப்பு தப்பாம படுதே... ஹா ஹா... ச்சே ச்சே... மாமா சொல்றத எல்லாம் என் ரங்க்ஸ் சொன்னாருனு சொல்ல கூடாது மாமி...:)


@ பத்மநாபன் - ஹா ஹா... அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்'ங்க அண்ணா...:)


@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்...:)


@ ஹுஸைனம்மா - ஹி ஹி... இப்படி நீங்க கேக்கணும்னு தான் அப்படி ஒரு டிஸ்கி...எப்பூடி...?.....:)


@ HajasreeN - ஹா ஹா... கொடுமைதாங்க...:)


@ அமைதிச்சாரல் - எஸ் எஸ்... கீதாம்மா மாத்ஸ்'ல கொஞ்சம் வீக்'னு எங்க கேசரி கட்சியின் உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது...... :))


@ அமைதி அப்பா - ஹா ஹா... நீங்களும் கிச்சடியால் பாதிக்கப்பட்ட ரங்கமணிகள் சங்கத்து உறுப்பினர்னு புரியுது...:)


@ சுரேகா.. - ஹா ஹா... நன்றிங்க சார்...:)


@ Priya - ரெம்ப தேங்க்ஸ் ப்ரியா...:)


@ அனாமிகா - டெஸ்ட் போட்டுட்டு அப்புறம் எஸ்கேப்ஆ.... ஒகே ஒகே...என்ஜாய்...:)))))))))

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - ஹா ஹா... விசாரிங்க விசாரிங்க...நன்றிங்க...:)


@ ஸாதிகா - நன்றிங்க ஸாதிகா...எல்லாம் எல்லா வீட்லயும் நடக்கற ரகளை தானே'ங்க...:))


@ அருள் சேனாபதி (பவானி நம்பி) - நன்றிங்க...


@ இந்திரா - நம்பித்தான் ஆகணும்...ஹா ஹா...நன்றிங்க...:)


@ விக்னேஷ்வரி - அதே அதே... சும்மா காமெடிக்கு கொஞ்சம் மாத்தினேன்'ங்க... நன்றிங்க...:)


@ Priyaram - ஹா ஹா... எங்கயும் போகலைங்க... கொஞ்சம் ஆணி... அதான் லேட் போஸ்ட்... பட் லேட்டஸ்ட் போஸ்ட்...நன்றிங்க...:)


@ மோகன்ஜி - நான் அப்பாவி தான்'ங்க... நன்றிங்க...:)


@ DREAMER - நன்றிங்க டைரக்டர் சார், இவ்ளோ பிஸிலயும் இந்த பக்கம்'லாம் வர்றதுக்கு...:)


@ வெட்டிப்பையன்...! - என்னமோ திட்டறீங்கனு தோணுது... இருங்க கூகிள் translator ல பாத்துட்டு வரேன்...:))


@ கீதா - ஆஹா... ரெம்ப நன்றிங்க... பாராட்டவும் ஒரு மனசு வேணுமே... நன்றி மீண்டும்...:)


@ En Samaiyal - ச்சே ச்சே... நிஜ ரங்க்ஸ் பொலம்பவே மாட்டார்...ஏன்னா? அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டிட்டார்... :)) ஹா ஹா... நன்றிங்க


@ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா... அது யாரோ ஒருத்தர் சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியம்னு மாமி சொல்றாங்க... அப்படி தானே மாமி...:))


@ க.பாலாசி - ஹா ஹா... நன்றிங்க...:)

Faizal said...

பாவம் ரங்கமணி .....

அப்பாவி தங்கமணி said...

@ Faizal - no no always thangamanis are only paaaavam...:)))

கோவை2தில்லி said...

கலக்கலா இருந்ததுங்க..
தங்கமணிகள் எல்லாருமே ரொம்ப ரொம்ப பாவம்ம்ம்ம்ம்.....

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நீங்க தான்'ப்பா கரெக்டா சொல்லி இருக்கீங்க... நம்ம ஊரு(கோவை) பொண்ணுங்க கொஞ்சம் விவரம்னு மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டீங்க...:))

ஜெய்லானி said...

ஆஹா... அப்படியே என்னோட கதை மாதிரியே இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - ha ha ha... super confession in public...total damage brother...:))

goma said...

அதில்லம்மா... இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே
"அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்..." என்கிறாள் கடுப்பாய்


அப்படிப்போடு அருவாளை.....

அப்பாவி தங்கமணி said...

@ goma - ha ha... thanks Goma...:)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலாட்டாவா இருக்கு....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

திரு. வை. கோ. அவர்களின் பதிவிலிருந்து வந்தேன்...

http://gopu1949.blogspot.com/2015/06/14.html

அப்பாவி தங்கமணி said...

@ அ. முஹம்மது நிஜாமுத்தீன் - Thanks a lot

Post a Comment