Wednesday, January 25, 2012

உன்னை கண் தேடுதே... (சிறுகதை) - "அதீதம்" புத்தாண்டு சிறப்பிதழில்
எனது இந்த சிறுகதை அதீதம் இணைய இதழின் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதீதம் குழுவினருக்கும், புத்தாண்டு இதழின் சிறப்பாசிரியராய் இருந்து என்னையும் இதில் இணைத்து கொண்ட திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

*****************************************************************************

"சிவா... கொஞ்சம் ஆபீஸ்ல டிராப் பண்றீங்களா?"

"வெளயாடாத திவ்யா. எனக்கு இன்னைக்கி கிளையன்ட் சைட்ல எட்டரை மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு"

"ஊர்ல இருக்கறவங்களுக்கெல்லாம் ரைடு குடுப்பீங்க... நான் கேட்டா மட்டும் முடியாதா?"

"ஏண்டி நேரம் காலம் தெரியாம உயிர வாங்கற?"

"நான் என்ன தினமுமா கேக்கறேன்... என்னோட கார் சர்வீஸ்'க்கு விட்டிருக்கறதால தான..."

"அது மொதலே தெரியாதா? நேரத்தோட கெளம்ப வேண்டியது தான. கடைசி நிமிசத்துல உயிர வாங்கணுமா?"

"என் கலீக் ஒருத்தி லிப்ட் தரேனு சொல்லி இருந்தா... இப்ப தான் அவகிட்ட இருந்து போன் வந்தது சிக் லீவ்னு"

"அப்ப நீயும் லீவ் போடு"

"இன்னைக்கி நீங்க கிளையன்ட் சைட்டுக்கு போற வழில தான எங்க ஆபீஸ். எனக்காக தனியா காஸ் பில் பண்ண போறதில்ல"

"உன்கிட்ட பேச முடியாது"

"உங்களுக்கு நான் முக்கியமா ஆபீஸ் முக்கியமா சிவா?"

"இப்படி லூசு மாதிரி கேள்வி கேக்கதேனு எவ்ளோ வாட்டி சொல்லி இருக்கேன்"

"இப்ப உங்களால டிராப் பண்ண முடியுமா முடியாதா?"

"டிராப் பண்ணி தொலைக்கிறேன்... சீக்கரம் கெளம்பி தொல"

"தொலைஞ்சா எப்படி கெளம்பறது?"

"....."

"ஜோக் சொன்னா சிரிக்கணும்... மொறைக்க கூடாது... ஹ்ம்ம்"

"உனக்கு காமடி பண்றதுக்கு வேற நேரம் கிடைக்கிலையா?"

"ம்... ஒரு டைம் டேபிள் போட்டு குடுங்க சார், காலை ஏழு மணி முதல் ஏழரை மணி வரை காமெடி டைம்னு... அதுபடி இனிமே காமெடி பண்றேன்"

"...."

"ஹும்க்கும்...இதுக்கும் மொறைப்பா... நான் போய் ரெடி ஆகறேன்"

**************************

"பாரு எவ்ளோ டிராபிக்னு...ச்சே... எல்லாம் உன்னால தான்..."

"இங்க பாருங்க... நீங்க எப்பவும் கெளம்பற டைம்க்கு அஞ்சு நிமிசம் முன்னாடியே கெளம்பி இருக்கோம்... நீங்க நெனச்ச டைம் விட முன்னாடியே கிளையன்ட் சைட்டுக்கு போய்டலாம். சும்மா எதாச்சும் சொல்லனும்னே சொல்லாதீங்க"

"எது தெரியுதோ இல்லையோ... நல்லா பேச்சுக்கு பேச்சு பேச கத்து வெச்சுருக்க"

"அங்க மட்டும் என்ன வாழுதாம்?"

"குடும்ப குத்துவிளக்குனு சர்டிபிகேட் குடுத்த எங்க அம்மாவ சொல்லணும்... இங்க குத்தறது மட்டும் தான் நடக்குது, விளக்க காணோம்..."

"எங்கிட்டயும் தான் சொன்னாங்க... ஸ்ரீராமர்னு, உங்க கிருஷ்ணா லீலை எல்லாம் இங்க வந்து தானே தெரிஞ்சுது"

"...."

"பேச தெரியலைனா உடனே மொறைக்க வேண்டியது...ஹ்ம்ம்"

சற்று நேரம் மௌனம்

"ஆபீஸ் வந்தாச்சில்ல... எறங்கு சீக்கரம்..."

"சரியான சிடுமூஞ்சி. கொஞ்சம் சிரிச்சுட்டு பை சொன்னா என்னவாம்" என்றாள் திவ்யா

"உனக்கு இந்த மூஞ்சியே போதும்..."

"ஹாய் ஷிவ்" என திவ்யாவுடன் பணி புரியும் ஹெலன் சிரித்தபடி கார் அருகில் வர, திவ்யா ஒன்றும் பேசாமல் இறங்கினாள்

"ஹாய் ஹெலன்" என்றவன், திவ்யாவிடம் திரும்பி "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தபடி காரை கிளப்பினான்

**************************

"Oh my god. This can't be true" என அலறினாள் ஹெலன்

அவளுக்கு அடுத்த கேபினில் இருந்த திவ்யா "What's wrong Helen?"

தன் கேள்விக்கு பதில் இல்லாமல் போக, எழுந்து ஹெலன் அருகே சென்றவள், கம்ப்யூட்டர் திரையில் தெரிந்த காட்சியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள்

"What is that? Something burning? Where is this?" என குழப்பமாய் கேட்டாள் திவ்யா

"Div... open your eyes... That's twin towers" என்றாள் ஹெலன்

உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்தது

எல்லோரும் விரைவாய் தங்கள் குடும்பத்தினரின் நலத்தை அறிய போன் செய்து கொண்டிருந்தனர்

திவ்யாவிற்கு சட்டென ஏதோ நினைவு வர "நோ நோ நோ..." என அலறினாள்

"Div... Are you okay?" என எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்

"சிவா...சிவா..." என அவள் பிதற்ற

"Div... please calm down... I know Shiv doesn't work anywhere near twin towers" என்றாள் ஹெலன் சமாதானமாய்

"No... he is got a client meeting in twin towers today... சிவா... சிவா" என பதறியவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் விழித்தனர் சக ஊழியர்கள்

"Don't panic Div, call his cellphone" என்றாள் ஹெலன்

உடனே செல்போனை எடுத்து அழைத்தாள், அழைப்பு சென்று கொண்டே இருக்க, எந்த நொடியும் அவன் குரல் கேட்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்

"ப்ளீஸ் சிவா... போன் எடு சிவா ப்ளீஸ்... ஒரே ஒரு வார்த்தை சிவா.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சிவா... ப்ளீஸ் சிவா... என்னை அழ வெக்காத சிவா... ப்ளீஸ்" என பதிலில்லாத போனில் பேசிகொண்டிருந்தாள் திவ்யா

பதிலின்றியே அழைப்பு முற்றுபெறவும், அவன் அலுவலகத்திற்கு அழைத்து சிவாவின் மேலதிகாரியிடம் பேசினாள். அவரும் சிவாவை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருப்பதாய் கூறினார்

அதற்குள் கான்பரன்ஸ் ஹாலின் டிவி ஒலி கேட்க, வேகமாய் எழுந்து உள்ளே சென்றாள் திவ்யா, பின்னோடு ஹெலனும் மற்றவர்களும்

அங்கு மரியா என்ற மூத்த பெண்மணி கண்ணில் உணர்ச்சியற்ற பார்வையுடன் டிவியின் அருகில் நின்றிருந்தாள்

"Maria's Son works in Twin towers" என அதற்கு விளக்கம் தந்தாள் கார்லா

டிவி திரையில் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த காட்சி நெஞ்சை உலுக்குவதாய் இருந்தது

செய்தி வாசிப்பாளரின் குரல் பின்னணியில் கேட்டது "....Nineteen hijackers took control of four commercial airliners en route to San Francisco and Los Angeles from Boston, Newark, and Washington, D.C. Planes with long flights were intentionally selected for hijacking because they would be heavily fueled. At 8:46 a.m, American Airlines Flight 11 crashed into the World Trade Center's North Tower, followed by United Airlines Flight 175, which hit the South Tower at 9:03 a.m..."

அதற்கு பின் பேசிய எதுவும் திவ்யாவின் காதில் விழவில்லை. மௌனமாய் எழுந்து தன் கேபினுக்கு வந்தவள், பிரமை பிடித்தவள் போல் கம்ப்யூட்டர் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்

"Div...." என ஹெலன் அவள் தோள் தொட, அழக்கூட தெம்பில்லாமல் பலவீனமாய் விழித்தாள் திவ்யா

"Don't give up Div... Just think he'll be safe" என்றாள் ஆறுதலாய்

"அப்படியும் இருக்குமோ" என ஒரு கணம் நினைத்தவளுக்கு மறுகணமே நம்பிக்கையின்மை தலை தூக்கியது

"எட்டரை மணிக்கு மீட்டிங்னு சொன்னாரே. கெளம்பின நேரத்துக்கு கண்டிப்பா எட்டரைக்கு போய் இருக்கணும்... மொதல் பிளைட் எட்டே முக்காலுக்கு தானே... ஐயோ அம்மா... நான் என்ன பண்ணுவேன்... எதுவும் இல்லைனா இதுக்குள்ள சிவா போன் பண்ணி இருக்கணுமே" என தனக்குள்ளேயே பலவாறு யோசித்து மன வேதனையில் உழன்றாள்

சிறிது நேரம் அப்படியே இருந்தவள், திடீரென "I should go home now" என எழுந்தாள், ஏதோ தீர்மானம் செய்தவள் போல்

"Div... I hear its crazy outside... my advise is to stay in" என தடுத்தாள் ஹெலன்

"No Helen... I just...I... please... call me a cab" என்றாள், வந்து விடுவேன் என பயமுறுத்திய கண்ணீரை உள்ளிழுத்தபடி

அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமின்றி "Okay... I will give you a ride" என எழுந்தாள்

வீட்டுக்கு வந்து சிறிது நேரம் கழித்து ஹெலன் விடை பெற்று செல்ல, திவ்யாவிற்கு ஒரு ஒரு நொடியும் ஒரு யுகமாய் நகர்ந்தது

மீண்டும் சிவாவின் செல்போனுக்கு முயன்ற போதும் எந்த பதிலும் இருக்கவில்லை

கண்ணை மூடினாலும் திறந்தாலும், காலையில் சிவா "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டிய முகமே கண்ணில் தோன்றி, மறுபடியும் அந்த குறும்பையும் சிரிப்பையும் காண்போமா என தவிப்பை கூட்டியது

நேரத்தை கொல்ல தொலைக்காட்சியை உயிர்பித்தாள், அதில் காட்டப்பட்ட காட்சிகளும் செய்தியும் மேலும் நம்பிக்கையை குலைக்க, அதை அணைத்து விட்டு படுக்கை அறைக்குள் சென்றாள்

அங்கிருந்த டிரஸ்ஸர் மேல் கிடந்த சிவாவின் இள நீல வண்ண சட்டையை பார்த்ததும், மௌனமாய் அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி படுக்கையில் சரிந்தாள்

முட்டிக்கொண்டு வந்த அழுகைக்கு அணை போட்டாள். "நான் எதுக்கு அழனும். சிவாவுக்கு எதுவும் ஆகி இருக்காது. நான் அழக்கூடாது. என் சிவா என்னை விட்டு எங்கயும் போக மாட்டாரு. எனக்கு தெரியும். நான் அழுதா சிவாவுக்கு புடிக்காது. நான் அழ மாட்டேன்" என வைராக்கியமாய் கண் மூடி மௌனியானாள்

எத்தனை நேரம் அப்படியே கடந்ததோ, அதை உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை

திடீரென "திவ்வி..." என யாரோ மென்மையாய் தோள் தொட விழித்தவள், நம்ப இயலாமல் கண்ணை கசக்கி பார்த்தாள்

துக்கமும் தவிப்பும் சுமந்த விழிகளுடன் அவள் ஆராய "திவ்விம்மா... நான் தான்... பயந்துட்டயாடா?" என சிவா அவளை அருகே இழுத்தபடி கேட்க, அவனிடமிருந்து விலகி இன்னும் நம்பாத பாவனையுடன் கண் விரித்து பார்த்தாள் திவ்யா

"திவ்வி..." என சிவா மீண்டும் அருகில் வர

"சிவா...சி... நா... நான்... சி... சிவா...எ... எனக்கு... சி...சிவா..." என அவள் ஏதேதோ சொல்ல வந்து எதுவும் சொல்ல இயலாமல் அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்

அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய், அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் "திவ்வி... இங்க பாரு... எனக்கு ஒண்ணும் ஆகல..." என்றவன், அதை புரியவைக்க முயல்பவன் போல் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்

அவனின் அந்த ஒற்றை செய்கையில், அத்தனை நேரம் அவளிடமிருந்த உறுதி மொத்தமும் குலைய, கதறலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்

வெகு நேர சமாதானத்திற்கு பின் ஒருவாறு தேறியவள் "உங்களுக்கு எதாச்சும் ஆயிருந்தா... எ...என்னால... நெனச்சே பாக்க முடியல சிவா. நான்..." என தடுமாறியவளை

"என்னை காப்பாத்தரதுக்கு நீ இருக்கும் போதும் எனக்கொண்ணும் ஆகாது திவ்விம்மா" என்றான் சிரிப்புடன்

அவள் புரியாமல் விழிக்க "புரியலையா? உன்னை ஆபீஸ்ல டிராப் பண்ணனும்னு இன்னிக்கி ப்ரீவே எடுக்காம வேற ரூட் எடுத்தேன். உன்னை டிராப் பண்ணிட்டு போனா, கொஞ்ச தூரத்துல ஏதோ கன்ஸ்ட்ரக்சன்னு ரெண்டு லேனை க்ளோஸ் பண்ணிட்டான். ஒரே லேன் தான், செம டிராபிக். போதாதக்குறைக்கு வழில  ஏதோ ஏக்சிடன்ட் வேற. கொஞ்ச நேரம் அப்படியே டோட்டல் பிளாக். அதுக்குள்ள ட்வின் டவர் நியூஸ் ரேடியோல சொல்ல ஆரம்பிச்சுட்டான். எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சு இருக்கேனு அப்பத்தான் புரிஞ்சது. நடக்கறதெல்லாம் நல்லதுக்கு தான்னு சொல்றது சரிதான்னு தோணுது திவ்வி. ஒருவேள நேரா ப்ரீவேல போய் இருந்தா எட்டரைக்கே ட்வின் டவர்ஸ் போய் இருப்பேன்..." என்றவன்

அதன் விளைவை எண்ணி பயந்த பிரதிபலிப்பாய் அவள் கண்ணில் நீர் நிறைய கண்டதும், சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி "ஆனா விஷயம் தெரியறதுக்கு முன்னாடி, உன்னை ஆபீஸ்ல விட வந்து தான் லேட் ஆச்சுனு உன்னை கன்னா பின்னானு திட்டிட்டு இருந்தேன். சாரி ஸ்வீட்டி" என கண்சிமிட்டி சிரிக்க

இனி இந்த சிரிப்பை பார்ப்போமோ மாட்டோமோ என தவித்தது நினைவுக்கு வர, மீண்டும் அவள் கண்ணில் நீர் நிறைந்தது

"ஏய்... " என செல்லமாய் அதட்டி அவள் கண்ணீரை துடைத்தான்

"ஒரு போன் பண்ணி இருக்கலாமே... நான் போன் பண்ணப்பவும் எடுக்கல" என்றாள் தவிப்பில் விளைந்த கோபத்துடன்

"உடனே உனக்கு ட்ரை பண்ணினேன் திவ்வி. செல்போன் லைன்ஸ் எல்லாம் ஜேம் ஆய்டுச்சு... அப்புறம் வெளிய எங்கயாச்சும் நிறுத்தி பேசறதை விட நேர்ல வந்து சொல்றதே பெட்டர்னு தோணுச்சு. அந்த டிராபிக்ல இருந்து வெளிய வர்றதுக்கு இவ்ளோ நேரமாய்டுச்சுடா" என்றான்

அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாய் அவன் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டாள். இன்னும் அவள் உடல் நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான் சிவா

அதிலிருந்து அவள் மனதை திசை மாற்றும் பொருட்டு "அது சரி... காலைல என்ன சொன்ன? சிடுமூஞ்சியா? இப்ப இந்த மூஞ்சிக்கு என்ன பேரு வெக்கறதாம்?" என சீண்டலாய் சிரித்தபடி அவள் தாடையை பற்றி கேட்க, சற்றும் எதிர்பாராத நொடியில் இதழ் பதித்தாள் 

"ஆஹா... இப்படியெல்லாம் நடக்கும்னா தினமும் உயிர் பொழச்சு வரலாம் போல இருக்கே" என அவன் மையலாய் சிரிக்க

"ப்ளீஸ் சிவா... விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. ஜென்மத்துக்கும் இந்த ஒரு நாள் போதும்" என்றவள் கூற, மனைவியின் அன்பில் மனம் நெகிழ அணைத்து கொண்டான் சிவா

(முற்றும்)

பின் குறிப்பு:-
சமீபத்துல ஒரு செய்தி கட்டுரை படிச்சேன், 2001ம் வருஷம் செப்டம்பர் 11ம் தேதி நடந்த உலக வர்த்தக மைய தாக்குதலை பற்றியது. இது பத்தி முன்னாடியே நெறைய படிச்சிருந்தாலும், இதில் நெறைய பேரோட அனுபவங்கள் பத்தி இருந்தது ஒரு வித்தியாசம்


ஒரு சிலர், அன்னைக்கி அதிஷ்டவசமா உயிர் பிழைச்ச அனுபவத்த சொல்லி இருந்தாங்க. நேரத்துல எந்திரிக்கலை, ட்ரெயின் லேட், டிராபிக், உடம்பு சரியில்ல இப்படி சில காரணங்களால் ஆபீஸ் போக லேட் ஆகி, அதனால தப்பிச்சேன்னு சொல்லி இருந்தாங்க


அதுல ஒருத்தர் "I had a big arguement with my wife that morning, late to work and escaped from that explosion by matter of minutes. Thanks to my lovely wife. Now I believe all is happening for good"னு பேட்டி குடுத்து இருந்தாரு 


இந்த கட்டுரைய படிச்சதுல இருந்து உயிர் பிழைத்தவங்க சொன்னதை மைய கருவாய் வெச்சு ஒரு சிறுகதை எழுதணும்னு தோணிட்டே இருந்தது. இப்ப தான் நேரம் வாயச்சிருக்கு. நன்றி

30 பேரு சொல்லி இருக்காக:

Chitra said...

ஒரு சிலர், அன்னைக்கி அதிஷ்டவசமா உயிர் பிழைச்ச அனுபவத்த சொல்லி இருந்தாங்க. நேரத்துல எந்திரிக்கலை, ட்ரெயின் லேட், டிராபிக், உடம்பு சரியில்ல இப்படி சில காரணங்களால் ஆபீஸ் போக லேட் ஆகி, அதனால தப்பிச்சேன்னு சொல்லி இருந்தாங்க

...... Yes... I read it too.... It was amazing!

divyadharsan said...

wow...very very nice appavi..superb story:)

really heartouching!!you are very very good in narrating.I got tears in my eyes almost.Lovely.

Simple Awesome.Thank you for the wonderfull story.
will write more when i get time:))

A and A said...

Same thing happened to my cousin. He escaped it by minutes. Actually he was working in the second tower and was waiting for the escalator while the first tower was hit. He was newly engaged at that time and until he called me from a pay phone, I wasn't in this world! Still can feel that even thinking about it!

Good Story!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை அருமை. சுகமான முடிவு.

”பாம்பு கடித்துப்பிழைத்தவனும் உண்டு,
செருப்பு கடிச்சு செத்தவனும் உண்டு”
என்று பழமொழி சொல்வார்கள்.

தப்பிக்கணும் என்ற வேளையும் விதியும் இருந்தால், எப்படியும் தப்பிக்க முடியும்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். vgk

Anonymous said...

Q: moral of the story?
A: aapisukku late aga po

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கதை! பாராட்டுக்கள்! நன்றி நண்பரே!

ராமலக்ஷ்மி said...

எடுத்துக் கொண்ட கருவும், கதை சொன்ன விதமும் அருமை புவனா.

Thamizhmaangani said...

agree with divyadharsan.
what a flow in the story!!! semma thrilling!! pinniteenga ponga!!:)))

Lakshmi said...

நேரிலே இருந்து அவங்க தவிப்பை நாமளும் உணர்ந்ததுபோல இருந்தது. கதை நல்லா இருந்தது ஒரு விபத்திலேந்து உயிர்பிழைத்தவங்களுக்குத்தான் அதோட அருமை புரியும் அதை நல்லா சொல்லி இருக்கீங்க,

தி. ரா. ச.(T.R.C.) said...

"குடும்ப குத்துவிளக்குனு சர்டிபிகேட் குடுத்த எங்க அம்மாவ சொல்லணும்... இங்க குத்தறது மட்டும் தான் நடக்குது, விளக்க காணோம்

super
confirms my status of
Husband and wife are like two sides of a coin, they seldom face each other on all issues amicably but still remains together

கீதா said...

காதல், ஊடல், தவிப்பு, ஏக்கம், துயரம், பயம்! எத்தனை விதமான கலவை உணர்வுகள்? அத்தனையையும் அழகாய் எழுத்தில் வடித்தவிதம் அருமை. அதீதத்ததில் வெளிவந்ததற்குப் பாராட்டுகள்.

arul said...

nice story

Avargal Unmaigal said...

எனக்கும் இந்த மாதிரியான அனுபவம் உண்டு என் மனைவி அந்த நேரத்தில் குழந்தை உண்டாகி எட்டாவது மாதம் அன்று அவள் வேலைக்கு செல்லும் போது ரயில் கொஞ்சம் லேட் அதுனால அந்த விபத்தில் சிக்காமல் தப்பித்தாள். அது போல அவளது கைனகாலஜியிடம் வந்த பெண் ஒருவள் முதல்நாள் தான் அந்த பில்லிடிங்கில் வேலை பார்த்து வந்தால் அந்த சம்பவத்திற்கு முதல்நாள்தான் வேலையில் இருந்து பயர் செய்யப்பட்டதால் அவளும் உயிர்தப்பினாள்.

உங்கள் கதையை படித்ததும் அந்தநாள் மீண்டும் நினைவுக்கு வந்தது. கதை அருமையாக மனதை தொடும்படி இருந்ததது

ஹுஸைனம்மா said...

அப்ப தினந்தினம் லிஃப்ட் கேக்கலாம், சண்டை போடலாம்கிறீங்க!! (ரங்கமணிகள் கவனிக்க!!) :-))))))

middleclassmadhavi said...

ரங்கமணிகள் அவசியம் படிக்க வேண்டிய கதை! :-))

வெங்கட் நாகராஜ் said...

Good One AT.... Thanks for sharing....

சிநேகிதி said...
This comment has been removed by the author.
சிநேகிதி said...

அழகான கதை அருமை

இராஜராஜேஸ்வரி said...

"குடும்ப குத்துவிளக்குனு சர்டிபிகேட் குடுத்த எங்க அம்மாவ சொல்லணும்... இங்க குத்தறது மட்டும் தான் நடக்குது, விளக்க காணோம்..."

சுபமான முடிவு! வந்ததே நிம்மதி!

Mahi said...

கதை நல்லா இருக்கு புவனா! அங்கங்க அப்பாவி-ட்ரேட்மார்க் டயலாக்ஸ் எல்லாம் தலைகாட்டுவது சூப்பர்! ;)

Sowmya said...

ஒரே படபடப்பா இருந்துது கடைசீல தான் நிம்மதியா ஆச்சு.
அருமையா இருக்கு கதை. happy new year

RAMVI said...

நகைச்சுவையாக ஆரம்பித்து,படபடப்பாக நகர்ந்து,சுபமாக முடிந்த சிறு கதை. சிறப்பாக இருக்கு.

அதீதம் சிறப்பிதழில் வந்ததற்கு, வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வழக்கம்போல அருமை.

தக்குடு said...

கதை படிச்சு முடிச்சதுக்கு அப்புறமும் ரெண்டு வார்த்தை மட்டும் அசரீரீ மாதிரி கேட்டுண்டே இருக்கு. அதுதான் இட்லி மாமியோட ரைட்டிங் 'டச்' போலருக்கு! கறை நல்லது மாதிரி தங்கமணி சண்டை நல்லது!னு சொல்லறேள். இருக்கட்டும் இருக்கட்டும்! :-)

அமைதிச்சாரல் said...

கதை அருமையாயிருக்கு..

Kriishvp said...

Nice and Touching Story, Superb!

கோவை2தில்லி said...

கதை நன்றாக இருந்ததுங்க...
அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி said...

@ Chitra - தேங்க்ஸ்'ங்க சித்ரா

@ divyadharsan - ஆஹா... தேங்க்ஸ் திவ்யா... தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்...:)

@ A and A - ஓ மை காட்... ஒரே டென்சனா இருந்துருக்குமல்ல... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்... தேங்க்ஸ்...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப சரியா சொன்னீங்க...நன்றிங்க...:)

@ Anonymous - ஹா ஹா ஹா... இந்த moral எனக்கு தோணாம போனதே..:)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ ராமலக்ஷ்மி - ரெம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி

@ Thamizhmaangani - ஆஹா... மிக்க நன்றிங்கோ...:)

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஆஹா... உங்களுக்கு வேணுங்கற பாய்ன்ட் மட்டும் எடுத்துக்கறீங்களே அங்கிள்...:)

அப்பாவி தங்கமணி said...

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா

@ arul - தேங்க்ஸ்'ங்க அருள்

@ Avargal Unmaigal - ஐயோ... கேக்கவே பயமா இருந்தது. உங்கள் குழந்தை தான் அம்மாவையும் சேர்த்து காப்பற்றி இருக்கிறார் போலும்... நன்றிங்க

@ ஹுஸைனம்மா - ஹா ஹா... அதே அதே அக்கோய்...:)

@ middleclassmadhavi - ஹா ஹா...நன்றிங்க ..:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க சார்

@ சிநேகிதி - நன்றிங்க சிநேகிதி

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ Mahi - ஆஹா... தேங்க்ஸ் அம்மணி...:)

@ Sowmya - ரெம்ப நன்றிங்க சௌமியா..

அப்பாவி தங்கமணி said...

@ RAMVI - ரெம்ப நன்றிங் ராம்வி

@ ஸ்ரீராம். - நன்றிங்க

@ தக்குடு - ஹா ஹா... அப்படிங்'கறை'யா... ஹ்ம்ம்...ஒகே ஒகே... இப்போதைக்கு நீ சொன்னா சரி தான் தக்குடு...;)

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கோய்...:)

@ Kriishvp - மெனி தேங்க்ஸ் பார் தி காம்ப்ளிமென்ட்...:)

@ கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க ஆதி...:)

Post a Comment